Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ootha Nila
Ootha Nila
Ootha Nila
Ebook80 pages27 minutes

Ootha Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ootha Nila

Read more from Rajeshkumar

Related to Ootha Nila

Related ebooks

Related categories

Reviews for Ootha Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ootha Nila - Rajeshkumar

    11

    1

    விஜய் பட்டு வேட்டி - பட்டு சட்டை சகிதமாய் சோபாவில் அமர்ந்திருந்தான்.

    ஆலிவ் நிற சில்க்கில் தேவதை மாதிரி இருந்த அவனுடைய புத்தம் புது மனைவி கவுசிகா அவ்வப்போது அவன் முன்னால் தோன்றுவதும் மறைவதுமாய் இருந்தாள். காலையில் விஜய் கையால் வாங்கிய தாலி மஞ்சள் மெருகோடு பளிச்சென்று அவள் கழுத்தில் அசைந்து கொண்டிருந்தது.

    வால்கிளாக் முட்கள் எட்டு மணியை அடிக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டிருந்தன.

    உறவு ஜனங்கள் கலைந்திருந்தார்கள். முக்கிய உறவினர்களை மட்டும் அந்த மினி பங்களாவுக்குள் பார்க்க முடிந்தது.

    குறுக்கே போன ஒரு சிறுமியை அழைத்தான் விஜய்.

    இங்கே வாம்மா...

    என்ன அங்கிள்...?

    அங்கிளுக்கு தாகமா இருக்கு... கவுசிகா அக்காவை தண்ணி கொண்டு வரச் சொல்லு...

    சரி அங்கிள்...

    அந்தச் சிறுமி பட்டுப்பாவாடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு உள் அறை ஒன்றை நோக்கி வேகமாய் ஓடிச் சென்றாள்.

    சில விநாடிகளில் கண்ணாடி தம்ளரில் நிரப்பிய ரஸ்னாவோடு கவுசிகா வந்தாள்.

    மெல்லிய குரலில் சொன்னாள்.

    இந்தாங்க ரஸ்னா...

    நான் தண்ணிதானே கேட்டேன்... நீ ரஸ்னா கொண்டு வந்திருக்கே...?

    உங்களுக்குத் தண்ணி தாகம் இல்லைன்னு எனக்குத் தெரியும்... அதனாலதான் ரஸ்னா கொண்டு வந்தேன்...

    என்ன சொல்றே...?

    "நான் சொல்றது சரியா இல்லையான்னு செல்லுங்க... உங்களுக்கு தாகம் இல்லைதானே...?

    விஜய் புன்னகைத்துக் கொண்டே எனக்கு தாகமாத்தான் இருக்கு

    நீங்க என்ன சொல்லி அனுப்பினிங்க...?

    என்ன சொல்லி அனுப்பினேன்...? தாகமா இருக்கு... தண்ணி கொண்டு வரச் சொல்லுன்னு சொன்னேன்...

    தாகமா இருக்கு... கவுசிகாவை தண்ணி கொண்டு வரச் செல்லுன்னுதானே சொன்னிங்க...? நிஜமாவே உங்களுக்கு தாகமா இருந்திருந்தா தண்ணி கொண்டு வான்னு மட்டும் சொல்லியிருப்பிங்க. குறிப்பாக என்னைக் கொண்டு வரச் சொன்னதிலிருந்தே நீங்க தாகத்துக்காக தண்ணி கேக்கலைன்னு தெரிஞ்சுகிட்டேன்...

    புத்திசாலிப் பொண்ணுதான்... ஆனா உங்க வீட்டில் நீதான் அப்பப்ப என்னை வந்து கவனிச்சிக்கணும்ன்னு மட்டும் உனக்குத் தோணலையே...? அம்போன்னு விட்டுட்டு உள்ளே போயிட்டே...

    சொந்தக்காரங்க யாரோ உங்ககூடப் பேசிட்டு இருந்தாங்களே...?

    அவங்க அப்பவே போயிட்டாங்க...?

    அப்பா இருந்தாரே...?

    அவர் கூடவும் எவ்வளவு நேரம் பேசிட்டிருக்க முடியும்...? ஜெனரேஷன் கேப்... எனக்கும் போரடிக்கும். அவருக்கும் போரடிக்கும்...

    நமக்குக் கல்யாணம் ஆகி இன்னும் முழுசா பனி ரெண்டு மணி நேரம் கூட ஆகலை... சும்மா உங்ககிட்டே வந்து நின்னேன்னா ‘ரெண்டும் ரொம்பத்தான் வழியுது’ன்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க...

    யார் அப்படிக் கிண்டல் பண்றது...? ‘அவர்கிட்டே நானும் என்கிட்டே அவரும் வழியறதுக்காகத்தான் இன்னிக்குக் காலையில சுபயோக சுபமுகூர்த்தத்தில் பெரியவங்க எல்லோருமா சேர்ந்து லைசென்ஸ் கொடுத்திருக்காங்க’ன்னு அவங்ககிட்டே சொல்லு...

    அய்யோ... அப்புறம் அதிகமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க... சரி... ரஸ்னாவைக் குடிச்சிட்டு சீக்கிரம் கொடுங்க...

    என்ன அவசரம். கொஞ்ச நேரம் நல்லு...

    எனக்குக் கால் வலிக்குது...

    அப்படின்னா பக்கத்தில் உட்காரு...

    ஊகூம்...

    "என்ன நீ... பதினெட்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவள் மாதிரி இப்படி பிகு பண்ணிக்கறே...?

    பிகு பண்ணலைங்க... எனக்குக் கூச்சமா இருக்கு...

    "அடக் கடவுளே... இன்னும் கொஞ்ச நேரத்தில் நமக்கு முதலிரவு... இப்படிக் கூச்சப்பட்டின்னா எப்படி...?

    நீங்க பயப்படற அளவுக்கெல்லாம் நான் பழமைவாதி இல்லை... நல்லா வாய் அடிப்பேன்... ஆனா லேட் பிக்கப்ன்னு வைச்சுக்கோங்களேன்... ரெண்டு நாள் போச்சுன்னா சரியாயிடும்... சரி... தம்ளரைக் கொடுங்க...

    தர்றேன். அவசரபடாதே... எனக்கு சில தகவல்கள் வேணும்...

    என்ன தகவல்...?

    முதலிரவு ஏற்பாடெல்லாம் எந்த அளவில் இருக்கு...

    ச்சீய்ய்...

    என்ன ச்சீய்ய்...?

    என்கிட்டே போய் இதெல்லாம் கேக்கறிங்க...?

    உங்க அப்பாவைக் கூப்பிட்டுக் கேக்கவா...?

    அய்யோ... கொஞ்சம் பேசாம இருங்க...

    "அப்போ நீயே சொல்லு... சுமார் எத்தனை மணிக்கு நம்மை நிம்மதியா பேச விடுவாங்க...? காலைல இருந்து தெரிஞ்சவங்க... தெரியாதவங்க... எல்லாரையும் பார்த்து சிரிச்சு... கைகுவிச்சு... கைகுலுக்கி...

    Enjoying the preview?
    Page 1 of 1