Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Aircondition Kutram
Oru Aircondition Kutram
Oru Aircondition Kutram
Ebook112 pages1 hour

Oru Aircondition Kutram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903710
Oru Aircondition Kutram

Read more from Pattukottai Prabakar

Related to Oru Aircondition Kutram

Related ebooks

Related categories

Reviews for Oru Aircondition Kutram

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Aircondition Kutram - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஓர் ஏர்கண்டிஷன் குற்றம்

    Oru Aircondition Kutram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    போர்ட்டிகோவில் நின்ற காக்கிச் சட்டை வாட்ச்மேன் சல்யூட் அடித்து, காரின் கதவைத் திறந்து விட்டான். சின்ன ப்ரீஃப்கேசுடன் இறங்கினான் சென்குப்தா.

    நீளமான மூன்று அயல் நாட்டுக்கார்கள் ஏற்கனவே நின்று கொண்டிருக்க மெத் கம்பளம் மிதித்து உள்ளே நடந்தான். மானேஜிங் டைரக்டர் என்று நெற்றியில் பிளாஸ்டிக் எழுத்துக்கள் தாங்கிய பிரைவேட் லிஃப்ட்டில் நுழைந்தான். பையன் குட் மார்னிங் சார் சொல்லி இயக்க... ஏழாவது தளத்தில் வெளிப்பட்டு நடக்க...

    குட் மார்னிங்குகள் - விதவிதமான குரல்களில்.

    நேராய் தனியறைக்கு வந்து, ரிசீவர் இல்லாத இண்ட்டர்காமில் பட்டன் அழுத்தி, டைரக்டர்ஸ் வந்தாச்சா? என்றான்.

    யெஸ் சார், மீட்டிங் ஹால்ல உங்களுக்காக வெய்ட் பண்றாங்க.

    ஓக்கே என்று எழுந்து அறைக்குள் இருந்த அறைக்குள் சென்று முழு உயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான்

    க்ரீம் சூட், ப்ரெளவ்ன் டை, க்ரீம் பூசி ட்ரைய்யர் போட்டு பம்மென்று படிய வைத்த தலை. பவர் இல்லாத கோல்டு பிரேம் மெல்லிய கண்ணாடிக்குள்ளே பளபளப்பாய் கண்கள். மேலுதட்டை முற்றிலும் பதுக்கல் செய்து விட்ட மீசை.

    டை பின்னை அட்ஜஸ்ட் செய்து விட்டு வெளியே வந்தான். மேஜை மேல் வைத்த ப்ரீஃப்கேசை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளிப்பட்டு கண்ணாடிகள் போர்த்தி நின்ற அகலமான அலுவலகத்தின் மெளனமான இயக்கத்தைப் பார்த்துக் கொண்டே நீளமான காரிடாரில் நடந்து, திரும்பி...

    தேக்கு மரக் கதவுகளுடன் இருந்த மீட்டிங் ஹாலுக்குள் பிரவேசிக்கும் முன் சிகரெட்டை மண் நிறைந்த பித்தளைத் தொட்டியில் சுண்டினான்.

    உள்ளே வந்து குளிர் வாங்கி கதவு சாத்தினான். ஆறு டைரக்டர்களும் எதிர் எதிராய் மூன்று மூன்று பேர்களாய் வசதியான சுழல் நாற்காலிகளில். ஆறு பேரையும் பார்க்கும்படி இவனுக்குத் தனி நாற்காலி. மைக்கா ஒட்டின மேஜை மீது கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர். பேப்பர் கைக்குட்டைகள். காகிதங்கள், பேனாக்கள்-ஒவ்வொருவருக்கு முன்னாலும் அமைக்கப் பட்டிருக்க... ஆறு பேரில் நான்கு பேர் வழுக்கை, ஐந்து பேர் கண்ணாடி அணிந்திருந்தார்கள். அனைவரும் சூட்டில் இருக்க... ஒருத்தர் மட்டும் வேஷ்டி, சட்டை, நெற்றியில் குங்குமப் பொட்டு.

    காலை வணக்கம். நான் தான் ஐந்து நிமிடங்கள் தாமதம் செய்து விட்டேன். மன்னிக்கவும் என்று ஆங்கிலம் பேசிவிட்டு அமர்ந்தான் சென்குப்தா.

    ஏழு பேருக்கும் தமிழ் தெரியும். அப்புறம் என்னத்துக்கு இங்கிலீஷு? இதுக்கு தான் நான் மீட்டிங்குக்கே அதிகமா வர்றதில்லை என்றார் குங்குமம்.

    சகாதேவன் சொல்ற மாதிரி தமிழ்லயே பேசுவமே, என்ன நஷ்டம்? என்று அடுத்தவர் சொல்ல... சென்குப்தா புன்னகைத்துக் கொண்டு, ஒரு எம்.டி.யா இருந்துகிட்டு தினம் நான் சந்திக்கிற கஸ்டமர்ஸ், ஆபீஸர்ஸ், ஸ்டாஃப் எல்லார்கிட்டேயும் இங்கிலீஷ்லயே பேசிடறதாலே, இங்கேயும் அதே வருது. சரி, தமிழ்லயே பேசலாம். முதல்ல எதுவும் சாப்பிடலாமா?

    இப்பதான் அவங்கவங்க வீட்ல டிஃபன் சாப்பிட்டுட்டு வந்திருக்கோம். கொஞ்ச நேரம் போகட்டும். நேரா வந்துடுங்க குப்தா, எதுக்காக இந்த திடீர் டைரக்டர்ஸ் மீட்டிங்?

    ஒரு புது ப்ராஜெக்ட்டை செயல்படுத்தறதுக்கு முன்னாடி உங்ககிட்டே அனுமதி வாங்க வேண்டியிருக்கு நான். ஒவ்வொரு மாசமும் பாலன்ஸ் ஷீட் பார்த்துக்கிட்டுதான் வர்றிங்க. சீரா முன்னேறிக்கிட்டு இருக்கோம். இந்தியா முழுக்க டீலர்ஸ் அப்பாயிண்ட் ஆகிட்டாங்க. ரெப்ரிஜிரேட்டர்ஸ் விற்பனையிலே இந்தியாவிலே மூணாவது இடத்திலே நம்ம கம்பெனி இருக்கு. ஆனா, ஏர்கண்டிஷனர்ஸ் விற்பனையிலே ரொம்ப தேங்கிட்டோம். இருபத்தி ஏழாவது இடத்திலே இருக்கோம். குவாலிட்டில குறைவு இல்லை. விளம்பரத்திலேயும் குறைவு இல்லை. விலையும் அதிகம் இல்லை. ஆனா விற்பனையிலே ஏர்கண்டிஷனர்சைப் பொறுத்த வரைக்கும் ரொம்ப புவர் பெர்ஃபார்மன்ஸ்.

    என்ன காரணம்?

    சர்வே பண்ணிக்கிட்டிருக்கோம். ஒரு கமிட்டி அமைச்சி அனலைஸ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம் என்ற சென்குப்தா ப்ரீஃப்கேசில் இருந்து மூன்று ஃபைல்களை எடுத்து வைத்துக் கொண்டு புரட்டி, ஏர்கண்டிஷனர்ஸ் புரொடக்ஷன் நிறுத்தி ரெண்டு மாசம் ஆச்சி, அங்கங்கே டிப்போக்களிலே ஒரு லட்சத்தி பதினேழாயிரத்து முன்னூறு ஏர்கண்டிஷனர்ஸ் ஸ்டாக்கிலே இருக்கு. அதோட மதிப்பு உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. இப்போ விற்பனையாகிற ரேட்ல இவை எல்லாம் விற்றுத் தீர இன்னும் அஞ்சு மாசமாகும். ஏற்கனவே புரொடக்ஷன் யூனிட்ல வேலை இல்லாம ரெண்டு மாசமா நானூறு பேருக்கு சம்பளம் தர்றோம். ஒரு பிரிவை மட்டும் மூடவோ, அவங்களை வேலையை விட்டு நிறுத்தவோ முடியாது. யூனியன் பிரச்னைகளை, வழக்குகளைச் சந்திக்க வேண்டி வரும். இன்னும் அஞ்சி மாசத்துக்கு புரொடக்ஷனை நிறுத்தி, ஆனா சம்பளத்தை மட்டும் கொடுத்தா, பாங்க் லோனுக்கான வட்டி எல்லாம் சேர்த்து முப்பத்தேழு லட்சம் ரூபாய் நஷ்டம்."

    என்ன மிஸ்டர் குப்தா, இப்படி குண்டு போடறிங்க? இந்த நஷ்டத்தைத் தவிர்த்தே ஆகணும், அதுக்கு என்ன செய்யணுமோ, செய்ங்க, கம்பெனி ஆரம்பிச்சி ஏழு வருஷத்திலே நஷ்டம்ங்கிற பேச்சே கிடையாது.

    "இந்த வருஷம் மட்டும் நஷ்டம் ஏற்படுத்தணும்னு எனக்கு ஆசையா சார்? சேல்சை புஷ்-அப் பண்ண

    Enjoying the preview?
    Page 1 of 1