Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Everest Thavaru!
Oru Everest Thavaru!
Oru Everest Thavaru!
Ebook106 pages47 minutes

Oru Everest Thavaru!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

A detective novel by his famous character Vivek.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402120
Oru Everest Thavaru!

Read more from Rajesh Kumar

Related to Oru Everest Thavaru!

Related ebooks

Reviews for Oru Everest Thavaru!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Everest Thavaru! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு எவரெஸ்ட் தவறு!

    Oru Everest Thavaru!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    ஒரு எவரெஸ்ட் தவறு!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    ***

    1

    டாக்டர் உத்தண்டராமன் இன்டென்ஸிவ் கேர் யூனிட்டிலிருந்து வெளிப்பட்டதும் - வெளியே காத்திருந்த அந்தச் சிறிய கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது. நேரம் இரவு பத்து மணி.

    டாக்டர்! ஹெள இஸ்… ஹி...?

    என்னோட மகனுக்கு ஒண்ணும் ஆயிடாதே டாக்டர்?

    டாக்டர் நான் உங்களைத்தான் நம்பியிருக்கேன் அவரைக் காப்பாத்திக் குடுத்துடுங்க டாக்டர்…

    டாக்டர் உத்தண்டராமன் தன் வழுக்கை மண்டையில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளைக் கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே கும்பலை ஏறிட்டார்.

    பேஷண்ட்டுக்குப் பேரண்ட்ஸ் யாரு...?

    நாங்கதான்...

    ஒய்ஃப்...?

    அந்த அழகான பெண் கண்ணீரோடு சொன்னாள்.

    மைசெல்ப்... டாக்டர்...

    நீங்க மூணு பேர் மட்டும் என்னோட ரூமுக்கு வாங்க...

    அறையை நோக்கி நடந்தார் உத்தண்டராமன். அவர்கள் தொடர்ந்தார்கள்.

    மெளனமான ஒரு நிமிஷ நடைக்குப் பின் - அந்த வுட்டன் கேபினுக்குள் நுழைந்தார்கள். டாக்டர் ஸ்விட்சைத் தட்டி - ட்யூப் லைட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பின் - ஆரஞ்சு நிறத்திலிருந்த பாலிவினைல் நாற்காலிகளைக் காட்டினார்.

    உட்காருங்க...

    டாக்டர்... அ… அவர்க்கு...?

    அந்தப் பெண் விசித்தாள்.

    மொதல்ல உட்கார்ங்க... சொல்றேன்...

    அவர்கள் தவிப்பாய் உட்கார்ந்தார்கள். உத்தண்டராமன் தன் சுழல் நாற்காலியில் உடம்பைக் கிடத்திக் கொண்டே சொன்னார்.

    பேஷண்ட்டுக்கு உடனடியா ஒரு ஹார்ட் ஆபரேஷனைப் பண்ணியாகணும்…

    அவர்கள் திகைத்தார்கள்.

    ஹார்ட்ல ஆபரேஷனா...?

    எஸ்… ஹார்ட்டுக்கு ரத்தத்தைக் கொண்டு வர்ற ஒரு முக்கியமான ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கு. அந்த அடைப்பைச் சரி செய்யணும்னா. ஹி நீட்ஸ் அன் இம்மீடியட் ஆபரேஷன்... லேட் பண்ணினா பேஷண்ட்டை நிரந்தர கோமா ஸ்டேஜ்க்குக் கொண்டு போயிடும். கோமா ஸ்டேஜ்க்குப் போன பின்னாடி ஆபரேஷனைச் செய்யறது கஷ்டம்...

    அப்படீன்னா ஆபரேஷனைப் பண்ணிடுங்க டாக்டர்! பேஷண்ட்டின் அப்பா அவசரக் குரலில் சொன்னார்.

    ஏறக்குறைய இது ஒரு மேஜர் ஆபரேஷன் மாதிரி. கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ்...

    பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்...

    ஆபரேஷன் சார்ஜஸ் மூன்று லட்ச ரூபாய் வரைக்கும் ஆகும்.

    நோ ப்ராப்ளம் டாக்டர்… பணத்தை இப்பவே வேணுமின்னாலும் கட்டிடறோம்…

    சரி… பணத்தைக் கட்டிடுங்க… நான் ஆபரேஷனுக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணிடறேன்…

    அந்தப் பெண் கண்ணிரோடு கை கூப்பினாள்.

    டாக்டர்…! ஆபரேஷன் பண்ணின பின்னாடி அவரோட உயிருக்கு...?

    எந்த ஆபத்தும் வராது. டோண்ட் ஒர்ரி. ஆபரேஷனுக்குப் பிறகு, ஒரு பத்து நாள் இந்த ஹாஸ்பிடல்ல இருந்தாப் போதும்… அவர் பழைய ஆரோக்கியத்துக்குத் திரும்பி விடுவார். சொல்லிக் கொண்டே உத்தண்டராமன் மேஜை மேலிருந்த அழைப்பு மணியைத் தட்டினார்.

    நர்ஸ் ஒருத்தி எட்டிப் பார்த்தாள்.

    எஸ்... டாக்டர்...

    ஆபரேஷன் தியேட்டர் நெம்பர் டுவை உடனடியா ஸ்டெர்லைஸ் பண்ணு.

    எஸ்... டாக்டர்...

    டாக்டர் ஆல்பர்ட்டுக்குப் போன் பண்ணி… ஆர்டியோ வெண்ட்ரிகுலர் ப்ளாக் ஆப்ரேஷன் இன்னும் ஒரு மணி நேரத்துல நடக்கப் போறதாகவும் - அதுக்கு -அஸிஸ்ட் பண்ண வரமுடியுமான்னு… கேளு… - என்றவர் பின் வேகமாய்த் தலையாட்டினார். வேண்டாம். நீ போன் பண்ணாதே. நானே பேசிக்கிறேன்… நீ பேசினா ஏதாவது சால்ஜாப்பு சொல்லிச் சமாளிச்சுடுவார்.

    டெலிபோனைப் பக்கத்தில் இழுத்து - ரிஸீவரை இழுத்துக் கொண்டு - டயலைச் சுழற்றி - இணைப்பு கிடைத்ததும் பேசினார்.

    டாக்டர் ஆல்பர்ட் இருக்காரா...?

    …….

    இல்லையா...? எங்கே போயிருக்கார்?

    ……….

    என்னது... பாம்பேயா? எப்ப போனார்?

    ரெண்டு நாளாச்சு...? இட்ஸ் ஓகே. நோ ப்ராப்ளம். நோ… ப்ராப்ளம்… நானா...? ஐயாம் டாக்டர் உத்தண்டராமன்… - ரிஸீவரை வைத்துவிட்டு டாக்டர் எழுந்தார். பேஷண்ட்டின் அப்பாவைப் பார்த்தார்.

    இன்டென்ஸிவ் வார்டுக்கு வெளியே ஒரு கும்பல் உட்கார்ந்துட்டிருக்கே. அவங்கெல்லாம் யாரு...?

    ரிலேட்டிவ்ஸ் அண்ட் ஃப்ரண்ட்ஸ்…

    உங்க மூணு பேரைத் தவிர. இங்கே யாரும் இருக்கக் கூடாது. எல்லோரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிடுங்க. நாளைக்குக் காலையில அவங்க வந்தா போதும். போய் சொல்லிடுங்க...

    "சொல்லிடறோம்... ஆபரேஷன் எத்தனை

    Enjoying the preview?
    Page 1 of 1