Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Cup Raththam
Oru Cup Raththam
Oru Cup Raththam
Ebook104 pages51 minutes

Oru Cup Raththam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Cup Raththam

Read more from Rajeshkumar

Related to Oru Cup Raththam

Related ebooks

Related categories

Reviews for Oru Cup Raththam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Cup Raththam - Rajeshkumar

    17

    1

    காலை நேர மெரீனா.

    மட்டமான கறுப்புத் துணியை நீரில் நனைத்ததுமே சாயம் போவதைப் போல் இருட்டு - சாயம் போய்க் கொண்டிருந்த நேரம், காலை ஆறு. மணி. கடற்கரையோர பேவ்மெண்டில் நிறைய பேர் தொப்பைகளை கரைக்க முயற்சித்து லொங்கு லொங்கென்று ஒடிக் கொண்டிருக்க தொப்பை இல்லாதவர் அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளிச் சரிகை பார்டரில் நீலச் சேலையைக் காய போட்ட சைஸில் கடல் பரப்பு புரண்டு கொண்டிருக்க - தொலைதூர ஹார்பரில் வெளிச்சக் கண்களோடு கப்பல் ஒன்று தெரிந்தது. கிழக்குப் பக்க ஆகாயம் காரட் நிறத்தில் ததும்பிக் கொண்டிருந்த அந்த விநாடியில்-

    உழைப்பாளர் சிலையருகே ஒதுங்கி நின்ற மார்க் த்ரீ அம்பாசிடர் காரினின்றும் அவன் இறங்கினான்.

    ஆறடி இருப்பான் என்று நினைக்கத் தோன்றியது.

    விஜய்காந்த் நிறம்.

    மீசை வளர்ப்பில் ஆர்வம் காட்டியிருந்தான். ஒரு அங்குல அகலத்தில் கிருதாக்களை காதோரங்களில் பயிர் செய்திருந்தான். மீசைக்குக் கீழே தெரிந்த தடிமனான உதடுகளில் - இடைவிடா சிகரெட் பிடிப்பின் காரணமாக கறுப்பு கலந்த ஊதா நிறம் தெரிந்தது. மஞ்சளில் சிவப்பு நிற புள்ளிகள் தெளித்திருந்த சட்டையும், வெள்ளை நிற பேண்ட்டையும் அணிந்து - அமெரிக்கன் கிராப் தலை காற்றில் படபடக்க அவன் காரினின்றும் இறங்கி - மணல் பரப்பில் கால் வைத்த நேரம் - காரின் பின்சீட்டிலிருந்து அந்த அல்சேஷன் ஜன்னல் வழியாய் கீழே குதித்து அவனுக்கு முன்னால் உற்சாகமாய் ஓடியது.

    ஏய் லயன்... கம் ஹியர்...

    அவன் கத்த - நாலுகால் பாய்ச்சலில் - ஓடிக் கொண்டிருந்த லயன் சட்டென்று நின்று காதுகளை உயர்த்திக் கொண்டு அவனை விசுவாசமாய் பார்த்து விட்டு ஒரு சந்தோஷ் எம்பலோடு ஓடி வந்தது. அவனுடைய மார்பின் மேல் தாவுவது போல பாவ்லா செய்துவிட்டு - மறுபடியும் மணலில் ஓட ஆரம்பித்தது.

    அவன் புன்னகையோடு அதைத் - தொடர்ந்தான்.

    இரண்டு நிமிஷ நடை

    கடல் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்த கரையோரமாய் நடந்தான். ஐம்பதடி தூரம் நடந்திருப்பான். பின்பக்கமாய் அந்தக் குரல் கேட்டது.

    குட்மார்னிங் ஸார்...

    அவன் திரும்பினான், கண்களில் சின்ன சந்தோஷம். வா நாகராஜ்... ரெண்டு நாளா நீ வீட்டுப்பக்கம் வரலையே... பாஸ் கூட கேட்டார்...

    சரக்கு கிடைக்காமே வந்து என்ன ஸார் பண்றது...?

    அதுக்காக வராமே இருக்கலாமா...?

    பின்னந்தலையை தன் வலது கை விரல்களால், சொறிந்து கொண்டு சிரித்த நாகராஜுக்கு முப்பது வயது இருக்கலாம். பிண்ணாக்கு நிறம். லேசாய் மாறுகண். ஒழுங்கு தவறி முளைத்த பல்வரிசை, பொய் சொல்லும் சின்னக் கண்கள்.

    நான் ரெண்டு நாள்ல வந்து பார்க்கிறேன் ஸார்...

    சரக்கு வேணும்... நாகராஜ்... கைவசம் ஸ்டாக் இல்லை... பாஸ் எகிற ஆரம்பிச்சுட்டா என்னால சமாளிக்க முடியாது...

    அதுக்குத்தான் ஏற்பாடு பண்ணிட்டிருக்கேன் ஸார்...

    சரி... நீ கிளம்பு:... நாக்ராஜ், என்னோட ஆள் வந்தாச்சு... அவ மனுஷங்களைப் படிக்கிற ஜாதி. உன்னையும் என்னையும் பார்த்தா அவ சந்தேகமா ஏதாவது நினைச்சுடுவா... நீ சாயந்தரமா பாஸோட பங்களா பக்கமா வா...

    சரி ஸார்...

    நாக்ராஜ் நகர்ந்தான்.

    அல்சேஷன் விசுவாசமாய் சுற்றிச் சுற்றி ஓடிவர - அந்தப் பெண் ஹாய் அமர்... என்று சந்தோஷக் கையசைப்போடு அவனை நெருங்கினாள். அக்கம்" பக்கம் பார்த்துவிட்டு - அவனுடைய தலையை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு - கன்னப்பரப்பில் தன் ரப்பர் துண்டு போன்ற உதடுகளை ஒற்றியெடுத்தாள். பதிலுக்கு அவன் அவளுடைய உதடுகளைத் தேட - ‘ச்சீசீய்...’ என்று அவனுடைய் நெஞ்சில் தன்னுடைய கைகளை வைத்துத் தள்ளினாள்.

    யூ. டர்ட்டி அமர்...

    அஜந்தா...! அஞ்சு நிமிஷம் லேட் நீ!... ஏன்? கீழே விழப்போன அமர் கேட்டான்...

    என் லேட்டுக்குக் காரணம் நானில்லை... அமர்... என்னோட லூனா... பீச் ஸ்டேஷன்கிட்டே வர்றப்பவே... ஏகப்பட்ட உதறல்...

    அந்த சனியனை மாத்து...

    அதை சனியன்னு சொல்லாதீங்க அமர்... நீங்களும் நானும் ஒருத்தரையொருத்தர் இப்படி புரிஞ்சுக்க உதவி ! பண்ணினதே அந்த லூனாதான்...

    அதுக்காக அதைக் கட்டிகிட்டு மாரடிக்கப் போறியா...? ஆறுமாசத்துக்கு முன்னாடி உன்னோட லூனா என் காருக்குப் பின்னாடி மோதாமே இருந்தாலும் - நாம் எங்கேயாவது சந்திச்சிருந்திருப்போம்... அஜந்தா...

    அஜந்தா அமரின் வலுவான புஜத்தில் தொங்கியபடி நடந்தாள். க்ரே சல்வார் கம்மீஸில் திண்ணொன்று நிரம்பியிருந்த அஜந்தாவுக்கு ஆரஞ்சின் உள் தோல் நிறம், சின்ன நெற்றி, பெரிய கண்கள், வரைந்த மாதிரியான உதடுகள். திரட்சியான அமுல் வெண்ணைக்கட்டியின் மோவாய்க்கு கீழே - வழிந்து விட்ட மாதிரியான கழுத்துப் பிரதேசம். இன்னும் கொஞ்சம் கீழே போனால் ஜெயராஜுக்கு பிடித்த பிரதான அம்சங்கள். இடை பிராக்கெட் குறி போட்டு வளைந்திருக்க - இடுப்பு அகண்ட காவேரியாய் * தெரிந்தது.

    ஆமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க யார் கூட பேசிட்டிருந்தீங்க...? அஜந்தா அமரின் தோள்பட்டையில் முகம் பதித்து மெல்லிய குரலில் கேட்டாள்.

    ஒரு அழுக்கான ஆசாமி...?

    ஆமா... அவன்தான்...

    "அவன் பேரு தேவராஜ்... லேப்புக்கு வேண்டிய மெட்டீரியல்ஸை சப்ளை பண்றவன்... பஸ்ஸுல போயிட்டிருந்தவன் என்னோட காரைப் பார்த்துட்டு இறங்கி வந்தானாம். என்னோட பாஸுக்கு ரொம்பவும் தெரிஞ்சவன்... அந்த பழக்கத்துல் கடனா என்கிட்டே

    Enjoying the preview?
    Page 1 of 1