Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kannadi Veedum Sila Karkalum
Oru Kannadi Veedum Sila Karkalum
Oru Kannadi Veedum Sila Karkalum
Ebook275 pages1 hour

Oru Kannadi Veedum Sila Karkalum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Kannadi Veedum Sila Karkalum

Read more from Rajeshkumar

Related to Oru Kannadi Veedum Sila Karkalum

Related ebooks

Related categories

Reviews for Oru Kannadi Veedum Sila Karkalum

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kannadi Veedum Sila Karkalum - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    விழாக்கோலம் பூண்டிருந்தது, சவிதா ஹால்.

    இருட்டின் கறுப்புப் பின்னணியில் சரம்சரமாய் எரிந்து கொண்டிருந்த வண்ண பல்புகள் அவசர அவசரமாய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஹாலைச் சுற்றிலும் வளர்ந்து வானோக்கி உயர்ந்திருந்த சிப்ரஸ் மரங்களிலும் அந்த வண்ண பல்புகள் தொற்றிக் கொண்டிருந்தன. ஜனக் கூட்டம் ஹால் முழுக்க கரகரத்தது. எஞ்சியவர்கள் வராந்தாக்களிலும் முகப்பிலும் வழிந்து கொண்டிருக்க -- ஒரே சீராய் சொல்லி வைத்த மாதிரி -- கார்கள் பாதையின் ஓரங்களில் அணிவகுத்து நின்றிருந்தன.

    எதிரே பெட்டிக்கடையொன்றின் அருகே நின்றபடி சிகரெட்டைப்

    புகைத்துக் கொண்டிருந்த ஜெயதேவ் சவிதா ஹாலில் தெரிந்த அமர்க்களத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

    ஜெயதேவ்?

    அவனைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகம் இந்த இடத்தில் அவசியம். ரொம்பவும் அவசியம். ஜெயதேவ் இருபத்தைந்து வயதான ஒரு முற்றிப்போன இஞ்சினியரிங் மாணவன். மாணவர்களுக்கே உரித்தான தோற்றத்திலிருந்து மாறுபட்டவன். சிகரெட்டை சங்கிலித் தொடராய் புகைத்து புகைத்து கறுத்துப்போன உதடுகள். இரவுக் காட்சிகளுக்குப் போய் சிவந்துபோன விழிகள். பட்டைச் சாராயத்திலிருந்து ஸ்காட்ச் விஸ்கிவரை குடித்துக் குடித்து பெருத்துப்போன வயிறு. கன்னப் பகுதியில் வெட்டுக் காயத்தால் உண்டான தழும்பு... இவன் ஜெயதேவ்.

    வகுப்புகளை இஷ்டத்திற்கு கட் செய்துவிட்டு வெற்று மார்போடு கட்டிய லுங்கியோடு நாள் முழுக்க தூங்குவதில் அவனுக்கு அலாதி பிரியம். ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு வறட்சியான கிராமம். அம்மா மைனஸ். இருக்கும் அப்பாவிடம் பணத்தை இஷ்டத்திற்கு கறந்து கோயமுத்தூரின் இதமான காற்றை சுவாசித்துக் கொண்டு - சொர்க்கலோக இனிப்போடு நாட்களை ஓட்டிக்கொண்டு இருப்பவன். கல்லூரிக்கு மாணவர் தலைவன் இவன்தான்.

    ஜெயதேவைப் பற்றிய அறிமுகம் இப்போதைக்கு இதுபோதும். வண்ண விளக்குகளில் குளித்துக் கொண்டிருந்த சவிதா ஹாலுக்கு முன்புறம் இருந்த பெட்டிக்கடைத்தான் அவனுடைய சமஸ்தானம். பெட்டிக்கடை சையத் சாய்பு ஜெயதேவ்க்கு செமத்தியான தோஸ்து. இஷ்டத்திற்கு கடன் கொடுத்து -- ஜெயதேவிடம் பணம் அதிகமாய்ப் புரளும்போது இஷ்டத்திற்குக் கறப்பவன்.

    சிகரெட்டை ஆழ்ந்து இழுத்து - நாசி நிறைய புகையை விட்டான் ஜெயதேவ். அவனுடைய கண்கள் இன்னமும் எதிரே இருந்த சவிதா ஹாலின்மேல் கிடந்தது. சவிதா ஹாலின் அமர்க்களத்திற்கு காரணம் புரியாமல் பெட்டிக்கடை சையத் சாய்புவைப் பார்த்தான்.

    என்ன... சையத்... என்ன வியூகம் இன்னிக்கு? சவிதா ஹால் ஜொலிக்குது, ஏதாச்சும் கல்யாணமா...?

    சையத் 'பான்' கறை ஏறிய தன் காவிப் பற்களைக் காட்டி சிரித்தான். சொன்னான். யாரோ கதை எழுதற அம்மாவாம்...! என்னமோ பரிசு கிடைச்சிருக்காம்... அதுக்காக பாராட்டு விழா நடக்குதாம்... அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் அந்த கதை எழுதற அம்மா கார்லயிருந்து உள்ளார போனாங்க...

    கதை எழுதற அம்மாவா? பேரென்ன? - ஜெயதேவ் ஆர்வமாய்க் கேட்டான்.

    தெரியல்ல ஸார்...

    என்ன, பொண்ணா...? வயசான அம்மாவா...?

    வயது இருபதுக்குள்ளாறத்தான் இருக்கும் ஸார். பொண்ணு ரொம்ப அழகு... என்ன நிறம்...! என்ன தளதளப்பு...! அந்த பொண்ணோட பேச்சைக் கேட்கறதுக்கு கூட்டம் வரல்லேன்னாலும்... அவளைப் பார்க்கிறதுக்காச்சும் நிறைய பேர் வருவாங்க...

    சையத் சொன்னதைக் கேட்டு - புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த சாக்கடையை நோக்கி சுண்டிவிட்டு -- சவிதா ஹாலை நோக்கி நடந்தான்.

    கோவை நகருக்கே உரித்தான ஜில்லென்ற ஏர்க்கண்டிஷன் காற்று மெலிதாய் வீசிக் கொண்டிருக்க, கலைந்து கிடந்த தலைமயிரைக் கைகளால் கோதிக் கொண்டு சவிதா ஹாலின் உள்ளே நுழைந்தான் ஜெயதேவ். திருமணங்களுக்காகவும், இசை நிகழ்ச்சிகளுக்காகவும் வாடகைக்கு விடப்படுகின்ற அந்த சவிதா ஹாலுக்கு அவன் எத்தனையோ முறை வந்ததுண்டு என்றாலும், இந்த முறை அவன் உள்ளே நுழைகையில் மனசுக்குள் இனம் புரியாத ஓர் உணர்ச்சி நெருடுவதை உணர்ந்தான்.

    ஒரு வேளை - ஒரு அழகிய பெண் - அதுவும் கதாசிரியை பேசப் போகும் பேச்சைக் கேட்கப் போகும் உற்சாகத்தால் அந்த உணர்ச்சி பிரசவமாயிருக்கலாம்.

    ஹாலின் வரவேற்பறைக்குள் நுழைகையில் எதிரில் இருந்த அந்த விளம்பர பேனர் அவன் கண்ணில் பட்டது. அவன் பார்வை அதில் வசமாய் சிக்க அவன் வாசகங்களை மேய்ந்தான்.

    "எழுத்துலக இளவரசி குமாரி 'திவ்யா'வுக்கு பாராட்டு விழா. இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடெமி பரிசை தன் 'ஊமைக்குயில்' - என்ற நாவலுக்காகப் பெற்றுள்ள குமாரி திவ்யா அவர்களுக்கு கோவை இலக்கியப்

    பேரவை சார்பில் கீழ்க்கண்டோர் பாராட்டிப் பேசுவார்கள்."

    கீழே பேசுபவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமாய் இருந்தது.

    ஜெயதேவின் மனதில் திவ்யா என்ற பெயர் கொஞ்சம் சிலிர்ப்பூட்டியது. இந்தப் பெயரை அடிக்கடி பத்திரிகைகளில் பார்த்திருக்கிறான். கதை, நாடகம், இலக்கியம் -- இந்த எல்லைக்குட்பட்ட எந்த சமாச்சாரமும் ஜெயதேவ்க்கு எட்டிக்காய். ஜீனத் அமனின் மார்பு ஊட்டும் கவர்ச்சியில் ஒரு கால்பங்காவது இந்த இலக்கியங்கள் ஊட்ட முடியுமா? என்று எதிர்கேள்வி போட்டு மற்ற மாணவர்களை மடக்குவான். கல்லூரி ஆண்டு விழாவானாலும் சரி, இலக்கிய மன்ற கூட்டமானாலும் சரி, சினிமா நடிக நடிகைகளை அழைத்துவந்து விடுவான். பேச்சில் சொல் சிலம்பம் படைப்பவர்களை புறங்கையால் அலட்சியமாய் ஒதுக்கி, பவுடர் பூச்சிலும், செயற்கை சிரிப்பிலும் மின்மினிப் பூச்சியாய் ஒளிரும் நடிக நடிகையர்க்காக காத்திருப்பவன்.

    இன்றைக்கு இந்த திவ்யா அவனை சவிதா ஹாலுக்கு அழைத்திருக்கிறாள். சையத்தின் அசாத்தியமான வர்ணிப்பு ஒரு காரணம்.

    வராந்தா முழுவதும் பரவியிருந்த ஜனக் கூட்டத்தை ஊடுருவி உள்ளே போனான் ஜெயதேவ். கூட்டம் அதிகம், பெண்கள் அதிகமாய் தெரிந்தார்கள். நாற்காலிகளில் நளினமாய் சாய்ந்திருந்தார்கள். ஹாலில் வாசல் புறங்களில் திட்டுத் திட்டாய் கும்பல் போட்டிருந்தது. ஹாலின் உள்ளே வெண்ணிற குழல் விளக்குகள் அழுத்தமாய் பிரகாசித்துக் கொண்டிருக்க மேடைப்பகுதி ஈஸ்ட்மென் வண்ணத்தில் ஜொலித்தது.

    ஜெயதேவ் அயர்ந்து போனான்.

    கதை எழுதும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அமர்க்களமான வரவேற்பா? கோவை நகரத்தின் நான்கு லட்ச மக்கள் தொகையில் சில ஆயிரம் ஜனங்கள் ஒன்றுபட்ட மனத்தோடு -- ஒரு பெண்ணுக்கு விழா எடுப்பது அவனுள் பிரமிப்பை ஊட்டியது.

    மேடையை பார்வையாலேயே அளந்தான். ஏகப்பட்ட ஆண்கள் மேடையில் வீற்றிருக்க நடுநாயகமாக அந்த திவ்யா தெரிந்தாள். நீல பட்டுப்புடவையில் ஒரு நீலதாமரையாய்த் தெரிந்தாள், பவுடர் பூச்சு முகத்தில் இதமாய்ப் பரவியிருக்க மூக்குத்தி காமிரா பிளாஷாய் டாலடித்தது. தழையப் பின்னிய கூந்தலில் மல்லிகைச் சரம் சிரித்தது, ரோஸ் வண்ண மோவாயில் ஒரு கடுகு மச்சம் அநாதையாய் ஆனால் அழகாய் நின்றிருந்தது. விழிகள்? அவள் உடம்பில் ஸ்பெஷல் ஐட்டங்களாய் ஜெயதேவுக்குத் தெரிந்தன.

    மேடையில் மைக்கை ஆக்ரமித்துக்கொண்டு- வளவளவென்று பேசிக்கொண்டிருந்தது ஒரு வழுக்கை தலை. மேடையில் அமர்ந்திருந்த அத்தனை பேருமே ஒரு விநாடி பொம்மைகளாய்த் தெரிய - திவ்யா மட்டும் அசைகின்ற சித்தன்னவாசல் சிற்பமாய்த் தெரிந்தாள். ஜெயதேவுக்கு மறுவினாடியே அந்த பெரிய ஹால் முழுவதும் சட்டென்று வெறிச்சோடி பாலைவனமாய் தெரிய - 'திவ்யா' மட்டும் தனியாய் உட்கார்ந்திருப்பதைப் போல் உணர்ந்தான் .

    இந்த ஈர்ப்புக்குக் காரணம் அவள் அழகா? அவள் திறமையா? இதிலென்ன சந்தேகம். முன்னதுதான் சரியான காரணம் - என்று உள்மனம் அப்பட்டமாய் உண்மையை ஒப்புக்கொள்ள - ஜெயதேவும் மனசாட்சிக்கு தாளம் போட்டான்.

    அந்த வழுக்கைத் தலை இன்னமும் மைக்கை கரடிப் பிடியாய்ப் பிடித்திருந்தது. அவருடைய கரகரப்பான தொண்டை அந்த ஹாலையே இரண்டாக அறுத்தது. ஆகவேதான்... சொல்கிறேன்... இத்தனை பத்திரிகைகள் வெளிவருகிறது. இலக்கிய ரசனைக்கு சரியானதல்ல... வெளிவரும் அத்தனை பத்திரிகைகளும் நுற்றுக்கணக்கான கதைகள். அரை குறைப் பிரசவங்களைப் போல் அடித்தளம் இல்லாத கதைகள், பிரசுரமாகிக் கொண்டு வருகின்றன. அவளுக்கு மீறிய உணவு எப்படி அஜீரணத்தை உண்டாக்குமோ... அது மாதிரி அளவுக்கு மீறின கதைகள் பிரசுரமாவது இலக்கியத்தைச் சுவைப்பவர்களுக்கு கண்டிப்பாய் அஜீரணத்தை உண்டாக்கிவிடும். அந்த அஜீரணப் போக்கில் குமாரி திவ்யா போன்ற சிறந்த கதாசிரியைகளின் படைப்புகளைக்கூட வாசகர்கள் படிக்க அலுத்துக் கொள்கிறார்கள்.

    வழுக்கைத் தலையின் பேச்சைக் கேட்டு எல்லோரும் கையைத் தட்டினார்கள்.

    அவர் இன்னமும் தொடர்ந்தார். குமாரி திவ்யாவை அறியாதவர்கள் - எழுத்துலக மக்களிடையே யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய கதைகளில் அப்பட்டமான வாழ்க்கை நிகழ்ச்சிகள் சித்திரிக்கப்படுகின்றன. அவர் எழுதிய 'உள் காயங்கள் ' என்னும் நாவலை யாருமே மறந்திருக்க மாட்டார்கள், இந்த சாகித்ய அகாடமி பரிசு இரண்டு வருடங்களுக்கு முன்பே குமாரி திவ்யாவுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்... திறமைசாலிகள் காலம் தாழ்த்தப்பட்டுத்தான் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள். அந்த வகையில் அந்த பரிசு இப்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசகப் பெருமக்களாகிய நாம் அவரைப் பாராட்டி கெளரவப் படுத்துவதில் பெருமை அடைகிறோம்.

    மீண்டும் ஹாலில் கைதட்டல் எழுந்தது.

    வழுக்கைத் தலை பேச்சை முடித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ள - திவ்யா பேச எழுந்தாள். மேடையின் ஓரமாய் இருந்த மைக்கை நோக்கி அவள் நடக்கையில் - கற்றை மின்னல்கள் ஒன்றாய் மின்னினாற்போல் மிளிர்ந்தாள். ஜெயதேவியின் விழிகள் விதவிதமாய் அவளை பிளாஷ் செய்தன.

    மைக் முன் திவ்யா நின்றபோது, ஓர் ஐந்து நிமிடத்திற்கு மாலைகளால் நிரப்பப்பட்டு திணறினாள். பிறகு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள். ஹால் முழுக்க சட்டென்று மௌனம் சாதித்து அவளுடைய பேச்சை வாங்க ஆரம்பித்தது.

    "நான் எழுதிய ஊமைக்குயில் நாவல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ளதைப் பாராட்டும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள அன்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. நல்ல கதைகள் காலம் தாழ்ந்துதான்

    இனம் கண்டு கொள்ளப்படுகின்றன. என்று எனக்கு முன் பேசிய சக எழுத்தாளர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தியாவது இனம் கண்டுகொள்ளப்படுகின்றனவே என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். சில நல்ல கதைகள் இனம் கண்டு கொள்ளப்படாமலேயே புறங்கையால் ஒதுக்கப்பட்டுருக்கின்றன."

    திவ்யா பேசிக் கொண்டே போனாள்.

    அவள் பேசப் பேச அசையும் அவள் உதடுகளையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தான். ஜெயதேவ்! நல்ல சிவப்பான சதைப்பிடிப்பான அந்த இதழ்கள் பிளவுபடும் போதெல்லாம், வெள்ளரி விதைகள் போன்ற பற்கள் பளிச்சிடும். அழகை ஒருவித வெறியோடு ரசித்தான்! சேலையை அடக்கமாய்ப் போத்திக் கொண்டு, நெற்றியின் சந்தன பரப்பில் இரண்டொரு குழற் கற்றைகள் அதிகப்பிரசங்கித்தனமாய்ப் புரண்டு விளையாட உடம்பின் பிற பாகங்களில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமான அசைவும் இல்லாமல் குரலை மட்டும் தேவையான நேரத்தில் இறக்கியும், ஏற்றியும் தடங்கல் இல்லாத நீரோட்டமாய் பேச்சை பிரவகித்தாள் திவ்யா:

    ஏறக்குறைய அரைமணி நேரம்!

    அவள் பேச்சை முடித்த போது, தன்னையும் அறியாமல் வெகுநேரம் கையைத் தட்டினான் ஜெயதேவ், கூட்டம் கலைய ஆரம்பித்தது. முன்வரிசையில் இருந்தவர்கள் மேடையை நோக்கித்

    Enjoying the preview?
    Page 1 of 1