Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Virainthu Vaa, Vivek!
Virainthu Vaa, Vivek!
Virainthu Vaa, Vivek!
Ebook139 pages54 minutes

Virainthu Vaa, Vivek!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Virainthu Vaa, Vivek!

Read more from Rajeshkumar

Related to Virainthu Vaa, Vivek!

Related ebooks

Related categories

Reviews for Virainthu Vaa, Vivek!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Virainthu Vaa, Vivek! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    விவேக் தன்னை நோக்கி - நீட்டப்பட்ட ஆட்டோகிராப் நோட்டுகளுக்கு மத்தியில் விழி பிதுங்கி திணறிக் கொண்டிருக்க - ரூபலா தள்ளி நின்று 'மங்கையர் மலர்' புரட்டி சில புதுக் கோலங்கள் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இடம் : கோவை ரயில்வே ஸ்டேஷன்.

    நேரம் : இரவு 8.06.

    போட்டுத் தர்றேன். எல்லாருக்கும் போட்டுத்தர்றேன்... எம்மேல வந்து விழாதீங்க. யாராவது பார்த்தா - நான் பிக்பாக்கெட் அடிச்சுட்டு உங்க கிட்டே உதை வாங்கறேன்னு நினைச்சுக்குவாங்க... கை மளமளவென்று ஆட்டோகிராப் நோட்டுகளில் ‘விவேக்... விவேக்' என்று கிறுக்கலாய் எழுதிக் கொண்டிருந்தது.

    நீங்களும் உங்க மிஸஸும் மெட்ராஸுக்கா ஸார் போறீங்க?

    ஆமா...

    என்ன விஷயமான்னு தெரிஞ்சுக்கலாமா ஸார்?

    ஐ.ஜி. கிட்டயிருந்து அவசரத் தந்தி ‘விரைந்து வா விவேக்...’ என்கிற ரீதியில் ஒரு ஆங்கில வாசகத்தோடு தந்தி... அதான் போய்கிட்டிருக்கேன்...

    உங்க கூட கோகுல்நாத் வரலையா?

    அவர் ஏற்கனவே மெட்ராஸ்ல தான்! இருக்கார்...

    ராஜேஷ் குமார் - உங்களுக்கு நெருங்கின தோஸ்த்ன்னு சொல்றாங்க... உங்களை வழியனுப்ப அவர் ஸ்டேஷனுக்கு வரலையே...?

    அவர் அடுத்த க்ரைம் நாவல் எழுதறதுல மும்முரமாயிக்கார். அசோகன் வேற நாவல் வந்து சேரலையேன்று நாலு டெலிகிராம் குடுத்துட்டாராம். மனுஷன். சாப்பாட்டையும் மறந்து – நாவலை விறுவிறுன்னு எழுதிட்டிருக்கார்... நானும் ரூபலாவும் போய் அவரை பார்த்துட்டு வர்றோம்...

    விவேக் ஸார். உங்ககிட்டே ஒரு கேள்வி...

    கேட்கலாமே... கை நிறுத்தாமல் விவேக் விவேக் என்று போட்டுக் கொண்டிருந்தது.

    எம் பேர் ரமேஷ். சொந்த ஊர் கம்பம். மதுரையில் கம்ப்யூட்டரிங் டெக்னாலஜியில் செகண்ட் இயர் ஸ்டுடண்ட்.

    அப்படியா...? நல்ல கோர்ஸ்... கேள்வியைக் கேளுங்க...

    கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி ஒருத்தரை கொலை பண்ண முடியுமா... மேல்நாட்டுல அது சாத்தியம்ன்னு ஒரு புஸ்தகத்திலே படிச்சேன்...

    அப்பனே கம்பம் ரமேஷ்! ஒருத்தனை கொலை செய்யறதுக்கு - அழகா அரிவாள், பிச்சுவா கத்திதான் இருக்கே...! கொஞ்சம் வசதி படைத்த கொலைகாரன் - பிஸ்டல் வெச்சுக்கலாம்... கம்ப்யூட்டர் மூலமாக கொலை பண்றதா வர்ற நியூஸெல்லாம் கப்ஸா. கண்ட கண்ட புஸ்தகங்களைப் படிச்சுட்டு முளையை சூடு பண்ணிக்காதீங்க...

    சல்வார் கம்மீஸில்- மதமதவென்று நுழைந்திருந்த அந்தப் பெண். ஆட்டோகிராப் நோட்டை நீட்டிக் கொண்டே கேட்டாள்.

    நீங்க எந்த கோச் ஸார்...?

    ஸாரி... நான் எந்த விளையாட்டுக்கும் 'கோச்சா’ போனதில்லையே

    ஃசல்வார் கம்மீஸ் இடதுகாலை தரையில் உதைத்துக் கொண்டு அழகாய் சிணுங்கியது.

    நான் அதை கேக்கலை ஸார்... நீங்க மெட்ராஸ் போற இந்த ட்ரெய்ன்ல எந்த 'கோச்’ன்னு கேட்டேன்...?

    எப் - 2...

    ஐ...ய்...யா... அவள் நுனி நாக்கை கடித்துக் கொண்டு கையை வெகு ரம்யமாய் உதறினாள்.

    என்னம்மா இவ்வளவு சந்தோஷப்படறே...?

    நானும் அதே கோச்தான். ஃப் யூ டோன்ட் மைண்ட் நான் உங்க கூட விடிய விடிய...

    ஆட்டோகிராப்பில் 'விவேக்' என்று எழுதியிருந்த - எழுத்துக்களோடு 'திக்'கென்று நிமிர்ந்தான்.

    அவள் தொடர்ந்தாள் பேசிட்டு வரலாமா...?"

    "விவேக் புன்னகைத்தான்.

    நான் உங்ககூட விடிய விடிய - பேசிட்டு வரணும்ன்னா... நீங்க என்னோட மேலிடத்திலிருந்து பர்மிஷன் வாங்கிட்டு வரணும்...

    "மேலிடமா...?

    எஸ்...

    ரூபலாவை கைகாட்டினான் விவேக்.

    உங்க மனைவியும் வர்றாங்களா...? ஸாரி ஸார்... எனக்குத் தெரியலை. ஒரேயொரு கேள்வியை மாத்திரம் கேட்டுட்டுப் போயிடறேன் ஸார்...

    கேளும்மா...

    எப்படி ஸார்... எந்த கேஸானாலும் குற்றவாளிகளை கண்டுபுடிச்சுடறீங்க...?

    அவங்க... ரொம்பவும் சுலபமா மாட்டிக்கறாங்க. அதனாலதான்...

    தற்கால அரசியலைப் பத்தி என்ன ஸார் நினைக்கறீங்க...?

    அரசியலா...? இந்த வார்த்தையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே ம்...ம் ஞாபகத்துக்கு வந்திடுச்சு. அதுக்குப் பேரு அரசியல் இல்லேம்மா... அது ஒரு வகையான மல்யுத்தம்ன்னு அரசாங்க கெஜட்லேயே, வந்தாச்சு... நீ பார்க்கலையா...?

    நீங்க ஜெ...வா... ஜா... வா?

    நான் 'ரூ... சொல்லிக் கொண்டே ஆட்டோகிராப் கும்பலினின்றும் விடுபட்டு -

    ரூபலாவை நோக்கி வந்தான் விவேக்.

    வியர்த்திருந்தான்.

    மங்கையர் மலரை இன்னமும் மும்முரமாய் வாசித்துக் கொண்டிருந்த ரூபலாவின் காலடிக்கு பக்கத்தில் இருந்த - சூட்கேஸை எடுப்பதற்காக குனிந்தான் விவேக்.

    ஏம்பா... ஒரு வாட்டி சொன்னா உனக்கு தெரியாதா...? நான் தான் போர்ட்டர் வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னேனே... திரும்பவும் வந்து... ஏன்... உயிரை...

    கத்திக் கொண்டே புத்தகத்தினின்றும் தலையை உயர்த்தியவள் விவேக் நிற்பதைப் பார்த்ததும் "அச்சச்சோ... நீங்களா...? நான் அந்த போர்ட்டர் கிழவனாக்கும்ன்னு நினைச்சு...'

    திட்டிட்டியாக்கும்...

    ஆமாங்க... ஸாரி...

    சரி... சரி... வா... செருப்புல அடிச்சுட்டு வெல்லம் குடுத்த கதை மாதிரி... என்னைத் திட்டிட வேண்டியது. அப்புறம் ஒரு ஸாரி சொல்லிட வேண்டியது...

    நிஜமாவே ஸாரிங்க...

    மொதல்ல கம்பார்ட்மெண்டுக்கு போயிடலாம் வா.... இல்லேன்னா இன்னொரு கும்பல் ஆட்டோகிராப்புக்காக வந்து மொச்சுக்கும்...

    இருவரும்

    Enjoying the preview?
    Page 1 of 1