Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ootha Nila
Ootha Nila
Ootha Nila
Ebook77 pages37 minutes

Ootha Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850556
Ootha Nila

Read more from Rajesh Kumar

Related to Ootha Nila

Related ebooks

Reviews for Ootha Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ootha Nila - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    ஊதா நிலா

    Oodha Nila

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    விஐய் பட்டு வேட்டி – பட்டு சட்டை சகிதமாய் சோபாவில் அமர்ந்திருந்தான்.

    ஆலிவ் நிற சில்க்கில் தேவதை மாதிரி இருந்த அவனுடைய புத்தம் புது மனைவி கவுசிகா, அவ்வப்போது அவன் முன்னால் தோன்றுவதும் மறைவதுமாய் இருந்தாள். காலையில் விஜய் கையால் வாங்கிய தாலி மஞ்சள் மெருகோடு, பளிச்சென்று அவள் கழுத்தில் அசைந்து கொண்டிருந்தது.

    வால்கிளாக் முட்கள் எட்டு மணியை அடிக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டிருந்தன.

    உறவு ஜனங்கள் கலைந்திருந்தார்கள். முக்கிய உறவினர்களை மட்டும் அந்த மினி பங்களாவுக்குள் பார்க்க முடிந்தது.

    குறுக்கே போன ஒரு சிறுமியை அழைத்தான் விஜய்.

    இங்க வாம்மா...

    என்ன அங்கிள்...?

    அங்கிளுக்கு தாகமா இருக்கு... கவுசிகா அக்காவை தண்ணி கொண்டு வரச் சொல்லு...

    சரி அங்கிள்...

    அந்தச் சிறுமி பட்டுப்பாவாடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உள் அறை ஒன்றை நோக்கி வேகமாய் ஓடிச் சென்றாள்.

    சில விநாடிகளில்- கண்ணாடி தம்ளரில் நிரப்பிய ரஸ்னாவோடு கவுசிகா வந்தாள்.

    மெல்லிய குரலில் சொன்னாள்.

    இந்தாங்க ரஸ்னா...

    நான் தண்ணிதான் கேட்டேன்... நீ ரஸ்னா கொண்டு வந்திருக்க...?

    உங்களுக்குத் தண்ணி தாகம் இல்லன்னு எனக்குத் தெரியும்... அதனாலதான் ரஸ்னா கொண்டு வந்தேன்...

    என்ன சொல்ற...?

    "நான் சொல்றது சரியா இல்லயான்னு செல்லுங்க... உங்களுக்கு தாகம் இல்லதானே...?

    கவுசிகா புன்னகைத்துக் கொண்டே - என்ன சொல்லி அனுப்பினீங்க...?

    என்ன செல்லி அனுப்பினேன்...? தாகமா இருக்கு... தண்ணி கொண்டு வரச் சொல்லுன்னு சொன்னேன்...

    தாகமா இருக்கு... கவுசிகாவை தண்ணி கொண்டு வரச் சொல்லுன்னுதானே சொன்னீங்க...? நிஜமாவே உங்களுக்கு தாகமா இருந்திருந்தா, தண்ணி கொண்டு வான்னு மட்டும் சொல்லியிருப்பிங்க... குறிப்பாக என்னைக் கெண்டு வரச் சொன்னதிலிருந்தே, நீங்க தாகத்துக்காக தண்ணி கேக்கலைன்னு தெரிஞ்சுகிட்டேன்...

    புத்திசாலிப் பொண்ணுதான்... ஆனா உங்க உங்க வீட்ல நீதான் அப்பப்ப என்னை வந்து கவனிச்சிக்கணும்ன்னு மட்டும் உனக்குத் தோணலையே...? அம்போன்னு விட்டுட்டு உள்ளே போயிட்ட...

    "சொந்தக்காரங்க யாரோ உங்ககூடப் பேசிட்டு இருந்தாங்களே...?

    "அவங்க அப்பவே போயிட்டாங்க...?

    அப்பா இருந்தாரே...?

    அவர் கூடவும் எவ்வளவு நேரம் பேசிட்டிருக்க முடியும்...? ஜெனரேஷன் கேப்... எனக்கும் போரடிக்கும்... அவருக்கும் போரடிக்கும்...

    நமக்குக் கல்யாணம் ஆகி இன்னும் முழுசா பனிரெண்டு மணி நேரம் கூட ஆகல... சும்மா உங்ககிட்ட வந்து நின்னேன்னா ‘ரெண்டும் ரொம்பத்தான் வழியுது’ன்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க...

    யார் அப்படிக் கிண்டல் பண்றது...? ‘அவர்கிட்ட நானும், என்கிட்ட அவரும் வழியறதுக்காகத்தான் இன்னிக்குக் காலையில சுபயோக சுபமுகூர்த்தத்துல, பெரியவங்க எல்லோருமா சேர்ந்து லைசென்ஸ் கொடுத்திருக்காங்க’ன்னு அவங்ககிட்ட சொல்லு...

    அய்யோ... அப்புறம் அதிகமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க... சரி... ரஸ்னாவைக் குடிச்சிட்டு சீக்கிரம் கொடுங்க...

    என்ன அவசரம். கொஞ்ச நேரம் நல்லு...

    என்னக்குக் கால் வலிக்குது...

    அப்படின்னா பக்கத்துல உட்காரு...

    ஊகூம்...

    "என்ன நீ... பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவ மாதிரி இப்படி பிகு பண்ணிக்கற...?

    "பிகு பண்ணலங்க... எனக்குக் கூச்சமா

    Enjoying the preview?
    Page 1 of 1