Oru Kodi Rathirikal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5
Related to Oru Kodi Rathirikal
Related ebooks
Neela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Muraiyil Maranam! Rating: 5 out of 5 stars5/5Oru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsAnu Oru Aacharyam! Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pothuvazhiyalla Rating: 0 out of 5 stars0 ratingsUdhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsMatravai Nalliravu 1.05ku Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Thappathu! Rating: 5 out of 5 stars5/5November Nila! Rating: 5 out of 5 stars5/5Konjum Kili Rating: 0 out of 5 stars0 ratingsNishaa… Nishaa Odi Vaa…! Rating: 4 out of 5 stars4/5Violet Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Oru Azhaipithazh Rating: 1 out of 5 stars1/5Antha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsAnge... Inge... Enge...? Rating: 0 out of 5 stars0 ratingsAacharyam Aanaal Unmai Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel! Rating: 1 out of 5 stars1/5Parappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Enakku Naane Pagaiyaanen and Maranam Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsOne Man Army Rating: 5 out of 5 stars5/5Onpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsYudha Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsNisha... Nisha... Odi vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Oru Kodi Rathirikal
0 ratings0 reviews
Book preview
Oru Kodi Rathirikal - Rajeshkumar
21
1
இந்திய வானவியல் ஆராய்ச்சி மையத்தின் வடக்கு கட்டிடம்.
சென்ட்ரலைஸ்டு குளிர் சாதனத்தின் மெல்லிய உறுமல், அவ்வப்போது எங்கோ ஒலிக்கும் இன்ட்டர்காம் ஓசை, இவைகளைத் தவிர பொதுவாய் அங்கே ஒரு ஆராய்ச்சி சாலைக்கே உரிய அமானுஷ்ய நிசப்தம் நிலவியது.
ஸாட்டிலைட் ரிப்போர்ட்களை அலசிப் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி ராகவ் பிரசாத்தை இன்ட்டர்காமின் ஓசை கலைத்தது.
ஸாட்டிலைட் ரிப்போர்ட் காகிதங்களை மேக்னிஃபையர் அருகே கிடத்திவிட்டு - மேஜை மேலிருந்த இன்ட்டர்காம் ரிசீவரை எடுத்தார்.
ஹலோ...
எதிர்முனையில் உதவியாளரின் குரல் கேட்டது.
ஸார்... மிஸ்டர் மங்கள்ராம் லைன்ல இருக்கார்... உங்ககூட பேச விரும்பறார்...
ராகவ்பிரசாத்தின் நெற்றி சுருங்கியது.
மங்கள்ராமா...? யாரது...?
ஸாரி ஸார்... உங்களுக்கு அவரைப் பத்தித் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைச்சேன்... மங்கள்ராம் ஒரு பிரபல அரசியல்வாதி...
ஓ... அந்த மங்கள்ராமா... என்னால் அவரை நினைவு கொள்ள முடியுது நியூஸ் பேப்பர்ல அவர் பேரைப் பார்த்திருக்கேன்... அவர் எதுக்காக என் கூட பேச விரும்பறார்...?
தெரியலை ஸார்... உடனே உங்க கூட பேசணும்ன்னு சொன்னார்... அவரோட குரலில் லேசா பதட்டம் இருந்தது...
சரி லைன் குடுங்க.
ஓ.கே ஸார்...
சொற்ப விநாடிகள் இசை கேட்டதைத் தொடர்ந்து - ஒரு கரகரப்பான ஹலோ ராகவ்பிரசாத்தின் காதைத் தொட்டது.
ஹலோ... அ’யம் ராகவ்பிரசாத்...
வணக்கம் விஞ்ஞானி ஸார்... நான் மங்கள்ராம்...
சொல்லுங்க...
என்னைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கறேன்...
பேப்பர்ல உங்க பேரைப் பார்த்திருக்கேன்... மத்தபடி எனக்கு அரசியல்ல அவ்வளவா ஆர்வம் இல்லாததால... சொல்றேன்னு கோபித்துக் கொள்ளவேண்டாம் அதிகப்படியா உங்களைப் பத்தித் தெரியாது...
நீங்க வெளிப்படையா பேசறது எனக்குப் பிடிச்சிருக்கு... என்னைப் பத்தி சுருக்கமா சொல்லணும்ன்னா... நான் இல்லாம இந்திய அரசியல் இல்லை... உங்க பி.ஏ. கிட்டே என்னைப் பத்தி விபரமாகக் கேட்டுத் தெரிஞ்சிக்கங்க...
அதிருக்கட்டும்... என்ன விஷயமா எனக்கு போன் பண்ணினிங்க...?
ராவ்பிரசாத் கேட்டதுமே - மறுமுனை மங்கள்ராமின் குரல் கம்மிப் போனது.
சின்னதாய்ப் பதட்டம் கோட்டிங் அடித்துக் கொள்ள - கொஞ்சம் துண்டு துண்டாய்ப் பேசினார்.
விஞ்ஞானி ஸார்... நான் உங்களை உடனே நேர்ல பார்க்கணும்... உங்ககிட்டே நிறையப் பேசணும்...
என்கிட்டே பேசணுமா...? எதைப் பத்தி...?
ஒரு சயன்ஸ் மேட்டர்தான்...
சயன்ஸ் மேட்டரா...? என்ன அது...? கொஞ்சம் விளக்க முடியுமா...?
போன்ல விளக்கமா பேச முடியாது விஞ்ஞானி ஸார்... நான் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கேன்... நீங்கதான் என்னைக் காப்பாத்த முடியும்ன்னு தோணுது... அதனால்தான் அறிவியல் மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் கேட்டு உங்க போன் நம்பர் வாங்கினேன்... ப்ளீஸ்... உடனே நான் உங்களைப் பார்த்தாகணும்... எனக்காக ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷங்கள் ஒதுக்குங்க...
ராகவ்பிரசாத் குழப்பமாய் யோசித்தார்.
அரசியல்வாதிக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்...?
ஒரு அரசியல்வாதியைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்கு விஞ்ஞானி எந்த வகையில் உதவ முடியும்...?
விஞ்ஞானி ஸார்... என்ன யோசிக்கறீங்க...? நான் சொல்லப் போற விஷயம் உங்க ஆராய்ச்சிக்கே திருப்பு முனையாகக்கூட அமையலாம்...
ராகவ்பிரசாத்துக்கு லேசாய் ஆர்வம் பிறந்தது.
சரி வாங்க... பேசலாம்...
தேங்க்யூ வெரிமச்... இன்னும் அரை மணி நேரத்தில் நான் அங்கிருப்பேன்...
ஓ.கே...
ரிசீவரை வைத்த ராகவ்பிரசாத் உதவியாளரை அழைத்தார்.
டோர் க்ளோசரை ஜெயித்து உள்ளே வந்தார் வழுக்கைத் தலை உதவியாளர். கழுத்து டையை அட்ஜஸ்ட் செய்து கொண்டு ராகவ்பிரசாத்தின் முன்னே நின்றார்.
உக்காருங்க...
எதிர் இருக்கை உதவியாளரைத் தாங்கிக் கொண்ட பின்பு வார்த்தைகளை வெளியிட்டார் ராகவ்பிரசாத்.
மங்கள்ராம் கொஞ்ச நேரத்தில் இங்கே வர்றார்...
ஓ.கே ஸார்...
அவர் ஏதோ சயன்ஸ் சம்பந்தமா என்கிட்டே பேசப் போறதா சொன்னார்... அவரைப் பத்தித் தெரிஞ்சிக்க விரும்பறேன்...
மங்கள்ராம்க்கு இந்திய அரசியல்ல முக்கியமான இடம் இருக்கு ஸார்... அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கோ இல்லியோ... ஆனா அரசியல் செல்வாக்கு நிறைய இருக்கு... அவர் நினைச்சார்ன்னா மத்திய அரசாகட்டும்... மாநில அரசாகட்டும்... சட்டுன்னு புரட்டிப் போட்டுட முடியும்... அவர் இதுவரைக்கும் எந்தப் பதவியும் வகிச்சதில்லை... ஆனா பிரதமர் முதல்... வாரியத் தலைவர் வரை... பதவியில் இருக்கிற அத்தனை பேரும் இவரைப் பார்த்தா பயப்படுவாங்க...
ஐ ஸீ...
இதைத் தவிர மங்கள்ராம்க்கு ஒரு ஹைடெக் இமேஜும் இருக்கு ஸார்...
புரியும்படியா சொல்லமுடியுமா...?
அடிப்படையில் அவர் அறிவியல் பட்டதாரின்னு நினைக்கறேன்... கொஞ்ச நாள் அமெரிக்காவில் பிரபல யுனிவர்சிட்டியில் கெஸ்ட் லெக்சரரா இருந்திருக்கார்... இந்திய அறிவியல் ரீதியா முன்னணிக்கு வரணும்ன்னு எல்லா மீட்டிங்லயும் பேசுவார்... கையில் எப்பவும் லேப்டாப்போடதான் சுத்துவார்... யார் என்ன கேட்டாலும் லேப்டாப்பைத் தட்டி புள்ளி விபரம் தெரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லுவார்...
இன்ட்ரஸ்ட்டிங்...
இதைத் தவிர உங்களுக்கு மேலும் என்ன விபரம் வேணும் ஸார்...?
போதும்... நான் எதிர்பார்த்ததுக்கும் அதிகமாவே விபரங்கள் தந்திருக்கீங்க... தேங்க்யூ...
உதவியாளர் எழுந்தார்.
நான் போகலாமா ஸார்...?
எஸ்...
மங்கள்ராம் வந்தார்ன்னா உள்ளே அனுப்பவா ஸார்...?
அனுப்பி வைங்க.
ஓ.கே ஸார்...
உதவியாளர் வெளியேறினார்.
திரைச் சீலை விலகியபோது - கண்ணாடிச் சுவர்க்கு வெளியே அசைவுகள் தெரியவே திரும்பிப் பார்த்தார் ராகவ்பிரசாத்.
ப்ராய்லர் நிறத்தில் ஒரு லெக்சஸ் கார் லானை ஒட்டினாற்போலிருந்த வாதநாரயணா மரத்தினடியில் தனது டயர்களைத் தேய்த்து நிற்பது தெரிந்தது.
யுனிபார்ம் அணிந்த டிரைவர் வேகமாய்க் காரைச் சுற்றி வந்து கதவைத் திறக்க - பின் சீட்டிலிருந்து இறங்கிய அந்த ஐம்பது வயது நபர் மங்கள்ராம்தான் என்று ராகவ்பிரசாத்தால் சுலபமாய் யூகிக்க முடிந்தது.
ஷெர்வாணி அணிந்திருந்தார். உயரமான ஆகிருதி. வழித்துப் பின்னோக்கி சீவியிருந்த தலைமுடியில் எழுபது சதவிகிதம் அவருடைய காரின் நிறத்திலேயே இருந்தன.
வடக்கு கட்டிட போர்டிகோவை நோக்கி அவர் நடக்க ஆரம்பிக்க - ராகவ்பிரசாத் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தார்.
சற்று நேரத்தில் அறைக்கதவு திறந்தது.
உதவியாளர் மங்கள்ராமை அழைத்துக் கொண்டு வந்தார்.
- ப்ளீஸ் கமின் ஸார்..."
கையைக் கூப்பிக் கொண்டே உள்ளே வந்த மங்கள்ராமை எழுந்து சென்று வரவேற்றார் ராகவ்பிரசாத்.
இருவரும் பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டு அமர்ந்த பின் - உதவியாளர் வெளியேறினார்.
உங்களைப் பத்தி என்னோட உதவியாளர்கிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்... உங்களுக்கு அறிவியல் ஆர்வம் அதிகம்ன்னு சொன்னார்... அடிப்படையில் நீங்கள் அறிவியல் பட்டதாரின்னு சொன்னார்...
மங்கள்ராம் புன்னகைத்தார்.
உண்மைதான்... ஆனா விஞ்ஞானத்தை விட்டு நான் விலகி வந்து பல காலமாச்சு... பக்கா அரசியல்வாதி ஆயிட்டேன்... சொல்லப் போனா எனக்கு இப்போ தெரிஞ்சதெல்லாம் பொலிட்டிக்கல் சயன்ஸ் மட்டும்தான்...
போன்ல ரொம்ப பதட்டமா பேசினிங்க... ஏதோ ஆபத்தில் சிக்கியிருப்பதா சொன்னிங்க... என்ன பிரச்சனை...?
ராகவ்பிரசாத் கேட்டதுமே - அவ்வளவு நேரமாய்க் கொஞ்சம் சகஜமாயிருந்த மங்கள்ராமின் முகத்தில் மெல்லிய கலவர ரேகைகள் படர்ந்து கொண்டன.
எஸ்... அதைப் பத்தி சொல்றேன்... அதுக்கு முன்னாடி சில சந்தேகங்களை உங்ககிட்டே தெளிவுபடுத்திக்க விரும்பறேன்...
கேளுங்க...!
"யு எஃப் ஓ பத்தி நீங்க