Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Zen Vazhi Thoguppu 1
Zen Vazhi Thoguppu 1
Zen Vazhi Thoguppu 1
Ebook186 pages1 hour

Zen Vazhi Thoguppu 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V. Padma has written many famous religious books.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114101797
Zen Vazhi Thoguppu 1

Related to Zen Vazhi Thoguppu 1

Related ebooks

Reviews for Zen Vazhi Thoguppu 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Zen Vazhi Thoguppu 1 - V. Padma

    http://www.pustaka.co.in

    ஜென் வழி தொகுப்பு 1

    Zen Vazhi Thoguppu 1

    Author:

    வி. பத்மா

    V.Padma

    For more books
    http://www.pustaka.co.in/home/author/v-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஜென் வழி தொகுப்பு 1

    பொருளடக்கம்

    1. குளிர் விட்டுப் போச்சு!

    2. மாயமில்லை, மந்திரமில்லை

    3. வடிகட்டல்

    4. பழையது

    5. தங்க எழுத்து

    6. மூட்டை

    7. மன வித்தை

    8. அம்புப் படுக்கை

    9. மௌனம் ஆயுதம்

    10. பயமயம்

    11. உடைத்தலும் கிழித்தலும்

    12. ஏன் விளையாடணும்?

    13. வாழ்ந்தாலும் ஏசும்

    14. சொந்த செலவில் சூயிங்கம்

    15. எங்கே நிம்மதி?

    16. அழுக்கான ஆசான்

    17. விடுபட்டது

    18. உடனே செய்!

    19. கூழாங்கல்

    20. நேரம்

    21. பயணங்கள்

    22. செவி கொடு

    23. ஒண்ணு!

    24. இரண்டு பாறைகள்

    25. நீக்கு!

    26. ஒரு கல், ஒரு கண்ணாடி

    27. குறையொன்றும் உண்டோ?

    28. ருசி!

    29. மனிதத் தராசு

    30. அளவு

    31. நான் பானையை நேசிக்கிறேன்

    32. சுதந்தரம்

    33. அவசியம்

    34. தன்னை அறி

    35. அழுத்தாதே!

    36. சுவைத்தல்

    37. கவனம்

    38. ஒப்பீடுகள்

    39. என்ன செய்யலாம்?

    40. மலைப்பு

    41. அச்சம் தவிர்

    42. வேஷம் வேண்டாம்

    43. முதுகு அழுக்கு

    44. காலி

    45. ரயிலை நிறுத்திய நெய்

    46. நான்!

    47. சொர்க்கமும் நரகமும்

    48. கொடி அசைந்ததா?

    49. உடைந்த கோப்பைகள்

    50. நீக்குதல்

    51. புத்தி எனும் பூதம்

    52. மாஸ்டர் இன் ஜென்

    53. நட!

    54. தைரியம்

    55. கோமாளியைவிட மோசம்

    56. ஓட்டம்

    57. மௌனம்

    58. ஆயுதம்

    59. தங்கம்

    60. திருடனைத் துரத்தமாட்டேன்

    61. கவலைப்பட நேரமில்லை

    62. ஊனம்

    63. வரவேற்பு

    64. ஒருவாசகம்

    65. பர்ஃபெக்ட்

    66. தேடாதே!

    67. தியானம் எனும் வேஷம்

    68. பயணிகள் ரசனைக்கு ...

    69. தனிமரமா? தோப்பா?

    70. குளிர் காய்தல்

    71. ஒரே ஒரு ஆசை

    72. மனசைக் காணோம்

    73. ஈயடிச்சான் கதை

    74. சுவர்

    75. எலி வேட்டை

    76. வார்த்தைகள் வேண்டாம்

    77. கடந்துபோகும்

    78. தாடி!

    79. விழிப்பு

    80. மரத்தின் விருப்பம்

    81. நடமாடும் என்சைக்ளோபீடியா

    82. மலை உச்சி

    83. உங்கள் வண்டியை ஓட்டுவது யார்?

    84. இரண்டும் உண்மைதான்

    85. நடுப்பாதை

    86. சரி, தப்பு

    87. தினசரி அதே!

    88. குரங்கு

    89. பெரிய விஷயம்

    90. பிரியாத வரம் வேண்டும்

    91. கயிறு

    92. குணம்

    93. ஒரு சொட்டுத் தண்ணீர்!

    94. அஞ்சு பாயின்ட்

    95. சொர்க்கமே என்றாலும் ...

    96. பணிவு

    97. உச்சி

    98. வெறுமை

    99. ஏதேனும் ஒன்று

    100. கத்தியைத் தீட்டாதே

    1. குளிர் விட்டுப் போச்சு!

    அவர் ஒரு மகாமேதை. புத்தகப் புழு. பெரிய படிப்பாளி. ஏழெட்டுத் துறைகளில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர். அவர் பெயரில் ஏகப்பட்ட புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆவணப் படங்கள், இன்னும் என்னென்னவோ. இதனால் அவர் பெற்ற விருதுகள், பாராட்டுகள், கௌரவங்களுக்குக் கணக்கே கிடையாது!

    வயசான காலத்தில் அவருக்கு ஜென் படிக்கும் ஆசை வந்தது. ஒரு பெரிய குருநாதரிடம் சிஷ்யராகச் சேர்ந்துகொண்டார். பல புத்தகங்களைப் படித்தார். விவாதம் செய்தார். புதுப்புது கோணங்களைத் தெரிந்துகொண்டார். அவற்றை எல்லோருக்கும் புரியும்படி விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

    ஆனால் இத்தனைக்குப்பிறகும் அவருக்கு முழுத் திருப்தி இல்லை. "நான் ஞானம் பெற்றதாக உணரவில்லை' என்று மிகவும் வருத்தத்தோடு குறிப்பிட்டார்.

    ஒரு நாள் மாலை நேரம். நல்ல மழை பெய்தது. குளிரில் எல்லோரும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

    சிறிதுநேரம் கழித்து, நம்முடைய மகாமேதையின் குருநாதர் எழுந்தார். உள்ளே சென்று சில ஜென் புத்தகங்களை எடுத்து வந்து கூடத்தில் வைத்தார். தீக்குச்சியைக் கிழித்து மேலே போட்டார்.

    அதைப் பார்த்த சிஷ்யர்கள் பதறிப்போனார்கள். "குருநாதரே, என்ன செய்துவிட்டீர்கள்? இதெல்லாம் அரிய பொக்கிஷங்களாச்சே. அவற்றை நெருப்பில் போட்டு எரிக்கலாமா?' என்று அழாக்குறையாகக் கேட்டார்கள்.

    குருநாதர் அமைதியாக பதில் சொன்னார். "இப்போது குளிரைத் தாக்கமுடிகிறது. இல்லையா?'

    மகாமேதை புன்னகை செய்தார். "ஆமாம் குருவே. எனக்கு ஞானமும் கிடைத்துவிட்டது!'

    நம் ஊர்ப் பழமொழியிலும் ஜென் உண்டு. காகிதச் சுரைக்காய், பொரியலுக்கு ஆகாது. நீங்கள் நல்ல விஷயங்களைப் படிக்கிறீர்களா? அல்லது, பின்பற்றுகிறீர்களா?

    ***

    2. மாயமில்லை, மந்திரமில்லை

    ஊர்முழுவதும் ஒரே பரபரப்பு. "புத்தர் வந்திருக்கிறார்!'

    அந்த ஊரில் ஒரு விவசாயி. அவனுக்குப் புத்தரைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் எல்லோரும் பேசிக்கொள்வதை வைத்து அவர் பெரிய மகானாக இருக்கவேண்டும் என்று ஊகித்தான். அவரை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டான்.

    ஆனால் புத்தர் எங்கே இருக்கிறார்? அவரை எப்படித் தரிசிப்பது? விசாரித்தான்.

    "நம்முடைய ஊர் எல்லையில் ஒரு காட்டாறு ஓடுகிறதில்லையா? அந்த ஆற்றின் மறுகரையில்தான் புத்தர் இருக்கிறார்!'

    விவசாயி நடுங்கிப்போனான். அந்தக் காட்டாற்றின் முரட்டுத்தனமான வெள்ளம் எப்பேர்ப்பட்ட பலசாலியையும் உருட்டிப் புரட்டி விழுங்கிவிடக்கூடியது. அதைத் தாண்டி புத்தரைச் சந்திப்பது எப்படி?

    அவனுடைய தவிப்பைப் பார்த்த யாரோ கிண்டலாகச் சொன்னார்கள். "உனக்குதான் புத்தரைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை இருக்கே. நீ நினைச்சா தண்ணிமேலயே நடந்து போகலாம்!'

    அவர்கள் சொல்லி முடித்ததுதான் தாமதம். அந்த விவசாயி பரபரவென்று காட்டாற்றை நோக்கி ஓட ஆரம்பித்தான். தண்ணீரின்மீது நடந்து சென்று புத்தரைத் தரிசித்துவிட்டான்.

    எல்லோரும் அசந்துபோனார்கள். படிப்பறிவில்லாத இந்தக் காட்டான் தண்ணீரின்மீது நடந்தது எப்படி? அவன் என்ன மந்திரவாதியா?

    புத்தர் சொன்னார். "இது மாயமோ மந்திரமோ இல்லை. நம்பிக்கைமட்டும் இருந்துவிட்டால் எதுவும் சாத்தியமே.'

    சீன மொழியில் எழுதப்பட்ட 'ஃபா க்யு பி யு கிங்' என்ற புனித நூலில் வரும் கதை இது. நீங்கள் எதை நம்புகிறீர்கள்? எந்த அளவு நம்புகிறீர்கள்? அந்த நம்பிக்கைக்காக முரட்டுக் காட்டாற்றின்மீது நடக்கத் துணிவீர்களா? ஒருவேளை நீங்கள் துணிந்தாலும், "விழுந்து மூழ்கிவிடுவோமோ' என்கிற பயம் உங்களை விடுமா?

    ***

    3. வடிகட்டல்

    ஒரு காக்கை. ஒரு புறா. இரண்டும் நல்ல நண்பர்கள்.

    இந்தப் புறா ரொம்பச் சமர்த்து. எந்த வம்புக்கும் போகாது. தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கும்.

    ஆனால் காக்கா சரியான திருட்டுப் பேர்வழி. ஒரு சின்ன வாய்ப்புக் கிடைத்தாலும் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பி மீன் பிடித்துவிடும்.

    ஆகவே இவர்கள் இருவரும் நட்பாக இருப்பதைப் பார்த்துப் பலருக்கு ஆச்சர்யம். சிலர் புறாவிடம் அறிவுரை சொன்னார்கள். "நீ ஏன் அந்தப் பொல்லாத காக்காவோட சேர்ந்து பழகறே? என்னிக்காவது அவனால உனக்குப் பிரச்னை வரும்!'

    புறா அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் அவன் என் நண்பேண்டா' என்று சொல்லிவிட்டது.

    ஒருநாள் இந்தப் புறாவும் காக்கையும் ஜாலியாகப் பேசியபடி பறந்துகொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு விவசாயி வந்தான். அவன் தலையில் ஒரு தயிர்ப் பானை.

    அதைப் பார்த்ததும் காக்கை சட்டென்று பறந்து சென்று அந்தப் பானையில் விளிம்பில் உட்கார்ந்தது. உள்ளே இருந்த தயிரைக் குடித்துவிட்டு மாயமாக மறைந்துபோனது.

    தலையில் திடீரென்று பாரம் குறைவதை உணர்ந்த விவசாயி நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்ணில் பட்டது அப்பாவிப் புறாதான்.

    'திருட்டுப் பறவையே' என்று கோபப்பட்ட அவன் தன்னுடைய வில்லை எடுத்தான். ஒரே அம்பில் அந்தப் புறாவைக் கொன்றுபோட்டான்.

    பக்கம் பார்த்துப் பழகவேண்டிய காலம் இது. உங்களுடைய நட்புகளை வைத்துதான் மற்றவர்கள் உங்களைப்பற்றிச் சொல்வார்கள். அவர்கள் எப்படி என்ன சொல்கிறார்கள்? அது நல்ல விஷயம்தானா? இல்லை எனில் உங்கள் இமேஜைக் கெடுக்கும் அந்தக் "காக்கை' யார்? அதைக் கண்டுபிடியுங்கள். கழற்றிவிடுங்கள். தொடர்ந்து நல்ல நண்பர்களைத் தேடுவதுபோலவே, அவ்வப்போது கெட்டதையும் வடிகட்டவேண்டியது அவசியம்!

    ***

    4. பழையது

    ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களோடு ஊர் ஊராகப் பயணம் செய்தார். ஆங்காங்கே கிடைத்த இடத்தில் தங்குவார். மக்கள் அன்பாகத் தருவதைச் சாப்பிடுவார். இல்லாவிட்டால் பட்டினி கிடப்பார்.

    ஒருநாள், அவர் தங்கியிருந்த ஊரைச் சேர்ந்த

    Enjoying the preview?
    Page 1 of 1