Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oma Nathi
Oma Nathi
Oma Nathi
Ebook420 pages5 hours

Oma Nathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ம. இராசேந்திரன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். கணையாழி இதழின் வெளியீட்டாளர். கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர்.

இவர் மெக்கன்சியின் சுவடிகளில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.

ம. இராசேந்திரன் தமிழ்நாடு அரசில் பல பொறுப்புகளை வகித்துள்ளார் - குறள் பீடம் பொறுப்பாளர், மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகப் பணி, தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை விரிவுரையாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனிஅலுவலர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் அகரமுதலித் திட்டப் பொறுப்பு இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் திராவிட மொழியியல் பள்ளி, திருவனந்தபுரம், இயக்குநர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.

இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111101720
Oma Nathi

Read more from M.Rajendran

Related authors

Related to Oma Nathi

Related ebooks

Reviews for Oma Nathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oma Nathi - M.Rajendran

    http://www.pustaka.co.in

    ஓம நதி

    Oma Nathi

    Author

    ம.ராஜேந்திரன்

    M. Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mrajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அந்திப் பொழுதில்

    2. மாட்டுப் பொங்கல்

    3. தனக்குத் தானே

    4. திருட்டு மேய்ச்சல்

    5. வாய்ச் சோறு

    6. சட்டம்

    7. ஆதிமூலம்

    8. சர்டிபிகேட்

    9. பட்டா

    10. கும்பாபிஷேகம்

    11. மீன் கொத்தி

    12. இரத்தம்

    13. நோய்

    14. அப்பாவுக்கு

    15. யாசகம்

    16. சாமியாடிகள்

    17. எஜமானர்கள்

    18. நிஜங்கள்

    19. காதலுக்கும்

    20. விடிகிற வேளையில்

    21. சகஜம்

    22. கோளாறு

    23. பிளாட்பாரக் காக்கைகள்

    24. மகாமகம்

    25. சிற்பி

    26. மெளன அஞ்சலி

    27. பொம்மை

    28. மனது

    29. புகார்

    30. அம்மாப்பிள்ளை

    31. பிருந்தாவனம்

    32. ஒற்றுமை

    33. காதல் வயதில்

    34. திருட்டு

    35. வளர்ப்பு

    36. சாவுமுதல்

    37. தொட்டில்

    38. சோகம்

    39. சிலேட்டுமம்

    40. பாட்டி

    41. மெட்ரோ சேனல்

    42. கடன்காரன்

    43. பயணம்

    44. அத்து

    45. நோன்பு

    46. தேடல்

    ஓமநதி

    சிறுகதைகள்

    ம.ராஜேந்திரன்

    நதி மூலம்

    தஞ்சை மண்டலத்தில் குளங்களும், கோயில்களும் ஏராளம்.

    ஊரில் கோயில் இல்லையென்றாலும் குளங்கள் இருக்கும்.

    ஒட்டன்குளம், உப்புக்குளம், செக்காணி, பொட்டையன்குளம், அய்யனார்குளம், வெள்ளக்குளம் என்று எங்கள் ஊரைச் சுற்றிலும் ஏகப்பட்ட குளங்கள்.

    சிவன் கோயிலுக்கு முன்னால் ஒமநதிக்குளம்.

    மேல்கரையில் அரசமரம்; கீழ்கரையில் ஆலமரம்.

    தென் கரையில் மாரியம் மன்; வடகரையில் காளியம்மன்.

    கோயிலுக்கும் குளத்திற்கும் இடையே இலுப்பத் தோப்பு.

    கோயிலைச் சுற்றிய தென்னந்தோப்பில் அரளிக் காடுகள்.

    இலுப்ப மரத்தில் இலைகளாய்க் கிளிகள்: கோபுரத்தில் சுதைகளாய்ப் புறாக்கள்.

    ஆலமரத்திலும் அரச மரத்திலும் வெள்ளைப் பூக்களாய்க் கொக்குகள்.

    தியானத்தில் இருக்கும் மீன்கொத்திக் குருவிகள்.

    குளத்துநீரில் கோடுபோட்டுச் செல்லும் பாம்புகள். கோடுகளைத் தடுக்கும் பாசிக்காடுகள். திட்டுத்திட்டாய்த் தாமரைகள் -அல்லிகள். இலைகளின்மேலே சின்னஞ் சிறு குருவிகள். குளிப்பவர்களின் கதைகேட்கும் படித்துறைகள். மூக்கை மட்டும் வெளியில் காட்டி நீச்சலடிக்கும் மாடுகள் -முழங்கால் நீரில் தவம்செய்யும் தூண்டில் பொடியன்கள்.

    அவ்வப்போது கோயில் சுவாமிகள் குளக்கரை வரும். குளிக்கும் பெண்கள் ஒதுங்கிக் கொள்ள அய்யர் படித்துறை இறங்குவார். மாரியம்மன்கோயில் மணிச்சத்தம் கேட்டதும் ஈரம்சொட்ட தயிர்ப்பட்டைக்காகக் கையேந்த ஒடும் சிறுவர்கள்- மாடுகள் மேய! பட்டினியோடு சாவடியில் படுத்துக்கிடக்கும் பெரிசுகள் என்று ஓமநதி சுற்றிலும் பகல் முழுக்க சுறுசுறுப்புதான்.

    அலறும் ஆந்தைகள், தூரத்தில் குரல் கொடுக்கும் ஆட்காட்டிக் குருவிகள், பாம்பின் வாய்ப்பட்ட தவளைகள், நீர்மட்டத்திற்கு வந்து குதித்துத் திரும்பும் வரால்மீன்கள் - முன்னிரவில் ஒமநதியின் அமைதியைக் கிழிக்கும்.

    கோடை முழுநிலவில் படித்துறை மதிலில் தனிமையில் இருந்தால் வானிலும் நீரிலும் நிலா மிதக்கும். எப்போது நினைத்தாலும் மனது முழுக்க சோகம் கவ்வும். கையறுநிலையாய் வாழ்க்கை போனது. பொருளாதார வளர்ச்சிக்காயினும் புலம் பெயர்ந்த சோகம் தாங்க முடியாதது. ஏதேனும் நிர்ப்பந்தத்தில் இடம் பெயர்வதும் பெயர்ந்த இடத்தில் சந்தோஷம் காண்பதும் எவ்வளவு வசதியானாலும் சங்கடமானது என்பதைச் செடி கொடிகளும் பறவைகளும்கூட உணர்த்துகின்றன. வாய்ப்பு கிடைத்தால் புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேர துடிக்கின்றன. மனித வாழ்க்கைக்குப் போகிற இடத்தில் எல்லாம் நங்கூரம். புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வர முடியாத பயணங்கள். அங்கங்கே கழற்றிவிட்டும், சேர்த்துக் கொண்டும் பயணங்கள். இருப்பினும் அவ்வப்போது புறப்பட்ட இடம் சென்று திரும்பும் மனது. என் வாழ்க்கையில் ஓமநதி நான் புறப்பட்ட இடம். பிறந்த இடத்திலேயே கட்டுண்டு கிடக்க புத்தனான சித்தார்த்தனனாலும் முடியவில்லையே.

    வெட்டிக்கொண்டு வெளியேறியதாய் நினைத்துப் போன இடங்களெல்லாம் புதுப்புதுக் கூண்டுகள்.

    கூண்டுகள் விஸ்தாரமானவையாக தெரிந்தபோதும் அன்றாட வாழ்க்கையில் உரசும் கம்பிக்கூண்டுகள். எந்தக் கூண்டிலிருந்து எந்தக் கூண்டிற்குப் போவது என்பதே வாழ்க்கை போராட்டமாகிவிட்டது.

    உணரப்படும்போது உலகம்கூட பெரிய கூண்டுதான்.

    எங்கிருந்து விடுபடுவது என்பதறியாமல் புறப்பட்ட இடம் நோக்கி அவ்வப்போது போய் மீளுகிறது மனது. கருவறையிலும் சாத்தியமான விடுதலை உணர்வு தொப்புள் கொடி வெட்டப்பட்ட பின் சாத்தியமாகவே இல்லை.

    சித்தார்த்தனுக்கு அரண்மனை. நமக்குப் பிறந்த ஊர். யாதும் ஊர் யாவரும் கேளிர் நமக்கு மட்டுமல்ல ரிஷிகளுக் கும் சாத்தியமில்லை. சந்நியாசம் வாங்கிக் கொண்டவர் களும் ஊரைவிட்டு ஒடிப்போகிறார்கள்தான்.

    ஆயினும் புறப்பட்ட இடத்தை மறக்கமுடியவில்லை. திரும்பிப் போனாலும் நாம் புறப்பட்ட காலத்திய இடமோ நாமோ அங்கிருப்பதில்லை. ஆனாலும் மனது கல்லாகிறது. புறப்பட்ட இடம் நோக்கிய மனதின் பயணத்தில் இடையில் நிகழ்ந்ததும் இடம் நோக்கி நகர்ந்ததும் என்னை எழுத வைக்கின்றன.

    எழுதாமல் இருப்பதும் எழுதுவதுபோலவே சந்தோஷம் தருகிறது. ஆனாலும் ரொம்ப காலம் எந்த சந்தோஷமும் நிலைத்து நிற்பதில்லையே. அடுத்தடுத்துப் போக வேண்டியிருக்கிறது.

    குழந்தைக்குக் கூட அவ்வப்போது வெவ்வேறு பொம்மைகள் தேவைப்படுகின்றன. பார்த்து, தொட்டு, போட்டுடைத்து, விழுந்து, எழுந்து, நடந்து, அடிபட்டுத் தானும் பொம்மையாய் உடைபடுவதும், உடைப்பதுமான வாழ்க்கை வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது.

    எனவே என்றைக்குமான சந்தோஷம் ஏதோ ஒன்றில் மட்டும் யாருக்கும் இருப்பதில்லை. அடுத்தடுத்து முன் பின்னாக வேணும் மாறவேண்டியிருக்கிறது. வாழ்க்கை தந்து கொண்டிருக்கிறது.

    ஆண்டு தோறும் வந்துபோகிற கோடையானாலும் வசந்தமானாலும் அடிக்கிற புயலானாலும் அதிர்ச்சிதரும் பூகம்பமானாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

    இவற்றையும் கடந்து வாழ்க்கையில் சந்தோஷம் இருந்து கொண்டே இருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

    அந்த நம்பிக்கைதான் கடந்த காலங்களைப் போலவே இனியும் எதையும் எதிர்கொண்டு தலைமுறைகள் வளர சக்தியை அளிக்கிறது. தனிப்பட்டவர்களின் சுகதுக்கங்கள் சமுதாயத்தை வளர்க்கவோ மாய்க்கவோ முடிவதில்லை. சுகமும் துக்கமும் யாருக்கு யார் தரமுடியும்?

    தண்டனை பெற்றவரைவிடவும் தண்டித்தவர்கள் துக்கப்படுவதுண்டு. அடிப்பட்ட குழந்தை அழுகையை மறந்தபின்னும் அடித்த பெற்றோர் மனம் அழுவதுண்டே வாழ்க்கையும் மனதும் விநோதமானவை.

    வாழ்ந்து பார்ப்பதிலும் நினைத்துப் பார்ப்பதிலும் அதன் நேர்த்தி புலப்டும். நினைத்துப் பார்க்க வாய்ப் பளிப்பது எழுத்தும் படிப்பும்.

    எழுதுகிறபோதுதான் எழுதாமல் இருந்ததன் சோகம் புரிகிறது. படிக்கிறபோதுதான் படிக்காமல் கழித்த சோம்பல் தெரிகிறது. சோகம் தவிர்க்க மீண்டும் எழுத நேர்கிறது. இப்படி எழுதியும் எழுதாமலும் படித்தும் படிக்காமலும் காலம் ஒடுகிறது. காலம் எங்கே ஒடுகிறது.

    நாம்தான் ஒட்டுகிறோம். விரட்டுகிறோம்.

    காலத்தை ஒட்டவும் விரட்டவும் வெல்லவும்கூட எழுத்துத் தேவையாகிறது. எழுதுவதும் எழுதாமல் இருப்பதுபோல் சந்தோஷம் தருகிறது. சந்தோஷம் என்பதே சங்கடங்களை உருவாக்குவதுதான். சங்கடங்களை எதிர்கொண்டு மீள்வதிலும் சந்தோஷம் கிடைக்கிறது. இப்படித்தான் சந்தோஷம் -சங்கடம் - சந்தோஷம் என்று வாழ்க்கை விளையாட்டாய்ப் போகிறது.

    வாழ்க்கையை விளையாட்டாகப் பார்க்காவிட்டால் வேதனைகள் மனதை அறுக்கும். குழந்தையின் அன்புக்கும் சிரிப்பிற்கும் பொருள்தேடும். அரும்பின் மலர்ச்சிக்கும் உள்நோக்கம் புலப்படும். நட்புக்கும் உறவுக்குமான நாணயம் உணரப்படும். தாயின் அன்பிற்கும் மனைவியின் பாசத்திற்கும் எதிர்பார்ப்புகள் தென்படும்.

    சுற்றிலும் சந்தர்ப்பவாதம் சூழ்ந்து நிற்பது காணப்படும். நம்பிக்கைகள் எல்லாம் துரோகமாகும். எனவே வாழ்க்கையை விலகி நின்று விளையாட்டாய்ப் பார்க்கவும் பார்க்கப் பழகவும் கூட எழுத்துத் தேவைப் படுகிறது. இப்படி எனக்குத் தேவைப்படுகிற தருணங்களில் எழுதுகிறேன். அப்படியான தருணங்களின் தொகுப்பாகத் தான் ஓமநதி வருகிறது.

    ஓராண்டாய் எனது முன்னுரைக்காக இது தாமதப் பட்டது. இதில் என்னைவிடவும் ஆர்வம் காட்டிய - என்னையும் ஆர்வம் கொள்ளச் செய்த நண்பர்களுக்கும் அட்டைப்படம் வரைந்து உதவிய நண்பர் கே.எம். ஆதிமூலம் அவர்களுக்கும் இதனைச் சிறப்பாக வெளியிடும் கவிதா பதிப்பகம் திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கும், எழுதவேண்டும் என்பதற்கான அவசியத்தை அவ்வப்போது தருகிற திருமதி மய்திலி ராஜேந்திரனுக்கும் நன்றி!

    அன்புடன்

    ம. ராஜேந்திரன்

    25.06.01

    1

    அந்திப் பொழுதில்

    என்னதான் நடந்திருந்தாலும் ஊரவிட்டுப் போயிருக்கக் கூடாதோ? பதினஞ்சு வருஷத்துக்கப்புறம் இப்ப நெனச்சு என்ன செய்ய! அப்பாவுக்குப் பிடிக்கல. அப்பாவுக்குன்னு இல்ல யாருக்குத்தான் பிடிக்கும்."

    ஊர் நெருங்க நெருங்க மனசு குறுகுறுத்தது.

    டவுன் பஸ் வழக்கம் போல நின்று நின்று கிராமத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. கூட்ட நெரிசலில் கண்டக்டர், பின்னாலிருந்து முன்பக்கமாகவும் முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாகவும் பஸ் ஒட்டத்திற்கேற்பப் பஸ்ஸைப் போலவே நின்று நின்று நடந்து கொண்டிருந்தார். மூட்டை முடிச்சுகளோடும் பானை சட்டிகளோடும் மக்கள் பஸ்ஸை மீறிய பேச்சு சத்தத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    ஊர் ரொம்பவும் மாறியிருந்தது. எலக்ட்ரிசிட்டி, டவுன்பஸ்.

    'முன்ன எல்லாம் கால் நடைதான். அப்பா மட்டும்தான் அந்த ஊர்லேயே ஒத்தமாட்டு வண்டி வச்சிருந்தார். எங்க போவணும்னாலும் அதுதான் அவருக்கு வாகனம். பல வீடுகள்ளே எரு வண்டியிலே சீக்காளிகள ஏத்திக்கிட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவாங்க. ஆஸ்பத்திரிக்குப் போற வழியிலேயே, எருவண்டியிலே பிறந்தவங்க பல பேரு.

    இந்தப் பஸ்ல இருக்க வங்க எல்லாரும் அந்த கிராமத்துக் காரங்கதானா? ஆனா யாரையும் எனக்கு அடையாளம் தெரியலியே. இப்படித் தான் என்னையும் யாருக்கும் அடையாளம் தெரியாமப் போயிருக்குமோ!

    போகாது. ராசமும் கிருஷ்ணய்யரும் சரோ கல்யாணத்திலே பாத்திருக்காளே. கல்யாணம் ஆகியும்தான் ஏழு எட்டு வருஷம் இருக்குமே.

    சாலை ஓரத் தென்னை மரங்கள் கைகளில் உரச வெங்கட்டு சூழ்நிலைக்கு வந்தான். பஸ் நின்றதும் பறந்த புழுதியைக் கைக்குட்டையால் விரட்டி விட்டுக் கொண்டே தூர இருந்த போர்டைப் பார்த்தான்.

    கீழையூர்.

    இந்தக் கிராமத்தை அவனால் மறக்க முடியாது. குடும்பமே - பரம்பரையே இனி மறக்க முடியாது. சொந்த ஊரை நினைத்துப் பார்க்க மட்டுமே முடிந்து போன அவலத்திற்குக் காரணமான ஊர்.

    பதினைந்து வயதில் அவன் மன்னார்குடியில் படித்து வரும்போது, சனி ஞாயிறுகளில் கிராமத்தில் இருப்பான். அவன் அப்பாவுக்கு நல்ல மரியாதை, ஐந்து கிராமங்கள் சேர்ந்த கோட்டைக்கு அவர் ஒருவர் மட்டுமே பஞ்சாங்க ஐயங்கார். வடகலையும் குடுமியும் தோரணையும் கண்டவரைக் கும்பிடச் சொல்லும். அவருக்கு நேராக வீட்டில் யாரும் உட்கார்ந்து அவன் பார்த்ததில்லை. அவருக்கே அந்தக் கதி.

    வழக்கம் போலப் பக்கத்துக் கிராமத்தில் நடக்கும் உத்தரகிரியைக்கு வண்டியில் புறப்பட்டுப் போனார். வண்டியை இவரே ஒட்டிச் செல்வார். ஒத்தை மாட்டு வண்டி இவர் எண்ணத்திற்கேற்ப ஒடும்.

    குளக்கரையில் கிரியை முடிந்து, வாழை இலை, பச்சரிசி, தேங்காய், காய்கறி, சொம்பு, பலகை இத்யாதிகளைச் சாக்குப் பையில் கட்டி வண்டியில் போட்டுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பியிருக்கிறார்.

    மத்தியான வேளை, கருப்புச் சட்டைக்காரர்கள் நிறைந்த கிராமம் அது. மணி குலுங்க ஒட்டமும் நடையுமாய் வீடுநோக்கி வந்து கொண்டிருந்தது வண்டி. ரோட்டின் இருபக்கமும் வயல்கள். ஆற்றில் நீர்வந்து நிலங்களை உழுது கொண்டிருக்கும் விவசாயக் காலம். உழுது முடித்துவிட்டுக் கலப்பை தோளிலும் கையில் மாடுமாகக் குளத்தை நோக்கிப் பலர் எதிரே வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராவிதமாக, கூச்சல் போட்டனர். கடுக்கன், பூணுால், நாமம் பற்றிய கேலிப் பேச்சுக்கள். தலைக் கயிற்றை விட்டுவிட்டு அவர் காதைப் பொத்திக் கொண்ட போது, தலைப்பூட்டை அவிழ்த்து வண்டியிலிருந்து மாட்டை விரட்டி விட்டார்கள். அவரும் தொபுக்கென்று கீழே விழுந்து செய்வதறியாது எழுந்தபோது, 'ஒங் கடவுளக் கூப்புடு; காப்பாத்துவான், இது எப்படி இருக்குன்னு சொல்லி கலப்பையில் ஒட்டியிருந்த சேற்றை எடுத்து நாமத்தில் பூசிச் சென்று விட்டார்கள். 'டேய், டேய் அடுக்காதுடா, கடவுள் பாத்துப்பான்டா போன்ற சொற்களை ஒருவேளை அவர் உதறியிருக்கலாம்.

    எப்படியோ மாடு மட்டும் அப்பாவை விட்டு ஒடாமல் நின்றிருக்கிறது. அதனால் மாட்டை மட்டும் அப்பா கடைசி வரை விற்கவேயில்லை. செத்துப் போன பிறகும் வீட்டுக்குப் பின்னாலேயே அடக்கம் செய்துவிட்டுத்துக்கித்துப் போனார்.

    அந்த ஊர்தான் கீழையூர். வீட்டுக்கு வந்தது முதல் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. வேண்டியதை எடுத்துக்கச் சொன்னார். நானும் சரோவும் நடப்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். வேறு வழியாக வண்டியில் மன்னார்குடி வந்து ஒரு வாரத்தில் வீடு பார்த்துக் குடியமர்த்தினார். இடையில் சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கியிருந்த போதும் மெளனமே சாதித்தார். தனி வீடு போன பிறகுதான் தினம் தினம் வீட்டில் சொல்லிக் குமுறிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் இந்த ஊருக்கு வரவேயில்லை.

    நரசிம்மன் மெளனமாய்க் கேட்டுக் கொண்டு வந்தான்.

    ஊரில் கேள்விப்பட்டு வந்தவர்களிடம் கூட அவர் பேச மறுத்துவிட்டார். குழந்தைக்கு ஜாதகம், கல்யாணத்திற்கு நாள் என்று வந்தவர்களைக் கூடத் தொழிலாக நடத்தினாரே தவிர தெரிந்தவர்கள் மாதிரி காட்டிக் கொள்ள முடியவில்லை.

    பஸ் மேலையூரை அடைந்தது. எல்லோரும் இறங்கினார்கள். டப்பா கட்டு வேட்டிகளோடு கிராமத்து மக்கள் அங்கங்கே தென்பட்டார்கள். வெங்கட்டும் நரசிம்மனும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஐக்கியமானார்கள். சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வழியெல்லாம் மாறிப் போயிருந்தன.

    அன்னவாசலுக்கு எப்படிங்க வழி?

    அவசரம் அவசரமாகச் சுருட்டுப் பற்ற வைத்துக் கொண்டிருந்த முண்டாசுக்காரர் இவர்களைப் பார்த்தார்.

    அன்னவாசல்லே யாரு வீட்டுக்கு?

    ராசத்தையர் வீட்டுக்கு.

    பெரிய ஐயா வீட்டுக்கா, நீங்க எங்கேருந்து வாறிங்க?

    மன்னார்குடியிலேருந்து

    மன்னார்குடியிலே யாரு வீடு?

    சரியாக மாட்டிக் கொண்டதை உண்ர்ந்தார்கள். இடையில் நரசிம்மன் குறுக்கிட்டு,

    நாங்க அன்னவாசலுக்குப் போகணும்; கொஞ்சம் வழி சொல்லுங்களேன்

    நானும் அன்னவாசல்தான். வாங்க போவோம்.

    கத்திரிக்காய் கொண்டு சென்று டவுனில் விற்றுவிட்டு வரும் அவர் கவனமாய்க் கீழே கால் மாட்டில் கிடந்த கூடையை ஒரு கையில் எடுத்துக் கொண்டு நடந்தார். மீண்டும் அவர்களிடம் திரும்பி,

    சும்மா ... தெரிஞ்சுக்கலாமின்னு கேட்டேன். எதுக்குன்னா பெரிய ஐயா செத்து ரெண்டு வருசும் ஆச்சு. அந்த அம்மாக்கூட இங்கே இல்லை... அவுங்க வீட்டுக்குப் போறேங்கிறிங்களேன்னுதான்.

    என்ன சொல்றீங்க?

    'ராசத்தையர் செத்துப் போனதே தெரியாதா? நல்லாருக்குப் போங்க. இந்தா இருக்கிற மன்னார்குடியிலே இருந்துகிட்டு..."

    இல்லங்க. நாங்க மெட்ராஸ்லே இருக்கோம். எங்கப்பா தான் மன்னார்குடி

    அவரு சொல்லலியா?

    வெங்கட்டுக்கு அப்பாவின் மரணம் நினைவில் உறுத்தியது. சிறிது நேரம் மெளனமும் நடந்தது.

    பாத்து வாங்க...இன்னும வரப்புதான். பழக்கமில்லன்னா கால் எடறும்! முண்டாசே மீண்டும் மெளனத்தைக் கலைத்தார்.

    ஊர்ல இப்ப எல்லாமே சின்ன ஐயா தான்

    யாரு கிருஷ்ணய்யாரா?

    ஆமா

    அவருக்குப் பெரிய ஐயா மாதிரி சாமர்த்தியம் போதாது. கோயில்லயும் வருமானமில்லே. எப்படியோ காலத்தை ஒட்றார்... ஆமா, மன்னார்குடியிலே ஒங்க அப்பா யாருன்னு சொல்லவே இல்லியே!

    மீண்டும் கேள்வியில் வந்து நின்றார். இனிமேலும் சொல்லாமல் இவரோடு போக முடியாது என்று உணர்ந்த வெங்கட்,

    உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு அன்னவாசல் தான் சொந்த ஊரு.

    முண்டாசு நின்று வெங்கட்டுவைப் பார்த்தார். கிராமத்திலிருந்து பஸ்ஸைப் பிடிக்க வேகவேகமாக ஆண்களும் பெண்களுமாய் வரப்பில் வந்து கொண்டிருந்தனர். ஒரு சாண் அகல வரப்பில் அவர்களுக்கு வழிவிட, பக்கத்தில் குறுக்கிட்ட வரப்பிற்குச் சென்றனர்.

    அப்படியா?

    முண்டாசு ஆவலாய்க் கூடையை வரப்பில் வைத்து விட்டுக் கலைந்த முண்டாசைப் பிரித்துக் கட்டினார்.

    பஞ்சாங்க ஐயங்கார்

    அவுங்க பையனா நீங்க!

    ஆமாங்க!

    மீண்டும் மெளனம்.

    அய்யங்கார் செத்துப் போனதை ஊருக்குச் சொல்லவே இல்லீங்களே?

    அப்பாவப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே!

    ஆமாமா... வைராக்கியசாலி!

    இடையில் ஒரு சிற்றாறு குறுக்கிட்டது! கையில் செருப்பைத் தூக்கிக் கொண்டு வாய்க்காலில் இறங்கினார்கள்.

    இதுக்குக் காட்டு வாய்க்கான்னு பேருங்க

    நரசிம்மனைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு நடந்தார். தண்ணீருக்குள் சேறும் மண்ணுமாகக் கால் கூச அவர்களும் நடந்தார்கள். ஓரிடத்தில் தண்ணீர் பெருந்தொடையைத் தொட்டது. அதற்காகக் கவலைப்படாமல் ஆண்களும் பெண்களும் அந்த வழியாகவே வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் மட்டும் புதிய முகங்களை நின்று நிதானித்தார்கள்.

    கரையேறி, கால்களைப் புல்தரையில் தேய்த்து ஈரத்தை உலர்த்திவிட்டு முண்டாசு நடந்தார். வெங்கட்டும் நரசிம்மனும் செருப்பைப் போட்டுக்கொண்டு தொடர்ந்தனர். அழுக்கும் மண்ணும் காலையும் செருப்பையும் உறுத்தின.

    திடீரென்று வரப்பு வழியை மறைத்துக் கொண்டது கரும்புத் தோட்டம். முண்டாசு தயக்கமில்லாமல் நுழைந்தார். கைகளால் தோகைகளை விலக்கிக் கொண்டு வெங்கட்டும் நரசிம்மனும் நடந்தனர். கரும்புத் தோகை பட்ட இடங்களில் நமச்சல் எடுத்தது.

    கரும்புத் தோட்டத்தின் முடிவில் ஊர் தெரிந்தது. ஒரு பழைய சர்க்கார் கேணி. சில பெண்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். வாளிச் சங்கிலி பட்டு எழுந்த சத்தத்தை மீறி மசி போடாத சகடையின் ஒலம் வெளி வந்தது.

    ஊருக்குள் நுழைந்ததும் தூரத்தில் செக்காடும் சத்தம் விதவிதமாய்க் கேட்டது.

    அவர்களுக்கு வழியைக் காட்டிவிட்டு எதிரிலிருந்த டீக்கடைக்குள் முண்டாசு நுழைந்து கொண்டார்.

    அன்னவாசலுக்குப் பஸ் இல்லையே தவிர ஒழுங்காக இருந்த மண்ரோடு தார்ரோடாகவும் தெரு முக்குகளில் டீ கடையுமாக ஊரும் ரொம்பதான் மாறிப் போயிருந்தது.

    அங்கங்கே புதிய ஒட்டு வீடுகள். ஒரு சில மாடி வீடுகள்.

    பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னால எங்க வீடும் ஐயர் வீடும் தான் ஒட்டு வீடு; ஊரிலேயே பெரிய வீடு.

    அவர்கள் பேசிக் கொண்டே நடந்தார்கள். சாலையில் ஒரு பக்கம் திரும்பி நடந்த போது எதிரே கோபுரம் தெரிந்தது. செடிகள் மண்டிக் காரை பெயர்ந்து பார்ப்பதற்கே ஒரு மாதிரியாகத் தெரிந்தது.

    உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி ஐயங்கார் வீடு மாறி இருந்தது, வெங்கட்டு மன சைக் கலக்கியது.

    வேப்பமரமும் பவழமல்லியும் மல்லிகைக் கொடியுமாக வீடு முகப்பின் நிழலில் மணம் காய்ந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. இன்று எருமை மாடுகளும், வண்டியும் குப்பையும் சாணமும் கலப்பையும் வைக்கோலுமாக முறையின்றிக் கிடப்பதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். கொஞ்ச தூரத்தில் ராசத்தையர் வீடு வந்தது.

    வெங்கட்டு வீட்டைக் காட்டிலும் அது சிதைந்து போயிருந்தது. வெங்கட்டு வீட்டிலாவது தற்போது விவசாயக் குடும்பம் வாழ்கிறது. ராசத்தையர் வீட்டில் அப்படி இல்லை. இருந்தாலும் அது விவசாயி வீடாக மாறிக்கொண்டிருப்பது தெரிந்தது. வாசல் தூணில் கன்றுக்குட்டி. திண்ணையில் வியா வியா வென்று கத்திக் கொண்டிருக்கும் குஞ்சுகளோடு கோழி நடை பயின்றது. வீட்டின் வெளிப்பக்கம் ஆளரவமற்று இருந்தது. சிறிது நேரம் திண்ணைப் பக்கத்தில் நின்று கொண்டு உள்ளே யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தார்கள். மரத்து நிழலில் கிடந்த நாய் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

    நடுவயதில், கையில் நொய்யும் கொட்டாங்கச்சியில் தண்ணியுமாக ஒரு அம்மாள் உள்ளிருந்து வந்தாள். இவர்களைப் பார்த்ததும் சற்று உள்வாங்கி நின்று வெளி வந்தாள்.

    எங்கேர்ந்து வந்திருக்கேள்?

    மடிசார் உடைகள் மாறிப்போயிருந்தாலும் சொற்களில் இன்னும் ஐயர் ஆத்து வாடை அடித்தது.

    நான் பஞ்சாங்க ஐயங்கார் பையன், வெங்கட்

    "வெங்கட்டா...வா! அம்மா எப்படியிருக்கா?

    எங்களுக்குக் கூட சொல்லாமப் போயிட்டேன். காரிய மெல்லாம் முடிஞ்சப்பறம் தான் நேக்கு ஐயர் சொன்னார். இப்போ பட்ணத்தில தானே இருக்கே!"

    ஆமா மாமி!

    ஆத்துக்காரி நன்னா இருக்காளா? எத்தனை கொளந்தைங்க?

    ஒண்ணுதான் மாமி; பொண்ணு

    அவா யாரு?

    மச்சினன் மாமி

    உக்காருங்கோ

    கோழியிடம் கொண்டு போய் நொய்யையும் தண்ணியையும் வைத்துவிட்டுச் சேலைத் தலைப்பிலே கைகளைத் துடைத்துக் கொண்டாள்.

    தாகத்துக்கு என்ன சாப்பிடறேள்?

    தண்ணி போதும் மாமி

    செம்பும் டம்ளருமாகத் தண்ணீரைக் கொண்டு வரும் போதே,

    அவர் வயலுக்குப் போயிருக்கார். பயிரு காயுது. தண்ணிக் கஷ்டம் தாங்கலே. கணேசன் காத்தாலேயே போயிட்டான். அவர் இப்பதான் கோயில் பூஜையை முடிச்சிண்டு போனார்.

    ஐயங்கார் வீட்டு வயலையும் தாம் குத்தகைக்காக விவசாயம் செய்து கொண்டிருப்பதை நினைத்துக் கொண்டு மாமி தன் விவசாயக் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    ஐயரைப் பார்க்கணும். வயல் ரொம்ப தூரமா மாமி?

    என்ன வைராக்கிய மனுஷாள் தெரியுமா இவா அப்பா என்று சொல்லிவிட்டு மாமி உள்ளே சென்றாள்.

    வெங்கட் மீண்டும் அப்பாவின் நினைவுகளில் ஆழ்ந்தான்.

    காலை மாலை வேளைகளில் கோயிலில் ஒலிக்கும் வெண்கல மணி ஒசை, அந்தச் சுற்று வட்டாரக் கிராமங்களிலே எதிரொலிக்கும் போது ஐயங்கார் குளித்து முடித்து விட்டு ஜெபத்திலிருப்பார். வெண்கலமணியின் ரீங்காரத்தில் பறவைகள் பறந்து சென்று மீண்டும் வந்து கிளைகளில் அமரும். அரசமரத்தில் பழங்களுக்கிடையே பறவைகள் வந்து கீச்சிடுவதையும் குளத்தில் விழும் பழங்களுக்காக மேற்குக் கரை ஒரம் ஒதுங்கித் துள்ளும் மீன்களையும், கிளை ஒரத்தில் உட்கார்ந்து கொண்டு தண்ணீரில் மீன் தேடிப் பறந்து சென்று நிதானித்துக் குத்தீட்டியாய்ப் பாய்ந்து குளித்து மூக்கில் மீனோடு தவளைத் தத்தலாய்த் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு பறந்து வரும் மீன்கொத்திக் குருவியையும், திடீரென்று சாமியார் வேடம் போட்டு இலைகளை எல்லாம் உதறிவிட்டு மொட்டையாய் நிற்குடி அரச மரங்களையும், மூக்கைத் துளைக்கும் வாசனையைக் கொட்டி நிற்கும் இலுப்பைப் பூ மரங்களையும், அந்த மரங்களின் கிளைகளையும் பொந்துகளையும் மறக்க முடியாமல் சுற்றிச்சுற்றி வந்து கொண்டும் பொந்தின் முன் உட்கார்ந்து கொண்டும் உள்ளிருக்கும் குஞ்சுகளை வெளியே அழைக்கவும் விளையாட்டுக் காட்டவும் தன் மூக்கை உள் நுழைத்து நுழைத்து வெளியே இழுக்கும் பச்சைக் கிளிகளையும், குஞ்சுகளுக்குத் தீனி கொடுக்க ஒரு கிளி பொந்துக்குள் செல்ல, இன்னொரு கிளி பாதுகாப்பாய் வெளியே அமர்ந்து கொண்டு யாரும் அப்பக்கமாக வந்தால் அபாயக்குரல் கொடுப்பதையும், அக்குரல் கேட்ட மாத்திரத்தில் அவசரமாய் வெளியேறும் கிளியையும் ஐயங்காரின் ஜெபம் முடியும்வரை குளக்கரையில் நின்று வேடிக்கை பார்த்த நினைவுகளில் வெங்கட் கரைந்து கொண்டிருந்தபோது, எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அண்டாவை யாரோ படபடவென்று தட்டும் சப்தம் கேட்டு வெங்கட், ஐயர் வீட்டுத் திண்ணையில் நினைவுகளை விலக்கிக் கொண்ட போது மாமி பரபரத்தாள்.

    கையில் ஒரு சின்ன நோட்டுப்புத்தகம் சொம்பு; டம்பளர். ஒரு சிறு கயிறோடு தூணில் கட்டியிருந்த கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டு மாட்டிடம் போனாள். அண்டா சத்தம் கேட்ட உடனே மாடு எழுந்து அம்மே என்று குரல் எழுப்பிச் சுரப்பு விட்டதற்கு அடையாளமாய் மூத்திரம் கழித்து நின்றது.

    சனியனுக்கு இங்கேயே சொரப்பு வந்துடும்... தே கயிறை அவிழ்த்து மாட்டையும் விரட்டினாள். மாடும் கன்றைத் தேடி வரவில்லை. கன்றும் மாட்டை நோக்கி ஒடவில்லை. மாடும் கன்றும் டெப்போவை நோக்கிச் சென்றன; மாமியும் கூட.

    அம்மா ஆசையாய் வளர்த்த லெட்சுமி அதிகாலையிலும் மாலையிலும்தான் கறக்கும். கன்றுக்குட்டிக் கென்று இரண்டு காம்புகளை விட்டுவிடச் சொல்வாள். கறக்கும் இடமோ, நேரமோ, ஆளோ மாறினாலும் கூட பசு பால் தராது. உதைக்கும். வேலைக்காரக் கோனார் வராத நாட்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1