Genießen Sie diesen Titel jetzt und Millionen mehr, in einer kostenlosen Testversion

Kostenlos für 30 Tage, dann für $9.99/Monat. Jederzeit kündbar.

Appa Ennum Villan

Appa Ennum Villan

Vorschau lesen

Appa Ennum Villan

Länge:
78 Seiten
51 Minuten
Freigegeben:
May 18, 2017
Format:
Buch

Beschreibung

Bharathy Bhaskar is a Banker, Television Personality , Motivational Speaker and a Writer. She studied in the prestigious Anna University in Chennai where she completed her B Tech in Chemical Engineering and MBA. A person with brilliant academic record and accolades, she was an ace debater right through her school and college days.
She serves at a multinational bank as a Senior Vice President . She is a coveted television personality and a regular member of the prestigious Sun TV Debate Show which is an acclaimed program telecast on all important festival days. She is also one of the hosts of the morning break-fast program of the same channel. In this program, she,along with her co-host ,does a 20 minutes tete-a-tete on various topics . Both these programs are watched by lakhs of people from the Tamil community around the world.
Bharathy also delivers lectures on motivation to the young talent across schools, colleges and organizations. She is a diversity champion and is invited by organizations to address their employees and strengthen them to face the challenges faced in work places and in managing their work-life balance. Recently Bharathy has to her credit 2 books published. Both of these were serialized in popular Tamil magazines. For one of the books the foreword was given by none other than the SuperStar of tamil movies - Rajnikanth. Passionate about reading and believing in Thought Leadership, Bharathy Bhaskar has been awarded the prestigious Humour Club Best Speaker Award and Sriram Groups’s Literary Award for year 2010.
Bharathy will use the proceeds from the sale of this book for donating to a social cause
Freigegeben:
May 18, 2017
Format:
Buch

Über den Autor


Buchvorschau

Appa Ennum Villan - Bharathi Baskar

http://www.pustaka.co.in

அப்பா என்னும் வில்லன்

Appa Ennum Villan

Author:

பாரதி பாஸ்கர்

Bharathi Baskar

For more books

http://www.pustaka.co.in/home/author/bharathi-baskar

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

1. அக்கினிக் குஞ்சு

2. அப்பா என்னும் வில்லன்

3. ஒரு கடிதம் இன்னொரு கடிதம்

4. துரத்தும் ஆசைகள்

5. நரிகள்

6. பெரிய ஆள்

7. பெற்றவள் பற்றிய குறிப்புகள்

8. மெய்த் திருப்பதம் மேவு

1

அக்கினிக் குஞ்சு

பல்கல்கலைக் கழகத்தின் சோஷியாலஜி டிபார்ட்மெண்ட் தலைவருக்கு அடுத்த வருஷம் ஒய்வு. ஒரே மாதிரி சீனியாரிடியுடன் இரண்டு பேருக்கு அடிதடி- அடுத்த தலைவராக மூன்றாவதாய் தேன் மொழி மேடத்துக்கு ஒர் அமைச்சரின் ஆசிர்வாதம் இருந்தது. மூவரில் யாருக்குக் கிடைத்தாலும், மற்ற இருவரும் ஸ்டே வாங்கக் கையில் வக்கீல்களுடன் தயார்!

இந்தச் சூழலில்தான் அந்தச் செய்தி வந்தது-மனித உரிமைக்கழகம் குழந்தைகள் நிலைமை பற்றி யூனிசெப் உதவியோடு கவலை தெரிவித்திருந்தது. வேறு வேறு விதங்களில் குழந்தைகள் 'எக்ஸ்பிளாய்ட்' செய்யப் படுவதைப் பற்றிப் பல்கலைக் கழகம் மாநாடு நடத்தினால், மனித உரிமைக் கழகம் ஸ்பான்ஸர் செய்யத் தயார்.

'கடைசி வருஷப் பணியில் கூடுதல் வேலையா?' என்று தலைவர் யோசிக்க, தேன்மொழி மேடத்திற்கு மூக்கில் வியர்த்தது. எப்படியாவது மாநாட்டிற்கு அமைச்சரை வரவழைத்தால், அதுவும் அமைச்சர் உதவியுடன் சி.எம்மை வரவழைத்தால் போதும்- நாளை ஒரு பயலும் அவருடைய பதவிக்குத் தடையில்லை. இந்த மாநாடு ஒரு நல்ல சந்தர்ப்பம். மாநாடு நடத்தலாம் என்றும்- விழா நாளன்று ஸ்ஃபாரி சூட் போட்டு உரையாற்றுவது மட்டுமே அவர் வேலையென்றும்-மற்றவற்றை தான் கவனித்துக் கொள்வதாயும் துறைத் தலைவரிடம் சொல்லிவிட்டாள்.

என்னங்க, நான் தேன் பேசறேன்…

சொல்லு தேனு. என்ன விஷயம்...?

நீங்க மாமாவோட போயி உடனே நம்ம அமைச்சரைப் பாருங்க. அடுத்த மாசம் முதலமைச்சர்கிட்ட டேட்டு வாங்கணும், எங்க காலேஜிக்கு வர. குழந்தைகள் பிரச்னை பற்றி ஒரு மாநாடு. இதைக் கண்டி நல்லா செய்தா ஹெச்.ஓ.டி. ஆகறதுல பிரச்னை வராதுங்க.

என்ன தேனு- வரதராசனும், நல்ல சிவனும்தான் மோதுறாங்களே?

இல்லங்க, இந்த மாநாட்டுக்கு நான் சி.எம்மை வரவழைச்சா ரெண்டு பயல்களும் மோத மாட்டாங்க.

கவலைப்படாதம்மா, இப்பவே நான் அப்பாவோட போயி நம்ம அமைச்சரைப் பாக்கறேன். நம்ம சாதிக்கு இது கூட செய்யலன்னா பின்ன என்ன?

டிபார்ட்மெண்டில் பொறுக்கியெடுத்த ஐந்து மாணவர்கள் தேன் மொழியால் வரவழைக்கப்பட்டார்கள். இது அவர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு. அவர்களின் முழு ஒத்துழைப்பையும் இப்போதுதான் கல்லூரி எதிர்பார்க்கிறது. ஐந்து பேரும் ஒவ்வொரு ஃபீல்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டாசுத் தொழிற்சாலையோ, எதுவோ அவர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம். நல்ல உழைப்பு இருந்தால் பத்து நிமிஷத்துக்கு வருகிறாற்போல ஒரு ரிப்போர்ட் தயார் செய்யலாம். சி.எம். வருவது கிட்டத்தட்ட முடிவான விஷயம். அவர் முன்னால் படிப்பது அவர்களுக்கு வாராது வந்த மாமணியான சந்தர்ப்பம். பத்து நாட்களில் ட்ரை ரன். அவர்கள் இப்போது போகலாம்.

தயா, பீச்சில் பாலமுருகனோடு உட்கார்ந்திருந்தாள்.

"பாலா, எதைப் பற்றி நான் ரிப்போர்ட் தயார் பண்ணறது… சுண்டல் பையன்களா, ஸ்பேனரால் சதா அடிவாங்கும் மெக்கானிக் பொடியன் களா, வாழைத் தண்டால் டேபிள் துடைக்கும் கிளீனர்களா, பாண்டி பஜார் பாத்திரக்கடை துணிக்கடைகளில் வேலை செய்ய மதுரையிலிருந்து வரும் பையன்களா? மண்டை காயுது...'

நீ வேற! உன்னைத் தவிர நாலு பேரும் நேரா லைப்ரரி போயிட்டாங்க- முந்தின வருஷ பிராஜக்ட் ரிப்போர்ட்லேர்ந்து உருவ! பட்டாசு, சாயத் தொழிற்சாலைன்னு சின்னப் பசங்களை நம்பி நடக்கிற இண்டஸ்ட்ரீ பத்தி யாராவது சீனியர் மாணவர் ஏற்கெனவே செய்த ரிப்போர்ட்டை ஈயடிப்பியா… அத விட்டுட்டு… டைடானிக் போகலாம் வா.

தயா உடனே கோபப்பட்டாள். கோபப்பட்டால் இமைகளில் நீர் கோப்பது அவளது இயல்பு. நீர் கோத்த அவளது இமைகளை நீவினான் பாலா. இரண்டு வரிசைப் பற்களை இணைத்தாற் போன்ற ஹேர் கிளிப் அவளது தட்டை முடியைப் பிடித்திருந்தது. கிரன்பேடியை ஒருமுறை சந்தித்த பின் நகப் பாலிஷ், கண் மை லிப்ஸ் டிக் மூன்றும் உபயோகிப்பதை தயா அறவே நிறுத்தி விட்டாள். கத்திரிப்பூ கலர் சல்வார், காலில் கோலாப்பூரி

Sie haben das Ende dieser Vorschau erreicht. Registrieren Sie sich, um mehr zu lesen!
Seite 1 von 1

Rezensionen

Was die anderen über Appa Ennum Villan denken

0
0 Bewertungen / 0 Rezensionen
Wie hat es Ihnen gefallen?
Bewertung: 0 von 5 Sternen

Leser-Rezensionen