Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oruvar Manathil Oruvaradi
Oruvar Manathil Oruvaradi
Oruvar Manathil Oruvaradi
Ebook176 pages42 minutes

Oruvar Manathil Oruvaradi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465636
Oruvar Manathil Oruvaradi

Read more from R.Sumathi

Related authors

Related to Oruvar Manathil Oruvaradi

Related ebooks

Reviews for Oruvar Manathil Oruvaradi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oruvar Manathil Oruvaradi - R.Sumathi

    17

    1

    கல்லூரியின் கடைசி வருட படிப்பு முடிந்து கடைசி தேர்வும் முடிந்துவிட்டது. அனைவரும் ஹாஸ்டலைக் காலி செய்து கொண்டிருந்தனர்.

    பிரிவுத்துயரம் மனதை அழுத்தினாலும் வீட்டிற்கு செல்லப்போகின்றோம் என்ற உற்சாகம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கவே செய்தது- காயத்ரியைத் தவிர.

    ஜன்னலோரம் நின்றபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் உடமைகளை அடுக்கி பேகில் திணித்துக் கொண்டிருந்த சுகுணா திரும்பி காயத்ரியைப் பார்த்தாள். அருகே வந்தாள்.

    காயத்ரி... என்ன... ஊருக்குப் போக மனசில்லையா?

    காயத்ரி திரும்பினாள். சிரித்தபடி பெருமூச்சு விட்டாள்.

    ப்ச்! ஊருக்குப் போகவே பிடிக்கலை. ஏன்டா கல்லூரிப் படிப்பு முடிஞ்சதுன்னு இருக்கு.

    உனக்குத்தான் இந்த காலேஜ் மேல எவ்வளவு பிடிப்பு! காலேஜை விட்டுப் பிரிய உனக்கு மனசே இல்லை இல்லையா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. அடுத்த வருஷம் எம்.எஸ்.ஸி - யை இதே காலேஜ்லதானே தொடரப் போறேன்.

    அப்பறமென்ன? ஊர்ல போய் இந்த லீவை ஜாலியா அனுபவிக்க வேண்டியதுதானே?

    பிரபு இல்லாத இடத்துல என்னத்தை அனுபவிக்க முடியும்? - சலிப்புடன் காயத்ரி சொல்லவும் சுகுணா இடுப்பில் இரு கைகளையும் பதித்து ஓ... நீ அப்படி வர்றியா? பிரபுவைப் பார்க்காம உன்னால ஒரு நாள் கூட இருக்க முடியாதா? என்று கேட்டாள்.

    ரொம்ப கஷ்டம்! - தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள் காயத்ரி.

    அதுக்குத்தான் இந்த மாதிரி காதல் கத்தரிக்காய்னு எதிலேயும் மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னப்பார். சுதந்திரப் பறவை. - சுகுணா பெருமையாக தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

    இப்படி சொன்னவங்க எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். கடைசியிலே, ‘விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே’ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க.

    விழுந்துட்டா அப்பறம் உன்னை மாதிரிதான் புலம்ணும். பிரபு உன் ஊர்க்காரன் தானே? அப்பறம் ஏன் புலம்பறே?

    ஊர்க்காரன் மட்டுமில்லை. எங்க வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளிதான் அவன் வீடு. ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறது எங்க ஊர்ல யாருக்கும் தெரியாது.

    அடிப்பாவி...! அப்படின்னா உங்க ஆட்டம் பாட்டமெல்லாம் இங்க சிட்டியிலதானா? ‘ஆத்தங்கரை மரமே அரசமர நிழலே’ன்னு கிராமத்துல ஆடிப்பாட மாட்டீங்களா?

    ஆடிப்பாடறதா? போடி! அது என்ன சென்னைன்று நினைச்சியா? பீச் - பார்க்கு - ஹோட்டல்னு சுத்த? கிராமம்; கட்டுப் பெட்டியான கிராமம். அங்கெல்லாம் நினைச்ச மாதிரி சுத்த முடியாது. காதலிக்க ஏற்ற இடம் சென்னைதான்!

    ஆமா! இங்கதான் யார், யார்கூட சேர்ந்து எக்கேடு கெட்டாலும் கேட்க ஆளில்லை. பேசாம ஒண்ணு பண்ணு. இந்த லீவுல சென்னையிலேயே ஏதாவது கம்யூட்டர் கோர்ஸ் பண்ணு. ஊருக்குப் போக வேண்டாம். பிரபுகூட ஜாலியா சுத்தலாம்.

    நல்ல ஐடியாதான். ஆனா எங்க வீட்ல ஒத்துக்கணுமே! லீவு விட்டதும் உடனே வீட்டுக்கு வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.

    அப்போ இன்னைக்கே கிளம்பு.

    இன்னைக்கு முடியாது. இன்னைக்கு சாயந்தரம் பிரபுவை நான் சந்திச்சே ஆகணும். இல்லாட்டி என் தலை வெடிச்சிடும். நாளைக்குத்தான் நான் என் மூட்டை முடிச்சையெல்லாம் கட்டணும்.

    நாளைக்குக் கண்டிப்பா கிளம்பிடு. இன்னைக்கே முக்கால்வாசிப்பேர் கிளம்பிப் போய்ட்டாங்க. மத்தவங்களும் அநேகமா நாளைக்குக் கிளம்பிடுவாங்க. நீ மட்டும் தனியாயிருக்காதே.

    சரி சரி... நீ கிளம்பு. சும்மா பாட்டி மாதிரி தொண தொணக்காதே. அடுத்த வருஷம் எம்.எஸ்.ஸி க்ளாஸ்ல பார்க்கலாம்.

    என்னது... எம்.எஸ்.ஸியா? வேற வேலை இல்லை? இந்த வருஷத்தை முடிக்கவே படாதபாடு பட்டேன். ரிசல்ட் எப்படி வரும்னே தெரியலை. பாஸ் பண்ணினாத்தானே எம்.எஸ்.ஸி கனவு? படிப்பு... பரீட்சை... இந்த தலைவலி போதும். கல்யாணம் பண்ணிக்கிட்டு அழகா குடும்பம் நடத்தப்போறேன்.

    அடிப்பாவி! - காயத்ரி சிரிக்க, சுகுணா தன் துணிமணிகளை அடுக்குவதில் முனைந்தாள்.

    சொல்லி முடியாத கவிதையைப் போல்

    துள்ளி வரும் அலைகள்!

    தன் மடியில்-

    பள்ளி கொள்ளவரும் அலைகளை

    தள்ளி வைக்கும் கரை-ஆனால்

    அது கொண்டு வந்த சிப்பிகளை மட்டும்

    அள்ளிக் கொள்ளும் தந்திர குணம்.

    அதை -

    எள்ளி நகையாடும் அலையின் அடுத்த துள்ளல்.

    அள்ளி முடியாத அழகியின் கூந்தலைப் போல் நெளிவு.

    நல்லி பட்டைப் போல் ஒரு பாரம்பரிய ஜொலிப்பு.

    வில்லியாய் மாறி அது விளையாடியதை மறந்து

    பிள்ளையாய் அதன் மடியில் மனிதர்கள்! ஆடினர். ஓடினர். காற்று வாங்கினர். கதை பேசினர். உழைத்தனர். பிழைத்தனர். கடற்கரை பரபரப்பாயிருந்தது. மாலைநேரக் களிப்பில் மறைந்து போனது வேலை நேர அலுப்பு. சோலை யோர பூக்களை சொரிந்து விட்டுப் போனதைப் போல் மழலைகள் மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தனர். பாலைப் போல் பொங்கிய நீரில் காலை நனைத்திருந்தனர் காதலர்கள். அவர்களில் ஒருவராக காயத்ரியும் - பிரபுவும்.

    காலை நனைத்தபடி கை கோர்த்த நிலையில் சிறிது நேரம் அலையோடு நடந்துவிட்டுக் கரையேறினர்.

    உயர்த்தியிருந்த உடையை இறக்கி விட்டுக் கொண்டு ஓரிடம் பார்த்து அமர்ந்தனர்.

    காயத்ரி அவனுடைய முகத்தை ஏக்கமாகப் பார்த்தாள். அவள் தொடங்கிய உரையாடலில் ஆதங்கம் அடங்கியிருந்தது.

    பிரபு, நாளைக்கு நான் ஊருக்குப் போறேன்.

    பிரபு ‘ம்...’ என்றபடி அமைதியாக மணலைக் கிளறிக் கொண்டிருந்தான்.

    என்ன... நான் ஊருக்குப் போறேன்னு சொல்றேன். அமைதியாயிருக்கே? உனக்கு வருத்தமே இல்லையா?

    பிரபு சிரித்தான். வருத்தமா? நீ என்ன பரலோகத்துக்கா போறே - வருத்தப்பட்டு ‘போகுதே... போகுதே என் பைங்கிளி... வானிலே’ன்னு பாட? ஊருக்குத்தானே போறே?

    ஒரு மாசம் நீ என்னைப் பார்க்க முடியாதே. இப்படி பார்க், பீச்சுன்னு சுத்த முடியாதே.

    அதனாலென்ன? நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன்.

    எங்க பரலோகத்துக்கா?

    அதுக்குள்ள எதுக்கு அங்க போகணும்? இன்னும் ஒரு கல்யாணம் கூட பண்ணிக்கலை.

    அடப்பாவி... அப்ப பல கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா வெல்லாம் இருக்கா?

    ஏன் இருக்கக் கூடாது?

    அப்போ நீ சாமியாராகப் போறியா? கடைசியில மாமியார் வீட்டுக்குத் தான் போகப் போறே!

    ஆமா! மாமியார் வீட்டுக்கு போறதைப் பத்தித்தான் யோசிக்கறேன். நீ முன்னால ஊருக்குப் போ. நான் லீவு போட்டுட்டு பின்னாலேயே உன் வீட்டுக்கு வர்றேன்.

    எதுக்கு?

    எதுக்கா? உன்னைப் பெண் கேட்கப் போறேன். இந்த லீவிலேயே நம்ம கல்யாணம் நடக்கப் போகுது! உங்க அப்பா சம்மதிப்பாங்க தானே?

    அவங்க சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன்.

    "அடிப்பாவி! என்னை உருகி உருகிக் காதலிக்கறதா சொன்ன தெல்லாம் பொய்யா? ‘நீயின்றி நானில்லை’ன்னு வசனம் பேசியதெல்லாம் டுபாக்கூறா? உனக்காகவே வாழ்கிறேன்னு சத்தியம்

    Enjoying the preview?
    Page 1 of 1