Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru abathu kan simittugirathu
Oru abathu kan simittugirathu
Oru abathu kan simittugirathu
Ebook89 pages45 minutes

Oru abathu kan simittugirathu

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403494
Oru abathu kan simittugirathu

Read more from Rajesh Kumar

Related to Oru abathu kan simittugirathu

Related ebooks

Related categories

Reviews for Oru abathu kan simittugirathu

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru abathu kan simittugirathu - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு ஆபத்து கண் சிமிட்டுகிறது!

    Oru Abathu Kan Simittugirathu

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்ட மீனம்பாக்கம் ஏர்போர்ட் லெளஞ்சில் பிளைட் நெம்பர் 566-ல் புறப்பட்டுப் போவதற்காக அந்த நாற்பத்தியோரு சொச்ச பிரயாணிகள் பரவியிருந்தார்கள். எல்லாருமே பணக்கார ஜாதி என்று முகங்களைப் பார்க்கிற போதே தெரிந்தது. உடன் பயணப்படக் காத்திருந்த மனைவிமார்கள் கழுத்திலும், மூக்கிலும் வைரங்களை பயிர் செய்து மின்னினார்கள். கான்வென்டில் படிக்கும் ஏழு வயது எட்டு வயது குழந்தைகள் ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை கண்களால் மேய்ந்தபடி கையிலிருந்த 'ஒண் டர்பால்' சாக்லேட்டை தங்கள் சொத்தைப் பற்களால் அரைத்துக் கொண்டிருந்தார்கள். பலாப்பழத் துண்டை ஒருநாள் முழுவதும் தேனில் ஊறப்போட்ட மாதிரியான குரலில் ஏர்போர்ட் அனௌன்சிங் கேர்ள் ஏதேதோ பிளைட் நெம்பர்களைச் சொல்லி லெளஞ்சில் காத்திருந்த மற்ற பிரயாணிகளை பம்பாய்க்கும் கல்கத்தாவுக்கும் துரத்திக் கொண்டிருந்தாள்.

    நமக்கு 566 பிளைட்தான் முக்கியம்.

    இந்த நாவல் அதில்தான் நடக்கப் போகிறது.

    அந்த நாற்பத்தியோரு பயணிகளில் யாருமே வி.ஐ.பி. கிடையாது. அவரவர் வசிக்கும் ஏரியாக்களில் மட்டுமே பிரபலமானவர்கள். எனவே அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவர்களில் சிலபேரைப் பற்றியாவது இங்கே சொல்ல வேண்டும்.

    அதோ அந்த பப்பாளிப்பழ நிற பாலிமர் நாற்காலியில் உட்கார்ந்து ஹிண்டுவின் ஷேர் மார்க்கெட் பக்கத்தை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருக்கிறானே அவன் தியானேஸ்வரன். இருபத்தைந்து வயதில் அபார வியாபார ஞானம். பிண்ணாக்கிலிருந்து பெட்ரோ கெமிகல்ஸ் வரை எல்லாமே கமிஷன் அடிப்படையில் வியாபாரம் செய்பவன். மயிலாப்பூரிலிருந்து மந்தவெளிப் பக்கம் போய் விட்டு வருகிற பேர்வழி மாதிரி அடிக்கடி மெட்ராஸிலிருந்து டெல்லி போவான், வருவான். வருகிற ஆகஸ்டு மாதம் இந்த தியானேஸ்வரனுக்கு ஆப்ட்ஸ்பரியில் கல்யாணம். ஏராளமான கலர் கனவுகள்ளோடு காத்திருக்கும் தியானேஸ்வரன் இந்த பிளைட் நெம்பர் 566-ல் பயணப்படுவது மகா தப்பு... அவன் இன்றைய சாயந்தர நாலு மணிக்குள் சாகப்போகிற ஜீவன்...

    அடப்பாவமே! எப்படி என்று கேட்கிறீர்களா?

    ஸாரி... சொல்வதற்கில்லை.

    சொல்லிவிட்டால் புத்தகத்தை மூடி வைத்து விட்டு டி.வி. ப்ரோக்ராம் பார்க்கப் போய் விடுவீர்கள்.

    டி.வி. இல்லாத இளைஞர்கள் மொட்டை மாடிக்குப் போய் எதிர்வீட்டுப் பெண் இந்நேரத்துக்கு என்ன பண்ணிக் கொண்டிருப்பாள் என்று பார்க்கப் போய் விடுவார்கள். பெண்கள் புத்தகத்தை கவிழ்த்து வைத்துவிட்டு எவர்சில்வர் பாத்திரக்காரனுக்கு கணவருடைய எந்த பேன்ட், ஷர்ட்டைப் போடலாமென்று பீரோவை அளைய ஆரம்பித்து விடுவார்கள்.

    ஆகவே –

    தியானேஸ்வரன் எப்படி சாகப் போகிறான் என்று நான் சொல்லப் போவதில்லை.

    இனி அடுத்த நபர்க்கு போவோம்.

    தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை தன்னுடைய வெளிர் நீலநிறக் கோட்டில் தேய்த்து பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறாரே அவர் திருமலைச்சாமி. ஒரு மில் அதிபர். கவர்மெண்ட்டை ஏமாற்றாமல் பிளாக்கில் பணம் சேர்க்காமல் கணக்கை வெள்ளையாகவே காண்பித்து ஒழுங்காய் வருமான வரியை கட்டி வருபவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல்வாதிகள்ளையும், சினிமா நடிகைகளையும் முகட்டு மேனிக்கு திட்டுபவர். கண் முன்னே அநியாயம் நடந்தால் தட்டி கேட்கிற வர்க்கம். வருஷத்துக்கு ஒரு தடவை டெல்லியில் நடக்கும் 'டெக்னிக்கல் பேர்’க்கு தவறாமல் போய் வந்து ஜப்பான்காரனின் அறிவை மாய்ந்து மாய்ந்து பாராட்டுபவர். இந்த பிளைட் 566-ல் இவருக்கும் ஒரு சிக்கல் வரப்போகிறது.

    மூன்றாவதாய் -

    தமயந்தி ராஜாராமன் தம்பதிகள்.

    ரொம்பவும் அன்னியோன்யமான தம்பதிகள். கல்யாணமாகி ஆறு வருஷமாகியும் மணிவயிறு திறக்காததால்,

    Enjoying the preview?
    Page 1 of 1