Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Snegithikkaga...
Oru Snegithikkaga...
Oru Snegithikkaga...
Ebook158 pages58 minutes

Oru Snegithikkaga...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது எனது முதல் முயற்சி. உத்வேகம் என்னவோ சிறந்த இலக்கியம் படைத்திருக்கிற அத்தனை எழுத்தாளர்களையும்விட வித்யாசமான ஏதோ ஒன்றை தொட்டுவிட வேண்டுமென்பது தான். எத்தனை பேராசை பார்த்தீர்களா? முதல்படியில் நிற்பதற்கே தட்டுத்தடுமாறிக் கொண்டு, விரிந்துகிடக்கும் பிரபஞ்சத்தின் உச்சத்தை எட்டிப்பிடிக்கத் துடிக்கிற ஆசை. எனினும் எனது துடிப்புகள் என்றுமே வயோதிகமாகாதவை.

ஜாதி மத வெறி, மடமை கொண்ட சாஸ்திர சம்பிரதாயங்கள், ஒவ்வாத நம்பிக்கைகள், பொய்முகம் போர்த்த வைக்கிற சமூகச்சூழல், பாசத்தை பணம் விழுங்குகிற கொடுமை, சமூகத்தின் இருசரிபாதியான ஆண்பெண்ணை நட்போடு பழகி கருத்துப் பரிமாறிக் கொள்ளக்கூட விடாமல் இருதுருவமாய் நிறுத்தி வைத்திருக்கிற நிலை, கலாச்சார கலப்பட நிலை, தான் தோண்டுகிற குழி தன்னை விழுக்காட்டுவதற்காகத் தான் என்பதனைக் கூட உணரமுடியாத அளவிற்கு கல்வியில் பெண்களின் பின்தங்கிய நிலை, அதனால் பொருளாதார சுதந்திரம் இன்றி பிறரையே சார்ந்திருக்கவேண்டிய கட்டாயம், கற்பு என்கிற பதத்திற்கு அபத்தமாய் கற்பிக்கப்பட்டு வரும் அனர்த்தங்கள். தாய்மார்களை ஏமாற்றுகிற மூன்றாந்தர சென்டிமென்ட்டின் தயவில் பார்ப்பவர் மதியை மறைத்து ஏராளம் சம்பாதிக்கிற சினிமா சகுனி களின் ஆதிக்கம், லஞ்ச லாவண்யங்கள், மனிதாபி மானத்தைக் கழுவேற்றும் ரவுடியிஸம், முழுக்கமுழுக்க வியாபாரமாகிக் கொண்டிருக்கிற அரசியல் இப்படி எத்தனையோ தாக்கங்கள் நெஞ்சை அறுத்துக் கொண்டு தானிருக்கின்றன.

எனினும் என் பார்வையில் பிரச்னைகள் மனது சம்பந்தப்பட்டவையாகவும், வயிறு சம்பந்தப்பட்டவையாகவுமே தெரிகின்றன. மனது சம்பந்தப்பட்ட புழுக்கங்களும், ஏக்கங்களும் நிவர்த்திக்கப்படுகிற பட்சத்தில் மனுஷாள் நிஜத்துவம் பெறக்கூடும். நிஜம் ஆட்சி பெறுகையில் ஏமாற்றுவித்தை இடம் தெரியாமல் போயே தீர வேண்டும். அதுவே பசிக்கான தீர்வாயும் இருக்க முடியும்.

அதனாலேயே அனைத்திற்கும் ஆதாரமான மனது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என்னை வெகுவாய் பாதிக்கின்றன. அதன் விளைவாய் விடாமல் நெஞ்சை பிசையும் விசயங்களை கதையாய் கொணர முயற்சிக்கிறேன். அதேசமயம் அவைகள் பரவலாக சென்றடையவேண்டும் என்பதிலும் கூடிய மட்டும் கவனமாயிருக்கிறேன்.

நமக்காகத்தான் கலாச்சாரம் ஏற்படுத்தப்பட்டதே தவிர, கலாச்சாரத்திற்காக நாமல்ல. இயற்கை நியதிக்கு இடறாத கலாச்சார புதுப்பிப்பும், சமூகத்தேவையான சுயகட்டுப்பாடும் வித்தாகிற போது மானுடம் செழிக்காமல் போகாது.

சிநேகத்துடன், டி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003496
Oru Snegithikkaga...

Read more from Kulashekar T

Related to Oru Snegithikkaga...

Related ebooks

Reviews for Oru Snegithikkaga...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Snegithikkaga... - Kulashekar T

    http://www.pustaka.co.in

    ஒரு சிநேகிதிக்காக...

    Oru Snegithikkaga…

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகிர்ந்துரை

    ஒரு சிநேகிதிக்காக

    நினைவில் நின்றவை...

    நெஞ்சு

    தாயுமானவள்

    மீட்சி

    ப்ரேமை

    செத்தால்... பிழைப்பான்?

    தீவுகள்

    சுட்டால் தானே...

    பப்பாளி மரம்

    தவிக்குது தயங்குது

    மனசு ஒரு தினுசு

    ஏன் இந்தக் கலக்கம்?

    தடுமாறும் நெஞ்சம்

    ஊமை வேதனை

    முதல் அரும்பு

    கானல் நீர்

    சுமதி

    பகிர்ந்துரை

    இது எனது முதல் முயற்சி. உத்வேகம் என்னவோ சிறந்த இலக்கியம் படைத்திருக்கிற அத்தனை எழுத்தாளர்களையும்விட வித்யாசமான ஏதோ ஒன்றை தொட்டுவிட வேண்டுமென்பது தான். எத்தனை பேராசை பார்த்தீர்களா? முதல்படியில் நிற்பதற்கே தட்டுத்தடுமாறிக் கொண்டு, விரிந்துகிடக்கும் பிரபஞ்சத்தின் உச்சத்தை எட்டிப்பிடிக்கத் துடிக்கிற ஆசை. எனினும் எனது துடிப்புகள் என்றுமே வயோதிகமாகாதவை.

    ஜாதி மத வெறி, மடமை கொண்ட சாஸ்திர சம்பிரதாயங்கள், ஒவ்வாத நம்பிக்கைகள், பொய்முகம் போர்த்த வைக்கிற சமூகச்சூழல், பாசத்தை பணம் விழுங்குகிற கொடுமை, சமூகத்தின் இருசரிபாதியான ஆண்பெண்ணை நட்போடு பழகி கருத்துப் பரிமாறிக் கொள்ளக்கூட விடாமல் இருதுருவமாய் நிறுத்தி வைத்திருக்கிற நிலை, கலாச்சார கலப்பட நிலை, தான் தோண்டுகிற குழி தன்னை விழுக்காட்டுவதற்காகத் தான் என்பதனைக் கூட உணரமுடியாத அளவிற்கு கல்வியில் பெண்களின் பின்தங்கிய நிலை, அதனால் பொருளாதார சுதந்திரம் இன்றி பிறரையே சார்ந்திருக்கவேண்டிய கட்டாயம், கற்பு என்கிற பதத்திற்கு அபத்தமாய் கற்பிக்கப்பட்டு வரும் அனர்த்தங்கள். தாய்மார்களை ஏமாற்றுகிற மூன்றாந்தர சென்டிமென்ட்டின் தயவில் பார்ப்பவர் மதியை மறைத்து ஏராளம் சம்பாதிக்கிற சினிமா சகுனி களின் ஆதிக்கம், லஞ்ச லாவண்யங்கள், மனிதாபி மானத்தைக் கழுவேற்றும் ரவுடியிஸம், முழுக்கமுழுக்க வியாபாரமாகிக் கொண்டிருக்கிற அரசியல் இப்படி எத்தனையோ தாக்கங்கள் நெஞ்சை அறுத்துக் கொண்டு தானிருக்கின்றன.

    எனினும் என் பார்வையில் பிரச்னைகள் மனது சம்பந்தப்பட்டவையாகவும், வயிறு சம்பந்தப்பட்டவையாகவுமே தெரிகின்றன. மனது சம்பந்தப்பட்ட புழுக்கங்களும், ஏக்கங்களும் நிவர்த்திக்கப்படுகிற பட்சத்தில் மனுஷாள் நிஜத்துவம் பெறக்கூடும். நிஜம் ஆட்சி பெறுகையில் ஏமாற்றுவித்தை இடம் தெரியாமல் போயே தீர வேண்டும். அதுவே பசிக்கான தீர்வாயும் இருக்க முடியும்.

    அதனாலேயே அனைத்திற்கும் ஆதாரமான மனது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என்னை வெகுவாய் பாதிக்கின்றன. அதன் விளைவாய் விடாமல் நெஞ்சை பிசையும் விசயங்களை கதையாய் கொணர முயற்சிக்கிறேன். அதேசமயம் அவைகள் பரவலாக சென்றடையவேண்டும் என்பதிலும் கூடிய மட்டும் கவனமாயிருக்கிறேன்.

    நமக்காகத்தான் கலாச்சாரம் ஏற்படுத்தப்பட்டதே தவிர, கலாச்சாரத்திற்காக நாமல்ல. இயற்கை நியதிக்கு இடறாத கலாச்சார புதுப்பிப்பும், சமூகத்தேவையான சுயகட்டுப்பாடும் வித்தாகிற போது மானுடம் செழிக்காமல் போகாது.

    இத்தொகுப்பு பற்றிய உங்களது தீர்மானங்களை அவசியம் எனக்கு எழுதுங்கள். அது என்னை பண்படுத்திக் கொள்ள மிகவும் உதவியாய் இருக்கும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    சிநேகத்துடன்,

    டி. குலசேகர்

    ஒரு சிநேகிதிக்காக

    நானும் பூமாவும் பேசுவதை நிறுத்தி ஆறு மாதமாகி விட்டது. எதற்காக பேசுவதில்லை? காரணமே இல்லை என்பது தான் காரணம். வேறு ஒன்றுமில்லை. 'ஒன்றுமில்லை' என்பதற்குள்தான் எத்தனை அர்த்தங்கள்! அது பற்றிச் சொல்வதற்கு முன்னால், பூமா பற்றி...

    என் அத்தை பெண். அப்படிச் சொல்வதை விட, என் சிநேகிதி என்று சொல்வதில் தான் சந்தோஷம். சலனமின்மை, கலகலப்புக் கலந்த சுவாரஸ்யமான இனிய குழந்தை அவள். கல்லூரியில் படிக்கிறாள். எதையும் குறிப்பறிந்து செய்வாள், குளிக்கப் போகிறேன். என்றால், உடனே தண்ணீர் அடித்துக் கொடுத்து விடுவாள். துணிகளைத் துவைத்து இஸ்திரி போட்டு விடுவாள். சாப்பாட்டு விசயத்தில்கூட, அங்கு வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாகவே உண்ண வேண்டி வரும். எல்லாம் அவளுக்காக. கலப்படமில்லாத பாசத்திற்காக.

    எனக்கு ஒரு டெக்ஸ்டைல் இன்டஸ்ட்ரியில் வேலை. என் சொந்த கிராமம் நூறு மைல்களுக்கு அப்பால். திண்டுக்கல் வழியாகச் செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் தான் பூமா இருக்கிறாள். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கிராமம் செல்லும்போது அத்தை வீடு நிச்சயம். ஒரு நாள் தான் இருப்பேன். எனினும் அந்த ஒரு நாள் நிகழ்வுகள் என்னுள் முற்றுப்புள்ளியில்லாத வரியாய் நீளும். அதையெல்லாம் நினைக்க நினைக்க வேதனை கம்முகிறது. அந்த நாட்கள் மீண்டும் வருமா?

    புற அழகு அகஅழகு என்றும், அக அழகை உணர்வது தான் ஆழமான ரசனையின் உச்சம் என்றும் எப்போதோ படித்த ஞாபகம். அதை பூமாவின் ஒவ்வொரு செயலிலும் உணர்ந்திருக்கிறேன்.

    அன்பிற்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் அன்பை இழக்கக் கூடாது என்று சொன்னது யார்? யார் சொன்னால் என்ன? சொன்னவன் நிச்சயம் என்னைப்போல். ஒரு நிகரற்ற சிநேகிதத்தை இழக்க நேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த மாதிரி தீர்க்க தரிசன எண்ணங்கள் தோன்றியிருக்க முடியும்.

    எனக்கு நண்பர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் தான். எனக்குள் ஆதாரமாய் இயங்கும் சுருதியுடன் ஒத்துப் போகிறவர்களோடுதான் என்னால் நெருங்கிப் பழக முடியும். என் சுபாவம் அப்படி. அந்தச் சிலரில் பூமா விசேஷமானவள் . ஏன்? என்னுள் இருக்கிற சில சுவாரஸ்யமான குறை நிறை அவளுடன் ஒத்துப்போவது காரணமாயிருக்கலாம்.

    மேலும் பூமா சராசரிப் பெண்கள் ரகத்தைச் சேர்ந்தவளில்லை. நிமிர்ந்த நடை, தெளிவான பார்வையோடு கலக்கமில்லாமல் பேசக்கூடியவள். பொய்முகம் இல்லாதவள். அவள் மனப்பிராந்தியம் மிக ஆரோக்யமானது.

    அத்தை வீட்டில் எப்போதும் ராஜஉபசரிப்பு தான். 'பூமா இருக்கிறாளே'! வார்த்தைக்கு வார்த்தை கிண்டல் கேலிப் பேச்சுதான். நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பாள். பின் ஏன் பேசுவதில்லை?

    அந்த முறை அத்தை வீட்டுக்குப் போயிருந்த போது., பூமா கல்லூரி சென்றிருந்தாள். அத்தையும் கைக்குழந்தை நித்யா மட்டும் இருந்தார்கள்.

    பூமா பிறந்து பதினாறு வருடத்திற்குப் பிறகு அத்தை தனக்கு நெய்ப்பந்தம் பிடிக்க ஒரு ஆண் குழந்தை வேண்டாமா? என்கிற ரீதியில் இயங்கியதன் விளைவு... நித்யா? பூமா வருகைக்காக மாலை ஐந்து மணி வரை காத்திருந்தேன் பூமா. வரவில்லை...

    அத்தை பூமா இன்னும் காணுமே?

    ஆறுமணிக்குத் தான் வருவாள்

    ஏன்?

    டைப்பிங் கத்துக்கறாளே...

    காலேஜ் முடிஞ்சதும், அப்படியே இன்ஸ்ட்யூட் போயிட்டுதான் வருவாளா?

    அவசரத்துடன் கேட்டேன்.

    ம் என்று தலையாட்டினாள் அத்தை.

    அப்படியானால் பூமா வந்ததும் சொல்லிவிடுங்கள். நான் கிளம்புகிறேன்.

    அத்தை ஆட்சேபமாய் பார்த்தாள்.

    ஆறு மணி வரை இருந்து பார்த்து விட்டுத்தான் போயேன். நீ வந்து பார்க்காமல் போகிறாய் என்று தெரிந்தால் பூமா வருத்தப்படுவாள்?

    என் அவசரம் அத்தைக்குப் புரியாது.

    தாமதமாகிறது அத்தை.. நாளை ஊரில் நண்பனின் திருமணம் என்று சொல்லிக் கொண்டே அவசர அவசரமாய் வெளியேறினேன்.

    அடுத்த முறை வீடு சென்ற போது பூமா என்னுடன் பேசவில்லை.

    ஏன் பேசாமல் இருக்கிறாள்? போன முறை வந்தபோது அவளை பார்க்காமல் சென்றதற்காகவா? இதற்காகவா இப்படி கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்கிறாள். பார்த்ததும் கண்களில் மின்மினிப்பூச்சி மின்ன ஓடி வருகிற பூமாவா இப்படி? கிரகித்துக் கொள்ள சிரமமாயிருந்தது. உணர்வுகள் வெகுவாய் பாதிப்படைந்தது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்க எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருந்தது.

    பார்க்கலாம்; அவனால் எவ்வளவு நேரம்தான் பேசாமல் இருக்க முடிகிறதென்று?... ஆறுமாதமாகி விட்டது. இன்னும் பேசவில்லை. இனி பேசமாட்டாளா?

    அவள்தான் பேசத் தயங்குகிறாள். நீயாவது பேசக் கூடாதா? பேசத்தான் ஆசை. ஆனால் முடியவில்லையே ஏன்?

    இந்த இடத்தில் என்னைப் பற்றி சில விசயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். எனக்கு நண்பர்கள் எண்ணிக்கையில் கம்மி என்று சொல்லியிருக்கிறேன். எனினும் அவர்கள் ஆத்மார்த்தமானவர்கள். அவர்களிடம் மடுட்மே உரிமையோடு பழகுவேன். அதேசமயம், அவர்களிடம் செலுத்துகிற அன்பைக் காட்டிலும் அதிகமான அன்பை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பேன். மேலும் அவர்களிடம் அற்ப விசயங்களுக்காக சிலசமயங்களில் கோபித்துக் கொள்ள நேரிடும். அந்த நேரங்களில் அவர்கள் தான் முதலில் பேச வேண்டும். இது சின்ன வயதிலேயே என்னுள் விதைக்கப்பட்டு விட்ட சமாச்சாரம். வீட்டில் யாருடனாவது கோபித்துக் கொண்டால் தலை கீழாக நின்றாலும் முதலில் பேச மாட்டேன்.

    இப்படித் தான் ஒருமுறை

    Enjoying the preview?
    Page 1 of 1