Unnaik Kan(Gun) Theduthey
By Devibala
5/5
()
About this ebook
Reviews for Unnaik Kan(Gun) Theduthey
1 rating0 reviews
Book preview
Unnaik Kan(Gun) Theduthey - Devibala
http://www.pustaka.co.in
உன்னை‘கன்’ (கண்) தேடுதே!
Unnai 'kan' (Kan) Theduthey
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
1
அ
ந்த ஆங்கில தினசரியை பிரசன்னா பிரித்த போது, டெலிபோன் சிணுங்கியது. கை நீட்டி ரிசீவரை எடுத்து காதுக்குக்கொடுத்தான்.
மிஸ்டர் பிரசன்னா இருக்காரா?
யெஸ் ஸ்பீக்கிங்… நீங்க யாரு?
நா ஈஸ்வரமூர்த்தி. அகல்யா கார்மெண்டஸ் ப்ரொப்ரைட்டர்!
சொல்லுங்க!
நீங்க உடனே என் வீட்டுக்கு வரணும், உங்க உதவி எனக்கு அவசியமாயிருக்கு!
அட்ரஸ் சொல்லுங்க.
இன்னிய ஹிண்டு பேப்பர்ல வெதர் ரிப்போர்ட்டுக்கு கீழே என்னோட விளம்பரம் ஒண்ணு வந்திருக்கு. முகவரி அதுல இருக்கு, உடனே வாங்களேன், ப்ளீஸ்.
பதிலை எதிர்பாராமல், அவன் வருவான் என்ற நம்பிக்கையில், எதிர் முனையில் ரிசீவர் சாத்தப்பட, ஹிண்டு தாள்கள் ஒன்றோடொன்று அவசரமாக உரசிக் கொள்ள, அந்தக் குறிப்பிட்ட பகுதியைக் கண்களால் தேடினான் பிரசன்னா.
இருந்தது. ஒரு புகைப்படத்தோடு விளம்பரம் ஈஸ்வரமூர்த்தியால் தரப்பட்டிருநதது. புகைப்படத்தில் மார்பளவு சைஸில் கறுப்புக் கட்டம் போட்ட சட்டை அணிந்து துருதுருப்பாக ஒரு இளைஞன். மீசைகூட முழுவதும் அரும்பாத நிலையில் பெரிய கண்களைப் பெற்று, குழந்தை முகத்தோடு ‘மனோஜ்’ என்ற பெயர் தாங்கி புகைப்படத்தில் சிரித்தான் அவன்.
அதனடியில் சுருக்கமான ஆங்கில வாசகங்கள்.
‘டியர் மனோஜ்,
அம்மா படுக்கையில் இருக்கிறாள். நடந்ததை
மறந்துவிடு. உன் விருப்பம் போலவே ஏற்பாடு
செய்கிறேன். உடனே வந்துவிடு ஈஸ்வரமூர்த்தி.
கீழே வீட்டு விலாசமும், தொலைபேசி எண்ணும். இந்த மனோஜ் யாரு?ஈஸ்வரமூர்த்திக்கு மகனா?‘நடந்ததை மறந்துவிடு’ என்ன நடந்திருக்கும்?‘விருப்பம் போலவே ஏற்பாடு செய்கிறேன். ‘விருப்பம் என்னவா இருக்கும்?லுங்கியைக் களைந்து விட்டு பேன்ட்டுக்குள் நுழைந்து, ஜிப்பாவை மாட்டிக் கொண்டான். தலையை கைகளால் சரிப்படுத்திக் கொண்டு, சிகரெட் பாக்கெட்டை உதறியதும் அது காலியாகக் கொட கொடத்தது.
‘பஸ், போற வழில வாங்கிக்கணும்’ ஃபேனை அணைத்து விட்டு, பூட்டைக் கையிலெடுத்ததும் கதவு இருமுறை தடதடத்தது உள்ள வா லதா.
எங்க தலைவரே அவசரமா கிளம்பிட்டீங்க?
வந்து சொன்னாப் போதுமா?
கிண்டலாகக் கேட்டான்.
உதைபடுவீங்க.
சொன்னான், விளம்பரத்தைக் காண்பித்தான். கண்களை உருட்டி வாயிலிருந்த சிக்லெட்டை பலூன் போல ஊதனாள். இன்ட்ரஸ்டிங். ஆனா ஒண்ணு கவனிச்சீங்களா, பயங்கரமா உதைக்குது.
………….
விலாசமும் டெலிபோனும் எதுக்காக இதுல வரணும்?
புரியலை?
இந்த விளம்பரம் யாருக்கு?
அவனுக்குத் தன் வீட்டு முகவரியும், டெலிபோன் நம்பரும் தெரியாதா?
நீ என்ன சொல்ற வர்ற?
"மனோஜ் திரும்பி வரணும்ங்கற நோக்கம் மட்டுமில்லை…இதுல வேற ஏதோ கலந்திருக்கு. எனிவே, நீங்க போய் அந்த ஈஸ்வர மூர்த்தியை ஒரு இன்டர்வ்யூ பண்ணினா