Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidaisol Vivek
Vidaisol Vivek
Vidaisol Vivek
Ebook134 pages51 minutes

Vidaisol Vivek

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vidaisol Vivek

Read more from Rajeshkumar

Related to Vidaisol Vivek

Related ebooks

Related categories

Reviews for Vidaisol Vivek

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidaisol Vivek - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    முதல் பகல்

    தலைமைத் தபால் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்.

    குட்மார்னிங் ஸார்...

    த.த. அதிகாரி பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை தள்ளி வைத்துவிட்டு, எழுந்து நின்று கை குலுக்கினார்.

    குட்மார்னிங்... மிஸ்டர் கோகுல்நாத்... இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வந்துட்டீங்க போலிருக்கு...

    எஸ்... பதினோரு மணிக்கு கோர்ட்ல ஒரு கேஸ்... அதை அட்டெண்ட் பண்ணியாகணும்... பத்தே முக்கால் மணிக்குள்ளே நம்ம சடங்குகளை முடிச்சுகிட்டா பரவாயில்லை...

    செக்ஷனுக்குப் போகலாமா...?

    ஒரு நிமிஷம்... நான் ஒரு போன் பண்ணிக்கலாமா?

    இதுக்கு பர்மிஷன் கேக்கணுமா...? த.த. அதிகாரி போனை நகர்த்தி வைத்தார். கோகுல்நாத் ரிஸீவரை பிடித்து காதுக்கு ஒட்ட வைத்து - டயலில் எண்களைத் தட்டினார். மறுமுனையில் பெல் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் குரல் கொடுத்தார்.

    ஹலோ...

    ஹலோ அங்கிள்... ரூபலாவின் குரல் உற்சாகமாய் கேட்டது.

    குட்மார்னிங் அங்கிள்...

    குட்மார்னிங்...! விவேக் இருக்காராம்மா...?

    இருக்கார் அங்கிள்... ஆனா...

    ஆனா...?

    அவர் ஒரு முக்கியமான வேலையில் இருக்கார்...

    முக்கியமான வேலையா...?

    ஆமா அங்கிள்... அவரால இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்கு எங்கேயும் வெளியே வர முடியாது... ஒரு வி.ஐ.பி.கிட்டே மாட்டிக்கிட்டார்...

    யாரம்மா அந்த வி.ஐ.பி...? ஏதாவது கேஸா...?

    அந்த வி.ஐ.பி. உங்களுக்குத் தெரிஞ்சவர்தான்... நேற்று ராத்திரிக்கூட அவரை நீங்க தலைக்கு மேல தூக்கி கொஞ்சினப்ப... உங்க முகத்து மேல மூத்திரம் அடிச்சாரே...?

    கோகுல்நாத் சிரித்தார்.

    ஓ...! நீ 'பாரத்'தை சொல்றியாம்மா...?

    அவனே தான்...! உங்க க்ரைம் ப்ராஞ்சின் சுப்ரீம் சூப்பர் ஸ்டார் மிஸ்டர் விவேக் இந்த நிமிஷம் ஒரு யானையா மாறியிருக்கார்...

    யானையா...?

    ஆமா அங்கிள்... அவர் யானையா மாறி முட்டிக்கால் போட்டிருக்கார். பாரத் அவர் மேல் உட்கார்ந்துட்டிருக்கான். ஒன்பதரை மணியிலிருந்து இந்த யானை சவாரி நடந்திட்டிருக்கு... சவாரியை நிறுத்தினா அழ ஆரம்பிச்சுடறான்... பாவம்! யானை சோர்ந்து போய், தள்ளாடிகிட்டு இருக்கு...

    அடப்பாவமே...!

    கோகுல்நாத் சிரிக்க - ரூபலா சொன்னாள்.

    ஒரு நிமிஷம் லைன்ல இருங்க அங்கிள்... அவரைக் கூப்பிட்டு விடறேன்...

    கோகுல்நாத் காத்திருக்க -

    விவேக் ரிஸீவரில் வந்தான்.

    ஹலோ...

    என்ன விவேக்... யானை சவாரி முடிஞ்சதா...?

    அதையேன் கேக்கறீங்க கோகுல்நாத்... போன வாரம் ஒரு நாள் காலையில் பாரத் கிட்ட யானை விளையாட்டு ஆடப் போய் வந்தது வம்பு. என் முதுகுல ஏறிகிட்டான்னா, அவன் சாமான்யத்துல இறங்கறதில்லை... ஹால் பூராவும் விரட்டு விரட்டுன்னு விரட்டறான்... இந்த ஒரு வார காலத்துல... என்னோட முட்டி ரெண்டும் ஒரு சென்டிமீட்டர் தேய்ஞ்சு போச்சு... தினசரி காலையில ஒன்பதரை மணியானாப் போதும்... நான் என்ன வேலை பண்ணிட்டிருந்தாலும் சரி... முதுகு மேல வந்து ஏறிக்கிறான்...முதுகிலிருந்து அவனை கீழே இறக்க ரூபலா முயற்சி பண்றதா தெரிஞ்சாக்கூட போதும்... ஒரே ரகளைதான்...! இந்த யானை சவாரி பரவாயில்லை கோகுல்நாத்... ரெண்டு நாளா இந்த பாரத் இன்னொரு அழிச்சாட்டியமும் பண்ணிட்டு வர்றான்.

    என்ன...?

    என்ன...?

    என் கழுத்துக்கு மணி கட்டணுமாம்... அப்பத்தான் யானை அசைஞ்சு போறப்ப சத்தம் கேட்குமாம்...

    கோகுல்நாத் வாய்விட்டு சிரித்தார்.

    சரியா போச்சு...

    வர... வர... ரொம்ப படுத்தறான்... அதுவும் என்னைப் பார்த்தா அவனுக்கு ரொம்ப இளப்பம்... இன்னும் ஒரு வருஷம் போனா... ஊட்டியில் இருக்கிற ஏதாவது ஒரு ஆஸ்ரமத்துக்கு கொண்டு போய் சேர்த்துட வேண்டியதுதான். இவன் இங்கே இருந்தான்... என்னோட ரெண்டு முட்டியும் காணாமல் போயிடும்...

    கோகுல்நாத் இன்னமும் சிரிக்க - விவேக் கேட்டான்.

    இப்ப எங்கிருந்து பேசிட்டிருக்கீங்க கோகுல்நாத்...?

    ஹெட் போஸ்ட் ஆபீஸிலிருந்து...

    ஹெட் போஸ்ட் ஆபீஸா...?

    எஸ்... கடந்த மூணு நாளா... எனக்கு அங்கே தான் ட்யூட்டி. போஸ்ட் பார்சல்களில் போதை மருந்து கடத்தப்படறதாய்... டிபார்ட்மெண்டுக்கு தகவல் வந்தது. பார்சல்கள் டெலிவரிக்கு போறதுக்கு முந்தி - போலீஸ் நாய்களை விட்டு போதை மருந்து இருக்கக்கூடிய பார்சல்களை கண்டுபிடிக்க - முயற்சி பண்ணிட்டு இருக்கேன்...

    ஏதாவது அகப்பட்டதா...?

    இதுவரைக்கும் இல்லை...

    ட்ரெய்ன்ட் போலீஸ் டாக்ஸ் தானே...?

    ஆமா... பம்பாயிலிருந்து இதுக்காகவே வரவழைக்கப்பட்ட நாய்கள்... வெல் ட்ரெய்ன்ட். போதை மருந்து இருக்கக் கூடிய பார்சலை ஸ்மெல் பண்ணியதும் லேசாய் உறுமி அதற்குப் பக்கத்திலேயே படுத்துக் கொள்ளும்...

    இந்தக் கேஸ்ல நான் இன்வால்வ் ஆகணுமா...?

    நோ விவேக்... நான் அதுக்காக போன் பண்ணலை?

    தென்...?

    இன்னைக்கு கோர்ட்ல பதினோரு மணிக்கு ஜெயச்சந்திர ராஜா மர்டர் கேஸ் விசாரணைக்கு வருது... பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் மோகனரங்கம் என்னை கோர்ட் 'பார்'க்கு வரச் சொல்லியிருக்கார். அந்த பி.பி. ஒரு மாதிரியான ஆள். எனக்கும் அவர்க்கும் ஆரம்பத்திலிருந்தே டெர்ம்ஸ் சரியில்லை...

    விவேக் குறுக்கிட்டு கேட்டான்.

    நானும் உங்ககூட கோர்ட்டுக்கு வரணும், அவ்வளவுதானே?

    ஆமா...

    வர்றேன். எத்தனை மணிக்கு...?

    பதினோரு மணிக்கு கோர்ட்ல இருக்கணும்.

    "நான் பத்து மணிக்கு ஹெட். பி.ஓ. வந்துடறேன்... ரெண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1