Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Gangaiyin Kadhai
Oru Gangaiyin Kadhai
Oru Gangaiyin Kadhai
Ebook287 pages2 hours

Oru Gangaiyin Kadhai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
LanguageUnknown
Release dateMay 12, 2016
ISBN6580100600171
Oru Gangaiyin Kadhai

Reviews for Oru Gangaiyin Kadhai

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Gangaiyin Kadhai - Devibala

    http://www.pustaka.co.in

    ஒரு கங்கையின் கதை

    Oru Gangaiyin Kadhai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    "அ

    ப்பா! எனக்கு இந்தக் கல்யாணம் அவசியம் தானா?"

    கையில் அச்சடித்த பத்திரிக்கையுடன் நின்ற அப்பா அவளை அதிர்ச்சியுடன் பார்ர்தார்.

    என்னம்மா சொல்ற நீ? கல்யாணத்துக்கு முழுசா இன்னும் ஒரு வாரம் கூட இல்லை.இந்த சமயத்துல இப்படியொரு கேள்வியை நீ கேக்கலாமா ரஞ்சனி?

    அம்மா அருகில் வந்தாள்.

    நீங்க போய் வேலையைப் பாருங்க! குடும்ப நிலைமையை நினைச்சு குழந்தை கவலைப்படறா!

    அப்பா அருகில் வந்தார்.

    நீ எத்தனை நாளைக்குமா உழைக்க முடியும்.இந்த வீட்டுக்காக? சொல்லு! இப்பவே உனக்கு இருபத்தி ஆறு வயது இதுவே அதிகம்.உன் பணம் வேணும்ங்கற காரணமா உன்னை கரை சேர்க்காம நான் உட்கார்ந்திருந்தா ஊர் என்னைக் காறித் துப்பாது?

    ரஞ்சனி பேசவில்லை.

    போய் வேலையை கவனிம்மா.பொறுப்பு இருக்க வேண்டிய உன் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் இல்லை.உனக்கது கூடிப் போச்சு எங்களையே நினைச்சுக்கிட்டு இருக்காம உன் எதிர் கால வாழ்க்கையை நினைச்சு சந்தோஷப்படு!.

    அப்பா எழுந்து போய்விட்டார்.

    ரஞ்சனி அன்றைக்கு ஆபிசுக்கு லீவு போட்டிருந்தாள்.வீட்டில் அம்மாவுக்கு ஏதோ உதவி தேவைப்பட்டது.

    அவர்களுக்கு ஒரே மகளாக பிறந்த ரஞ்சனி தன் பட்டப் படிப்பை முடிக்கும் வரை சலுகையாகத்தான் வளர்ந்தாள்.

    அண்ணணுக்கு கல்யாணம் நடந்தது. ஓரே மாதத்தில் தனி குடித்தனம் போய்விட்டான்.தம்பி ஏற்கனவே குடும்பத்துக்கு அடங்காத ஜன்மம்

    ரஞ்சனி படிப்பை முடித்த வருடமே அப்பா ரிடையர் ஆனார்.குடும்பம் லேசாகத் தள்ளாடத் தொடங்கியதைப் புரிந்து கொண்ட ரஞ்சனி வேலைக்கு விண்ணப்பம் போட தொடங்கி விட்டாள் படிப்பை முடிப்பதற்கு முன்பே ஸ்டனோகிராப் கற்று வைத்திருந்ததால் சுலபமாக வேலை கிடைத்து விட்டது.ஓரளவு நல்ல சம்பளத்தில்.

    அப்பாவுக்கு வரும் பென்ஷன் சொல்பம்.

    மொத்த பணத்தை ரஞ்சனியின் கல்யாணத்துக்காக அப்படியே வைத்திருந்தார்.

    நாலைந்து வருடங்களாக ரஞ்சனியின் வருமானத்தில் ஓரளவு வசதியாகவே வண்டி ஓடுகிறது.

    அக்கம் பக்கமும் உறவும் அப்பாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்க அப்பா சோர்ந்து போனார்.

    ரஞ்சனியைக் கேட்காமலேயே கல்யாண ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டார்.

    வேண்டாப்பா!"

    ஏம்மா?

    நானும் போயிட்டா" உங்களால சமாளிக்க முடியாது.உங்க பென்ஷன் பணம் போதாது!?

    ஆதனால? ஆயுள் முழுக்க எங்க கூட நீ இருக்க முடியுமா? என்னம்மா பேசற?".

    அப்படி இல்லப்பா!

    பேசாதேம்மா! இனிமேலும் பணத்துக்காக உன்னை நிறுத்தி வைத்திருந்தா நான் மனுஷன் இல்லை.நானும் அம்மாவும் அரை வயித்துக் கஞ்சி குடிக்க என் பென்ஷன் போதும்".

    அடுத்த வாரமே தரகர் ஒரு வரனைக் கொண்டு வந்தார்.

    மத்திய அரசாங்க உத்யோகம் மாப்பிள்ளைக்கு!

    ஓரளவு நல்ல சம்பளம்.

    பெரிய குடும்பம்"

    பெற்றோர்கள் கல்யாணமாகாத ஒரு தங்கை. ஆன இரண்டு சகோதரிகள் படிக்கும் ஒரு தம்பி"

    அம்மா கூடக் கவலைப்பட்டாள்.

    என்னாங்க இத்தனை பெரிய குடும்பத்துல கொண்டு போய் நம்ம ரஞ்சனியைத் தரலாமா?

    நீ சும்மாரு! பையன் நல்ல அந்தஸ்த்துல இருக்கான்.வாழப் போறது அவனோட குடும்பம்னா எல்லாம்தான் இருக்கும்.அதையெல்லாம் பார்க்க முடியுமா? நீ என்னம்மா சொல்ற?"

    ரஞ்சனி பேசவில்லை.

    அந்த வாரக் கடைசியில் பெண் பார்க்க வந்தார்கள்.

    அவன் - கங்காதரன் - நன்றாகத்தான் இருந்தான்.நல்ல உயரம் மிதமான நிறம் வசீகரமான கண்கள் - கொஞ்சம் முயன்றால் சினிமாவில் நடிக்கலாம்.அந்த அளவுக்கு எடுப்பு.

    அவன் ஒன்றுமே பேசாமல் இறுக்கமாக உட்கார்ந்திருந்தான்.அவனுடன் வந்த ஒரு கும்பல் - அவன் உட்பட – பேசித் தீர்த்தது.அப்பாவின் சக்திக்கு மீறி கேட்டது.

    அப்பாவும் வர்த்தகம் நடத்தி இறுதியில் படித்தது.தேதி குறிக்கப்பட்டது.

    மாமியார்க்காரி சம்பளக் கணக்கெல்லாம் கேட்டு வைத்துக் கொண்டாள் ரஞ்சனியிடம்.

    போய்விட்டார்கள்.

    என்னங்க! நம்ம பொண்ணை நல்லபடியா வச்சுப்பாங்களா? மாப்பிள்ளை மூஞ்சில ஒரு சிரிப்பு கூட இல்லை.

    அவர்தான் அவங்கம்மாகிட்ட சம்மதம்னு சொல்லிவிட்டாரே!"

    "இல்லீங்க… நான் சொல்றது…?

    த பாரு! நீ ஒவ்வொண்ணா கிளப்பாதே! இப்ப எல்லாருக்கும் கொஞ்சம் பந்தா இருக்கத்தான் செய்யும் போக போக சரியாப் போகும் குழந்தையை பயப்படுத்தாதே!

    அப்பா!

    சொல்லும்மா?

    நான் லோன் போடட்டுமா?

    பி எஃப் சொசைட்டி இதெல்லாம்."

    பிடித்தம் போக பாதிச்சம்பளத்தை உன் மாமியார் கையில் கொண்டு போய் தருவியாம்மா"

    என்ன தப்பு இந்த நிமிடம் ரஞ்சனியோட சம்பளம் நமக்குத்தானே சொந்தம்?"

    அது நல்லால்லமா நீ எந்த லோனும் போட வேண்டாம்.நான் சமாளிச்சுக்கறேன்!"

    கல்யாணத் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.

    அலுவலகத்தில் அன்று கடைசி நாள்" கல்யாணத்துக்கு முன்பு எல்லாரும் காபி கேட்டார்கள்.

    வாங்கித் தந்தாள் ரஞ்சனி"

    தொடர்ந்து வேலை செய்வீங்களா ரஞ்சனி?

    நிச்சயமா!

    கல்யாணமான சுமதி அருகில் வந்து த பாரு ரஞ்சனி கழுத்துல ஒரு மஞ்சக்கயிறு ஏறிட்டா உன்னை அடிமைப் படுத்த நினைப்பாங்க.கை நிறைய சம்பாதிக்கனும்.யாருக்கும் தலை வணங்க வேண்டிய அவசியம் இல்லை.நிமிர்ந்து நில்லு! குனிஞ்சா குட்டிடு வாங்க!

    ரஞ்சனி சிரித்தாள்.

    உணவு இடைவேளையில் ப்ர்தா ரஞ்சனியைத் தனியாக அழைத்துக் கொண்டு போனாள்.

    குரலைத் தழைத்துக் கொண்டாள்.

    ரஞ்சனி! சுபாஷுக்கு என்ன பதில் சொல்லப் போறே?

    ரஞ்சனி அதிர்ச்சியுடன் ப்ரீதாவை பார்த்தாள்.

    உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது சுபாஷுக்கு தெரியுமா?

    தன் காதலியை விட்டுத் தர சுபாஷ் தயாரா இருக்காரா?

    ரஞ்சனி பேசவில்லை.

    நீ சுபாஷை காதலிச்சது நிஜமில்லையா ரஞ்சனி?

    ……

    உங்கப்பாவுக்கு இந்த செய்தி தெரியாதா?

    தெரியாது ப்ர்தா!

    நீ விரும்பித்தானே கங்காதரனைக் கட்டிக்கற

    ரஞ்சனி பேசவில்லை.

    ஏன் ரஞ்சனி பேசாம இருக்கே! இந்தக் கல்யாணம் உன் விருப்பத்துக்கு மாறாக நடக்குதா?

    சுபாஷ் குடிகாரர் ப்ரீதா! நிறைய கெட்டப் பழக்கம் அவர்கிட்ட இருக்கு மத்தவங்க சொன்னப்ப நான் நம்பல.ஆனா ஒரு வாட்டி கண்ணால பார்த்தேன் அதை!"

    எதை

    குடிச்சுட்டு அவர் கிடக்கார்னு ஒரு தகவல் வர நான் ஓடிப்போனேன்.நம்ப முடியவில்லை.ஆனா அது நிஜம் மனசு வெறுத்துப் போனேன்.அப்பா அந்த சமயத்துல இந்த வரனை எடுக்க சம்மதிச்சிட்டேன்!"

    அப்புறம் சுபாஷ் உன்னை சந்திச்சாரா?

    நானே தேடிப் போய் எல்லாமும் பேசி என் கல்யாண விவரத்தையும் சொல்லிவிட்டு வந்துட்டேன்.நடத்தைல மோசமான ஒரு மனிதன்கூட வாழ விரும்பல.என்னை மறந்துடுனு சொல்லிட்டு வந்துட்டேன்.அப்புறம் பார்க்கல!

    ப்ரீதா பெருமூச்சு விட்டாள்.

    என்னாச்சு சுபாஷ_க்கு ஏன் இதுமாதரி ஆனார்? எப்படி வாழ வேண்டியவர்? சரி இனி பேசி உபயோகமில்லை.கங்காதரன் கூட உன் வாழ்க்கை நல்லபடியா தொடங்கட்டும்!

    வாழ்த்தினாள் ப்ரீதா.

    ஒரு மாத காலத்துக்கு லீவு எழுதித் தந்துவிட்டு எல்லாரும் வாழ்த்த" ரஞ்சனி வீடு வந்து சேர்ந்தாள்.

    அப்பா தன் சேமிப்புப் பணம் மொத்தத்தையும் கரைத்து சக்திக்கு மீறித்தான் கல்யாண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

    முதல் நாள் காலையில் சத்திரத்துக்கு வந்து விட்டார்கள்.உறவுக்காரர்களின் கூட்டம் அப்போதே வந்து விட்டது.மாப்பிள்ளை வீட்டார் பிற்பகல் மூன்று மணிக்கு வர அப்போதெ அவர்களின் பந்தாவும் அடக்கு முறையும் ஆரம்பமாகி விட்டது.

    கங்காதரனைக் கண்ணில் காணவில்லை.

    ரஞ்சனியை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.கங்காதரனின் கல்யாணமான தங்கைகள் இருவரும் வந்து வந்து போனார்கள்.

    நாத்தனார் பந்தாவை அப்போதே காட்டத் தொடங்கி விட்டார்கள்.

    அம்மாவுக்கு பயம்தான்.

    அப்பாவுக்கு கூட லேசான கவலை தொடங்கி விட்டது.புருஷன் வீட்டில் நல்லபடியா இருப்பாளா ரஞ்சனி?

    மறுநாள் காலை ஆறு ஏழரை முகூர்த்தத்தில் கங்காரனின் தாலி" ரஞ்சனி கழுத்தில் ஏறிவிட்டது.

    அப்பா அழுதார்.

    அம்மா சோர்ந்து போயிந்தாள்.

    அப்பா சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்ய அதெல்லாம் இங்கே வேண்டாம் எங்க வீட்ல நடந்தால் போதும்

    சரிம்மா!

    மறுநாள் காலை புறப்பட்டு விட்டார்கள்.

    அம்மாவுடன் தனியாக இருந்தாள் ரஞ்சனி"

    நீ பொறுமையாப் போகணும் ரஞ்சனி எல்லாரும் கொஞ்சம் கரடு முரடாத்தான் இருக்காங்க!"

    நீ பயப்படாதேம்மாநான் சமாளிச்சுக்கறேன்.எல்லா பெண்களுக்கும் உள்ள பிரச்சனைதானே இது!"

    இருந்தாலும் நீ என் மகளாச்சே ரஞ்சனி?

    அப்பா வந்தார்.

    நான் புறப்படறேன்பா!

    "சரிம்மா! அம்மாடீ! நான் அவசரப்பட்டுட்டேனோ?

    இல்லைப்பா! எனக்கந்த யோகம் வந்தாச்சு யார் தடுத்தாலும் நிற்காது"

    நல்ல பேர் எடும்மா பொறுமையா இரு!"

    சரிப்பா!

    வேனில் ஏறினார்கள்.

    கங்காதரன் பக்கத்தில் அவள் உட்கார வைக்கப்பட்டாள்.

    தாலி கட்டிய கணவன்!

    இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.முதலிரவும் முடியவில்லை.அதனால் அவனே அந்நியமாகத் தெரிந்தான்.ஆனாலும் இதமாக ஒரு சிரிப்பு காதலுடன் ஒரு பார்வை?

    வராதோ?

    இவன் இப்படித்தான் இருப்பானா?

    பெரிய குடும்பத்தில் பிறந்ததால் இறுகிப் போய் விட்டானா!

    அவளது சந்தேகத்தை உறவுக்காரர் ஒருவர் வேடிக்கையாகப் போட்டு உடைத்தே விட்டார்.

    ஏன்டா கங்காதரா இப்படி இருக்கே! கல்யாணம் ஆன அன்னிக்கு சிரிச்சிடுடா அப்புறமா சிரிக்கவே முடியாது!

    "அதானே! சத்திரத்துக்கு வந்த முதல் உம்மணா மூஞ்சியா இருக்கியே! உம் பொண்டாட்டி என்ன நினைப்பா உன்னைப்பற்றி?...

    த பாரம்மா ரஞ்சனி! நாளைக்குத்தான் சாந்தி முகூர்த்தம்.

    தங்கை குறுக்கிட்டாள்.

    அண்ணாவுக்கு கோபம்!

    ரஞ்சனி திடுக்கிட்டாள்.

    பயப்படாதே அண்ணி! உன் மேலே இல்லை.அவரோட உயிருக்குயிரான எதிரி மேல.

    ஏன்? மெல்லிய குரலில் கேட்டாள் ரஞ்சனி.

    கல்யாணத்துக்கு அந்த பிரகஸ்பதி வரலை அண்ணன் காத்திருந்து கண்வலி எடுத்ததுதான் மிச்சம்.மாப்பிள்ளைக்குத் தோழன் காணவில்லை!

    ப்பு! இவ்வளவுதானா? ஆம்பள ஸ்நேகமா பொம்பள ஸ்நேகமா?" ஒருவர் சீண்டினார்!

    அதற்குள் வீட்டு வாசலில் வேன் நின்றது.

    ரஞ்சனிக்கு தந்த சீர்வரிசைகள் எல்லாம் இறக்கி வைக்கப்பட்டது.

    இருவரையும் ஜோடியாக நிறுத்தி ஆரத்தி கரைத்துக் கொட்டினாள் ஒரு வயதான சுமங்கலி"

    முதல்ல பூஜை ரூம்ல வந்து விளக்கேத்து ! வா!

    மாமியாருடன் உள்ளே போனாள் ரஞ்சனி"

    விளக்கு ஏற்ற திரியில் சுடர் பிடிக்காமலே அணைந்து அணைந்து போனது.

    என்ன நீ விளக்கு கூடவா ஒழுங்கா ஏற்றத் தெரியாது? கொண்டாடி இப்படி

    வாசலில் பைக் சத்தம் கேட்டது.

    அம்மா! அண்ணாவோட ஸ்நேகிதன் வந்தாச்சு.இனிமே அண்ணா சிரிப்பான்!

    ரஞ்சனியே விளக்கை ஏற்றினாள்.

    அண்ணி! அண்ணா வரச் சொல்றான் உன்னை!

    ரஞ்சனி குனிந்த தலையோடு வந்தாள்.

    "இவதான்டா என் மனைவி பார்க்கணும்னு பறந்துட்டு கல்யாணத்துக்கே நீ வரலை. படவா!

    ரஞ்சனி மெதுவாகத் தலையை உயர்த்தினாள்.

    வணக்கம்

    கை கூப்பியவள் எதிரே நின்றவனைப் பார்த்ததும் மின்சாரம் மிதித்தாள்.

    கூப்பிய கைகள் உறைந்து நிற்க"

    எதிரே"

    தாடியை வருடியபடி சுபாஷ் சிரித்தான்.

    2

    சா

    ந்தி முகூர்த்தம்.ரஞ்சனியை புகுந்த வீட்டைச் சேர்ந்த ஏதோ ஒரு அத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.

    ரஞ்சனிக்கு இன்னமும் படபடப்பு ஓய்ந்த பாடில்லை.

    உயிர்த்தோழன் என்று அறிமுக்பபடுத்த எதிரே சுபாஷ்!

    ரஞ்சனி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.இப்படியொரு சந்திப்பு நிகழும் என்று.

    சிரிக்க முடியவில்லை அவளால்"

    நடுங்கிய கைகளை கஷ்டப்பட்டு நிறுத்தினாள்.

    கங்காதரன் இப்போது சிரித்துப் பேசத் தொடங்கி விட்டான்.

    கல்யாணத்துக்கு வராம ஏமாத்திட்டு தாடியும் தலையுமா தேவதாஸ் மாதிரி வந்து நிக்கறான் பார்த்தியா?எப்பவுமே தாடி உண்டு ஆனா அழகா ட்ரிம் பண்ணியிருப்பான்.இப்ப… காதல் தோல்வி.அதனால கன்னா பின்னானு வளர்க்கறான்!

    ரஞ்சனியால் அங்கு நிற்கக்கூட முடியவில்லை.

    சாப்பிட வா சுபாஷ்.இன்னிக்கு பூரா நீ என் கூடத்தான் இருக்கணும் புரியுதா?"

    ரஞ்சனி வர்றியா?

    மாமியார் குரல் அவசரத்துக்கு உதவ" விட்டால் போதுமென்று உள்ளே ஓடினாள் ரஞ்சனி.

    மாலை ஏழு மணிக்குத்தான் சுபாஷ் போனான்.

    இதோ சாந்தி முகூர்த்த ஏற்பாடு.

    அவள் கையில் பால்செம்பு தரப்பட்டது.மாமியார் அருகில் வந்தாள்.

    "இந்தக் கணம் முதல் என் பிள்ளையை தன் வசப்படுத்தப் போகிறாள்? என்ற பொறாமை இருந்தது.

    ரொம்ப நேரம் தூக்கம் முழிச்சா கங்காவுக்கு உடம்புக்கு சேராதுஃதெரிஞ்சுக்கோ!

    சரி அத்தே!

    உள்ளே நுழைந்தாள்.கதவு வெளியே தாளிடப்பட்டது.

    கங்காதரன் கட்டிலை விட்டு எழுந்து வந்தான்.

    வெல்கம் ரஞ்சனி!

    நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

    அழகாகச் சிரித்தான்.

    உட்காரு ரஞ்சனி

    அவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

    முதல்ல உனக்கு என் நன்றி!

    எதுக்கு? சின்ன குரலில் கேட்டாள்.

    என்னோட குடும்பம் பெரிசு.ஓவ்வொண்ணும் ஒவ்வொரு காரெக்டர்.இதுல வாழ துணிஞ்சு நீ வந்திருக்கியே! என் வாழ்த்துக்கள்!

    நிமிர்ந்து நன்றாக அவனைப் பார்த்தாள்.

    மறுபடியும் பூப்போல சிரித்தான்.

    இத்தனை அழகாக உனக்கு சிரிக்கத் தெரியுமா?அதை இத்தனை நேரம் ஏன் மறைத்து வைத்திருந்தாய்?எத்தனை அழகாக பேச்சைத் தொடங்குகிறாய்?

    அவன் நெருங்கி உட்கார்ந்தான்.

    நான் உன்னைத் தொடலாமா ரஞ்சனி?

    ஏன் இப்படியொரு கேள்வி?

    மனைவியானாலும் அனுமதி பெற்றுத் தொடறதுதான் நாகரீகம்னு நினைக்கிறவன் நான்.தாம்பத்ய உறவு பூவைவிட மென்மையானது அதை முரட்டுத்தனமா கையாளறது சரியில்லை"?

    ரஞ்சனிக்கு சந்தோஷமாக இருந்தது.

    என் வீட்ல உள்ள மனிதர்களுக்கு பந்தா அதிகாரம்" ஆணவம் இப்படி எல்லா கெட்ட குணங்களும் உண்டு.அதை கட்டாயம் உன்கிட்ட பிரயோகிப்பாங்க.நீ எல்லாத்தையும் சகிச்சுக்கணும்னு நான் சொல்ல மாட்டேன்.நீ தட்டிக் கேக்கலாம்.ஆனா இதமாக கேளு! என்னை நம்பியிருக்கற குடும்பம்

    Enjoying the preview?
    Page 1 of 1