Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravukalaal Oru Ulagam
Uravukalaal Oru Ulagam
Uravukalaal Oru Ulagam
Ebook131 pages1 hour

Uravukalaal Oru Ulagam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465896
Uravukalaal Oru Ulagam

Read more from Parimala Rajendran

Related authors

Related to Uravukalaal Oru Ulagam

Related ebooks

Reviews for Uravukalaal Oru Ulagam

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravukalaal Oru Ulagam - Parimala Rajendran

    25

    1

    தோட்டத்தில் பவளமல்லி செடியின் கீழே பட்டுக் கம்பளம் விரித்தாற்போல கிடக்கும் மலர்களை திரட்டி இரண்டு கைகளிலும் அள்ளினாள் நித்யா. வெள்ளை சிகப்புமாக என்ன ஒரு அழகு மென்மையான அந்த மலர்கள். அவள் கைப்பட்டதால் சற்றே துவண்டு வாட, அதை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

    என்ன நித்யா ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிஞ்சா... உன் நேரத்தையெல்லாம் பூவோடும், செடி கொடிகளோடும். பேசியே பொழுதை கழிச்சிடுவியே, உள்ளே வாம்மா செண்பகம் உனக்கு காபி கலந்து வச்சு எவ்வளவு நேரமாகுது பாரு.

    அம்மாவின் இனிமையான குரலின் அழைப்புக்கு உள்ளே வந்தாள்.

    டேபிளின் மீது இருந்த காபி டம்ளரை அவளிடம் கொடுத்த அம்மாவை பார்த்தாள். என்ன ஒரு அழகு. நேர்த்தியாக அவள் புடவை அணிந்திருக்கும் பாங்கு, தலையை மேல்நோக்கி சீவி கூந்தலை தளர பின்னி புருவங்களுக் கிடையே சின்னதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைத்து இதழில் தேங்கியிருக்கும் புன்னகையோடு, எளிமையிலும் அழகுடன் திகழும் அம்மாவை ரசித்தாள்.

    என்னடி புதுசா பார்க்கிற மாதிரி என்னையே பார்க்கிறே.

    எங்கம்மா இந்த வயசிலும் இவ்வளவு அழகாக இருக்காங்களே. வயசு காலத்தில் எவ்வளவு அழகு தேவையாக ஜொலிச்சிருப்பாங்கன்னு நினைச்சு பார்த்தேன்.

    உனக்கு என்னை வம்பிழுக்காட்டி பொழுதே போகாது. மகளை செல்லமாக கடிந்து கொள்ள...

    அங்கு வந்த செண்பகம்...

    தங்கச்சி. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை மத்தியான சமையல் என்னன்னு சொல்லிடு. மீனா, கோழியா, மட்டனா நான் கடைக்கு போய் வாங்கி, கரெக்டா ஒரு மணிக்கு சமைச்சு வச்சுடறேன்.

    சமையல் ஆள் செண்பகம், நித்யாவுக்கு விபரம் தெரிந்து இங்குதான் இருக்கிறாள். அம்மாவை போல, நித்யாவின் மீது அவளுக்கு அன்பு அதிகம்.

    ஆமாம் நித்யா. வாரம் முழுக்க சின்ன டப்பாவிலே தயிர் சாதம் இட்லின்னு எடுத்துட்டு போயி, அணில் மாதிரி கொறிச்சுட்டு வர்றே. நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சதிலிருந்து சரியான சாப்பாடு இல்லை. போக வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற இவ்வளவு சொத்துக்கும் ஒரே வாரிசு நீதான்.

    அம்மா... அதுக்காக படிச்சுட்டு சும்மா இருக்க முடியுமா. படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைச்சுது. சந்தோஷமா போயிட்டு வர்றேன். பொழுதுக்கம் வீட்டிலேயே அடைஞ்சு கிடந்தா போரடிக்கும்மா.

    அப்படியா சரி. அப்ப உனக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சுடலாமா? மகளை சீண்ட...

    அம்மா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எப்பவும் உன்னோடுதான் இருப்பேன்.

    செல்லமாக சிணுங்கியபடி, அம்மாவை பின்புறமாக தோளில் கைபோட்டு கட்டிக் கொள்கிறாள்.

    சரி சரி. அதுக்கு இன்னும் நாள் இருக்கு. அப்ப பார்ப்போம். செண்பகத்துக்கிட்டே என்ன சமைக்கணும்னு சொல்லு. அவளை கடைக்கு அனுப்பறேன்.

    மத்தியானம் எனக்கு சாப்பாடு வேணாம்மா. நான் லஞ்சுக்கு அப்பா வீட்டுக்கு வர்றதாக சொல்லியிருக்கேன். அம்முவுக்கும், இன்னைக்கு ஷட்டிங் இல்லையாம். வீட்டில் தான் இருப்பேன்... பார்த்து நாளாச்சு. அவசியம் வாக்கான்னு போனில் நேத்தே கூப்பிட்டா. போயிட்டு வரேன்மா.

    இவ்வளவு நேரம் இதழ்களில் இருந்த சிரிப்பு மறைந்து அம்மாவின் முகத்தில் ஒரு இறுக்கம் படர்வதை நித்யாவால் உணர முடிந்தது.

    2

    ஸ்கூட்டியை நிறுத்தி, கதவை திறக்கலாம் என இறங்க அதற்குள் அங்கு ஓடிவந்த காவலாளி, கேட்டை திறக்க உள்ளே வந்து விசாலமான அந்த போர்டிகோவில் வண்டியை நிறுத்தினாள்."

    போர்டிகோவில் உட்கார்ந்திருந்த மாதவன், வெல்கம் நித்யா... வாடா செல்லம் எப்படியிருக்கே? அப்பாவின் அழைப்பு மட்டுமல்ல, அவரது கம்பீரமான தோற்றமும் நடிகர் பிரகாஷ்ராஜை நினைவு படுத்தியது.

    ஐம்பது வயதிலும் கம்பீரமாக இளமையோடு காட்சித் தரும் அப்பா, அம்மாவுக்கு சரியான ஜோடிதான். நினைத்தவளாக ஸ்கூட்டி சாவியை கையில் சுழற்றியபடி அப்பாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

    அப்பா. மீன் குழம்பு வாசனை இங்கே வரைக்கும் வருது. தடபுடலாக சமையல் ரெடியாகுது போலிருக்கு.

    பின்னே இல்லையா. என் பிரியமான மக நித்யா சாப்பிட வரேன்னு சொல்லியிருக்கும்போது சமையலும் விசேஷமாகதான் இருக்கும்.

    அம்மு, எங்கேப்பா... உள்ளே இருக்காளா?

    ஓய்வு ஒழிச்சல் இல்லாம ஷூட்டிங், ஷுட்டிங்னு அலையறா. சினிமா பீல்டில் அவளுக்கு நல்ல பேரு. தேடிவரும் வாய்ப்பை வேண்டாம்னு சொல்லவும் மனசில்லை. அவளுக்குப் பிரியமான. தொழில்ங்கிறதாலே ஈடுபாடோடு நடிக்கும்போது, அவளுடைய மதிப்பு கூடிட்டுதான் போகுது. என்னவோ இன்னைக்கு அதிசயமா வீட்லே இருக்கா. சரி வாம்மா உள்ளே போகலாம்.

    பிரம்மாண்டமான அந்த பங்களாவுக்குள் மகளை அழைத்துக் கொண்டு சென்றார் மாதவன்.

    குளித்துவிட்டு கூந்தலை பறக்க விட்டபடி சிகப்பு நிற சுடிதாரில் அப்போதுதான் மலர்ந்த ரோஜா மலரை போல மணம் வீச தன் அருகில் வந்து கழுத்தை அன்போடு கட்டிக் கொள்ளும் தங்கையை பார்க்கிறாள் நித்யா.

    என்ன அம்மு. எப்படியிருக்கே? வரவர உன் அழகு கூடிக்கிட்டே போகுது. திரையுலகின் இளைய கதாநாயகி, அதுவும் சிரிப்பழகி சிந்துஜான்னு பட்ட பெயர் வேறு. ம்... உன்னை என் தங்கச்சின்னு சொல்லிக்க எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா.

    போ அக்கா, நீயும் அப்பா மாதிரி என்னை கேலி பண்றே. மத்தவங்களுக்கு எப்படியோ... ஆனா உனக்கும், அப்பாவுக்கும் நான் எப்போதும் உங்களுக்கு பிரியமான குட்டி அம்முதான்.

    சரி சரி கோபிச்சுக்காதே. கைவசம் எத்தனை படங்கள் வச்சிருக்கே.

    நாலு படம் ஷூட்டிங் நடந்திட்டிருக்கு. இன்னும் மூணு புது படம் புக் ஆகியிருக்கு. நேரம் சரிய இருக்கு. ஆனா அதேசமயம் சந்தோஷமாக இருக்கு. நினைச்சதை சாதிச்சுட்டோம்னு பெருமையா இருக்கு. எல்லாத்துக்கும் அப்பாதான் காரணம். அவர் என் விருப்பத்துக்கு தடை சொல்லாம, நான் விருப்பப்பட்ட நடிப்புத்துறையில் என்னை படிக்க வச்சு இன்னைக்கு மத்தவங்க பாராட்டற அளவு ஒரு சிறந்த நடிகையாக நான் இருக்கேன்னா அந்த பெருமை ஒட்டுமொத்தமும் அப்பாவைதான் சேரும்.

    போதும் போதும் புகழ்ந்தது. நித்யா அப்புறம் சொல்லும்மா. அம்மா எப்படியிருக்கா. நல்லாயிருக்காளா? உடம்பு ஆரோக்கியமா இருக்குதானே.

    கண்களில் கனிவும், ஏக்கமுமாக கேட்கும் அப்பாவை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் நித்யா.

    3

    மனைவியின் மீது இவ்வளவு பிரியமும், காதலும் வைத்திருக்கும் அப்பா, பதினைந்து வருடமாக அம்மாவை பிரிந்து பார்க்காமல் எப்படி இருக்கிறார்."

    எந்த குறையுமில்லாமல் சந்தோஷ வாழ்க்கை வாழும்போது, அம்மாவும், அப்பாவும் சேர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பிரிவு... அதன் வலியை அனுபவித்துக் கொண்டு, அம்மாவும் அப்பாவும் தனித்தனியாக... மனம் வேதனையில் துவண்டது.

    நித்யா இங்கே பாரு. என்னடா ஆச்சு. ஏன் கண் கலங்கற. சந்தோஷமா இருக்கத்தான் வரச் சொன்னேன். நீ மூட் அவுட் ஆகக் கூடாது. அம்மு, நம்ப ஏழுமலைக்கிட்டே சொல்லி, உன் அக்காவுக்கு சூடா மட்டன் சூப் உன் கையால வாங்கிட்டு வந்து கொடு. அப்படியே காமிரா எடுத்துட்டு வா. இந்த அழுமூஞ்சியை போட்டோ எடுத்து வச்சுப்போம்.

    சகஜ நிலைக்கு திரும்பிய நித்யா, அப்பாவை அடிப்பதற்கு செல்லமாக கையை ஓங்க, அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1