Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullaththaik Killaathey!
Ullaththaik Killaathey!
Ullaththaik Killaathey!
Ebook137 pages33 minutes

Ullaththaik Killaathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ullaththaik Killaathey!

Read more from Rajeshkumar

Related to Ullaththaik Killaathey!

Related ebooks

Related categories

Reviews for Ullaththaik Killaathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullaththaik Killaathey! - Rajeshkumar

    14

    1

    இன்ட்டர்காம் வேகத்தோடு இசைந்தது.

    ஏஸ் ஃபார் ஏஸ் திஸ் அக்ரிமென்ட் கன்சர்ன்ட்...

    சுருக்கெழுத்தில் குறிப் பெடுத்துக் கொண்டிருக்கும் குட்டைப் பாவாடை ஸ்டெனோவுக்கு சரளமான ஆங்கிலத்தில் டிக்டேட் பண்ணிக் கொண்டிருந்த திலக்ஷனா, நெயில்பாலீஷ் மின்னும் நீள விரல்களால் ரிசீவரை எடுத்தாள்.

    ... வி ஆர் அனேபிள் டு...

    டிக்டேஷனைத் தொடர்ந்து கொண்டே ரிசீவரைக் காதில் வைத்தாள்.

    மறுமுனையில் ஆப்பரேட்டர் பெண்.

    அவள் குரலில் அவசரம்.

    மேடம்... கால் ஃப்ரம் ஜெர்மனி... எம்.டி. பேசறார்...

    அழகான இருபத்திமூன்று வயது திலக்ஷனாவிடம் (எம்.பி.ஏ.படிப்பை முதல் வகுப்பில் தேறியிருக்கிறாள். துறுதுறு விழிகள். தர்பூசணித் துண்டங்களாய் உதடுகள்) பரபரப்பு தொற்றியது.

    ‘நீ போகலாம்’ என்கிற மாதிரி ஸ்டெனோவுக்கு கண்களாலேயே சைகை செய்தாள்.

    சுருக்கெழுத்து பேடை மூடிக் கொண்டு பால்பாயிண்ட் பேனாவை மார்பிடுக்கில் சொருகிக் கொண்டு அவள் ஸ்டைலான நடையில் அறையை விட்டு வெளியேறிச் சென்றாள்.

    டோர் க்ளோசர் கண்ணாடிக் கதவை இடைவெளி இல்லாமல் தானாகச் சாத்தி வைத்தது.

    ஹலோ...

    இரைந்தாள் திலக்ஷனா.

    மறுமுனையிலிருந்து எம்.டி.நீலேஷின் குரல்.

    திலக்ஷனாதானே பேசறது..?

    ஆமாண்ணா... நான்தான் பேசறேன்... எப்படி இருக்கே..? வெதர் பரவாயில்லையா..?

    ஐ’யாம் ஃபைன்... இங்கே குளிர் பிச்சு உதறிட்டிருக்கு...

    உன்னோட ட்ரெயினிங் எப்படி போயிட்டிருக்குண்ணா..?

    அதையெல்லாம் நேரில் வந்தப்புறமா சொல்றேன்... ஐஎஸ்டி காலை வேஸ்ட் பண்ண வேண்டாம்... நான் பேச வந்த ரெண்டு விஷயத்தையும் சுருக்கமா பேசி முடிச்சிடறேன்...

    அவன் ஒரு விநாடி இடைவெளி விட - காதுகளைத் தீட்டிக் கொண்டு அவனுடைய வார்த்தைகளுக்காகக் காத்திருந்தாள் திலக்ஷனா.

    அவன் தொடர்ந்தான்.

    திலக்ஷனா... ஆபீசை மேனேஜ் பண்ணறது ஒண்ணும் சிரமமா இல்லியே...?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை...

    ஏதாவது சந்தேகம்ன்னா மேனேஜர் பிரபாகர் ராவ்கிட்ட கேட்டுக்கோ... அப்பா காலத்திலிருந்து இருக்கார்... வெல் எக்ஸ்ப்பீரியன்ஸ்ட்...

    மூணு மாச ஃபாரின் ட்ரெயினிங் முடியற வரைக்கும் என்கிட்டே கம்பெனி பொறுப்பை ஒப்படைச்சிருக்கே... ரெண்டு மாசம் சமாளிச்சுட்டேன்... இன்னும் ஒரு மாசம்தானே... அதுக்குள்ளே நீயே வந்துடுவே... ஆபீஸ் ரொட்டீன்ஸ் எல்லாம் இப்போ எனக்கு அத்துபடியாயிடுச்சு...

    விநாடி இடைவெளிக்குப் பின் கேட்டான்.

    நான் கேக்க வந்த விஷயத்தை விட்டுட்டு வேற எதையோ பேசிட்டிருக்கேன்... நாம மார்க்கெட்டில் விட்ட புது ரக பெயிண்ட் எப்படி போயிட்டிருக்கு..? டீலர்ஸ் ஃபீட்பேக் வாங்கினியா..?

    அந்த பெயிண்ட்டை மார்க்கெட்டில் விட்டு ஒரு வாரம் ஆச்சு... நேத்திக்குத்தான் ஃபீட்பேக் வாங்கினேன்... அந்த பெயிண்ட்டுக்கு அமோக வரவேற்பு. அதனோட ஷேடு ஷைனிங், ஆடூர்நெஸ் எல்லாமே பிரம்மாதம்னு சொன்னாங்க... கஸ்டமர் என்கொய்ரி அதிகமாக இருக்காம்... இங்கே பல்க் ஆர்டர்ஸ் குவிஞ்சிட்டிருக்கு...

    குட்... ப்ரொடக்ஷன் மேனேஜர்கிட்டே பேசிடு... அந்த ஆர்டர்சை மீட்பண்ற அளவுக்கு ப்ரொடக்ஷன் வேகம் இருக்கணும்...

    ஐ வில் மேனேஜ்... ரெண்டு விஷயம் பேசணும்னு சொன்னியே..? வேற என்ன விஷயம்ண்ணா...?

    ஒண்ணு அஃபிஷியல்... இன்னொண்ணு பர்சனல்... அஃபிஷியல் மேட்டர் பேசியாச்சு... அடுத்து பர்சனல்... மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாராவது வந்திருந்தாங்களா..?

    பத்திரிகை மாடல் காட்டறதுக்காக மாப்பிள்ளையே வந்திருந்தார்...

    இஸிட்..?

    அண்ணா எப்போ வருவார்ன்னு கேட்டார்...

    சொன்னியா..?

    கல்யாணத்துக்கு அஞ்சு நாள் முன்னால வந்து சேருவார்ன்னு சொன்னேன்...

    வேற வழியில்லை திலக்ஷனா... இந்த ஃபாரின் ட்ரிப் ஒரு வருஷத்துக்கு முந்தியே முடிவு செய்யப்பட்ட ஒண்ணு... வேலை செய்யறதுக்கு ஆட்கள் இருக்காங்க... ஆபீசிலும் சரி... வீட்டிலும் சரி ஏதாவது பிரச்னைன்னா நீ என்னை எந்த நிமிஷம் வேணா ஃபோன்ல கான்ட்டாக்ட் பண்ணலாம்...

    நோ... ப்ராப்ளம்... ஆபீஸ் பிரச்னைகளை சமாளிக்க சீனியர் மேனேஜர் இருக்கார்... கல்யாண ஏற்பாடுகளைப் பொறுத்த வரைக்கும் நாங்க பார்த்துக்கறோம்ன்னு மாப்பிள்ளை வீட்டில் பெருந்தன்மையா சொல்லிட்டாங்க... பத்திரிகை வந்தா டிஸ்ட்ரிப்யூட் பண்ணறதுதான் நம்ம வேலை... அதைக் கூடவா நான் செய்ய மாட்டேன்...? நீ கவலைப்படாம ட்ரெயினிங்கை முடிச்சிட்டு வா...

    ஓக்கே... ரிசீவரை வெக்கறேன்...

    சரி...

    டொக்கென்ற சப்தத்தோடு எதிர்முனை துண்டாகியது.

    திலக்ஷனா ரிசீவரை வைக்கிறபோது கதவு திறந்து சீனியர் மேனேஜர் பிரபாகர் ராவ் உள்ள வந்தார்.

    அவர் முகம் பதட்டத்தில் குளித்திருந்தது.

    அதைக் கவனித்தவளாய் அவருக்கு இருக்கையைக் காட்டிக் கொண்டே கேட்டாள் திலக்ஷனா.

    எனி ப்ராப்ளம் மேனேஜர்..?

    ஆமாம்மா... திலக்ஷனா...வி ஆர் இன் டீப் ப்ராப்ளம்...

    இப்போதான் அண்ணா ஃபோன் பண்ணினார்... எல்லாமே ஸ்மூத்தா போயிட்டிருக்குன்னு சொன்னேன்... ஃபோனை வெச்சு ஒரு நிமிஷம்கூட ஆகலை... நீங்க வந்துட்டிங்க... உங்க முகத்தைப் பார்த்தா ஏதோ பெரிய பிரச்னையா இருக்கும் போலிருக்கே..?

    பிரபாகர் ராவ் தலையசைத்தார்.

    சில கோடி ரூபாய்கள் நஷ்டம் வரப் போகுதுன்னா அதைப் பெரிய பிரச்னைன்னுதானே சொல்லணும்...

    புரியும்படி சொல்லுங்க...

    "நம்ம புது ரக

    Enjoying the preview?
    Page 1 of 1