Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Sanikizhamai Iravu
Oru Sanikizhamai Iravu
Oru Sanikizhamai Iravu
Ebook134 pages59 minutes

Oru Sanikizhamai Iravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவலை வாசிக்கப் போகும் வாசகர்க்கு அல்லது வாசகிக்கு ராஜேஷ்குமாரின் வணக்கம்.

இந்த நாவலை வாசித்துக் கொண்டிருக்கும்போது - சிற்சில அத்தியாயங்களைத் தாண்டுகையில் 'இப்படியெல்லாம் நடக்குமா...?' என்கிற சந்தேகம் உங்களையும் மீறி எழலாம். சிலர் தத்தம் காதுகளைத் தடவி, நான் ஏதேனும் பூ வைத்து விட்டேனோ என்றும் பார்க்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ளும் ஒரே வாக்கியம்:

என்றோ நடந்துபோன ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் இந்த நாவலை எழுதியுள்ளேன். கதையின் முடிவை மட்டும் என் எண்ணப்படி மாற்றியுள்ளேன். கதையின் முடிவோடு ஒத்துப் போவதும் - வித்யாசப்பட்டு நிற்பதும் உங்கள் விருப்பம்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403270
Oru Sanikizhamai Iravu

Read more from Rajesh Kumar

Related to Oru Sanikizhamai Iravu

Related ebooks

Related categories

Reviews for Oru Sanikizhamai Iravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Sanikizhamai Iravu - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு சனிக்கிழமை இரவு

    Oru Sanikizhamai Iravu

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    ஒரு முக்கியமான முன்னுரை

    இந்த நாவலை வாசிக்கப் போகும் வாசகர்க்கு அல்லது வாசகிக்கு ராஜேஷ்குமாரின் வணக்கம்.

    இந்த நாவலை வாசித்துக் கொண்டிருக்கும்போது - சிற்சில அத்தியாயங்களைத் தாண்டுகையில் 'இப்படியெல்லாம் நடக்குமா...?' என்கிற சந்தேகம் உங்களையும் மீறி எழலாம். சிலர் தத்தம் காதுகளைத் தடவி, நான் ஏதேனும் பூ வைத்து விட்டேனோ என்றும் பார்க்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ளும் ஒரே வாக்கியம்:

    என்றோ நடந்துபோன ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் இந்த நாவலை எழுதியுள்ளேன். கதையின் முடிவை மட்டும் என் எண்ணப்படி மாற்றியுள்ளேன். கதையின் முடிவோடு ஒத்துப் போவதும் - வித்யாசப்பட்டு நிற்பதும் உங்கள் விருப்பம்.

    முன்னுரையை நான் வளர்த்த விரும்பவில்லை. இதோ முதல் அத்தியாயத்திற்கு ரொம்பவும் கிட்டத்தில் வந்து விட்டீர்கள்.

    நான் முன்னுரையிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

    முக்கியமான 3 அறிமுகங்களைத் தொடர்ந்து நீங்கள் அத்தியாயத்திற்குள் -

    கிருகப் பிரவேசம் செய்யுங்கள்.

    - ராஜேஷ்குமார்.

    அறிமுகம் 1:

    காஸ்டிங் செக்ஷனிலிருந்து - எம்.எஸ். செக்ஷனுக்கு ரோலி ஒன்றில் நீல நிற யூனிபார்மோடு போய்க் கொண்டிருந்த ஆதர்ஷ் என்கிற அந்த அழகான இளைஞன் தான் இந்த நாவலின் முக்கிய பாத்திரம்.

    ஆதர்ஷ் 6' 2" உயரம். சதைப் பிடிப்போடு கூடிய உருண்டையான முகம். ஆட்காட்டி விரல் பருமனில் அடர்த்தியாய் மீசை. மை தீட்டிய மாதிரியான புருவங்கள். சிகரெட் புகையை ஸ்பரிசிக்காத ரோஸ் நிறம் உறைந்து போன உதடுகள். திறந்து விடப்பட்ட சட்டையின் வழியாக மார்பில் புரளும் மெலிதான தங்கச் செயின். பி.ஈ. எலக்ட்ரானிக்ஸை ஸ்டேட்டில் - இரண்டாவது ரேங்கில் தேறினவன். அவன் டிகிரியை வாங்கிக் கொண்டு - யூனிவர்ஸிடி கட்டிடத்தை தாண்டுவதற்கு முன்பே - ஸ்டீல் விங்க்ஸ் பேக்டரி மேனேஜிங் டைரக்டர் திவாரி அவனைக் காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு - அஸிஸ்டெண்ட் இஞ்சினீயர் என்ற உத்தியோக முத்திரையோடு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை நீட்ட - உடனடியாய் வேலையை ஒப்புக் கொண்டவன்.

    ஒவ்வொரு ஏழாந்தேதியும் நாலாயிரத்து சொச்ச சம்பளக் கவரை வாங்குகிற - பத்து ஏ.ஈ.க்களில் இந்த ஆதர்ஷ் முதன்மையானவன். இவனுடைய செயல்பாடு எம்.டி.திவாரிக்கு நிரம்பவும் பிடிக்கும். சென்ற மாதம் கர்டர்களின் ப்ரொடக்ஷன் தரம் குறைந்து - மார்க்கெட்டில் விற்கத் திணறியபோது - ப்ளென்டட் ரேஷியோவை சமப்படுத்தி - கர்டர்களின் தரத்தை உயர்த்தி ஃபேக்டரியின் ப்ரஸ்டீஜ் சேலை உயர்த்தியவன்.

    அறிமுகம்: 2

    போன - ஆறுமாதத்திற்கு காட்ட முன்னால்தான் ஆதர்ஷுக்குக் கல்யாணமாயிற்று. மனைவியின் பெயர் ஹரிதா. சில காலம் ஏர்ஹோஸ்டஸாய் ஏர் இந்தியாவில் பணிபுரிந்து - சலித்துப் போய் - கல்யாண ஆசை வந்ததும் அம்மா, அப்பாவிடம் சொல்லி மாப்பிள்ளை தேட சொல்லி - அவர்கள் புரோக்கர் மூலமாய்த் தேட - ஆதர்ஷ் கிடைக்க - அவனுடைய தோற்றத்தில் ஆகர்ஷணமாக அவனுக்குக் கழுத்தை நீட்டியவள்.

    அறிமுகம்: 3

    லாமினேஷன் செய்யப்பட்ட கதவில் - பித்தளை பரப்பில் 'கணேஷ் குமார் ஃபேக்டரி மேனேஜர்' என்ற எழுத்துக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் என்க்ரேவ் செய்யப்பட்டிருந்தது.

    கண்ணாடி மேஜைப் பரப்புக்குப் பின்னால் கணேஷ் குமார் ரிவால்விங் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். ஏறக்குறைய ஆதர்ஷின் வயது. நிற மட்டும் கொஞ்சம் கம்மி. மற்றபடி அவன் அமர்க்களமாயிருந்தான்.

    ***

    1

    ஸ்டீல் விங்க்ஸ் ஃபேக்டரியின் மேனேஜிங் டைரக்டர் திவாரி வாரத்திற்கு ஒரு தடவை - பம்பாயிலிருந்து கோயமுத்து வந்து ஃபேக்டரியைப் பார்த்து விட்டுப் போவார் ப்ராக்ராம் சார்ட்டுகளைப் பார்த்துவிட்டு 'அச்சா' என்று இந்தியில் பாராட்டி - லேசாய் தங்கப்பல் தெரியப் புன்னகை செய்வார். தமிழைக் கொஞ்சம் குதறிக் குதறிப் பேசுவார் (உ - ம்) 'இங்கே வா'க்கு 'இன்க்கே வா.' உனக்கு என்பதற்கு 'உன்க்கு.'

    அன்றைக்கும் வந்திருந்தார்.

    கணேஷ்குமார் ஏழெட்டு ஃபைல்களை அவருடைய டேபிளில் பரப்பிக்கொண்டு பென்சிலை நகர்த்தி எதையோ சொல்லிக் கொண்டிருக்க - தள்ளு கதவுக்கு வெளியே அந்தக் குரல் கேட்டது ஆபீஸ் அட்டெண்ட்ர் கலியமூர்த்தி யாரையோ துரத்திக் கொண்டிருந்தான்.

    ரெண்டு மணி நேரத்துக்கு முதலாளியைப் பார்த்து யாரும் பேச முடியாதும்மா. முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கார். போயிட்டு மத்தியானத்துக்கு மேலே வா

    அவராண்டை நான் அவசரமாப் பேசணுமய்யா சேட்டுகிட்ட விஷயத்தைச் சொல்லுங்கய்யா. அவர் கண்டீசனா என்னைக் கூப்பிட்டுப் பேசுவாரு.

    "அடச்சீ! போம்மா...! ஒரு வாட்டி சொன்னா மூளையிலே உறைக்காதா? அவரை இப்பப் பார்த்துப் பேச முடியாதுன்னு சொல்றேன், நீ பாட்டுக்கு அதை காதில் வாங்கிக்காமே பேசிட்டே போறியே... அப்பாலே ஒத்தி

    நில்லு."

    உள்ளேயிருந்து திவாரி தன்னுடைய மூக்குக் ரேல் கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்துக் கொண்டே கணேஷ்குமாரிடம் கேட்டார்.

    யாரது?

    தெரியலை ஸார்.

    கலிய்ய மூர்த்தி... அழுத்தமாய்க் கூப்பிட்டார் திவாரி.

    ஸார்...

    கலியமூர்த்தி தான் அணிந்திருந்த வெள்ளை யூனிபார்மை இழுத்துவிட்டுக் கொண்டு உள்ளே வந்தான்.

    அன்க்கே... என்னா கல்ட்டா?

    'லேபர் ராமசாமியோட அம்மா வந்திருக்கா ஸார்."

    எதுக்கு?

    தெரியலை ஸார்... என்னவோ உங்களைப் பார்த்து பேசணுமாம்...

    உள்ர வரச் சொல்லு மேன்.

    சரி ஸார்.

    கலியமூர்த்தி வெளியே போக - அந்த அறுபது வயதுக் கிழவி உள்ளே வந்தாள். உலர்ந்து போன திராட்சை வட மாதிரியான உடம்பு. கைகள் குச்சி குச்சியாய்த் தெரிய - ரவிக்கை அணியாத விலாப்புறத்தில் எலும்புகள் வரிவரியாய்த் தெரிந்தன. கட்டியிருந்த அழுக்கு சேலையில் லேசாய் ஒரு நாற்றம் கிளம்பி – திவாரியின் மூக்கு நுனியோடு விளையாட ஆரம்பித்தது.

    உனக்கு என்னம்மா வேணும்...? மூக்கைத் தேய்த்துக் கொண்டே கேட்டார் திவாரி.

    "அய்யா சேட்டு மவராசரே... எம்புள்ள மேலே இரும்பு வுளுந்து அவன் செத்துப் போயி ஆறுமாசமாச்சய்யா... அவனுக்குச் சேரவேண்டிய பணம் இன்னும் என்ற கையிக்கு வந்த பாடில்லைய்யா... கேட்டா... இப்ப வா... நாளைக்கு வா, நாளன்னிக்கு வான்னு சொல்லி நாளைத் தாட்டிகிட்டே போறாங்கய்யா. எம்புள்ள உசிரோட இருந்திருந்தார்...

    Enjoying the preview?
    Page 1 of 1