Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

January Iravugal
January Iravugal
January Iravugal
Ebook227 pages1 hour

January Iravugal

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

தரையினையே நடுக்குவிக்கும் தை மாதப் பனி இரவுகள் 'கிட்னி' திருடர்களை தெருவுக்குக் கொண்டு வருகிறார் திரு. ராஜேஷ்குமார்.

மனிதனின் உடலுக்குள் தெய்வம் செய்து வைத்திருக்கும் அரிதிலும் அரிதான உயிர்க் கருவிகளை விளம்பரங்களின் வாயிலாக விபரீதமாக அபகரிக்கும் வியாபாரிகளை வக்கரித்த மருத்துவ வேஷதாரிகளை வலை விரிக்கும் மாளிகை மிருகங்களை ஜனவரி இரவுகளில் மூடுபனியாகக் காட்டி படிப்பவர்களை நடுங்க வைக்கிறார் ஆசிரியர்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403693
January Iravugal

Read more from Rajesh Kumar

Related to January Iravugal

Related ebooks

Related categories

Reviews for January Iravugal

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    January Iravugal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஜனவரி இரவுகள்

    January Iravugal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துரை

    எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோவைக்காரர்; பொழுதுபோக்கு இலக்கிய சேவைக்காரர்.

    இவருடைய தொடர்கதை எமது 'உஷா' நவரச வார இதழில் வெளிவந்ததோ இருபத்தியெட்டு வாரம். வாசகர்கள் பரவசப்பட்டார்கள் வாராவாரம்.

    'ஜனவரி இரவுகள்' பாமா பதிப்பகத்தின் மூலம் புத்தகமாய் வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

    ஜனவரியை மறந்துவிட்டு வருடங்கள் இருக்க முடியாது. 'ஜனவரி இரவுகளை' படிக்காமல் வாசகர்கள் இருக்க முடியாது என ஆவலைத் தூண்டும் அளவுக்கு உள்ள ஒரு அற்புதமான கதை.

    சாதாரணமாக இரவுகளில் நிலவின் உலா.

    ஜனவரி இரவுகளிலோ ராஜேஷ்குமாரின் எழுத்துக்களின் தேன்சுவைப் பலா.

    ஆங்காங்கே அசர வைக்கும் திருப்பம். கதை விரும்பிகள் யாருமே இதைப் படிக்கத் தவறக் கூடாது என்பதே எனது விருப்பம்.

    கதையைப் பொறுத்த வரையில் படிப்போரின் துடிப்பைத் தூண்டில் போட்டு இழுக்கும் துவக்கம். சுருக்கமாகச் சொன்னால் ரத்தினக் கம்பளம் விரிக்கும் வார்த்தைகளோ ராஜேஷ்குமாருக்குள்ளே அடக்கம்.

    பாமா பதிப்பகத்தின் முயற்சியில் வெற்றி பெறட்டும் ஜனவரி இரவுகள்.

    பாரெங்குமிருந்து வந்து குவியட்டும் வாசகர்களின் உறவுகள்.

    அன்புடன்

    டி. ஆர்.

    டி. ராஜேந்தர் எம்.ஏ.,

    'உஷா' நவரச வார இதழ் ஆசிரியர்

    ஜனவரி இரவுகள்

    மழை தூறிக் கொண்டிருந்தது.

    சென்னைக்கு வட கிழக்கே-வங்கக் கடலில் 'கேம்ப்' போட்டிருந்த புயல் - அங்கிருந்தபடியே மழை 'நசநச' வென்று தூறி - நகரை நனைத்துக் கொண்டிருந்தது. அது ஒரு நவம்பர் மாதத்தின் முற்பகல் நேரம்.

    பெய்து கொண்டிருந்த மழையில்-இன்றைய அரசியல் தலைவர்களின் ராட்சஸ உயரக் கட்-அவுட்கள் சாயம் போய்க் கொண்டிருக்க ஜனங்கள் தன் சொந்த வேலைகளோடு குடைகளுக்கு கீழே நடந்தார்கள். வழக்கம் போல் மவுண்ட் ரோடு கொள்ளாத, அளவுக்கு திகட்ட திகட்ட வாகனங்கள்.

    வசந்தகுமார் சேறு படிந்த பிளாட்பாரத்தில் கவனமாய் நடந்தான். கைகள் இரண்டும் ஒரு பாலிதீன் பேப்பரை தலைக்கு மேல் மடித்து மழையை தாஜா செய்து கொண்டிருந்தது. மார்புச் சட்டைப் பகுதிக்குள் ஒரு ப்ரெளன் கவர் அதிகப்பிரசங்கித்தனமாய் துருத்திக் கொண்டு தெரிந்தது.

    'இந்த ரோட்டைக் க்ராஸ் செய்தால் போதும். பேங்க் வரும். இன்றைக்காவது பேங்க் மானேஜர் ஒரு சாதகமான பதிலைச் சொல்வாரா?'

    ஒரு பல்லவனை போகவிட்டு-ரோட்டைக் க்ராஸ் செய்து 'சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம்’ என்று பொய் சொன்ன போர்டுக்கு கீழே இருந்த பாங்க் கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

    ஈரம் கொட்டிய பாலிதீன் பேப்பரை ஓரமாய் உதறி நான்காய், எட்டாய் மடித்து-பேண்ட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான். பாங்க் ஊழியர்களில் பாதிப் பேர் அரட்டையில் இருந்தார்கள். மழையால் 'கிரிக்கெட்' ரத்து செய்யப் பட்டதுக்காக வருந்தினார்கள். அலங்காரில் ஓடிக் கொண்டிருந்த ஆங்கிலப் படத்தை கோபுரத்தில் ஏற்றினார்கள். அயோத்தி பிரச்சனை என்னவாகும் என்ற அரசியல் சோதிடம் சொன்னார்கள். 'அடுத்து வருகிற ரஜினி படம் எது?'-பட்டிமன்றம் நடத்தினார்கள்.

    வசந்தகுமாருக்கு பாங்கின் சூழ்நிலை பழகிப்போன ஒன்று. அதனால் தயக்கமில்லாமல் நடந்து ஹாலின் கோடியில் இருந்த மானேஜரின் அறைக்கு முன்பாய் போய் நின்றான். வலது கையின் ஆட்காட்டி விரலை மடக்கி காட்போர்டுக் கதவின் மேல் தட்டினான்.

    டொக்...

    உடனே உள்ளேயிருந்து குரல் வந்தது.

    எஸ்...கம்மின்...

    வசந்தகுமார் பவ்யமாய் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். ஆச்சர்யப்பட்டான். சீட்டில் வழக்கமான வழுக்கைத்தலை மானேஜர் இல்லை. சோன்பப்டி நரை கிராப்போடு 39 பெரிசு உட்கார்ந்து இருந்தது. பிஸ்கெட் நிற ஸஃபாரி. ரோல்ட் கோல்ட் பிரேமிட்ட கண்ணாடி. தாடையிலும், மேலுதட்டிலும் அன்றைய சவரப் பச்சை.

    வசந்தகுமார் சற்றே தடுமாற்றமாய்- குட் மார்னிங் சார் என்றான். அவர் பதிலுக்கு குட் மார்னிங் சொல்லாமல் எஸ் என்றார்.

    ஸார்... பி.ஈ. கிராஜ்வேட். ஒரு இண்டஸ்ட்ரி, தொடங்கறதுக்காக லோன் கேட்டு அப்ளை பண்ணியிருந்தேன். போன வாரம் வந்து மானேஜர் சதானந்தத்தை பார்த்தப்ப... இன்னைக்கு வந்து பார்க்கச் சொன்னார்... என்றான் வசந்தகுமார்.

    சதானந்தம் ட்ரான்ஸ்பர்ல பம்பாய் போய்ட்டாரே..?

    வசந்தகுமார் நொறுங்கினான்.

    ட்ரான்ஸ்பரா?

    அவனுடைய அதிர்ச்சியை சட்டை செய்யாத அந்த புது மானேஜர் ஒரு ஃபைலை எடுத்து புரட்டிக் கொண்டே சாதாரணமாய் கேட்டார்:

    லோன் அமௌண்ட் எவ்வளவு?

    ஒரு லட்சம் சார்?

    என்ன மாதிரியான இண்டஸ்ட்ரி? நேச்சர் ஆஃப் ப்ராடக்ட் என்ன?

    எலக்ட்ரானிக் ஸோக்ஸ் தயாரிக்கிற இண்டஸ்ட்ரி ஸார்.

    பி.ஈ.யில் என்ன ஆப்ஷனல்?

    எலக்ட்ரானிக்

    வேலைக்கு ட்ரை பண்ணலையா?

    பண்ணினேன் ஸார்... கிடைக்கலை.

    பி.ஈ. பாஸ் பண்ணி எவ்வளவு வருஷமாச்சு?

    ரெண்டு வருஷம்.

    எந்த ஊரு?

    கோயமுத்தூார்.

    கோயமுத்தூர்ல இல்லாத இண்டஸ்ட்ரியா? அங்கேயே இருந்து வேலைக்கு ட்ரை பண்ணியிருக்கலாமே...?

    வசந்தகுமார் மௌனம் சாதிக்க-மானேஜர் தொடர்ந்தார்:

    இதோ பாருங்க வசந்தகுமார்! பேங்க் லோனையெல்லாம் எதிர் பார்த்துட்டு ஒரு காரியத்தை ஆரம்பிக்காதீங்க. நான் உங்களை டிஸ்கரேஜ் பண்றதா நினைக்க வேண்டாம். இந்த அன் எம்ப்ளாயிட் யூத்ஸுக்கு லோன் தர்றது, லோன் மேளா-இதெல்லாம் கண் துடைப்புச் சமாசாரங்கள். பேங்க் ரூல்ஸெல்லாம் இப்ப ரொம்பவும் ரெட்ஸ் ரிக்டட். உங்க கேட்டகிரி பீப்பில்ஸுக்கு இந்த பேங்க்ல லோன் கிடைக்கவே கிடைக்காது. இதுக்கு முந்தி இருந்த பாங்க் மானேஜர் மிஸ்டர் சதானந்தம் உங்களுக்கு ஃபால்ஸ் ஹோப் கொடுத்திருக்கார்னு நினைக்கிறேன்...

    திக்கென்று நிமிர்ந்தான் வசந்தகுமார். கண்களில் அவசர அவசரமாய் நீர் கட்டிக் கொண்டது.

    ஸார்...! உங்க பேங்க்கில் தரப்போற லோனைத்தான் நான் பெரிசா நம்பிட்டிருந்தேன் ஸார்... என்னோட ஒய்ஃப்க்கு அடுத்த மூணு மாசம் வரைக்கும் தான் வேலை. அதுக்கப்புறம் டெர்மினேட் பண்ணிடுவாங்க. அதுக்குள்ளே நான் ஒரு தொழிலை தொடங்கியாகணும் ஸார்.

    மானேஜர் ஆச்சர்யப்பட்டார்.

    உங்களுக்கு கல்யாணம் வேற ஆயிடுச்சா?

    ஆயிடுச்சு ஸார்...

    வேலையே கிடைக்காதப்ப கல்யாணத்தை வேற எதுக்காக பண்ணிக்கிட்டீங்க?

    வசந்தகுமார் தயங்கிவிட்டு தொடர்ந்தான்: நான் ஒரு பெண்ணை காதலிச்சேன் ஸார். என் வீட்லேயும் அந்தப் பொண்ணு வீட்லேயும் பயங்கர எதிர்ப்பு. அந்தப் பெண்ணை வேற ஒருத்தருக்கு கட்டி வைக்கப் பார்த்தாங்க... ரெண்டு வீட்டு பெரியவங்களையும் பகைச்சுக்கிட்டு எப்படியும் வேலை கிடைக்கும்ங்கிற தைரியத்துல-ரெஜிஸ்டர் கல்யாணத்தை முடிச்சுகிட்டு மெட்ராஸ் வந்துட்டோம். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின்னாடிதான் ஊருக்கு திரும்பிப் போவோம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்.

    மைகுட்னஸ்! புது மானேஜர் முதல் தடவையாய் சொற்பமாய் பரிதாபப்பட்டு, நாற்காலியைக் காட்டினார்.

    உட்காருங்க வசந்தகுமார்.

    உட்கார்ந்தான்.

    மெட்ராஸுக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?

    ஆறு மாசம்.

    எங்கே தங்கியிருக்கீங்க?

    எல்லீஸ் ரோட்ல ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கோம். என்னோட ஒய்ஃப் மிதிலாவுக்கு பெசண்ட நகர் கார்மெல்கார்டன் நர்சரி ஸ்கூலில் தற்காலிகமா ஒரு டீச்சர் வேலை கிடைச்சுடுச்சு. எழுநூறு ரூபாய் சம்பளம். அந்த சம்பளத்தை வெச்சுக்கிட்டுத்தான் இந்த மெட்ராஸ்ல பொழுதை ஓட்டிகிட்டு இருக்கோம்.

    மானேஜர் தோள்களை முறுக்கினார். உங்க நிலைமையைப் பார்க்கும் போது என் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு... ஆனா அயாம் ஹெல்ப் லெஸ்! செக்யூரிட்டி இல்லாமே யாருக்கும் லோன் தரக் கூடா துங்கிறது பாங்க் கட்டளை. இந்த பாங்க்ல மட்டுமில்லை... நீங்க எந்த பேங்க்குக்கு போனாலும் சரி...உங்களுக்கு இந்த பதில்தான் கிடைக்கும்... அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே- அறைக் கதவு தட்டப்பட்டு ஒருவர் எட்டிப் பார்த்தார். அந்த முகத்தைப் பார்த்ததுமே-மானேஜர் வசந்தகுமாரை மறந்தார்.

    ஹலோ... தியாகராஜன் நீங்களா? கம்... கம்... பம்பாயிலிருந்து எப்ப வந்தீங்க? ஆர்ப்பாட்டமாய் குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து போய் அந்த புதிய நபரை வரவேற்றார்.

    நேத்திக்கே வந்துட்டேன்.

    என்னது... நேத்திக்கே வந்துட்டு இன்னிக்குத்தான் என்னோட ஞாபகம் வந்ததா?

    ஸாரி... நேத்திக்கே நான் ஏன் வரலைன்னா... ஏதோ சொல்ல வந்த அந்த நபர் தயக்கமாய் பேச்சை நிறுத்தி- வசந்தகுமாரை அந்நியமாக பார்க்க, மானேஜர் அவனுடைய தோளைத் தட்டினார்.

    நீங்க புறப்படுங்க வசந்தகுமார். எந்த பேங்க்கிட்டேயும் லோனை எதிர்பார்க்காதீங்க. எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்திடுங்க. வீம்பு பார்க்காம ஊருக்கு வேணும்னாலும் புறப்பட்டுப் போங்க.

    வசந்தகுமார் கைகளைக் குவித்து விட்டு வெளியே வந்தான். மழையின் அடர்த்தி இப்போது கூடியிருக்க அதை அலட்சியப்படுத்தி விட்டு ரோட்டில் இறங்கினான். நெஞ்சும் வயிறும் அக்னிக்குண்டமாய் தவிக்க- தலையில் மழைத்தூறல் ஜில்லென்று இறங்கியது.

    'இந்தியா ஒழிக!'-என்று தொண்டை வெடிக்க கத்த வேண்டும்போல் இருந்தது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு வேகமாய் நடந்தான்.

    வசந்தகுமார் எல்லீஸ் ரோட்டில் இருந்த வீட்டை நெருங்கி ஆச்சரியப்பட்டான். கதவின் பூட்டு விடுபட்டிருந்தது.

    'மிதிலா ஸ்கூலிலிருந்து அதற்குள் கிளம்பி விட்டாளா?'

    கதவைத் தட்ட-உடனே திறந்தது.

    கையில் லைப்ரரி புத்தகமொன்றை வைத்துக் கொண்டிருக்க-அந்த அழகான மிதிலா வசந்த குமாரின் மழையில் நனைந்த கோலத்தைப் பார்த்து பதட்டப்பட்டாள்.

    பாலிதீன் பேப்பர் எடுத்துட்டு போகலையா? இப்படியா மழையில் நனைஞ்சுட்டு வர்றது?

    'ப்ம்ம்!' என்ற வசந்தகுமார் கேட்டான். என்ன ஸ்கூல்லயிருந்து திரும்பிட்டே...?

    சர்ச்ல இன்றைக்கு ஏதோ மீட்டிங்காம். ஸ்கூல் ஆஃப் டே லீவ்! நானும் இப்பத்தான் வந்தேன்.

    நல்லவேளை... கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்.

    எதுக்கு பயம்?

    மூணு மாசத்துக்கு முன்னாடியே உன்னை ஸ்கூலிலிருந்து டெர்மினேட் பண்ணிட்டாங்களோன்னு தான்!

    மிதிலா சிரித்தாள்.

    மொதல்ல தலையைத் துடைங்க. ட்ரஸ்ஸை மாத்துங்க... லுங்கியையும் டவலையும் கொடுத்தாள்.

    வசந்தகுமார் தலையைத் துவட்டி-லுங்கிக்குள் நுழைந்து நாற்காலிக்கு வந்து உட்காரும் வரை மெளனம் காத்து பின் மிதிலா கேட்டாள்:

    பேங்க் மானேஜர் என்ன சொன்னார்?

    நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்தான். மிதிலா இன்றைக்கு கொஞ்சம் சந்தோஷமாய் இருக்கிறாள். இந்த சந்தோஷத்தை சிதைக்க வேண்டாம்.

    ம்... லோன்தானே? தர்றேன்னு சொன்னார்.

    எப்ப கிடைக்குமாம்?

    எப்படியும் ரெண்டு மாசத்துக்குள்ளே தர்றேன்னு சொல்லியிருக்கார்.

    கேட்ட அமௌண்ட் கிடைக்குமா...?

    த்ரி ஃபோர்த்தாவது கிடைக்கும்.-சொன்ன வசந்தகுமார் ட்ரங்க் பெட்டியின் மேல் வைத்திருந்த- நியூஸ் பேப்பர் சுற்றிய பொட்டலத்தை பார்த்துவிட்டு கேட்டான்.

    என்ன அது?

    பார்த்தீங்களா... உங்க கிட்ட சொல்ல மறந்துட் டேன். ஒரு அம்மா ஸ்கூலுக்கே வந்து சேலையெல்லாம் தவணை முறையில விக்கிறாங்க. மாசம் முப்பது ரூபாய் கட்டினா போதும். நான் வேண்டாம்ன்னேன். மத்த டீச்சர்ஸ் கேட்கலை. எடுத்துக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. விலையும் குறைச்சல்தான். வித்தா எண்பது ரூபா...

    பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினாள்.

    ஊதா நிறத்தில் பெரிய பெரிய சூர்யகாந்திப் பூக்கள்."

    ஜோரா இருக்கு... கட்டு பார்க்கலாம்!

    இப்ப வேண்டாம். நாளைக்கு...

    வெளியே குரல் கேட்டது.

    மிதிலம்மா...

    திரும்பினார்கள். பக்கத்து வீட்டு ஆயா நின்றிருந்தாள்.

    என்ன ஆயா...?

    எம் புள்ள கடுதாசு போட்டிருக்கான். கொஞ்சம் படிச்சு காட்டு என் ராசாத்தி.

    மிதிலா ஆயாவை நோக்கிப் போக-வசந்தகுமார் கையிலிருந்த சேலையை நேர்த்தியாய் மடித்து-அந்தச் செய்தித் தாளிலேயே சுற்றினான்.

    சுற்றச் சுற்ற கைகள் சட்டென்று நின்றது. பார்வை செய்தித் தாளின் ஓரத்தில் கட்டம் கட்டி வந்த விளம்பரத்தின் மேல் அழுத்தமாய் படிந்தது.

    சிறுநீரகம் தேவை

    "மிக அரிதான -ஏபி நெகட்டிவ் ரத்த க்ரூப் கொண்ட ஒரு ஆரோக்கியமான நபரின் சிறு நீரகம் தொழிலதிபர் ஒருவருக்கு தேவைப்படுகிறது. சிறுநீரகம் தரும் நபருக்கு ஒரு பெரிய தொகை பரிசாக கொடுக்கப்படும். ஆர்வம் கொண்ட மேற்படி ரத்த க்ரூப் உடையவர்கள் நேரில் கீழ்க்கண்ட விலாசத்திற்கு வரவும்.

    கிருபாகரன்,

    எண். 27, ரோஸ் வில்லா,

    ஜி. ரோடு,

    அண்ணாநகர் (கிழக்கு). சென்னை -101.

    வசந்தகுமார் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    அவனுடைய ரத்த க்ரூப் ஏபி நெகட்டிவ். 'இது என்றைய தேதி பேப்பர்.'

    அவசர அவசரமாய்ப் பிரித்து - பேப்பரின் உச்சியைப் பார்த்தான்.

    நேற்றையத் தேதி.

    அது நேற்றைய தேதி பேப்பர்தான் என்று உறுதியானதும்-வசந்தகுமார் அந்த விளம்பரத்தை மறுபடியும் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1