Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum
Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum
Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum
Ebook759 pages4 hours

Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Thavathiru Dhayananda Chandrasekaran is the head of Thilagavathiar Thiruvarul Adheenam. He was born in 11.01.1966. He is the grandson of Thirumathi Muthulakshmi Muthusamy who is the elder sister of Annai Sivabrinda Devi. Annai Siva Brindadevi adopted him in 1970 before her Sanyasam (priesthood). Earlier he was known as Chandrasekaran.

After adoption, he was taken to Ilayathankudi (Tamilnadu) where Sri Mahaswami Sri Chandrasekarendra Saraswathi Swamigal visited the Gurusamathi, Head of Kanchi mutt for his blessings. After giving the blessings, swamigal, also prefixed "Dhayananda" to his name.

In June 7, 1970, his "ear piercing" ceremony (kathani vizha) was celebrated in the presence of Kunrakudi Adigalar, Thiru. Ukkadai Appavu Devar M.L.A and Pudukkottai Municipal Chairman Dharamaraj Pillai at Kumaranmalai, Near Pudukkottai.

He received his primary education at Thirukokaranam Government School, & High school studies at Govt Model School and Sri Brahathambal Higher Secondary School, Pudukkottai.

In 1988, he got his under graduate (BBA) degree from APSA College at Thiruppattur, Sivagangai District, Tamil nadu. After acquiring his degree, he worked for Sakthi finance Ltd, Coimbatore for few months. Then, he did his PG Diploma Course in Computer Science at Trichy. (Urumu Dhanalakshmi College, Kattur, Trichy). After completion of his PG Diploma, he was appointed as computer operator in the university computer center, Bharathidhasan University. Trichy (1992 - 1994) for 2 years.

In 1998, when he was planning to go abroad for employment, unfortunately, on 27, Nov 1998 Annai Sayi Matha suddenly attained God's feet. After Annai's demise, he inherited the holy seat of the Adheenam and took charge at the age of 32.

All well-wishers and devotees of the Adhenam were very happy about his succession. Many social organizations also felt that he was the appropriate person to be the successor of the Adheenam.

After assuming the charge, he arranged for the opening ceremony of Annai's potrait on December 13th , 1998 in a very grand manner. The main dignitaries of the functions were - TMC president and well-known Congress Leader, Thiru.GK. Moopanar, M.P. Minister Pulavar Chenguttuvan, Former Minister RM Veerappan, Dist. Collector Harmandhar Singh, and Rani Charu Bala Thondaiman.

After opening Annai's portrait, he also inaugurated and opened a library in Annai's name on July 12th , 1999 at Adheenam premises. The Karaikudi Adheenam Thava Thiru Ponnambala Adhigalar, Dr.M.S.Udhayamoorthy, former Vice Chancellor and Dr. S. Muthukumaran attended the function.

He has arranged for various awards to be given away every year under the following categories:

In memory of Annai's services to society cash award and silver medalsare given to those who work towards the development of Tamil culture & literature. Every year on the occasion of Gurupooja, 'Annathanam' is given for all the people at annai's samathi.

Dr.Muthulaksmi Reddi award (first woman doctor in India and a social reformer) to social organizations that are doing services for the upliftment of the poor people and women's development. On the occasion of her birthday anniversary, sewing machines are donated to poor women and aged social workers are felicitated for his/her services to the society. In memory of her he founded a primary school in 2003. Thirumuraigal Recitation competitions are held for school students once in every quarter. Silver medals and certificates are awarded to winner and all the participants.

'Thilagavathiar Thiruvarul Adheena Cheithi Madal' – which is the periodical of the Adheenam has been published and Edited by him since Jan 2006.

He also organizes a function every year on the eve of pongal at Adheenam premises to acknowledge & felicitate the farmers who are the backbone of the society. During that occasion, group of farmers are selected from the field and a

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119402270
Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum

Read more from Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

Related to Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum

Related ebooks

Reviews for Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum - Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

    http://www.pustaka.co.in

    ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும்-சமுதாய வாழ்வும்

    Oru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum

    Author:

    தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்

    Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/thavathiru-dhayananda-chandrasekara-swamigal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    மதிப்புரை

    அணிந்துரை

    வாழ்த்துரை

    பணிவுரை

    I. சாயிமாதா ஒரு சகாப்தம்

    II. கேஷத்ராடனம்

    III. அமெரிக்காவில்

    IV அன்னையாருக்கு வந்த கடிதங்கள்

    V அன்னையாரின் கட்டுரைகள்

    1. தன்னையறிந்து தலைவனை உணரவேண்டும்

    2. சர்வ சமய சமரசப் பிரார்த்தனை

    3. பெரியபுராணம், பெரும் நிதியாம்

    4. கவுத்துவங்கள்

    5. அன்பு அறம்

    6. அருட்சக்தி பெற

    வெளிநாட்டு பத்திரிக்கைச் செய்திகள்

    7. சமயமும் சமுதாயமும்

    8. கோயிலும் பிரார்த்தனையும்

    9. சச்சிதானந்தம்

    10. இந்து சமயமும் பெண்களும்

    11. வடிண் மதம்

    12. சக்தி

    இலங்கையில் பங்குகொண்ட் நிகழ்ச்சிகளில் அழைப்பிதழ்கள்

    13. வள்ளலார் பெருநெறி

    14. பரதனையும் பார் இராமனையும் பார்

    15. இராமகிருஷ்ண பரமஹம்சரும் ஆன்மீக நெறியும்

    16. ஆனந்த தாண்டவத்தின் அபிநயச் சிறப்பு

    மலேசியா,சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் அன்னையார்

    17. தமிழ் இசைச் சங்கம், சென்னை தொடக்கவுரை

    18. புதுக்கோட்டையும் - அருளாளர்களும்

    19. புதுக்கோட்டைச் சீமையும்,

    இந்திய பத்திரிக்கைகள்,செய்திகள் மற்றும் அழைப்பிதழ்கள்

    20. சக்தியின் சக்தி

    21. தேர் திருவிழா தத்துவத்தின் விளக்கம்

    படங்கள்

    22. மற்றுப் பற்று ஏற்றுக்கு?

    23. விநாயகர் வழிபாடு

    24. ஆலய வழிபாடு

    25. பெண்ணின் பெருமை என்ன?

    26. வள்ளுவர், வள்ளலார், மகாவீரர் காட்டிய ஜீவகாருண்யம்

    படங்கள்

    27. அரிது

    28. சித்தம் - புத்தி - மனம்

    29. அனுபவம் முதலா? நூல் முதலா?

    30. மஹாத்மாவின் மஹத்துவம்

    31. விண்ணக வேண்டல்

    VI 32. உலகத்திற்கு ஒர் குரல்

    அன்னையார் அருளிய அஷ்டகங்கள்

    கடிதங்கள்

    33. புவனை முகா பஞ்சகம்

    34. சிங்கப்பூர் ஸ்ரீ ருத்ர காளியம்மன் அஷ்டகம்

    35. கோகர்ண பஞ்சகம்

    இந்து மதக் கருத்துக்கள்

    அன்னையார் அவர்களின் பிற குறிப்புகள்

    தவத்திரு. சாயிமாதா சிவ பிருந்தாதேவி அவர்கள் எழுதிய புத்தகங்கள்

    குருவருளும், திருவருளும்- கவிதை நுால்

    தவத்திரு சாயிமாதா சிவ பிருந்தாதேவி அன்னையாருக்கு வழங்கப்பெற்ற சில பட்டங்கள்

    மகா சந்திதானம் தவத்திரு சுந்தர சுவாமிகள்

    இசையும், நாடகமும்

    AN APPEAL TO THE WORLD

    ***

    ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும்-சமுதாய வாழ்வும்

    அப்பர் பெருமானுக்கு திலகவதியார் திருநீறு அளிக்கும் காட்சி

    திலகவதியார் திருவருள் ஆதீன முகப்புத் தோற்றம் (படம் 2000)

    கயிலை குருமணி

    திருப்பெருந்திரு.சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

    பேரூராதீனம், பேரூர்.

    கோவை 641 010

    தொலைபேசி 2607995.

    ***

    சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க

    வாழ்த்துரை

    தமிழ்ச்சமயநெறி பெண்மையைப் போற்றும் சிறப்புடையது. சங்ககாலப் புலவர்களில் ஒளவையார் அறநெறி உணர்த்திய அருந்தமிழ்ப்புலவர் நடுநின்று சொல்லும் நாவன்மையர் இறையருள் நாட்டம் உடையவர். ஆதலின் வள்ளல் அதியமானை வாழ்த்தும்போது நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே என வாழ்த்தியுள்ளார். பெண்ணின் நல்லாளொடு பெருந்தகையிருந்ததே எனப் பாடினார் திருஞானசம்பந்தர். பாலறாவாயராகிய அவரது அருளில் திளைத்தவர் மங்கையர்க்கரசியார். மானின் நேர்வழி மாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள், பானல்வாய்ச் சிறுபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவெய்தீடேல் என அருளினார். திருநெறிய தமிழ்வல்ல திருஞானசம்பந்தர் பெண்மையைப் பாடும் திறம் திருமுறைத் தமிழில் காண்கிறோம்.

    தேவாரம் அருளிய மூவருள் முதலானவர் அப்பரடிகள். அவர் நாவரசராக வழிகாட்டியவர். தூண்டுதவ விளக்காகிய திலகவதியார். அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர் மனைத்துவம் புரிந்தவர் திலகவதியார். அவரது வேண்டுகோளை ஏற்றுச் சிவபெருமான் அப்பரடிகளை ஆட்கொண்டார். அத்தகைய மன்னு தபோதினியார் மரபு தழைக்க திலகவதியார் பீடம் உருவாகியது. அடுக்குமொழியால் அருள்முழக்கம் செய்தார் சாயிமாதா. நமது ஆதீனத்தின் மீது பேரன்பு பூண்டவர். கோவை உலக மாதர் மாநாட்டைச் சிறப்புடன் நடத்த மகளிர்களை ஒருங்கிணைத்து இங்கு தங்கி அரிய சாதனைகளைப் புரிந்தவர். அவர் திலகவதியார் பீடத்தை ஏற்க உடனிருந்து அருளாளர்களுடன் வழிகாட்டினோம் பலமுறை புதுக்கோட்டைக்குச் சென்று சாயிமாதா அவர்கள் செய்யும் செஞ்சொல் முழக்கத்தையும் சமய சமுதாய நற்பணிகளையும் கண்டு மகிழ்ந்தோம்.

    தவச்செல்வி, சாயிமாதா அவர்கள் நாடெங்கும் சென்று அருளாளர்கள்பால் அன்பு கொண்டு சிவம்பெருக்கும் சிந்தையராய் எழுச்சிமிக்க அறவுரை வழங்கியதுடன் பாரதநாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மகளிர்க்கு வழிகாட்டியவர். ஏன்! உலக நாடுகளனைத்திலும் அவரது வீரம் செறிந்த நல்லுரை ஒலித்தது. இத்தகு சிறப்புக்களைத் தொகுத்து நூலக ‘ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும்-சமுதாய வாழ்வும்' என்னும் பெயரால் அம்மையார் அவர்கள் இளமைக்காலம் முதல் வாழ்ந்த வரலாறும் ஆற்றிய அரும்பணிகளும் அதற்குரிய பல செய்தித் தொகுப்புகளும் தேடியேடுத்துத் தந்துள்ளார். சிவத்திரு. தயானந்த சந்திரசேகரன். இவர் அருளாளர்களிடத்தும் அறிஞர்பாலும் தொடர்பு மிக்கவர். திலகவதியார் பிடத்தைச் செழுமையுறச் செய்யும் நற்பண்பினர். இது ஒருவர் வரலாறு மட்டுமின்றிச் சமய சமுதாய வரலாற்று விளக்கமாக அமைந்திருப்பது பாராட்டுதற்குரியது. இவரது நற்பணி வளரச் சாந்தலிங்கப் பெருமான தாண்மலர் நினைந்து வாழ்த்துகின்றோம்.

    வாழ்த்து

    உலகநெறியை தவநெறியை ஒருங்கே உணர்ந்து திருவருளால்

    பலநற்கலையும் உணர்ந்திட்ட சாயிமாதா சிவநெறியின்

    நலங்கள் மகளிர்க்காக வருள் திலகவதியார் நற்பீடம்

    இலகும்பணிபற்பல தமிழால் ஏற்றமுறவே வாழ்த்துகின்றோம்

    சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

    ***

    முனைவர். இ. சுந்தரமூர்த்தி

    துணைவேந்தர்

    தமிழ்ப்பல்கலைக்கழகம்

    தஞ்சாவூர்.

    மதிப்புரை

    திலகவதியார் திருவருள் ஆதீனம் டாக்டர் அருள்மிகு சாயிமாதா சிவபிருந்தாதேவி அவர்கள் சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் ஆற்றிய பணிகள் பல. வசதிமிகுந்த கலைக்குடும்பத்தில் பிறந்த அவர்கள், துணிச்சல் மிகுந்தவர். இளமையிலேயே கூர்மையான அறிவுடையவர். எழுத்துப்பணியிலும் வல்லவர். பேச்சாற்றலிலும் வல்லவர். இளமையிலேயே மிகுந்த ஆர்வத்தோடு பல்வேறு நூல்களைப் படைத்தவர். பல்வேறு இடையூறுகளுக்கும் இடையேயும் அவர்கள் நூல்களைப் படித்துப் படித்துத் தம் அறிவைப் பெருக்கிக் கொண்டார். நூல்கள் படித்த நுண்ணறிவாளர். அக்காலத்தில் அவர்தம் சொற்பொழிவு ஒரு தனி முத்திரை பதித்ததாக விளங்கியது.

    தேசத்தந்தை காந்தியையும், தேசத் தலைவர் நேருவையும், செக்கிழுத்த செம்மலையும் அவர்கள் நெகிழ்ந்து பாராட்டிப் போற்றியவர். அவ்வாறே வள்ளலார் பற்றிய சொற்பொழிவுகளிலும் சிறந்து விளங்கினார். சிறிய வயதிலேயும் மற்றவர்கள் மனம்கொளப் பேசியதால் திருவாசகமணி போன்ற மூத்த அறிஞர் பெருமக்களும், சச்சிதானந்தம் பிள்ளை போன்ற சைவப் பெருமக்களும், சாயிமாதாவை உற்சாகப்படுத்தித் தத்துவத்துறையில் பட்டம் பெற வைத்தனர்.

    தமிழ் ஞானமும் தத்துவ ஞானமும் கொண்ட அவர்கள், தண்டபாணி தேசிகர், முத்து சு.மாணிக்கவாசக முதலியார், சிவத்திரு அருனைவடிவேல் முதலியார் ஆகியோரிடமும் தத்துவசாத்திரங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

    சமயம் தத்துவம் ஆகியவற்றில் வல்லவராய் விளங்கிய சாயிமாதா அவர்கள் அரசியலிலும் பங்குபெற்றுப் பேராயக் கட்சியில் பெரும்புகழ் பெற்று விளங்கியவர். மாதர் காங்கிரசின் அமைப்பாளராகவும், மாதர் காங்கிரசு உறுப்பினராகவும், மாநில அளவில் பல்வேறு நிலைகளில் பொறுப்பாளராகவும் விளங்கிப் பெரும் சமூகசேவை ஆற்றினார்கள். அதன் விளைவாக 1957-ல் மகளிர் இல்லத்தைத் தொடங்கினார்கள். புகழ்பூத்த நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் இப்பணிக்குப் பேருதவி புரிந்தார்கள்.

    தமிழ் அறிஞர்கள், கலைச் செம்மல்கள், அரசியல் அறிஞர்கள் எனப் பலரும் சாயிமாதா அவர்கட்குப் பேருதவியாக நின்றார்கள். காஞ்சிப் பெரியவரிடமும், சாந்தானந்த சுவாமிகளிடமும் அருளாசி பெற்றவர். ஞானானந்த சுவாமிகள், ஸ்ரீ விபூதி சுவாமிகள் ஆகியோரிடம் அருள்ஆசி பெற்றுத் துறவறத்தில் ஈடுபட்டார்.

    சாயிமாதாவின் சமூக சேவைகளைப் பாராட்டித்தந்தை பெரியார் அவர்கள், அன்னையாரைப் பாராட்டி வாழ்த்தினார். இலங்கையிலும், அமெரிக்காவிலும் பல அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர்கள் சாயிமாதா அவர்கள். உலக இந்து சமய மகளிர் மாநாட்டை மிகவும் சிறப்புடன் நடத்தியவர்கள். உலக மாநாடுகள் பலவற்றிலும் பங்கேற்றுச் சைவத்தின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகத்திற்கு உணர்த்திய பெருமைக்குரியவர் சாயிமாதா அவர்கள். கலையிலும், மொழியிலும், சமூகப் பணியிலும் ஈடுபட்ட சாயிமாதா அவர்களின் அரும்பணி இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு எழுச்சித்தரத்தக்கது.

    அருட்திரு சாயிமாதா அவர்கள் இயற்றிய நூல்கள் அனைத்தும் அவர்தம் சமய வாழ்வையும், சமுதாய வாழ்வையும் நன்கு காட்டுவன. வாழ்நாளின் பெரும்பகுதியைத் திருப்பயணமாகவே மேற்கொண்டவர். அவர்களுடைய நூல்கள் பல்வேறு மக்களைச் சந்தித்து பெற்ற நல்லுனர்வை நமக்குப் புலப்படுத்துவன. மக்களின் பண்பாட்டை எழுத்துக்களின் மூலம் பதிவு செய்தார்கள்.

    இந்தப் பயணங்களைப் பற்றிய அவர்தம் குறிப்புகள் நாம் பயணம் செய்வதைப் போன்ற ஒரு ஈடுபாட்டு உணர்வையே ஏற்படுத்துகிறது. வடபுலப் பயணமும், அங்கு அவர்கள் நிகழ்த்திய ஆன்மீகத் தேடல்களும் அவர்தம் நோக்கத்தைக் காட்டுவன. ஒவ்வொரு ஊரினுடைய பின்புலத்தையும், அவ்வூரின் சிறப்புகளையும் அவர்தம் நூலின் சிறப்பாக எடுத்துக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.

    கல்கத்தா, கயா, வாரணாசியிலும் அவர் கண்ட கேட்ட செய்திகளை நாமும் உணருமாறு செய்த அவர்தம் எழுத்தின் வலிமை பெரிதும் பாராட்டத்தக்கதாய் விளங்குகிறது. அலகாபத்தில் அவர்கண்ட ஆனந்த பவனத்தின் பெருமையை அவர் எழுத்தின் மூலம் அறிந்து நாமும் நேரு குடும்பத்தையே நேரில் சந்தித்த பெருமையைப் பெறுகிறோம். வடபுல வாழ்க்கை முறையைச் சிந்தித்தாலும் தமிழ் நினைவோடு அவர் எழுதுகின்ற பார்வை அவருக்கே உரிய தனிப்பார்வையாகத் திகழ்கின்றது.

    அருட் சாயிமாதா அவர்களுடைய அமெரிக்கா- கண்டதும் கேட்டதும் பேசியதும் என்னும் நூல் அவர்தம் அமெரிக்கப் பயணத்தை ஒட்டி எழுதப்பெற்ற நூலாகும். அவருடைய அமெரிக்கப் பயணத்தை ஒட்டிப் பாராட்டிய கவிஞர் அவரை 'இந்துமதத்காரர் தம்மின் உறவுக்கோர் தூதுவர்’ எனப் பாராட்டுவார். கல்தூணில் பதிக்கப்பட்ட இக்கவிதை பின்வருமாறு அமையும்:

    ‘துறவுக்கோர் இலக்கணமே!எழுத்தால் சொல்லால்

    தொண்டுக்கோர் இலக்கியமே! கோயில் கட்டிப்

    பிறவிக்கோர் மருந்தானீர்! அநாதை, ஏழைப்

    பிள்ளைகட்கோ தாயானீர்! சேவை என்றால்

    மறவியிலாச் சிவ பிருந்தாதேவி! சாயி

    மாதாவே! இந்துமதக்காரர் தம்மின்

    உறவுக்கோர் தூதுவராய் அமெரிக்காவில்

    உம்மடியைப் பதிப்பதற்குச் செல்வீர்! வெல்வீர்!’

    இக் கவிதையில் சாயிமாதாவினுடைய பல்வேறு பணிச் சிறப்புகள் நன்கு புலனாகும்.

    சென்னையில் இருந்து அவர் புறப்படும்போது அளிக்கப்பட்ட வரவேற்புகளைப் பார்த்து வியந்து நிற்கின்றோம். ஆட்சியாளர்களும், அறிஞர் பெருமக்களும், அரசியலாளர்களும், சமூகப் பணியாளர்களும், இதழாசிரியர்களும் அவர்களை வழி அனுப்புகின்றனர். 'வழி அனுப்ப வந்தவர்களிடம் வருகிறேன் வருகிறேன் என்று பல முறைகள் சொல்கின்றேன். பாசத்தையும் பற்றையும் ஆடம்பர ஆடை ஆபரணங்களையும் சுகபோக வாழ்க்கையையும் துறந்து மறந்து விட்ட என்னால் தாயகத்தை ஒருசில மாதங்கள் பல நாட்கள் மறக்க முடியாமல் கண் கலங்குகின்றது. கலங்குகின்ற நிலையில் விமான நிலையத்திற்குள்ளே புகுந்து விடுகின்றேன். இந்த ஏழைப் பரதேசிக்கு கஸ்டம்சினால் கஷ்டம் இல்லை. ஒரு பெட்டி நிறையப் புத்தகங்கள் மற்றொரு பெட்டியில் காவி உடைகளும், பூஜை பொருட்களும் உடனாக உள்ளே செல்ல அனுமதித்து விட்டார்கள். நாம் பொருளை மறந்தால் அருளைப் பெறலாம் என்று கூறுவார்’. இப்பகுதியைப் படிக்கும்போது படிப்போர் கண்ணும் கலங்கும்.

    இலண்டன் விமான நிலையத்தில் கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாய் விளங்கும் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொருட்களைப் பார்த்து வியந்து நிற்கின்றார். நியூயார்க் விமான நிலையத்தைப் பார்த்து வியந்தும் நியூயார்க் நகரத்தின் அழகை வியந்தும் நெகிழ்ந்தும் எழுதுகின்றார்.

    ஐ.நா. சபையில் உள்ள படங்களுள் விஜயலெட்சுமி பண்டிட் படத்தை பார்த்து வியந்து நின்று பாரதி பாடிய பாடலை நினைவு கூர்வார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்த விதத்தைத் தீர்க்கத்தரிசனத்தோடு பாடியதை நியூயார்க் நகரத்திலும் எண்ணி மகிழ்கிறார்.

    அமெரிக்க நாட்டின் பல இடங்களில் தமது ஆன்மீகத் தத்துவத்தையும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் நம்முடைய கலை வரலாற்றுப் பின்புலத்தையும் சாயிமாதா அவர்கள் நன்கு புலப்படுத்தி உள்ளதை அவர் எழுத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.

    சமயப் சொற்பொழிவுகள் மட்டுமேயன்றி அந்த நாட்டுக் கல்வி முறையின் ஆழ அகலங்களை இந்நூலில் விரித்துரைப்பது என்னுதற்குரியது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற ஒரு பெண்ணின் பாடப் புத்தகங்களை வாங்கி அவர் வியந்து எழுதுவது அவருக்கு கல்வியின்பால் உள்ள பேரிடுபாட்டைக் காட்டும். சுய உழைப்பில் முன்னேறக்கூடிய தன்னம்பிக்கையை அமெரிக்க நாட்டுக் கல்வி விளக்குகிறது என்பார். உயர்நிலைப் பள்ளி அளவிலேயே உலகம் பற்றிய அனைத்துப் பார்வைகளையும் மானவர்க்குத் தருவது பாராட்டத்தக்கது என்பார்.

    அமெரிக்க நாட்டின் வேலைவாய்ப்புநிலை, சமதர்ம ஜனநாயகம், பெற்றோர் குடும்பச் சூழல் என்று எல்லா நிலைகளையும் அவர் தம்முடைய கூரிய பார்வையால் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. பாரதிகண்ட சமதர்ம் சமுதாயம் அங்கு மலர்ந்துள்ளாதாக வியந்து போற்றுவார்.

    சிகாகோநகரில் விவேகானந்தர் வீரம் முழக்கம் செய்த இடத்தைப் பார்த்து நெகிழந்து நிற்கின்றார். அமெரிக்காவைப் பற்றிக் கூறும்போது மதத்திலே சுதந்திரம், வழிபாட்டிலே சுதந்திரம், தப்புத் தவறுகளை நுணக்கமாக கூர்ந்து நோக்கிஆவன செய்யும் அரசாங்கம் எனப் பாராட்டி மகிழ்கின்றார்.

    'அமெரிக்காவில் வாழுகின்ற அன்பு நிறைந்த எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நிறைய பிஸியாக இருங்கள், கை நிறையத் தேடுங்கள்; நல்ல செளகரியத்தோடு வாழுங்கள். ஆனால் நீங்கள் எந்தெந்தத் தேசத்தில் இருந்து சென்றிர்களோ அந்த தேசத்தின் பண்பாட்டைப் பாதுகாத்து வாழுங்கள்' என்று அவர் வேண்டுகோள் விடுப்பது பெரிதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாட்டு மாணவ மாணவியர்க்கு வினாக்கள் வழி விடையளித்து நம் பண்பாட்டை உணர்த்தினார். அமெரிக்க நாட்டில் தமிழ், மொழி, சமயம், வரலாறு, பண்பாடு பற்றிஅரிய உரைகள் ஆற்றிய அன்னையாரின் அருள்மொழிகள் என்றென்றும் நினைவு கூரத்தக்கன.

    அன்னையார் பல்வேறு கட்டுரைகள், சமயக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்கள். தன்னை அறிந்து தலைவனை உணரவேண்டும் என்பார். ‘மனிதனும் தெய்வமாகலாம் என்னும் கொள்கையை எங்கெங்கும் சென்று பரப்பியவர் சாயிமாதா அவர்கள். சர்வ சமய சமரச பிரார்த்தனையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். எல்லாச் சமயத்தாரும் மனித நேயத்தை வளர்த்துக் கொண்டால் அங்கு மனித நேயம் பூத்துக் குலுங்கும் என்பார். தீய சக்திகள் அழிவதற்கு மனவளம் இன்றியமையாதது என்பார். சமயமும், சமுதாயமும் இணைந்து வரும்போது வாழ்வில் புதிய புதிய நலங்களைப் பெற்று மகிழலாம் என்பார்

    'பசுமாட்டின் உடம்பு முழுவதும் பால் நிறைந்திருந்தாலும் கொம்பைப்பிடித்து இழுத்தால் பால் வராது’. காதைப் பிடித்து கரகரவென இழுத்தாலும் பால் வராது. இதனைப் போலவே இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் திருக்கோயில் மூலமாகத்தான் திருவருளை உணரமுடியும் என்பதை அரிய சான்றுகள் கொண்டு நிறுவுவார். இந்து சமயத்தில் பெண்களின் பங்களிப்புப் பெரிது எனவும் பாராட்டி மகிழ்வார். ஓடுகின்ற நதிகள் எல்லாம் பெண்களுடைய பெயர்கள்; பாடுகின்ற ராகங்கள் எல்லாம் பெண்களுடைய பெயர்கள் எனப் பெண்களுக்கு முதலிடம் தந்து மகிழ்ந்து பண்பாடு பாரதப் பண்பாடு என்பார்.

    வள்ளலார் பாடல்களில் சாயிமாதா அவர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள். உடலுக்கும் உணர்வுக்கும் உயிருக்கும் நலம் தரக்கூடிய பாடல்கள் வள்ளலார் பாடல்களே என்பார்.

    இராமகிருஷ்ணரின் அருள்மொழிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இராமகிருஷ்ண பரமஹம்சர் சிறுசிறு கதைகள் வாயிலாக மனித சமுதாயம் கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக நெறிகைப் பரவச்செய்த பகவான் இராமகிருஷ்ணர் என்பார். ஆனந்தத்தாண்டவத்தின் உட்பொருளை வாழ்வின் பல நிலைகளிலும் தம் உரைகளில் பொருத்திக்காட்டுவார்.

    இசையின் பேரிடுபாடு கொண்ட சாயிமாதா அவர்கள் பண்ணராய்ச்சி மாநாட்டில் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் பிறந்து வாழ்ந்து வளர்த்த அருளாசிரியர்கள்பால் பேரீடுபாடுகொண்டு அவர்தம் பெருமைகளை எல்லாம் இளைய தலைமுறை அறியும் வண்ணம் எடுத்துக் கூறுவார். புதுக்கோட்டை கலை வளர்க்கும் மாநகராமாக விளங்குவதை அரிய வரலாற்றுக் குறிப்புகளால் புல்ப்படுத்துவார்.

    ஆலய வழிபாட்டின் பல்வேறு சிறப்புகளையும் இவர்தம் நூல்களில் காணலாம். பெண்கள் வேத காலத்தில் இருந்து அறிவுசார்ந்த பெரும் புலமையாளராக விளங்குவதைப் பல்வேறு சான்றுகள் கூறி நிறுவுவார்.

    சாயிமாதா அவர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு நூல்களைப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டு இருந்தால் அவருடைய உரைகள் அனைத்துமே புதிய புதிய கோணங்களில் புதிய கருத்துக்களைக் கொண்டுள்ளவையாய் விளங்கின.

    உரையாற்றுவது போலவே கவியாற்றுவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். 'கோகர்ண பஞ்சகம்’, ‘சிங்கப்பூர் ஸ்ரீருத்ரகாளியம்மன் அஷ்டகம்' போன்ற பல நூல்கள் அவர்தம் பல்துறைப் புலமையைக் காட்டுவன.

    'மனிதனும் தெய்வமாகலாம் ' என்னும் நூல் மானுடத்தைப் போற்றுவது. பல்வேறு சமயங்களைப் போற்றிய சாயிமாதா அவர்கள் மானுட நேயத்தையும் போற்றி மானுடமே தெய்வம் என உரைப்பார்.

    அன்னை சாயிமாதா அவர்களுடைய எழுத்தும் பேச்சும் வாழ்வும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குவன. அவருடைய வாழ்நெறி ஒரு பெண் துறவியின் சமய வாழ்வாகவும் சமுதாய வாழ்வாகவும் அமைகிறது. அந்தச் சமுதாயம் பல்வேறு நிலைகளிலும் மேம்பட அவர்கள் பெரும் தொண்டாற்றினார்கள்.

    அன்னை சாயிமாதா அவர்களுடைய வாழ்நெறியைப் பின்பற்றி அவர்தம் புகழை ஒல்லும் வகையெல்லாம் பரப்பிவரும் திரு. தயானந்த சந்திரசேகரன் அவர்கள் சாயிமாதாவின் கருத்துக்களை எல்லாம் தொகுத்து 'ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும் - சமுதாய வாழ்வும்’ என்னும் தலைப்பில் அரிய பெரிய நூலாகத் தந்துள்ளார்கள்.

    புதுக்கோட்டை நகரில் பிறந்த சாயிமாதா அவர்கள் தம் புலமை வளத்தால் சமூகப் பணியால் உலக நாடுகளில் வலம் வந்து தமிழ்ச் சமயத்தின், தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாட்டை உணர்த்திப் பெரும்புகழ் பெற்றவர்.

    பெண்ணுரிமை பேசுகின்ற இந்த நாளில், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னரேயே மிக பெரிய ஒரு இயக்கமாக இந்த பெண் துறவி வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார் என்பது நமக்கு எல்லாம் பெருமை தருவதாகும்.

    தமிழகத் திருமடங்களில் உள்ள தலைவர்கள் எல்லாம் இவர்தம் பணியைப் பாராட்டிப் போற்றி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

    தந்தை பெரியார் போன்ற சமூகச் சிந்தனையார்களும் இவரைப் பாராட்டிப் போற்றி இருக்கின்றார்கள்.

    ஆட்சித்திறம் வாய்ந்த அரசியலாளர்களும் அறிஞர் பெருமக்களும் இவர்தம் பணியைப் பாராட்டி உள்ளனர்.

    அன்னையாருடைய அரும்பணி காலமெல்லாம் நம் நெஞ்சில் போற்றிப் பாராட்டத்தக்கதாய் விளங்குகின்றது.

    இளையதலைமுறைக்கு அவர்தம் அரிய ஆளுமைத்திறத்தை விளக்கிக் காட்டும் நல்ல நூலாக இத்தொகுப்பைத் தந்திருக்கும் திருமிகு. தயானந்த சந்திரசேகரன் அவர்கள் நம் பாராட்டுக்குரியவர்கள்.

    புதுக்கோட்டையின் புகழ்பரப்பும் இப்பணி பாராட்டத்தக்கது. போற்றத்தக்கது.

    இனிய வாழ்த்துகள்.

    இ. சுந்தரமூர்த்தி

    தஞ்சாவூர்

    15.09.2003

    ***

    அருட்செல்வர்

    டாக்டர். நா. மகாலிங்கம்

    தலைவர். சக்தி குழுமம்

    74,மெளண்ட் ரோடு

    கிண்டி,சென்னை,

    அணிந்துரை

    ஆன்மீக அனுபவ களஞ்சியம்

    ‘துறவி என்பது இருபாலார்க்கும் பொதுவான ஒரு சொல்லாகும். உலகத்தை -பொருள்களை - உடல் பற்றைத் துறந்து விடுவதால் ஆண் பெண் என்ற வேறுபாடு துறவிக்ளுக்கு அமைவதில் நியாயம் இல்லை என்றும் கூறலாம். என்றாலும் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் துறவிகளாக ஆடவர்களே பொதுவாக அதிகமாக விளங்குவதைக் காண்கிறோம்.

    புத்தர் பெருமான் தமது துறவியர் சங்கத்தில் மகளிருக்கு இடமளிக்கவில்லை. பலர் விரும்பிக் கேட்டும் மறுத்துவிட்டார் என்பார்கள். தமது சிற்றன்னையும், மனைவியும் தங்களுக்கு துறவு வழங்க வேண்டுமென்று மன்றாடியபோது-சங்கத்தினரும் பரிந்துரைத்த காரணத்தால் - அவர்களுக்குத் துறவளித்துச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். ‘என்னுடைய இந்தத் தரிசனம் ஆயிரம் காலம் என நினைத்திருந்தேன். இன்று எனது கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால் ஐந்நூறு ஆண்டுகாலம்தான் இந்தத் தரிசனம் வாழும்போலும் என்று கூறினார்’ என்பர்.

    இந்த நிகழ்ச்சி எதை காட்டுகிறது?

    மகளிரின் ஆன்மீகச் சாதனைகளுக்குத் தனியாகத் துறவு என்ற நிலைமை தேவையில்லை என்று பொதுவாக, அக்காலத்தில் பெரியோர்கள் கருதினார்கள். வீடு பேறடைய துறவு ஒன்றே வழி என்று தத்துவங்கள் வற்புறுத்தின. பெண்களும் ஆண் பிறப்பு எடுத்துத் துறவு பூண்டு மோட்சம் அடைய வேண்டும் என்று பெளத்தக் கோட்பாடுகள் கூறுகின்றன. மணிமேகலைக் காப்பியத்தில் இந்தக் கருத்து சுட்டிக் காட்டப்பட்டுகிறது. ஜைன சமயம் கூட இந்தக் கருத்தையே கொண்டிருந்தது.

    ஜைனத்திலும், பெளத்தத்திலும் துறவியராக மகளிர் விளங்கியிருக்கிறார்கள். இன்றும் துறவு மகளிர் இருந்து வருகிறார்கள். அவர்களும் ஆடவராகப் பிறப்பெடுத்த பின்புதான் வீடுபேறு அடைய முடியும் என்பது சமணக் கொள்கை.

    சைவ வைணவ சமயங்களில் இந்த நிலைமை இல்லை. குருமார்களாக மகளிர் விளங்க எந்தத் தடையுமில்லை. ஆடவர்க்குக்கூட அவர்கள் உபதேசிக்க முடியும். தமிழகத்தில் திலகவதியாரை அறியாத சைவர்கள் இருக்க முடியாது. சமணத் துறவியாக இருந்த தம் தம்பி மருள் நீக்கியாருக்குத் 'திருவாளன் திருநீறு அஞ்செழுத்து ஓதிக் கொடுத்தார். அதாவது மதம் மாற்றித் திருநீறு பூசச் செய்து மந்திர உபதேசம் செய்தார்.

    திலகவதியாரின் தவக் கோலத்தைப் பற்றிச் சேக்கிழார் கூறும்போது ‘அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கியிருந்தார் என்கிறார். மேலும் ‘மன்னு தபோதவியார்’ என்றார். ஆக, திலகவதியார் திருவதிகையில் தங்கியிருந்தது ஒரு மடத்தில் என்றும், அதனை அவரே தொடங்கித் தலைமை பூண்டு நடத்தி வந்தார் என்றும், மந்திர தீட்சை கொடுத்து வந்தவர் என்றும் நமக்குத் தெரிகிறது. வீரசைவத் திலகமாய் விளங்கிய அக்கமாதேவியார் கணவரை துறந்தார். நாடெங்கும் திகம்பரத் துறவியாய் அலைந்தார். அவருடைய உபதேசங்கள் வசனங்கள் என்று புகழ் பெற்றுள்ளன. ஏராளமான பேர் அவரைப் பின்பற்றி நற்பேறு பெற்றனர்.

    இவ்வாறு மகளிர் சமயத் தலைமையேற்கச் சைவம் வாய்ப்பளித்தது. உடையவர் ஸ்ரீ ராமானுஜர் திருக்கோரூர் பெண்பிள்ளை என்பவர் மூலம் தெளிவு பெற்றார் என்பது வைணவ உலகத்தில் பிரசித்தம். எனினும் மகளிர் துறவு பூண்டு திருமடத்தலைமை ஏற்பதும், உபதேசம் செய்யும் தகுதி (ஆசார்த்வம்) பெறுவதும் மிக அரிதாகவே நடைபெற்றிருக்கின்றன.

    சாயிமாதா சிவ பிருந்தாதேவியவர்கள் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். பிறவியிலேயே இசைக்கலைஞர். எல்லாவற்றையும் ஒருசேர உதறித்தள்ளும் மனத்துணிவு அவருக்குப் பிற்காலத்தே வாய்த்தது. ‘விட வேண்டியதை விட்டால் வரவேண்டியது விரைந்து வரும் ' என்று காஞ்சிப் பெரியவர் இவரிடம் ஒருமுறை சொன்னார். ஒரு நாள் அது நடந்தது. சிவ பிருந்தாதேவி சாயிமாதா ஆனார். மகளிர்க்கெல்லாம் முன்னுதாரணமாகி நின்ற திலகவதியார் பேரால் ஒர் ஆதீனம் கண்டார்.

    அம்மையார் கற்றவர். தமிழ் நன்கு பயின்றவர். ஆங்கிலத்தில் ஒரளவு வல்லவர் இசைக்கலைஞர். தத்துவ சாஸ்திரங்களைக் குறிப்பாக சைவ சித்தாந்தத்தை நன்கு அறிந்தவர். கவிஞர். சிறுவர் பாட நூல்கள் முதல் ப ல நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் கதை தொகுப்பும் உண்டு நாடக நூல்களும் உண்டு தாம் செய்த வடநாட்டு யாத்திரையைப் பற்றி எழுதியிருக்கிறார். நாவன்மை உடையவர். சிறந்த பேச்சாளர். அயல்நாடுகளில் குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் பயணம் செய்து, ஆன்மிகத் தொண்டு செய்ததோடு மக்களோடு மக்களாகக் கலந்து உரையாடி, பக்தியூட்டிய எளிமை அம்மையாரிடம் சிறப்பாக அமைந்திருந்தது. எளிமையும், இனிமையும், நகைச்சுவையும் கலந்த தமது பேச்சின் மூலம், மக்களைக் கவர்ந்தவர் சாயிமாதா. அவர் பழைய திலகவதியாரைப்போல சமுதாயப்பணி செய்வதற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். கல்வியும், மருத்துவமும், சமுதாயப் பணிகளுமாகச் சேர்ந்த ஆன்மீகத்தை வளர்த்தார். புதுக்கோட்டையில் அம்மையார் வாழ்ந்திருந்தபோது பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றுள்ளேன். அம்மையார் அமெரிக்கா சென்றபோது அவர்கள் பொருட்டு நானும் சில அறிமுகக் கடிதங்களை வழங்கியிருக்கிறேன். ஆன்மிகம், சைவ சமய சாத்திர விளக்கம், வள்ளலார் கோட்பாடுகளை அழகுபட பேசுவார்கள். பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் நிகழ்ச்சிகளுக்குப் பலமுறை வந்து உரையாற்றியது என் மனத்தில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. அம்மையார் நல்ல துறவி. மக்கள் மனத்தில் நல்ல வண்ணம் பதியுமாறு பேசும் ஆற்றல் மிகுந்த பேச்சாளராக விளங்கினார்கள்.

    அருட்குரவராகிய அம்மையார் எதிர்பாராத வகையில் பரிபூரணம் எய்தினார்கள். அவருடைய பணிகளைத் திரு. தயானந்த சந்திரசேகரர் ஆதீனத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு திறம்பட நடத்தி வருகிறார். அம்மையாரின் கனவுகள் சந்திரசேகர் மூலமாகப் பவப்பல நிலைகளில் நிறைவேற இறைவன் அருள் பாலிப்பான் என்பது என் நம்பிக்கை. அம்மையாரின் வாழ்க்கை வரலாறு சிறப்பாக வெளிவந்திருக்கிறது. அம்மையாரின் தன் வரலாறாகவே இது அமைந்திருப்பதும் மகிழ்ச்சி தருகிறது. இதனைப் படிக்கின்றபோது அன்னையார் நம்மோடு பேசுவதுபோல் உணர்கிறோம். அமெரிக்காவில்

    வாழ்வியலை அம்மையார் நுணுக்கமாகக் கவனித்திருக்கிறார்கள். அவையெல்லாம் எழுத்தில் பதிவாகி இருக்கின்றன. இவை வெறும் நிகழ்ச்சித் தொகுப்புகள் என்று சொல்ல முடியாது. உதாரணமாக ஐந்து வயது ஆண்பிள்ளை, தன் தந்தையோடு உதவியாக நின்று, தமது காரைக் குழாய் நீரைக் கொண்டு அலம்புகிறது என்ற ஒரு தொடர் போதுமானது. இது குடும்பம் எப்படி இருக்க வேண்டும். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுகிறது.

    இத்தொகுப்பில் அம்மையாருடைய பல கட்டுரைகளோடு இலக்கியம், தத்துவம், சமுதாயம் முதலியவற்றைப் பற்றிய மேடைப் பேச்சுக்களின் சுருக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றையெல்லாம் தனித்தனியாகத் தொகுத்துத் தனி நூல்களாகத் தலைப்பிட்டு வெளியிட்டிருக்க வேண்டும் எனினும் இப்போதைக்கு எல்லாவற்றையும் தொகுத்து இந்த நூலை வெளியிடு செய்யும் திரு.சந்திர்சேகரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். சமய தத்துவ இலக்கியக் கருத்துக்கள் அடங்கிய கருவூலமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுத் தமிழுலகுக்கு பரிந்துரைக்கிறேன்.

    (நா. மகாலிங்கம்)

    ***

    இராம வீரப்பன்

    13. திருமலை சாலை,

    சென்னை - 600 017

    தொலைபேசி 8266866

    நாள்: 17.10.03

    வாழ்த்துரை

    நண்பர் தயானந்த சந்திரசேகரன் அவர்கள், ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும் - சமுதாய வாழ்வும் என்ற தலைப்பில் புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் டாக்டர் அருள்மிகு சாயிமாதா சிவ பிருந்தாதேவி அம்மையாரைப் பற்றி பல்வேறு தகவல்களையும் திரட்டி, அவர்கள் ஆற்றிய அருமையான சொற்பொழிவுகளுடன்இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்கள்.

    தமிழகத்தில், சமயத்துறையில் பெண்கள் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை நம்முடைய சைவ - வைணவ சமய வரலாறுகள் காட்டிக் கொண்டிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புலவர்களாகவும், சமயத் தொண்டர்களாகவும் நம்முடைய மகளிர் சிறப்புற்று விளங்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு திருமடத்திற்கு தலைமையேற்று நடத்தியதாக வரலாற்றில் காணவில்லை.

    அப்பர் பெருமானை சைவத்திற்கு மீண்டும் அழைத்து வந்து தமிழகத்திற்குப் பெரும் பணியாற்றிய திலகவதியார். அவர்களின் பெயரால் புதுக்கோட்டையில் திருமடத்தை அமைத்து அந்த ஆதீனத்திற்கு தலைவியாக அருள்மிகு சாயிமாதா அம்மையார் அவர்கள் விளங்கியது வரலாற்றுச் சிறப்புடையதாகும்.

    நம்முடைய நாட்டில் பெண்கள் துறவு மேற்கொள்வது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும், புத்தமதத்திலே, சமணமதத்திலே துறவிகளாகப் பெண்களைக் காட்டியிருக்கிறார்களே தவிர, நம்முடைய சைவ - வைணவ சமயங்களில் துறவு பூண்ட வரலாறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இல்லறத்தையே துறவறமாக மாற்றிக் காட்டிய பெண்மணிகள் இருந்து வழிகாட்டியிருக்கிறார்கள்.அந்த வரலாற்றில் நம்முடைய அருள்மிகு சாயிமாதா சிவபிருந்தாதேவி அம்மையார் அவர்கள் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர்கள் கடந்த நூற்றாண்டில் பிற்பகுதியில் சிறப்பு மிக்க பெண்மணியாகத் திகழ்ந்தவர்கள்.

    புதுக்கோட்டை மண்ணிற்கே ஒரு பெருமை உண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் மற்றும் சட்டமன்றத் தலைவராக இருந்து, சமுதாய சீர்திருத்தவாதி என்ற சிறப்புக்களைப் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பிறந்த மண் புதுக்கோட்டை. அந்தப் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கிற வகையில் அந்தக் குடும்பத் தொடர்புள்ள திலகவதியார் ஆதீனத்தாரும் வாழ்ந்து புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

    இவருடைய பூர்வாசிரமம் எல்லோரையும் போல நல்ல குடும்பத்திலே பிறந்து, சிறந்து விளங்கினார்கள் என்றாலும், பொதுவாழ்க்கையில் அரசியல் இயக்கத்தின் மூலம் அறிமுகமானவர்கள். சிறந்த பேச்சாளராக விளங்கியவர்கள். சிறந்த பேச்சாளர் என்பதை விட தீவிரமான பேச்சாளராகவும் புகழ்பெற்றவர்கள். அதன்மூலம் அன்றைய தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றவர்கள். அப்படியே வளர்த்திருந்தால் நாடாளும் வாய்ப்புப் பெற்ற ஒரு பெண்மணியாகக் கூட மாறியிருப்பார். ஆனால், இயற்கை அவர்களை ஆன்மீக வழியில் திருப்பி தமிழகத்திற்கு ஒரு சிறந்த ஆன்மீகப் பெண்மணியாக அவர்களை மாற்றி இந்த நூற்றாண்டின் திலகவதியாக விளங்க வைத்தது. அவர்கள் மேற்கொண்ட பணிகள் இறைவனை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த அந்த பொதுவான வழிமுறைகள் அல்ல. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நம்முடைய சமயக் குரவர்கள் காட்டிய வழியில் மக்கட் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதன் மூலம் ஒரு ஆன்மீக சமுதாயத்தை உருவாக்கி சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்த ஒரு பெருமாட்டி ஆவார்.

    உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று நம்முடைய சமயத்தின் மேன்மையை, தத்துவங்களை எடுத்து ஆற்றலோடு விளக்கிய ஒரு பெருமைக்குரியவர். அவர்கள் ஆன்மீகத் துறையில் சமுதாய மேம்பாட்டிற்காக எல்லோரும் உழைக்க வேண்டும் என்ற தத்துவத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டு அதற்காகவும் பாடுபட்டவர். பல அமைப்புகளைக் கண்டவர். அதிலே முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு முன்பு அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்.

    ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் தத்தெடுத்துக் கொண்ட நண்பர் தயானந்த சந்திரசேகரன் அவர்கள் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதனுடைய ஒரு அங்கம் தான் ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும் - சமுதாய வாழ்வும் என்ற அருமையான நூல். - இந்த நூலைப் படிப்பவர்கள் தமிழகத்தின் அற உணர்வுகளை - சமய நெறிகளை - தமிழ் மொழியின் சிறப்பை - பெண்களின் பெருமையை - தொண்டின் அருமையை முழுமையாக உணர்ந்துகொள்வார்கள்.அதற்கு வழிவகுக்கும் இந்த நூலை அனைவரும் படித்து அன்னை டாக்டர் அருள்மிகு சாயிமாதா சிவபிருந்தாதேவி அவர்களை வாழ்த்தி வணங்கி அவர்கள் வழி பின்பற்றி நடப்பார்கள் என்ற உறுதியோடு நண்பர் தயானந்த சந்திரசேகரன் அவர்களின் முயுற்சிகளுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இராம வீரப்பன்

    ***

    டாக்டர் ஒளவை. து. நடராசன்

    ‘முன்னாள் துணைவேந்தர்

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    வாழ்த்துரை

    தாயினினும் சிறந்த தயா

    செல்வக் குடும்பத்தில் பிறந்து பயின்று கலைச் செழிப்பாலும், பெருமிதத்தாலும் வளர்ந்தோங்கி, வாழ்வில் நலங்களைப் பின்னர் தெளிந்து வையகம் எல்லாம் உலா வந்த துறவுப் பெரு வாழ்க்கையராக மாறியவர் அருள்மிகு சாயிமாதா சிவ பிருந்தாதேவி அம்மையார் ஆவார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் தலைமுறையைச் சார்ந்த அம்மையாருக்குச் சமுதாய தொண்டு ஊனிலும், உணர்விலும் ஊறிய அருள் தொண்டாக மலர்ந்தது. பொதுவாக மகளிர் துறவைச் சமயப் பெருமக்கள் வலியுறுத்தியதில்லை. ஆனால் அருள் பெருகு திலகவதியார் திருவருள் நெறிக்கே தம்மை ஆட்படுத்திக் கொண்டதால் அம்மையார் அருளாதீனப் பொறுப்பேற்றார்கள். கைத்திருத்தொண்டு செய்யும் கடப்பாடு உடையவர்களே துறவாட்சியையும் கொள்ளமுடியும் என்ற நிலையில் சான்றோர்களின் பாராட்டைப் பெற்ற அருளரசியாராக அம்மையார் திகழ்ந்தார்கள்.

    அம்மையார் அவர்கள் என் மீது தனிப் பரிவு காட்டி 'மகனே’ என்று கண்களில் நீரு மல்கக் கனிவுடன் அழைத்துப் பரிவு பாரட்டினார். ஒருமுறை நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அம்மையார் உரையாற்றும் அரங்கிலிருந்து வந்த குரல் கேட்டுத் திருக்கோயில் அரங்கிற்குச் சென்றேன். ‘வருவார் அழைத்து வாடி, வடலூர் வடதிசைக்கே’ என்ற திருப்பாட்டுக்கு உரை சொல்லிக் கொண்டிருந்த நிலையில் நான் உள்ளே சென்றிருந்தேன். என் மகன் வருகிறான் அழைத்து வாருங்கள் என்ற மகிழ்ச்சிக் குறிப்போடு அம்மையார் கூறிப் பேசிய நிகழ்ச்சியை இப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சம் நெகிழ்கிறது. அம்மையார் தங்கியிருந்த வளமனைக்கு என்னை உடன் அழைத்துப் போய், என் மகனுக்கு இட்டிலியும், தோசையும்தான் பிடிக்கும் என்று தாயினும் சாலப் பரிந்து அம்மையார் உணவு ஊட்டியதையும் நான் மறப்பதில்லை. அறிவும், பரிவும், பண்பும், அருளும், ஈகையும் நிறைந்த அம்மையார் தொடங்கிய திலகவதியார் திருவருள் ஆதீனத்தை இப்போது அருமைத் திருமைந்தர், தொண்டர்திலகம் தயானந்த சந்திரசேகரன் ஆதீனத்தைக் காத்தோங்கி வருவதைக் கண்டு பாராட்டி மகிழ்கிறேன். புதுக்கோட்டை செல்லும்பொதெல்லாம் நான் மறவாமல் செல்லும் திருமடம் அதுதான். அருமை நண்பர் தயானந்த சந்திரசேகரன் பல்வேறு நிலைகளில் புதுப்புது நிகழ்வுகளையும், விழாக்களையும் வழிபாட்டுப் பண்பாட்டையும் கலைவனம் சிறக்க நடத்தி வருகிறார்கள்.

    அருளாளர் திரு அம்மையார் அவர்கள் ஆற்றிய நல்லுரைகளையும் நயம்பட எழுதிய கட்டுரைகளையும்,அரிதில் முயன்று தொகுத்து அம்மையார் துறவும் அருள்நெறி வாழ்வும் என்ற தொகை நூல் வனப்புற வெளியிடுவதை மகிழ்ந்து வரவேற்கிறேன்.

    வாழ்க திலகவதியார் திருவருள் ஆதீனம்! வளர்க அருள்நெறித் தொண்டு!

    (ஒப்பம்)

    ஒளவை. து. நடராசன்

    ***

    பணிவுரை

    பண்பாடு மிகுந்த ஆன்மீக பூமிதான் நம் பாரதத் திருநாடு. இத்திருநாட்டில் அவதரித்த பெரியோர்கள் பார் முழுவதும் போற்றி வழிபடும் முறையில் வாழ்ந்து வந்தார்கள், வாழ்ந்தும் வருகிறார்கள் என்பது வரலாற்று உண்மை, அந்த வகையில் பெண்ணினத்தில் உதித்திட்ட ஆன்மீக முத்துக்கள் மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார், திலகவதியார் போன்றோர் வரிசையில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் சைவ சமயத்தில் மிக உயர்ந்த நிலையை கடந்த 20ஆம் நூற்றாண்டில் பெற்றவர் புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் அருளாட்சியை ஏற்று அருள்பாலித்த அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி ஆவார்கள். முதல் பெண் ஆதீனத்தலைவி என சிறப்புப் பெற்றவர்கள். சமூக சேவகியாக, எழுத்தாளராக, இசையினை அறிந்தவராக, ஆன்மீக பொருளினை உணர்ந்தவராகத் திகழ்ந்தவர்கள். அதனை உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன் பெற வேண்டும் என நினைத்து செயல்பட்டவர்கள். அன்னையவர்களின் சமய வாழ்வும் சமுதாய வாழ்வும் போற்றி தொழுகின்ற வகையில் இருந்தது. அதனை தொகுத்து ஒரு திருநூலாக வரவேண்டும் என எண்ணி அவர்களின் வாழ்க்கை வரலாறு, அன்னையாரின் பல்வேறு தலைப்பிலான அற்புதக் கட்டுரைகள், வெளிநாட்டு பயணக் கட்டுரைகள் முக்கிய பிரமுகர்களின் கடிதங்கள் வெளிநாட்டு உள்நாட்டு பத்திரிக்கைச் செய்திகள் ஆகியவற்றுடன் அரிதான புகைப்படங்களும் இடம் பெறும் வகையில் இந்த அரிய ஆன்மீக களஞ்சியத்தை தொகுத்து உருவாக்கியுள்ளோம். இத்திருநூல் வருங்கால சமுதாயத்திற்கு குறிப்பாக பெண்ணினத்தின் சமய வாழ்விற்கும், சமுதாய வாழ்விற்கும் ஓர் உந்து சக்தியாக அமையுமானால் அதுவே இந்நூலின் வெற்றியாகும்.

    அன்னை அவர்கள் இப்புவியில் வாழ்ந்த 72 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் அவர்கள் செய்திருக்கின்ற சொற்பொழிவுகள், உலக சமய மாநாடுகளில் பங்கு கொண்டு வழங்கிய கருத்துரைகள் மற்றும் பல செய்திகளும் படங்களும் உள்ளன. அவைகள் நமக்கு கிடைக்கும் நேரத்தில் அதனையும் ஒரு திருநூலாக கொண்டுவர எண்ணியுள்ளோம்.

    இந்நூலிற்கு அருளாசியுடன் வாழ்த்துரை தந்தருளிய பேரூர் ஆதீனம் குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களுக்கும் நூலிற்கு மேலும் அணி சேர்க்கும் விதமாக ஆன்மீக அனுபவ களஞ்சியமாக அணிந்துரை வழங்கிய பெருந்தகை அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் ஐயா அவர்கட்கும், வாழ்த்துரை தந்த மண்ணின் மைந்தர்கள் மாண்புமிகு மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் சு. திருநாவுக்கரசர் அவர்கட்கும், முன்னாள் தமிழக அமைச்சர் அருளாளர் ஆர்.எம். வீ. அவர்கட்கும் எமது நன்றி கலந்த வணக்கத்தை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். தாயினினும் சிறந்த தயா என்ற முன்னுரையோடு வாழ்த்துரை வழங்கிய அன்னையின் அருமை புதல்வர் முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஒளவை. து. நடராஜன் ஐயா அவர்கட்கும், வாழ்த்துரையாக மட்டுமல்லாமல் முழு தொகுதியினையும் ஆழ்ந்து ஆய்வு செய்து மதிப்புரையாக வழங்கிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமைமிகு டாக்டர் இ. சுந்தரமூர்த்தி ஐயா அவர்கட்கும் எமது நன்றி கலந்த பணிவன்பான வணக்கத்தை சமர்ப்பிக்கின்றோம். அன்னையாருக்கு பிறகு நாம் செய்கின்ற, செய்ய எண்ணுகின்ற அனைத்து பணிகளுக்கும் உறுதுணையாக என்றும் இருந்து வருகின்ற அன்னையின் அன்பு புதல்வர்கள் பேராசிரிய பெருமகனார் கு.ப. கண்ணன் அவர்கட்கும், எழுத்துச்செம்மல் திரு. குன்றக்குடி பெரிய பெருமாள் அவர்கட்கும் இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். இந்நூலிற்கு உதவிய திரு. ஞா. அந் தோணி அவர்கட்கும், மேலும் இந்நூலை அழகுடன் அச்சிட்டு தந்த சிவகாசி சூர்யா பிரிண்ட் சொலூசன்ஸ் நிறுவனத்திற்கும், புதுகை ஜெயம் செல்வராஜ் அவர்கட்கும் எமது நன்றியினை உரித்தாக்குகிறோம். இந்த நூலில் இடம் பெற்றுள்ள அன்னையாரின் கட்டுரைகள் பல்வேறு திருகுடமுழுக்கு மலர்களிலிருந்தும், இதழ்களிலிருந்தும் நாம் எடுத்து தொகுத்துள்ளோம். அவ்வகையில் மலர் குழுவினர் மற்றும் இதழ்களைச் சார்ந்தவர்களுக்கும் எமது உளங்கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் செய்கின்ற அறப்பணிகளை பாராட்டி வாழ்த்தி வருகின்ற புதுக்கோட்டை நகரைச் சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும் எமது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    என்றும் சமய, சமூக சேவையில்,

    தயானந்த சந்திரசேகரன்

    நாள்: 10.11.03

    ***

    அன்னையின் அருளாட்சியின் போது பேரூர் ஆதீன குருமகா சன்னிதானம் சிரவை ஆதின குருமகா சன்னிதானம், தொண்டை மண்டல ஆதின குருமகா சன்னிதானம் (ஆண்டு 1983).

    1987ம் ஆண்டு அன்னையார் அவர்களின் மணிவிழாவின் போது பேரூர் ஆதீனம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க இரானசாமி அடிகள், சிரவை ஆதீனம் குருமகா சந்நிதானம் சுந்தர சுவாமிகள் ஆகியோருடன் அன்னை சாயிமாதா.

    ***

    I. சாயிமாதா ஒரு சகாப்தம்

    ஸ்ரீ சாயிமாதாவிற்கு ஐம்பது வயது. அதற்கொரு பொன்விழா. எத்தனை வயது வாழ்ந்தார்கள் என்பது பெரிதல்ல. அந்த வயதிற்குள் என்ன செய்தார்கள் என்பதுதான் நமக்குத் தேவை. பொன்விழாக் காணும் பழமையில் புதுமையான அம்மா சாயிமாதாவைப் பற்றி அவர்களது பிறப்பிலிருந்து இன்றுவரை எண்ணிப்பார்க்கிறோம்.

    காலதேவன் கட்டிவைத்த மாளிகையின் சாளரத்தில் முன்னே நின்று அவர்களது சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டுகிறோம். அம்மா ஒரு புதிர். அவர்களை புரிந்துகொள்வது கடினம், எளிமையானவர் யாரும் அவர்களை அணுகி உதவி பெறலாம். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் எட்டாத தொலைவில் நிற்பவர்கள். அதனால்தானே ஒரு பெண் சகல செள பாக்யங்களோடு அசதியற்ற வசதியோடு இருக்கின்றபோது எல்லாவற்றையும் துாக்கி எறிந்துவிட்டு காவி உடையும், கழுத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1