Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Parisu
Kalyana Parisu
Kalyana Parisu
Ebook288 pages1 hour

Kalyana Parisu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியிருந்தாலும் அந்த அந்தக் காலத்தின் நிகழ்வுகளின் சிறு துளிகளையாவது இது பிரிதிநிதித்துவப் படுத்தும் என்றே கருதுகிறேன்.

கையில் ஒரு சர்வதேச துலாக்கோலையும். அதன் முள் முனையின் மேல் விழியையும் வைத்துக் கொண்டு இந்த கல்யாணப் பரிசு சிறுகதைத் தொகுப்பை தயவு செய்து பார்க்காதீர்கள். மனதில் ஒரு சராசரித் தனமான பக்குவமே இன்றைய படைப்புகளைப் பார்க்க, படிக்கத் தேவை. இந்த மனப் பக்குவம் இதைப் படிக்கும் வாசகர்களிடம் எதிர்பார்க்கிற ஒரு படைப்பாளி நான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803160
Kalyana Parisu

Read more from Maharishi

Related to Kalyana Parisu

Related ebooks

Reviews for Kalyana Parisu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Parisu - Maharishi

    http://www.pustaka.co.in

    கல்யாணப் பரிசு

    Kalyana Parisu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தேரும் தேர்தலும்

    2. நேர் கோடு

    3. நான் உண்மையின் பக்கம்...

    4. இவனும்...

    5. இன்று வருவார்...

    6. கல்யாணப் பரிசு

    7. அவன் யாரோ

    8. அன்பைத் தேடி...

    9. கைக்கு எட்டியது.....

    10. கதவடைப்பு

    11. அவன் உலகம்?

    12. நேற்றையக் கடன்

    13. தெளிவு

    14. வீடு

    15. இரண்டு மனம்

    16. ஆத்மாவின் குரல்

    17 டூ லேட்

    18. மாடலிங்

    என்னுரை

    சிறுகதை இலக்கியத்திற்கு தமிழகத்தின் பங்கு என்பது மகத்தானதாகும். ஓர் அறுபது ஆண்டுகால சிறுகதை வளர்ச்சியை நாம் ஆராய்ந்தால் அதனுடைய பரிணாமம், உருவம், உத்தி, மனோதத்துவ இழை, நடை என்று எல்லா நிலைகளிலும் அதன் வளர்ச்சி மகத்தானதே! இந்த அளவு பிற பிராந்திய சிறுகதை வளர்ச்சி பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை. பொதுவாக சில விமர்சகர்களின் அபிப்ராயங்களை சில கருத்துக்கள் சில மொழி பெயர்ப்புகளைக் கொண்டு மட்டுமே மற்ற பகுதி சிறுகதைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. இவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கூட நமது சிறுகதை இலக்கிய வளர்ச்சி ஒரு சீரான பாதையில் சென்றிருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. பல ஆண்டுகளுக்கு முன் தீபம்இதழில் வந்த 'தமிழ்ச் சிறுகதைகளின் பொற்காலம் இது' என்ற கட்டுரையில்

    'தற்பொழுது பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாடுகளிலிருந்து வரும் சிறுகதைகளை விட தமிழ்ச் சிறுகதைகள் எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. எனக்குத் தெரிந்த அளவில் நமது சிறுகதைகளுக்கு இணையாக சமீப காலத்தில் அப்படிப்பட்ட படைப்புகள் வந்ததாகத் தெரியவில்லை.'

    என்று தமிழ்ச் சிறுகதை மகுடத்தில் மேலும் ஒரு மயிலிறகைச் சூட்டி அழகு பார்த்தார் காலஞ்சென்ற இலக்கிய மேதை கு.அழகிரிசாமி அவர்கள்.

    'மணிக்கொடி' காலத்திற்குப் பிறகு சிறுகதை இலக்கிய உருவம் என்பது 'விஸ்வரூபம்' என்றே சொல்லலாம். இது ஐம்பதுகளிலிருந்து அறுபதுகளில் கரு உருவில் இருந்த இக்குழந்தை மிக வேகமாக வளர்ந்தது என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். ஐம்பதுகளுக்குப் பின்பு சிறுகதைகளின் வளர்ச்சி வேறு எந்தப் பகுதியுடன் ஒப்பிட்டாலும் நமது தமிழ் சிறுகதை மிக கம்பீரமாகவே நிமிர்ந்து நிற்கிறது. கு.ப.ரா. சிதம்பர சுப்ரமணியம். ந.பிச்சமூர்த்தி, கு. அழகிரிசாமி, லா.ச.ரா. மெளனி, தி. ஜானகிராமன், கல்கி ப.ஸ்ரீனிவாசன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி. விக்கிரமன், புதுமைபித்தன் இப்படி சிறுகதை மண்டபத்தை அலங்கரிக்கும் வைர மணித் தோரணங்கள் ஏராளமானோர் உண்டு. இது சிறு பட்டியல்தான். ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் சில அடிப்படை குறிப்புகளுக்காக இந்த சிற்பிகளை நாம் சொல்லியே ஆக வேண்டும். இந்தச் சிறுகதை இலக்கியம் என்ற அலங்கார மண்டபத்திற்கு தோரணமாக திகழ்பவர் வ.வே.சு. ஐயர் அவர்கள்.

    வ.வே.சு.ஐயர் அவர்களின் 'மங்கயர்க்கரசியின் காதல்' என்ற தொகுப்பில் அடங்கிய கதைகளே தமிழில் தோன்றிய முதல் சிறுகதை என்று நான் கருதுகிறேன் - மதிப்பிற்குரிய கு.அழகிரிசாமி அவர்கள் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

    ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜாய்ஸ் பிராங்க ஒ கானர்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஜேம்ஸ்..

    ஷெர்வுட் ஆண்டார்ஸன், ஹோமிங்வே...

    ரஷ்யாவைச் சேர்ந்த கோகேல் ஆன்டன்செகாவ் கார்க்கி...

    கற்பனைக் கதைகளை (Fable) மிக அழுத்தமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கையாண்ட டால்ஸ்ட்ராய்...

    ஸ்வீடிஷ் நாட்டு லாகர்வாவ்...

    என்று நாட்டுக்கு நாடு ஏராளமான படைப்பாளிகளுக்கு நிகராக நம்மிடையேயும் மிகச் சிறந்த படைப்பாளிகளும் இருந்திருக்கிறார்கள். இன்னும் இருக்கிறார்கள்.

    இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியிருந்தாலும் அந்த அந்தக் காலத்தின் நிகழ்வுகளின் சிறு துளிகளையாவது இது பிரிதிநிதித்துவப் படுத்தும் என்றே கருதுகிறேன்.

    கையில் ஒரு சர்வதேச துலாக்கோலையும். அதன் முள் முனையின் மேல் விழியையும் வைத்துக் கொண்டு இந்த கல்யாணப் பரிசு சிறுகதைத் தொகுப்பை தயவு செய்து பார்க்காதீர்கள். மனதில் ஒரு சராசரித் தனமான பக்குவமே இன்றைய படைப்புகளைப் பார்க்க, படிக்கத் தேவை. இந்த மனப் பக்குவம் இதைப் படிக்கும் வாசகர்களிடம் எதிர்பார்க்கிற ஒரு படைப்பாளி நான்.

    என்றும் அன்புடன்

    மகரிஷி

    1. தேரும் தேர்தலும்

    அந்த ஸ்லம் ஏரியாவின் நடுவில் ஒரு பெரிய கிணறு உண்டு. கிணறு உண்டு என்றால், தண்ணீரும் உண்டு... என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நாற்புறமும் விஸ்தாரமான சிமெண்ட் மேடை, தண்ணீர் இருந்த காலத்தில் இரண்டு பக்கங்களிலும் நின்று கொண்டு இழுக்க வசதியான ராட்டினங்கள்... சில மர உருளைகள் எல்லாம் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும். நமக்கு இங்கே அந்தக் கிணறு முக்கியமல்ல. அதைச் சுற்றியுள்ள 'ஏரியா' தான்.

    அந்தப் பகுதியில் அது மையமாக இருந்தது, சுற்றிலும் இருநூறுக்குக் குறைவில்லாத சிறு சிறு குடிசைகள். எல்லாக் குடிசைவாசிகளின் தொழிலையும் ஒட்டு மொத்தமாகவோ... சில்லறையாகவோ சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலானவர்களின் தொழில் பீடி சுற்றுவது. பீடித்தூள் உள்ள முறத்தை மடியின் மேல் வைத்துக் கொண்டு, அருகில் உள்ள காய்ந்த இலைச் சருகுகளைப் பர பரவென்று எடுத்து, அதில் புகையிலைத் தூளை வைத்துச் சுருட்டி நுனியில் மடித்து, பின் மெல்லிய சிவப்பு நூலினால் மேல் பாகத்தை முடித்து, வாய் வைத்து 'தம்' இழுக்கும் பாகத்தைச் சப்பையாக நசுக்கி அருகில் போடுவார்கள். முள்ளுவாடி டீக்கடை நாயர் இரவு கடை மூடியபின் கடைக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே ஒரு கல்லாங்குத்துக் கிராக்கியுடன் பேசிக் கொண்டதிலிருந்து,

    ஜனாதிபதி தேர்தல் நிலவரம் வரை அங்கே சர்ச்சைகள் கிளம்பி, 'அன்பார்லிமென்டரி'யாக வாய்க்கு வந்தபடி யாரையோ வெறி தீரத் திட்டி விட்டு ஓயும் பழக்கத்திற்கும் ஓர் அளவே கிடையாது. இங்கே நமக்கு இது முக்கியமல்ல.

    கிணற்றை மையமாகக் கொண்ட அந்த இடத்திற்குச் சற்றே வடக்குப் புறத்தில் ஒரு முன்னூறு பேர்கள் உட்காரும்படியான பரந்தவெளியொன்று இருந்தது. அது ஒரு 'மினியேச்சர்' மைதானம். வீராசாமியைப் போன்ற லீடர்கள் உருவாகக் காரணமாக அமைந்த பொது மேடை அது. அந்த மேடையில் இன்ன பிரச்சனைதான் வரும் என்று சொல்ல முடியாது. பேச்சுச் சுதந்திரத்தை எப்படிப் பழி தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை அங்கே கேட்கலாம். மார்க்கெட்டில் விலையேறி விற்கும் வெண்டைக்காயைக் கூடச் சர்வதேச ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும், வர்க்கப் போரோடும், ஜனநாயக சோஷலிசத்தோடும் இணைத்துப் பேசுகிற மாயா ஜாலங்களை அங்கே கேட்கலாம். இதுவும் நமக்கு முக்கியமில்லைதான். என்றாலும், இத்துடன் சம்பந்தப்பட்ட வீராசாமி நமக்கு முக்கியமானதால் மேற்படி விஷயமும் கொஞ்சம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

    வீராசாமி ஒரு 'லேபர் லீடர்'. பல்வேறு பீடிக் கம்பெனிகளுக்கென்று 'காண்டிராக்ட்' விதத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களின் 'யூனியனுக்கு லேபர் லீடர்'.

    அவன் ஓர் 'ஆல்ரவுண்டர்' என்று நாம் அவனை மதிப்பதாகக் காட்டிக் கொண்டால்தான் அவன் நமக்கு மரியாதை தருவான். அவன் வெளியிடுகிற கருத்துக்களைச் சில பெரிய தலைவர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை அவன் விரும்புவான். நீங்க சொன்ன மாதிரிதான் டெல்லி தொழிலாளர் நல மந்திரியும் நேத்துப் பேசியிருக்காரு. உங்கக் கருத்து அப்படியே இருக்குதுஎன்று பேச வேண்டும். இதை விட்டுவிட்டு மந்திரி சொன்ன கருத்தைதானே நீங்க இன்னிக்குச் சொல்றீங்கன்னு பேசினால், அதை அவன் ஒரு நாகரீக அரசியலாக ஏற்பதில்லை.

    அவன் குல்லாமார்க் பீடிக் கம்பெனியில் பீடி சுற்றும் வேலையில் இருந்தான். அக்கம்பெனியில் வேலை செய்யும் மற்றொரு தொழிலாளியின் மனைவியிடம் முறை தவறி வம்பு செய்து விட்டான். 'உன்னைக் கொன்று காக்கயன் சுடுகாட்டிலே எரிச்சிப்புட்டு, அந்தச் சாம்பலைப் பீடியாசுத்தி 'தம்' இழுக்கலே, எம்பேரு குள்ளு இல்லே' என்று குள்ளுக் கவுண்டன் சவால் விடவே, அங்கிருந்து வெளியேறும்படியாக நேர்ந்து விட்டது. என்றாலுங்கூட, தான் குல்லா மார்க் பீடிக் கம்பெனியை விட்டதற்குச் சர்வேதேசத் தொழிலாளர் பிரச்சனையை இணைத்துப் பேசத் தவறவில்லை. இரண்டு, மூன்று பீடிக் கம்பெனிக்குப் பீடி சுற்றும் தொழிலாளர் சங்கங்களின் தலைவரான வீராசாமிக்கு திடீரென்று தன் தற்போதைய அரசியல் கூடாரத்தைப் பற்றி மறு பரிசீலனை செய்யும்படியான நிர்ப்பந்தம் உண்டாகி விட்டது. இந்த மறு பரிசீலனைக்கு உத்வேகம் கொடுத்தவனே நெருங்கிய நண்பன் அமீர்தான்.

    என்ன வீரு, உனக்கு இருக்கிற திறமைக்கு இந்த வார்டு கவுன்சிலரா வந்துடு. வட்டக் கமிட்டியைக் கூட்டி, இந்தத் தொகுதி அபேட்சகரா உன்னைக் கொண்டு வர தீர்மானம் போடறோம். நீ கம்முனு இரு, நான் செய்யறேன். என்ன சொல்றே?

    'கவுன்சிலர்' என்றவுடனேயே, எம்.எல்.ஏ மாதிரி பல்லைக் காட்டி நாணினான். அந்த நாணமே பதவி கோரும் நாணம் என்பது அமீருக்குத் தெரியும்.

    கட்சி...?

    "என்ன கட்சி... சும்மா இரு வீரு. எந்தக் கட்சியானா என்ன? இப்ப இதுதான் ஆதாயமுள்ள கட்சி. நமக்கு இதுலே

    என்ன பெரிய செலவு? கமிட்டி ஆபீஸை சுண்ணாம்பு அடிச்சு, சின்னத்தை மாத்திட்டா போச்சு!''

    நம்ம பயலுவ ஏதாவது பேசுவானுங்க. அவுங்க பேசினா பேசட்டும். மேடை இருக்கு... சோடா இருக்கு... பழைய பேச்சுத்தானே... அதுலே என்ன மாத்தப் போறோம்? ஒன்றுமில்லையே! மாறப்போவது கொடிதானே! அதே தொழிலாளி, முதலாளி விஷயம் இங்கேயும் பேசலாம். பொருத்தமா இருக்கும். சுரண்டல், ஏழையின் சிரிப்பு அப்படீன்னா பயலுவ கபார்னு சாஞ்சுடுவாங்க.

    அப்படியே அமீரை கட்டிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை வீராசாமிக்கு. ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. காரணம், அந்தத் தழுவலுக்கு இப்போது பரவலான கெட்ட பெயர் வந்து விட்டது.

    தெற்கு தேய்கிறது... வடக்கு வாழ்கிறது. எல்லாத் தொழிலுக்கும் வட நாட்டுக்கு காவடி எடுக்க வேண்டியிருக்கிறது. இதனால்தான் நமது ஒப்பற்ற தமிழகத்து முஜிபுர் ரஹ்மான் மாநில சுயாட்சிக் கோரிக்கையை கண்டு பிடித்திருக்கிறார். அதை அன்றே ஆச்சார்யார் ஆதரித்தார். இன்று எதிர்க்கிறார். ஆசியாக் கண்டத்திலே இது உண்டு. அமெரிக்காவிலே இது உண்டு. இங்கிலாந்திலே உண்டு. அது இங்கே ஏன் இல்லை?வீராசாமி தயாராகி விட்டான்.

    கட்சிக்குள் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணி வார்டு வார்டாகத் தொடங்கியது.

    தன்னை இந்த வார்டு வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் சிக்கல் உண்டாகி விடுமோ என்று அஞ்சினான் வீரு. உடனே அவனுக்கு ஒரு ஞானோதயம் பிறந்தது. வட்டச் செயலாளருக்கு ஒரு ஸ்கூட்டர்... மாவட்ட செயலாளருக்கு ஒரு என்ஃபீல்ட்... அன்பளிப்பாக அளிக்க வேண்டுமென்று ஒரு தீர்மானத்தைப் போட்டு, அன்பளிப்புக் கமிட்டி என்று ஒன்றையும் அமைக்க ஏற்பாடு செய்த போது, வீராசாமி எந்த நோக்கத்துடன் இதை மேற்கொண்டானோ... அதே நோக்கம் கொண்ட மற்ற சிலரும் 'நான், நீ' என்று முன் வந்தனர். மாவட்டச் செயலாளரைக் கவர என்று தங்களுக்குத் தெரிந்த வகையில் போஸ்டர்கள், நோட்டீஸ்கள், கவிதைகள் என்று இப்படி அமர்க்களப்படுத்தினர்.

    இந்த வாகனங்கள் அன்பளிப்புக் கமிட்டியில் எந்தெந்த வார்டுகளில் யார் யார் ரொம்பவும் தீவிரமாக இருக்கிறார்கள், யார் யார் உள்ளுக்குள் எதிர்த்து வெளிவேஷம் போடுகிறார்கள் என்பதையெல்லாம் துப்பறிந்து கொள்வதற்கு மாவட்டச் செயலாளருக்கு நாற்றிசையிலும் '007' இருந்ததால் அந்த நகரசபை தேர்தலில், வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அதிக சிரமம் தோன்றவில்லை அவருக்கு. வட்டக் கமிட்டிகளை ஆட்டிப் படைத்து அழிக்கும் ஆற்றல் பெற்ற காரியமாக இல்லை.

    வாகன அன்பளிப்பு கமிட்டியில் ஆர்வம் காட்டிய அத்தனை பேர்களின் பெயரும், இதற்கு மூல காரணமாக நின்ற வீராசாமியின் பெயரும் மேலிடத்திற்கு அவரால் சிபாரிசு செய்யப்பட்டது. வாகன அன்பளிப்புக் கமிட்டி விரைவாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக மற்றுமொரு திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியல் தயாராகிக் கொண்டிருப்பதாக ஒரு புரளியையும் கிளப்பி விட்டார். அந்தப் புரளி ரொம்பவும் துரிதமாகச் சில சாதனைகளை ஏற்படுத்தியது.

    தேர்தல் நெருங்க நெருங்க வீராசாமி ரொம்ப ஆவேசத்துடன் காணப்பட்டான்.

    எப்போது பார்த்தாலும் கையில் ஒரு திருக்குறள் புத்தகம், அவன் கட்சி நடிகர் அண்மையில் நடித்து வெளிவந்த சினிமாப் பாட்டுப் புத்தகம். பின்னால் தழையத் தழைய துண்டு. இரண்டு கலர் பார்டரில் வேஷ்டி.

    அசல் வட்டச் செயலாளர்.

    நாடு செழித்திட, நலம் பெருகிட, காவேரித் தண்ணீர் வந்திட, மாநில சுயாட்சி அமைந்தி, இரும்பாலை அமைந்திட என்னை இந்த வார்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுப்பீர்! அளிப்பீர் உங்கள் ஆதரவை!

    கும்பிடும் கரத்துடன் பெரிய போஸ்டர் போட்டு, ஊரெங்கும் ஒட்ட ஏற்பாடு செய்தான்.

    போஸ்டர் போடுவதில் அவன் தலைவரின் வழியை மிகுந்த பக்தி சிரத்தையுடன் பின் பற்றினான். அவனுக்கு இதற்கெல்லாம் எப்படிப் பணம் கிடைத்தது, யார் கொடுத்தார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை என்றாலும், தன்னைச் சாமானியனுக்குச் சாமானியன் என்று கூறிக் கொள்ள மட்டும் தளரவே இல்லை.

    அவனை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு படித்த பட்டதாரி, வீராசாமியின் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு மலைத்துப் போய் விட்டார். அவன் தினம் ஒரு டிசைனில் போஸ்டர் ஒட்டினான். பத்து வருஷங்களுக்கு முன் எங்கோ நடந்த துப்பாக்கிச் சூட்டைச் சித்தரிக்கும் போஸ்டர், தலைவரின் சவ ஊர்வல போஸ்டர், ஒரு ரயில் விபத்துப் போஸ்டர், குடிசைகள் எரியும் போஸ்டர், அவனுடைய தலைவன் அமெரிக்கா செல்லு முன் விமானத்தின் படிகளில் நின்றபடி கையை ஆட்டும் போஸ்டர், அமெரிக்காவில் ஒரு பெரிய மாடிக் கட்டடத்தைக் காணுவது போல ஒரு போஸ்டர் இவை எல்லாவற்றையும் ஒட்டி உங்கள் ஓட்டு யாருக்கு? என்று கேட்டிருந்தான்.

    அவனை எதிர்த்துப் போட்டியிட்ட ரங்கநாதன் பி.ஏ., பி.எல்., க்கு அரசியல் ஜாலங்களில் நூற்றில் ஒரு பங்கு கூடத் தெரியவில்லை. இந்த இருபதாம் நூற்றாண்டில் விலை போகாத ஜன நாயகம், காந்தியம் அஹிம்சை என்கிற பேச்சுக்களால் அதிகம் வெறுப்புக்கு ஆளாகி இருந்தார். அவருக்குப் போஸ்டர் போட எந்த விஷயமும் இல்லை. மேடைப் பேச்சை விட்டு, வீடு வீடாகச் சென்று அந்த வட்டத்திற்கு என்னென்ன செய்ய உத்தேசித்திருக்கிறோம் என்பதை விளக்கிக் கொண்டிருந்தார் அப்பாவி.

    எதிர் கட்சி வேட்பாளரின் தந்தை திருவாரூர் போகாதவர் என்பதை முக்கியமாக மனதிற் கொள்ள வேண்டும். இவரும் திருவாரூர் போனதில்லை. வக்கீலாகத் தொழில் புரிந்த போது, ஹரிஜன் ஒருவனை, அவன் செய்த கொலைக் குற்றத்திற்காகத் தண்டனை வாங்கிக் கொடுத்த நேர்மையற்ற செயலை நினைவுப் படுத்தி, இவர் தமிழர்களின் எதிரி... இவர் கவுன்சிலராக வருவது இரும்பாலைத் திட்டத்திற்கு ஆபத்து... காவேரித் தண்ணீருக்கு ஆபத்து... மாநில சுயாட்சிக்கு ஆபத்து... ஏன் இந்த வளமார் தமிழகத்துக்கே ஆபத்து...என்று கூறினான்.

    அதை எதிர்த்து, எதிர்க்கட்சி வேட்பாளரான திருவாரூர் போகாத ரங்கநாதன் பி.ஏ.பி.ல் லினால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. வெயில் தெரியாமல் தோரணங்கள், விளக்குகளில் இரண்டு வர்ணங்கள், சைக்கிளில் செருக முடிந்த இடங்களில் எல்லாம் கொடிகள் வீட்டுக் கூரைகளில், மாட்டின் கொம்பில்!

    அந்த வார்டைப் பொறுத்த வரையில் மொத்த ஓட்டுக்கள் 2400. அதில் முஸ்லிம்கள் 600. வீராசாமிதான் ரொம்பவும் தீவிரமாக தேர்தல் களத்தில் இருந்தான். முஸ்லிம்கள் மெஜாரிட்டி உள்ள தொகுதியாதலால் அமீரும், தாவீதும் அவனுக்காக ரொம்பவும் தீவிரமாக வேலை செய்தனர். அவனது நம்பிக்கை முஸ்லிம், ஹரிஜன், இதர சாமானியர்கள் ஆகியோரின் ஓட்டுகள்.

    "முஸ்லீம் வோட்டும், ஹரிஜன் ஓட்டும் 'ஸாலிடா' நம்ம பக்கம் விழுது, இந்தப் பாப்பான்கள் ஓட்டு ஒன்று கூட நமக்கு உளுவாது. அப்புறம் கிறிஸ்தவங்க, செட்டிங்க, முதலியாருங்க இவர்களை நிச்சயமாகச் சொல்ல முடியாது. கவுண்டங்க ஓட்டு, பிள்ளைங்க ஓட்டு நமக்கு கெடைக்கணும்னா பிரசாரத்தை வேறு திசையில் திருப்பணும். நம்ம தலைவர் வழிதான். நான் சாமானியன். என்னை ஆதரிப்பது தமிழ் இனத்தை ஆதரிப்பது போல. கைபர் கணவாய் பேர்வழிகளுக்கு நான் கவுன்சிலராவதுப் பிடிக்கவில்லை. என்னை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்வேன், தமிழர், தமிழ் இனம் ஒன்று திரண்டு நிற்கும் வரை உங்களது பித்தலாட்டங்கள் ஏதும் நடக்காது. உங்களை எப்படி மடக்குவது என்பது எனக்குத் தெரியும் என்று ஜாதியைப் பத்தி எடுத்து வுட்டாதான் பயலுவ நம்ம பக்கம் திரும்புவானுங்க என்று

    Enjoying the preview?
    Page 1 of 1