Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullangal Ondragi...
Ullangal Ondragi...
Ullangal Ondragi...
Ebook153 pages1 hour

Ullangal Ondragi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102603111
Ullangal Ondragi...

Read more from Lakshmi Praba

Related to Ullangal Ondragi...

Related ebooks

Reviews for Ullangal Ondragi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullangal Ondragi... - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    உள்ளங்கள் ஒன்றாகி...

    Ullangal Ondragi…

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    இருள் விலகத் தொடங்கியதும், வானம் சந்தோஷமாய் செந்தூர வண்ணத்தை வாரித் தீற்றிக்கொண்டது.

    செந்தூர வானத்தின் அழகைக் கண்ட பரவசத்தில்... பறவைகள் பூபாளம் பாடின.

    செண்பகம், பவளமல்லி, நித்தியமல்லி, அடுக்குமல்லி, செவ்வரளி, செம்பருத்தி, சம்பங்கி, சாமந்தி என பூஜைக்கேற்ற பூக்களை தோட்டத்திலிருந்து பறித்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள் நிவேதா.

    குளித்து ஈரமான கூந்தலை நுனியில் முடிச்சிட்டிருந்தாள். மயிற்தோகை போன்று அடர்ந்து நீண்டுஅவளது இடுப்பைத் தாண்டிப் பரவியிருந்த கூந்தலிலிருந்து சொட்டிய ஈரம்... அவளது இளம் பச்சை வண்ணப் பருத்திச் சேலையில் படிந்திருந்தது.

    கூடத்துத் தூணோரம் சாய்ந்து அமர்ந்து பித்தளைக் கூடையை நிறைத்துக் கொண்டிருந்தபூக்களை... தரையில் கொட்டிக் கவிழ்த்தாள்.

    அவற்றை வகையாகப் பிரித்து... ஆசையுடன் பார்வையால் வருடிக்கொடுத்தாள் நிவேதா.

    மலர்களின் கலவையான நறுமணம் நாசியைத் துளைத்து... கூடத்தையே நிறைத்திருந்தது.

    அதிகாலையில் குளித்துவிட்டு தோட்டத்திற்குச் சென்று, சில்லென்று மலர்ந்த பூக்களை செடிகளுக்கு வலிக்காமல் மெல்லக் கிள்ளியெடுத்து... சுகந்த நறுமணத்தை ஆழ மூச்செடுத்து ரசித்தபடி பூக்களை நாரில் அழகாய் தொடுப்பதே ஒரு அலாதி சுகம்தான்!

    அம்மா மரகதம் வாசல் தெளித்து கோலமிட்டுவிட்டு குளியலறைக்குள் புகுந்திருந்தாள். அம்மா வெளியே வந்ததும் துளசி மாடத்தை வலம் வந்து, நேராக பூஜையறைக்குத்தான் வருவாள்.

    அம்மா வருவதற்குள் சுவாமி படங்களுக்குச் சாற்ற... பூச்சரங்களைத் தொடுத்து தயாராக வைத்துவிடுவாள் நிவேதா.

    மரகதத்தின் மன மறிந்து நடந்து கொள்வதாலோ... அதீத குடும்பப்பொறுப்புடன் இருப்பதாலோ... நிவேதா மீது அம்மாவுக்கு அலாதி பிரியம்.

    படால் என்ற ஓசையுடன் குளியலறைக் கதவு திறந்தது.லொக்... லொக் என்ற இருமியபடி வெளிப்பட்ட மரகதத்தைப் பார்த்ததும்... பாசத்தில் நிவேதாவின் மனம் பாகாய் கரைந்தது.

    சைனஸ் பிரச்சினை... ஒத்தை தலைவலி... ராத்திரியெல்லாம் இருமல்னு அவஸ்தைப்பட்டுட்டு இருக்கியேம்மா? ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டாலும் வர மாட்டேன்கிறே? அட்லீஸ்ட்... வெந்நீர் வச்சாவது குளின்னு சொன்னா... நீ காதுலேயே போட்டுக்க மாட்டேன்கிறியேம்மா?

    ஜோடி மொட்டுக்களை எடுத்து வாழை நாரை லாவகமாக விரல்கள் சுழற்ற... அம்மாவை நிமிர்ந்து பார்த்து கேட்டாள் நிவேதா.

    "விறகு வெட்டிக்குப் பிளவை வந்தா... கோடாலியால ஒரு போடு போடணும்னு சொல்வாங்க... காய்ச்சலோ, தலைவலியோ... எப்படி வந்ததோ... அப்படியே போகட்டும்

    உடம்புக்கு நோக்காடு வந்திட்டதுன்னு... தலையில துண்டை இறுக்கிக் கட்டிதைலத்தைத் தடவிக்கிட்டு... அக்கடான்னு படுத்துக் கிடக்க முடியுமா?

    நம்ம பிழைப்பு என்னாகிறது? படுத்தா பத்து நாளுக்கு எழுந்துருக்க முடியாது. அந்தளவுக்கு பாடாய் படுத்துது... நாம்ப படுத்துக்கிடந்தோம்னா... யார் வந்து உதவப் போறாங்க?

    கேஸ் சிலிண்டர் விலை ‘கிர்ருன்னு ஏறிப் போச்சே? நாம்ப இருக்கிற நிலைமைக்கு வெந்நீர் போட முடியுமா ராஜாத்தி? எல்லாம் சரியாயிடும். நீ எதைப் பத்தியும் விசனப்படாம பூவைத் தொடுத்து முடிச்சுட்டு... சீக்கிரமா தலைமுடியை சிக்கெடுத்து உலர வை.

    தலையில நீர் கோர்த்துட்டா... வலி வந்து அவஸ்தை படணும்" மகளின் உச்சந்தலையை மெல்ல வருடிவிட்டு நடந்தாள் மரகதம்.

    எதிர்த்த அறையில்... தூக்கக் கலக்கத்தில் ஏதோ உளறியபடி புரண்டு படுத்த தங்கை நீலா... பக்கத்தில் படுத்திருந்த லீலாவின் இடுப்பில் கையைப் போட்டாள்.

    உலக நினைப்பின்றி இருவரும் ஆனந்தமாய் உறக்கத்தில் மூழ்கி இருந்தனர்.

    நீலாவும், லீலாவும் இரட்டையர். நிவேதா, தங்கைகளை விட மூன்று வயதுதான் மூத்தவள். அவளுக்கு இருந்த குடும்பப் பொறுப்பும், அக்கறையும், கவலையும்... இரட்டை சகோதரிகளுக்கு ஒரு நாளும் இருந்ததில்லை.

    விதவிதமாக உடுத்த வேண்டும்... பஜாரில் விற்கும் அழகு சாதனப் பொருட்களை அள்ளி வாங்கி வைத்துக்கொண்டு அலங்கரித்து பதுமைகளாக வலம் வர வேண்டும்.

    படிப்பில் இருவருமே சுமார் ரகம்தான்! தங்களது அழகையும், கவர்ச்சியையும் பார்த்துவிட்டு... கோடீஸ்வரக் குடும்பத்திலிருந்து பெண் கேட்டு வரத்தான் போகிறார்கள் என்று இரு சகோதரிகளும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

    அப்படியொரு நினைப்பு அவர்கள் மனதில் ஆணித்தரமாக வேரூன்றி இருந்ததால்... படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் அசட்டையாக இருந்தனர்.

    ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த இறக்கை முளைத்த அழகு தேவதைகள் தப்பித்தவறி... கஷ்ட ஜீவனம் நடத்தும் குடும்பத்தில் வந்து குதித்துவிட்டவர்களைப் போன்று... அப்படியொரு அலட்சியமான போக்கு!

    நிவேதாவுக்கு சுறுசுறுவென்று கோபம் எட்டிப்பார்த்தது.

    தொடுத்துக் கொண்டிருந்த கதம்பச் சரத்தை சுருட்டி வைத்துவிட்டு... வேகமாய் அந்த அறைக்குள் புகுந்தாள்.

    "நீலா!... லீலா...! எழுந்திருங்க... ‘பிளஸ்டூ’ படிக்கிற பொண்ணுங்களுக்கு ஒரு அக்கறை வேணாம்? தினமும் காலையில எந்திருச்சு படிச்சாத்தானே... நல்ல ‘மார்க்’ எடுக்க முடியும்?

    எழுந்திருங்க... முகம் கழுவிட்டு படிக்க ஆரம்பிங்க... பவள மல்லியை நூல்லே கோர்த்து வச்சுட்டு... உங்களுக்கு நான் காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்இரு சகோதரிகளையும் தட்டி எழுப்பினாள் நிவேதா.

    ஆமா... பெரிய காப்பி!... வரக்காப்பியை குடிக்கிறதுக்கு பேசாம சுடுதண்ணியைக் குடிச்சிக்கலாம். என்னிக்குத்தான் சுவையா நாம குடிக்கப் போறோமோ தெரியலை என்று நீலா சலிப்பாக முணுமுணுத்தது… அவளது காதுகளில் தெளிவாக விழுந்துவிட்டது.

    "எப்பவும் கனவுலகிலேயே சஞ்சரிக்கிறது தப்பும்மா நீலா! கார்லே போறவங்களைப் பார்த்து ஆசைப்படுறதைவிட... இந்த மட்டுமாவது காலாற நாம் நடக்க முடியுதேன்னு... திருப்தி பட்டுக்கணும்.

    அம்மா படிக்காத மனுஷி! குடும்பம் நட்டாத்துலே நிக்கும் போது எப்படி திணறினாங்க?... அவங்க கஷ்டப்பட்டு அல்லும் பகலுமா உழைச்சதாலே... குடும்பச் சக்கரம் சுத்திச்சு...

    நம்ம கஷ்டம் நம்மோட போகட்டும். பொண்ணுங்க நல்லாப் படிச்சு, சுயமா சொந்தக்கால்லே நிக்கணும். நாளைக்கு கஷ்டம்னு வந்தா என்ன பண்ணுறதுன்னு தெரியாம கையைப் பிசைஞ்சு கிட்டு நிக்கக்கூடாதுன்னு பாடுபடறதை... நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க?"

    அழகு மட்டும் இருந்துட்டா போதாது. இந்தக் காலத்துல படிப்பு ரொம்பவும் முக்கியம்... அது இல்லாட்டா யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்...

    இப்போ கஷ்டப்பட்டு படிங்க... பெரிய வேலையில் உட்கார்ந்துட்டா அந்தஸ்து தேடி வரும். நம்ம தகுதியை உயர்த்திக்கிட்டா... உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். சரியா?" நீலாவுக்கும், லீலாவுக்கும் சவுக்கடி பட்டாற்போல் ‘சுரீர்’ என்றிருந்தது.

    இருவரும் கோரஸ்சாய்சரி அக்கா என்று கூறிவிட்டு முகம் கழுவ எழுந்து சென்றனர்.

    சகோதரிகள் இருவருக்குமே நிவேதாவைக் கண்டாலே... ஒரு சிறு பயம் இருந்தது உண்மை.

    நிவேதா பொறுமைசாலி மட்டுமல்ல... கோபம் வந்துவிட்டால் பொரிந்து தள்ளிவிடுவாள். அது மட்டுமா, மனதில் உள்ளதை ‘ஸ்கேன்’ செய்தது போல்... வெகு சுலபமாகப் புரிந்துகொண்டு... அதை அப்படியே போட்டு உடைத்துப் பேசி... விளாசித் தள்ளிவிடுவாள்.

    மரகதம் ‘மெஸ்’ வைத்து நடத்திக் கொண்டிருந்தாள். அவளின் அண்ணன் தணிகைவேல்... மனைவியை இழந்தவர் வீட்டோடு தங்கி வெளிவேலைகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொண்டார்.

    சமையல் வேலைக்கும், காய்கறி நறுக்கி பாத்திரங்களைத் தேய்த்து கழுவுவதற்கும்... தாயம்மா, பூங்காவனம் என்ற இரு வயதான பெண்களை... வேலைக்கு வைத்துக்கொண்டிருந்தாள் மரகதம்.

    தாயம்மாவும், பூங்காவனமும் குளித்துவிட்டு சுத்தமாக உடுத்திக்கொண்டு காலையில் சீக்கிரமே வந்துவிடுவார்கள்.

    நிவேதா கறாராகப் பேசுவதைக் கேட்டபடியே... டேக்ஸாவையும் இட்லிப் பானையையும் எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு வந்த தாயம்மா... துளசி மாடத்தை வணங்கிவிட்டு நிமிர்ந்த மரகதத்தை ஏறிட்டாள்.

    "நம்ம நிவேதா பொண்ணு அச்சு அசலா உங்களையே உரிச்சுக்கிட்டு வந்திருக்கும்மா? ஜாடை, குணம்... கறாரா பேசற விதம், பொறுப்பு,

    Enjoying the preview?
    Page 1 of 1