Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullam Varudum Thendral
Ullam Varudum Thendral
Ullam Varudum Thendral
Ebook409 pages3 hours

Ullam Varudum Thendral

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.

இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580113301760
Ullam Varudum Thendral

Read more from Vathsala Raghavan

Related to Ullam Varudum Thendral

Related ebooks

Reviews for Ullam Varudum Thendral

Rating: 4.857142857142857 out of 5 stars
5/5

7 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullam Varudum Thendral - Vathsala Raghavan

    http://www.pustaka.co.in

    உள்ளம் வருடும் தென்றல்

    Ullam Varudum Thendral

    Author:

    வத்சலா ராகவன்

    Vathsala Raghavan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vathsala-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    மழை!. என்ன அதிசயம் நிகழ்ந்ததோ!??? சென்னையில் இன்று அதிகாலையிலிருந்தே மழை!. நேரம் காலை ஏழு மணி. மழை எப்போதுமே அழகு. விடுமுறை நாளில் மழை ரொம்பவே அழகு.

    சாலையில் நடமாட்டமே இல்லை. இந்த உலகத்தின் மிகப்பெரிய அதிசயம் மழை. மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, விமானம் ஏறி உலக அதிசயங்களை ரசிக்க செல்பவர்களெல்லாம் மழையை பார்த்ததும் வீட்டுக்குள் போய் புகுந்து கொள்கிறார்களே!!!? தனக்குள்ளே சொல்லி சிரித்துக்கொண்டு, செல்லமாய் வருடி தாலாட்டிய அந்த சாரலில் ரசித்து ரசித்து நனைந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா

    அது ஏனோ மழையில் நனைவது அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு மழையை தவற விட்டு விட்டால் கூட எதையோ இழந்தது போலே இருக்கும்.

    சிறிது நேரம் மனதார நனைந்து விட்டு தான் தங்கி இருக்கும் ஹாஸ்டல் அறைக்கு வந்தாள் அபர்ணா.  ஈரம் சொட்ட, சொட்ட அவளது தனி அறைக்குள் வந்தவள் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக்கொண்டாள்.

    உன்னை பார்த்தா யாராவது காலேஜ் லெக்சரர்ன்னு சொல்லுவாங்களா? அதுவும் மேத்ஸ் லெக்சரர். ஸ்டுடென்ட்ஸ் யாராவது பார்த்தா சிரிக்க போறாங்க. அவள் மனம் அவளை கேலிப்பேசியது

    சிரிச்சா சிரிச்சிட்டு போறாங்க. எனக்கு மழையிலே நனையணும், பாட்டு கேட்கணும், கவிதை எழுதணும். வாழ்கையை ரசிச்சு ரசிச்சு வாழணும். வாய்விட்டு சொன்னாள் அபர்ணா.

    வாழ்கையை ரசித்து ரசித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த அபர்ணாவின் கண்கள் இந்த நிமிடம் வரை  கண்ணீர் என்ற ஒன்றை பார்த்ததில்லை.

    நேரம் மதியம் ஒன்று. கண்ணாடி முன்னால் நின்றிருந்தாள் அபர்ணா.

    வில்லான புருவங்கள், மீன்களோடு போட்டி போடும் கண்கள், வெண்ணை கன்னங்கள், கோவை பழ உதடுகள் இப்படி எதுவுமே இல்லாத சாதாரண பெண் நம் அபர்ணா.(கதாநாயகின்னா தேவதையா தான் இருக்கணுமா என்ன?)

    அபர்ணா நம்ம வீட்டு, நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி ரொம்ப சாதாரண பொண்ணு. நீளமான கூந்தலும், எல்லாரையும் தோற்கடிக்கும் அழகான புன்னகையும் தான்  அவளது பிளஸ் பாயின்ட்ஸ்.

    ஒலித்தது அவள் கைப்பேசி. கிளம்பிட்டியா அப்பூ?  கைப்பேசியில் ஒலித்தது விஷ்வாவின் குரல் .

    'இதோ நான் ரெடி. நீ எங்கே  இருக்கே?

    அ...து....வ...ந்து...... நான் ஒரு வேலையிலே சிக்கிட்டேன். நீ நேரா ஹோட்டலுக்கு  போயிடேன். நான் பத்து நிமிஷத்திலே அங்கே வந்திடறேன்.' என்றான் விஷ்வா.

    நினைச்சேன். எந்த பத்து நிமிஷம்? உன் பத்து நிமிஷமா? என் பத்து நிமிஷமா?  உன் பத்து நிமிஷமன்னா ரெண்டு மணி நேரம்னு அர்த்தம். ஒரு நாளாவது சொன்ன டைம்க்கு வந்திருக்கியா நீ?

    இல்லை. இல்லை. நீ வேணும்னா  பாரு. இன்னைக்கு கரெக்டா வந்திடுவேன் அப்படி வரலேன்னா ஹோடேல்லே வெச்சே தோப்புகரணம் போடறேன். ஓகே யா?

    'இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆமாம் எந்த ஹோட்டல்?.

    ஹோட்டலின் பெயரை சொன்னான் விஷ்வா.

    சரி. வெச்சிடறேன். சீக்கிரம் வா'. துண்டித்தாள் அழைப்பை.

    இவர்கள் இருவரும் பேசுவதை யாராவது கேட்டிருந்தால் உடனே இருவரையும் காதலர்களாகவே நினைத்து கற்பனை செய்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி நாட்களிலிருந்து உயிர் நண்பர்கள்.

    தினமும்  இருவருக்குமிடையில் குறைந்த பட்சம் மூன்று சண்டைகளாவது வரும். அவன் எங்கே இருந்தாலும் தொலைப்பேசியில் அழைத்தாவது சண்டை போடுவாள் அபர்ணா.

    ஆனால் இருவரும் பேசிக்கொள்ளாத நாள் என்று இதுவரை வந்ததில்லை. இனிமேலும் வராது என்பது அவள் நம்பிக்கை.

    இவர்கள் இருவரின் நட்பை சரியாய் புரிந்து கொள்பவர்கள் மிகக்குறைவு. அது ஏன் என்று இன்றுவரை புரியவில்லை அவளுக்கு.

    'ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி மாதிரி பழகறாங்க' என்பார்கள் சிலர்.

    அதை கேட்டால் சுள்ளென்று கோபம் வரும் விஷ்வாவுக்கு.

    அது என்னது அது? அண்ணன்-தங்கச்சி.  நம்மை நாமே நம்பாம, அண்ணன்- தங்கச்சின்னு ஒரு கவசம் போட்டுட்டு பழகணுமா? நான்சென்ஸ். என்னை பொறுத்தவரை, நான் தங்கசிங்கற வார்த்தைக்கு கொடுக்கிற மரியாதையை விட, ஃப்ரெண்ட்ங்கிற வார்த்தைக்கு கொடுக்கிற மரியாதை அதிகம். ஷீ இஸ் மை ஃப்ரெண்ட் ஷீ வில் பீ மை ஃப்ரெண்ட் ஃபார் எவர்.

    அவன் வார்த்தைகளை நினைத்தபடியே, இதழ்களில் புன்னகை ஓட, துப்பட்டாவை மடித்து பின் செய்த போது மறுபடியும் ஒலித்தது கைப்பேசி. அவள் முகம் மலர்ந்தது .திருச்சியில் இருக்கும் அவள் வீட்டிலிருந்து அழைத்திருந்தார் அவள் அப்பா சந்திரசேகர்.

    'அப்பா....' 'சொல்லுங்கப்பா' என்றாள் அபர்ணா.

    எங்கே மா இருக்கே?

    ஹாஸ்டல்ல தான்பா இருக்கேன். உங்ககிட்டே நேத்தே சொன்னேனே பா. விஷ்வா நேத்துதானே யூ.எஸ் லேர்ந்து வந்தான். அதான் இன்னைக்கு  லஞ்சுக்கு வெளியிலே போலாம்னு சொன்னான். கிளம்பிட்டிருக்கேன்பா.

    அப்பாவிற்கு தெரியாமல், அவரிடம் சொல்லாமல் அவள் எதுவுமே செய்வதில்லை. அதற்கான அவசியமும் இருந்ததில்லை. அவள் வீட்டில் இவர்கள் நட்பை சரியாய் புரிந்துக்கொண்டது அப்பா மட்டுமே.

    நம்பிக்கை அவருக்கு. தன் மகளின் மீது நம்பிக்கை. எல்லா விஷயத்திலும் தன் எல்லைகள் அவளுக்கு தெரியும் என்ற நம்பிக்கை. தன் வளர்ப்பின் மீது இருக்கும் நம்பிக்கை.

    'சரிம்மா. ஜாக்கிரதையாய் போயிட்டுவா' என்றார் அப்பா.

    சிறிது நேரம் கழித்து, தனது வேலையை முடித்துக்கொண்டு, ஹெல்மெட்டை அணிந்துக்கொண்டு, தனது வண்டியை நகர்த்திக்கொண்டு கிளம்பினான் விஷ்வா.

    வழியில் இருந்த சிக்னலில் அவன் தன் வண்டியை நிறுத்திய போது அவனருகில் வந்து நின்றது இன்னொரு இரு சக்கர வாகனம்.

    அதை ஒட்டிக்கொண்டு வந்தவனும் தலை கவசம் அணிந்திருந்தான். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத போதிலும், ஏனென்றே புரிந்துகொள்ள முடியாமல் இருவருக்குள்ளும் ஒரே நேரத்தில் கோபமும், அழுத்தமும் பரவியது.

    மனதில் எழுந்த அழுத்தத்துடன் விஷ்வா மெல்ல திரும்பி அவனை பார்த்த அதே நொடியில் அவனும்  திரும்பினான், ஹெல்மெட்டின் உள்ளே இருக்கும் முகம் ஒருவருக்கு ஒருவர் தெரியவில்லை.

    அது ஏனோ அங்கே நிற்கவே முடியாமல் விஷ்வாவினுள்ளே எரிச்சல் மண்டியது. சிக்னல் நிறம் மாற, அருகில் நின்றவன் பைக்கை உதைத்து கிளப்பிய வேகத்தில் அவன் மனநிலை விஷ்வாவுக்கு புரியத்தான் செய்தது.

    விஷ்வா சென்ற திசைக்கு நேர் எதிர் திசையில் சென்ற அவன் தனது பைக்கை அந்த ஹோடேலின் வாசலில் கொண்டு நிறுத்தினான்.

    அது அபர்ணாவும் விஷ்வாவும் வருவதாக முடிவு செய்திருந்த அதே ஹோட்டல்.

    தனது அறையை பூட்டிக்கொண்டு கீழே இறங்கிய அபர்ணா, ஸ்கூட்டியை இயக்கி  அந்த ஹோட்டலை அடைந்தாள்.

    வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, நகர்ந்தபோது கண்ணில் பட்டது அந்த இரு சக்கர வாகனம். சரியான நேர்கோட்டில் நேராக நின்றது அந்த பைக். அதை பார்த்தும் அவள் இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது. அது யாருடையது என்று அவளுக்கு நன்றாய் தெரியும்.

    அந்த வண்டிக்கு சொந்தக்காரனை பற்றி சொல்ல வேண்டுமானால் அவன் ஒரு  பெர்ஃபெக்ட் பத்மநாபன். அந்த பெர்ஃபெக்ட் பத்மநாபனின் பெயர் பரத்வாஜ். சென்னையின் அந்த அரசு கல்லூரியில் அவள் வேலைபார்க்கும் அதே கணிதத்துறையின் அஸ்சிஸ்டெண்ட் ப்ரோஃபசர் பரத்வாஜ்

    நேரம் தவறாமையில் துவங்கி ,அவனது  நடை, உடை, பார்வை, அவன் செயல்கள், என எல்லாவற்றிலும் அப்படி ஒரு நேர்த்தி மிளிரும். அவன் தேவை இல்லாமல் பேசி அவள் பார்த்ததே இல்லை. யோசித்து, அளவெடுத்து, செதுக்கிய வார்த்தைகள் மட்டும் தான் வெளியே வரும். 

    முப்பது, முப்பத்தி ஓரு  வயதிற்குள் அவன் இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு இந்த நேர்த்தியும் ஒரு காரணம் என்றே தோன்றும் அவளுக்கு.

    அவன் போல் இருந்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறாள் அபர்ணா. ஆனால் ஏனோ முடிவதில்லை.

    அவனும் வந்திருக்கிறானா என்ன?  யோசித்தபடியே உள்ளே  சென்று அமர்ந்தாள் அபர்ணா.

    பாவம் அவளுக்கு என்ன தெரியும்? அவனுக்கும் விஷ்வாவுக்கும் இடையில் இருக்கும் கோபங்களும், மனப்போராட்டங்களும்......,

    விஷ்வா இன்னும் வரவில்லை. அலைப்பாய்ந்த அவள் கண்களுக்கு பரத்தும் தென்படவில்லை.

    சின்ன பெருமூச்சுடன் கைப்பேசியின் ஹெட் போனை காதில் மாட்டிக்கொண்டு தன் இருக்கையில் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் அபர்ணா. காதிற்குள் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

    சில நிமிடங்கள் கழித்து அவள் மெல்ல கண்களை திறந்த நொடியில், அவள் அமர்ந்திருந்த மேஜைக்கு இரண்டு மேஜைகள் தள்ளி இருந்த இருக்கைக்கு போனது அவள் பார்வை. சரியாய் அந்த நொடியில். மேஜையின் மீது கைகளை ஊன்றிக்கொண்டு கைபேசியில் பார்வையை பதித்து எதையோ படித்துக்கொண்டிருந்த பரத், தன் இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.

    'இ.....தோ இ.......தோ எ.....ன் பல்.......லவி' அவள் காதிற்குள்  பாடல் ஒலித்துக்கொண்டிருக்க  அவள் கண்கள் மெல்ல மெல்ல விரிந்தன. அவனை பார்த்த நிமிடத்திலேயே மனம் அவனிடம் தாவி ஓடிவிடுவதை  போல் உணர்வு பரவியது அவளுக்குள்ளே

    தினமும் டக்கின் செய்ய பட்ட முழுக்கை சட்டையில்  இருப்பவன், இன்று  ஜீன்ஸ்  டி-ஷர்டில், ரொம்பவே இயல்பாக தெரிந்தான் அவன். தன் கையிலிருந்த கைபேசியில் பார்வையை பதித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

    அவள் கண்கள் மெல்ல மெல்ல விரிந்த அந்த நொடியில்  ஹா....ய் என்று சிரித்தபடியே வந்து ,எப்படி கரெக்டான டைமுக்கு வந்திட்டேனா? என்றபடியே அவள் எதிரில் அமர்ந்தான் விஷ்வா.

    'ஆ......ஹா... பெர்ஃபெக்ட் டைமிங். உனக்கு திருஷ்டிதான்  சுத்தி போடணும்' என்றபடியே காதில் இருந்த ஹெட் போனை கழற்றினாள் அபர்ணா..

    அவன் மலர்ந்து சிரித்த நொடியில் 'சிரிக்காதே. பங்க்சுவாலிட்டின்னா என்னன்னு நீ அவர்கிட்டே கத்துக்கணும்' தன்னையே அறியாமல் சட்டென சொல்லிவிட்டிருந்தாள் அபர்ணா.

    அவளுக்கென்ன தெரியும். அவனிடமிருந்து கற்றுக்கொள்வதென்ன, அவனை பார்ப்பதையே விஷ்வா விரும்பமாட்டான் என...

    அவ.......ரா..? .எவ....ரு....? என்று பார்வையை சுழல விட்டவனின் கண்ணில் நல்ல வேளையாக படவில்லை பரத். சற்று முன் அவன் சிக்னலில் சந்தித்த அதே பரத். கைப்பேசியில் கண் பதித்திருந்த பரத்தின் பார்வையும் நல்ல வேளையாக நிமிரவில்லை.

    யாரு அப்பூ? என்றான் விஷ்வா.

    'யாருமில்லை நீ ஏதாவது ஆர்டர் பண்ணு' என்று பேச்சை மாற்றினாள் அபர்ணா. ஏனோ அந்த நேரத்தில் அவனிடம் எதையும் சொல்ல விரும்பவில்லை அவள்.

    அவன் கண்கள் மெனு கார்டில் பதிந்த நொடியில் அவள் கண்கள் மெல்ல மெல்ல நிமிர்ந்தன. விஷ்வாவை தாண்டி சென்றது அவள் பார்வை.

    சாப்பிட துவங்கி இருந்தான் பரத்.

    அவன் வகுப்பெடுப்பது கூட தனி அழகுதான்  .எப்போதும் வகுப்பறையில் நுழைந்தவுடன் சரியாய் இரண்டு நிமிடங்கள் மௌனமாய் நிற்பான். அவன் பார்வையிலேயே  வகுப்பறை தன்னாலே ஒழுங்காகும்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து 'ரெடி?' என்ற கேள்வியுடன் பாடத்தை துவக்குவான் அவன். அமைதியான அந்த வகுப்பறையில் அவன் கணீர் குரல் மட்டுமே எதிரொலிக்கும். மாணவ மாணவிகள் ஏதோ ஒரு மந்திரத்தில் கட்டுப்பட்டவர்களாக அமர்ந்திருப்பார்கள்.

    அவள் கல்லூரியில் சேர்ந்த பிறகு, இந்த ஆறு மாதங்களில் எத்தனையோ நாட்கள், அவளுக்கு வகுப்பு இல்லாத நேரங்களில் அவன்  வகுப்புக்கு வெளியே சற்று தள்ளி அமர்ந்து அவன் பாடம் நடத்தும் அழகை ரசித்து கேட்டு மகிழ்ந்திருக்கிறாள்.

    அவன் எழுத்துக்கள் கரும்பலகையே அழகாக்கி விட்டது போல் தோன்ற ,அதை ரசித்தபடியே நின்றிருக்கிறாள்.

    என்ன சாப்பிடறே? என்றான் விஷ்வா

    ம்...?.ம்...?  ..என்னது....?

    அது சரி.! எங்கே இருக்கு உன் கவனமெல்லாம்? என்ற விஷ்வாவின் குரலில்  சட்டென தன்னிலை பெற்றவளாய் நீயே எதாவது ஆர்டர் பண்ணு விஷ்வா. ப்ளீ.......ஸ் என்றாள் அபர்ணா.

    அவளை ஏற இறங்க பார்த்தவன், சில நமிடங்கள் கழித்து சர்வரை அழைத்து தேவையானதை சொல்லிவிட்டு, இரு கை கழுவிட்டு வந்திடறேன் என்று எழுந்தான்  விஷ்வா.

    அதே நேரத்தில் ,சரியாய் அதே நேரத்தில் சாப்பிட்டு முடித்து, கை கழுவ எழுந்தான் பரத்.

    வாஷ்பேசினில் கை கழுவிக்கொண்டிருந்தான் விஷ்வா. அவனருகே இருந்த இன்னொரு வாஷ்பேசினில் கையை கழுவிக்கொண்டு தனது கைகுட்டையில் கையை துடைத்தபடியே நிமிர்ந்த பரத்தின் கண்கள். அவன் முன்னால் இருந்த அந்த பெரிய கண்ணாடியில் பதிய அதில், அருகில் நின்றிருந்த விஷ்வாவின் முகம் தெளிவாய் தெரிந்தது.

    சரேலென திரும்பினான் பரத். அதே வேகத்தில் திரும்பினான் விஷ்வா. இருவர் கண்களும் சந்தித்து கொண்ட அந்த நிமிடத்தில் இருவருக்குள்ளும் ஒரு புயலே அடித்து ஓய்ந்தது.

    2

    இருவரும் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டிருந்தனர். இருவருமே எதிர்பார்க்காத இந்த சந்திப்பு. இரண்டு வருடத்திற்கு பிறகான திடீர் சந்திப்பு.

    ஒருவர் கண்களை ஒருவர் சந்தித்த அந்த நிமிடத்தில் இருவருக்குள்ளும் ஒரே கேள்வி எழுந்தது.

    'அது எப்படி உன்னால் எனக்கு துரோகம் செய்ய முடிந்தது.? அந்த நேரத்தில் ஒரு நிமிடம் கூட  என்னை பற்றி நினைத்து பார்க்க முடியவில்லையா உன்னால்?

    கண்களில் கோபம் பரவ பரத் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, இதயம் பற்றி எரிவது போல் இருந்தது விஷ்வாவிற்கு.

    அதற்கு மேல் அங்கே ஒரு நொடி கூட நிற்க விரும்பாதவனாய் அங்கிருந்து விறுவிறுவென நடந்து இருக்கையில் வந்து அமர்ந்தான் விஷ்வா.

    அவன் முகத்தை பார்த்து திகைத்து போனாள் அபர்ணா 'என்னாச்சு விஷ்வா.?'

    பதில் சொல்லவில்லை அவன். தன் உள்ளங்கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு தன்னை ஆசுவாச படுத்திக்கொள்ள முயன்றான் விஷ்வா.

    'என்னாச்சு விஷ்வா?. கேட்கறேன் இல்ல. யார் கூடயாவது சண்டையா? அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள் அபர்ணா.

    பதில் சொல்லாமல் மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்து கடகடவென குடித்தான் விஷ்வா. ஒரு நிதானமான சுவாசத்திற்கு பிறகு சட்டென புன்னகைதான் 'ஒண்ணுமில்லைடா கூல்'

    கூலா? கொதிச்சு போய் வந்தே? அப்புறம் கூல்ங்கிறே? என்னாச்சு விஷ்வா? என்கிட்டே சொல்லகூடாத கூடாத விஷயமா?

    'அதெல்லாம் ஒண்ணுமில்லை அப்பூ'. என்றான் ஒரு ஆழமான சுவாசத்துடன். இப்போ ஏதாவது பேசினா பழசு எல்லாம் ஞாபகம் வரும். அப்புறம் இன்னைக்கு ஃபுல்ஆ மூட் இருக்காது. ப்ளீஸ் விடுடா.

    ஒரு சின்ன பெருமூச்சுடன் நிமிர்ந்தவளின் கண்கள் பரத் அமர்ந்திருந்த மேஜைக்கு போக அங்கே அவன் இல்லை. 'அதற்குள் எங்கே சென்றான் இவன்.?'

    கை கழுவுமிடத்திலிருந்து விறுவிறுவென வந்தவன் பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டு ஹோடேலை விட்டு கோபமாக வெளியேறியதை கவனிக்கவில்லை அபர்ணா.

    அதை கவனித்திருந்தால் கூட இருவரையும், விஷ்வாவை பற்றி அவளுக்கு தெரிந்த விஷயங்களையும் வைத்து அவள் மனம் ஏதாவது கணக்கு போட்டிருக்கும். கவனிக்கவில்லை அவள்.

    அதற்குள் விஷ்வா ஆர்டர் செய்தவைகள் வந்துவிட சாப்பிட துவங்கினார்கள் இருவரும்.

    திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாய் சட்டென கேட்டாள் அபர்ணா 'ஜனனியை போய் பார்த்தியா இல்லையா விஷ்வா.?

    அவனுக்குள்ளே திடுக்கென்றது. எப்போதும் அபர்ணாவிடம் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித்தான் பழக்கம் அவனுக்கு. எதையும் மறைத்து பழக்கமில்லை. ஆனால் இப்போது ஜனனி விஷயத்தில்.......

    பதில் சொல்லு விஷ்வா....

    ம்... ஆங்... பார்க்கணும். ரெண்டு நாளிலே போய் பார்க்கறேன்.

    என்ன விஷ்வா நீ? யூ எஸ்லேருந்து வந்தவுடனே முதலிலே அவளைத்தனே போய் பார்த்திருக்கணும்? ஏன் விஷ்வா ? ஏதாவது ப்ராப்ளமா?

    அடடா........... எவடா இவ? கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு ரெண்டு நாளிலே போய் பார்க்கிறேன் போதுமா? என்றான் நிமிராமல்.

    'அதுக்கில்லை விஷ்வா, கொஞ்ச நாளா ஜனனி என்கிட்டே பேசறதில்லை. நான் போன் பண்ணா எடுக்கறதில்லை அதுதான் கேட்டேன்' என்றாள் தயக்கமான குரலில்..

    திடுக்கென்று நிமிர்ந்தான் விஷ்வா. பின்னர் சட்டென சமாளித்துக்கொண்டு 'ஏதாவது பிஸியா இருந்திருப்பா. நான் என்னாச்சுன்னு கேட்கிறேன்.' அடுத்து என்ன சாப்பிடறே சொல்லு. ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்....? எங்க அப்பூவுக்கு ரொம்ப பிடிக்குமே....  மெல்ல பேச்சை மாற்றினான் விஷ்வா.

    அவள் மனம் சமாதானம் அடையவில்லை. விஷ்வாவுக்கும் ஜனனிக்கும் இடையில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது? திரும்ப திரும்ப அவளுக்குள்ளே அதே கேள்வி சுழன்றது.

    வீட்டை அடைந்திருந்தான் பரத். மனதை அழுத்திய நினைவுகளுடன், பைக்கை நிறுத்திவிட்டு நடந்த போது எதிர்ப்பட்டார் அவர். அவரை பார்த்தவுடன் அவன் மனம் சட்டென லேசாகிப்போனது.

    எப்போதுமே அவரை பார்த்தவுடன் பரத்தின் முகத்தில் தானாகவே ஒரு புன்னகை பிறக்கும்.

    நம் பரத்தை நிற்க வைத்து, அவன் தலையில் கொஞ்சம் அதிகமாகவே வெள்ளையடித்து, ஒரு கண்ணாடி மாட்டி, உதட்டில் ஒரு நிரந்தர புன்னகையை ஒட்டிவிட்டால் அவன் இவாராகி விடுவான்..

    அவர்தான் அவன் தாத்தா. அச்சு அசலாய் பரத் அவன் தாத்தாதான்

    வெள்ளை பைஜாமா ஜிப்பாவில், அழகான புன்னகையுடன் நின்றிருந்தார் அவர். வயதில் இருக்கும் முதுமை எப்போதும் அவர் உடலிலோ, மனதிலோ தெரிந்ததில்லை.

    'டேய் உன் கார் சாவி எங்கேடா?' என்றார் தாத்தா. 'குடு நான் கொஞ்சம் வெளியே போகணும்'

    நீங்க தனியா கார் ஓட்டிக்கிட்டா? 'உங்களுக்கு எண்பத்திரண்டு வயசாச்சு தாத்தா.' என்றான் பரத்.

    'அதுதான் எண்பத்திரண்டு வயசாயிடிசில்லே இனிமே என்னடா பயம்.? எப்பவாயிருந்தாலும் இனிமே எனக்கு ஆக போறது ஒண்ணே ஒண்ணுதான். குடு சாவியை.'

    'அதுக்கில்லை தாத்தா. நீங்க எங்கே போகணும்னு சொல்லுங்க. நானும் கூட வரேன் இன்னைக்கு நான் ஃப்ரீ தான்'.

    நான் போற இடத்துக்கெல்லாம் உன்னை கூட்டிட்டு போக முடியாதுடா .நான் என் லவ்வரை பார்க்க போறேன் அங்கே வந்து நீ நந்தி மாதிரி நிப்பியா?.

    ஓ! இந்த வயசிலே இதெல்லாம் வேறயா? சிரித்தான் பரத்.

    ஏன்டா?  உனக்கு யாருமில்லைன்னு பொறாமையா இருக்கா? குடுடா சாவியை.

    நோ! என்றான் பரத். உங்களை தனியா காரை எடுக்க விட மாட்டேன்.

    போ.......டா.... என்றார் தாத்தா நான் ஆட்டோலே போறேன். இல்லைனா நடந்தே போறேன். 'இனிமே உன் கார்லேயோ, பைக்கிலேயோ ஏறினேன்னா பாரு' கோபமாக கிளம்பி நடந்தவரை புன்னகையுடன் பார்த்தபடியே நின்றிருந்தான் பரத்

    அது எப்படி இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாய், உற்சாகமாய் வளைய வருகிறாரோ தாத்தா!.  வியப்பாய் இருந்தது அவனுக்கு.

    .ஸ்கூட்டியை அந்த கடையின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் அபர்ணா. ஹோட்டலிலிருந்து கிளம்பியவள், அவளது ஹாஸ்டலில் இருக்கும் ஒரு தோழி வாங்கி வர சொல்லி இருந்த ஏதோ ஒரு பரிசு பொருளை வாங்குவதற்காக அந்த கடைக்கு வந்திருந்தாள்.

    கடையை சுற்றி பார்வையை சுழல விட்டபடியே நடந்தவளுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அப்படியே நின்றேவிட்டாள் அபர்ணா.

    'நாம் வாங்க வந்ததை எப்போது வேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம். அதை விட சுவாரசியமான விஷயம் ஒன்று இங்கே இருக்கிறதே. அதை முதலில் கவனிப்போம்' என்று யோசித்தபடியே அங்கே நின்றிருந்தவரை நோக்கி நடந்தாள்.

    அவர் அருகில் வந்து, அவரை பார்த்து வியந்து போனவளாய் சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவள், பின்னர் மெதுவான குரலில் கேட்டாள் நான் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?

    சட்டென வியந்து திரும்பியவர் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு கேட்டார் 'நீ யாருமா?'

    அது... அது வந்து... நீங்க ப..ரத்... பரத்வாஜ் சாரோட தாத்தாவா?

    அவர் இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை ஓடியது. 'ஆமாம்'

    'ஓ! ரியலி??? ரெண்டு பெரும் அப்படியே ஒரே மாதிரி இருக்கீங்க' சிரித்தாள் அபர்ணா. என்ன வாங்க வந்தீங்க?

    நாளைக்கு பரத்துக்கு பிறந்தாநாள் அதுதான் அவனுக்கு ஏதாவது வாங்கலாம்னு வந்தேன்.

    நா...ளைக்கு பர,,,,த்துக்கு பிறந்த.....நாளா??? இது நமக்கு தெரியாம போச்சே!!!!!!!!!!!!!!! என்றாள் தனக்குள்ளே.

    அவன் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட மாட்டான். பிறந்த நாள் கொண்டாடுற அளவுக்கு நான் என்ன சாதிச்சேன்னு கேட்பான். பிறந்த நாளைக்கு புது டிரஸ்கூட  போட மாட்டான் அதனாலே அவன் ரசிக்கிற மாதிரி வேற ஏதாவது நல்ல பொருளா வாங்கிக்கொடுக்கணும்னு பார்க்கிறேன். என்றார் தாத்தா.

    'உங்க பேரனுக்கு  பிடிச்ச மாதிரி கிஃப்ட்தானே? நான் வாங்கி தரேன் வாங்க' என்றவள் நானும் உங்களை தாத்தானு கூப்பிடலாமா? என்றாள்

    'தாராளமா கூப்பிடு. அதுக்கு முன்னாடி நீ யாருன்னு சொல்லுமா.'

    'அதெல்லாம் சீக்ரெட்' என்றாள் அபர்ணா. அதெல்லாம் உங்களுக்கு தெரியணும்னா நீங்க எனக்கு ஃப்ரெண்ட் ஆகணும். ஓகே யா?  ஃப்ரெண்ட்??? என்று அவர் முன்னால் கை நீட்டினாள் அபர்ணா. புன்னகையுடன் கை குலுக்கினார் தாத்தா.

    வாங்க உங்க பேரனுக்கு கிஃப்ட் வாங்குவோம் அதுக்கப்புறம் நான் யாருன்னு சொல்றேன்.

    ஒரு புத்தக கடைக்குள் அழைத்து சென்றாள் அபர்ணா. அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் தாத்தா.

    அவளை சந்தித்த இந்த பத்து நிமிடத்திற்குள், பரத்தை பற்றி பேசும் போதெல்லாம் அவள் முகம் பிரகாசமாவதை  கவனித்துக்கொண்டே இருந்தார் அவர்.

    'உங்க பேரனுக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும். இருங்க வரேன்'.

    'நல்ல ரொமான்டிக் நாவலா ஏதாவது எடும்மா. அதை படிச்சிட்டாவது அவன் யாரையாவது லவ் பண்றானா பார்க்கலாம்' என்றார் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

    யாரு உங்க பேரனா.? வாய்ப்பேயில்லை. அவர் என்ன படிப்பார்னு எனக்கு தான் தெரியும். ஒண்ணு மேத்ஸ் இல்லன்னா பிலாசபி.

    புத்தகங்களை அலச துவங்கினாள். ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்து,  சில பக்கங்களை திருப்பி, அதில் சில வரிகளை படித்து, பின்பு தனக்குதானே தலை அசைத்துக்கொண்டு அதை வேண்டாமென்று ஒதுக்கி விட்டு இன்னொன்றை எடுத்து.............

    அதை பார்க்கும் போது....... சபரி ராமனுக்கு கனிகளை சுவைத்து சுவைத்து பார்த்து கொடுத்தாளாமே ஏனோ அது நினைவுக்கு வந்தது அவருக்கு.

    அவன் மீது அவளுக்கு இருக்கும் அக்கறையும் அன்பும் தெளிவாய் புரிந்தது அவருக்கு .

    சில நிமிடங்கள் கழித்து மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள்

    இதெல்லாம் படிப்பானாமா அவன்?

    படிப்பாராவா? இந்த புக்கையெல்லாம் பார்த்ததும் அவர் முகம் அப்படியே மலர்ந்து போகலைன்னா என்னை தேடி வந்து அடிங்க. சிரித்தாள் அபர்ணா.

    'அப்படி.....யா? பா.....ர்க்கலாம்'  சிரித்தபடியே  வாங்கிக்கொண்டார் தாத்தா. 'சரி நீ யாருன்னு சொல்லு'

    'என் பேர் அபர்ணா. நானும் உங்க பேரனும் ஒரே காலேஜ்லே வேலை பார்க்கிறோம்.'

    'அப்படியா' என்றபடி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டே இருந்தார்.

    சில நொடிகள் கழித்து மெல்ல கேட்டாள் அபர்ணா ' உங்க வீட்டிலே உங்க ரெண்டு பேரை தவிர வேறே யார் யார் இருக்கீங்க?'

    சட்டென கேட்டார் தாத்தா 'ஏன்மா? வீட்டை பத்தியெல்லாம் அவன் எதுவும் சொன்னதில்லையா உன்கிட்டே'

    யார் அவரா? அவர் என்கிட்டே ஜாஸ்தி பேசினதே இல்லையே!

    வியந்து போனார் அவர் 'அவனுடன் அதிகம் பேசாமலே அவனை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாளா? என்று யோசித்தவர் மெல்ல புன்னகைத்த படியே அவளிடம் ரகசியமான குரலில் சொன்னார்

    'எங்க வீட்டிலே இருக்கிற மத்த எல்லாரையும் விட, முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கு. ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர். பரத் பெர்ஃபெக்டன்னா அது டபுள் பெர்ஃபெக்ட் ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து பார் அப்புறம் வரவே மாட்டே.' சிரித்தார் தாத்தா.

    அப்படியா.... யார் அது?

    நீ ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து பாரேன் தெரியும் உனக்கு...... ஒரு உண்மையை சொல்றேன் தெரிஞ்சுக்கோ. எங்க வீட்டிலே நான் மட்டும் தான் கொஞ்சம் நல்லவன். என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல,

    தன்னையறியாமல் அடுத்த நொடி சட்டென சொல்லிவிட்டிருந்தாள் 'ஏன் தாத்தா? உங்க பேரனுக்கு என்ன?  தங்கக்கட்டி.

    சொல்லிவிட்ட பிறகுதான் தான் என்ன சொன்னோம் என்று அவள் தலைக்கு ஏற மெல்ல தாழ்ந்த

    Enjoying the preview?
    Page 1 of 1