Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Malarin Payanam
Oru Malarin Payanam
Oru Malarin Payanam
Ebook113 pages1 hour

Oru Malarin Payanam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465988
Oru Malarin Payanam

Read more from Parimala Rajendran

Related to Oru Malarin Payanam

Related ebooks

Reviews for Oru Malarin Payanam

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Malarin Payanam - Parimala Rajendran

    19

    1

    பனி விலகாத விடியற் காலை பொழுது. விளக்கின் ஒளி இருட்டை விலக்கி, அந்த இடத்தையே பிரகாசமாக்கி கொண்டிருக்க, தங்க கோபுரம் தகதகக்க... மண்ணுலக சொர்க்கம் என்பது போல பக்தி மணம் கமழ, உள்ளத்தை நெகிழ வைக்கும் பெருமாள் குடி கொண்டிருக்கும் அந்த வேங்கட மலை, காட்சியளித்து கொண்டிருந்தது. கோபுரவாசலில் எதிரே பரந்து கிடந்த இடத்தில், பக்தர்கள் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்க,

    கை கூப்பி, கண்மூடி நின்றிருந்தாள் கீதாராணி.

    உள்ள வைர நாமமும், தங்க அணிகலன்களும், பட்டு பீதாம்பரமும் மேனியை அலங்கரிக்க, பூ மாலைகளுடன் காட்சி தரும் ஏழுமலை யானை கண்குளிரக் கண்ட காட்சிகளை மனதில் நிறுத்தி, பிரகாசித்து கொண்டிருந்தது.

    கீழே விழுந்து கும்பிட்டாள் கீதாராணி.

    இன்றைய பொழுது விடிந்தது.

    இனி அவளுடைய சேவைகள் ஆரம்பமாகப் போகிறது.

    அவளாக விரும்பி ஏற்றுக் கொண்ட தொண்டு.

    பெருமாளை பக்தி சிரத்தையுடன் காண வரும் பக்தர்களுக்கு உணவு அளிக்கும் திருப்பணி.

    ஏழுமலையில் அன்னதான கூடத்தில் தான் பல வருடங்களாக, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறாள் கீதா.

    எங்கே போவது என்று திக்கு தெரியாமல் அலைந்தவளுக்கு அடைக்கலம் தந்தது வேங்கடமலை.

    இப்போது ஐம்பதை நெருங்கும் வயதில் மனிதன் ஆபாசங்களை துறந்து, அலைபாயும் உள்ளத்தை அடக்கி, அந்த வேங்கடமாலையானே துணை என்பது போல வாழ்ந்து வருகிறாள்.

    "கீதா, என்ன காலை பிரார்த்தனை முடிந்ததா. அன்னதான கூடத்துக்கு போகலாமா?’’

    அவருடன் வேலை பார்க்கும் வைதேகி, புன்னகையுடன் அருகில் நிற்கிறாள்.

    இரண்டாம் நம்பர் சாப்பாட்டு ஹாலில்,

    பெரிய அண்டாக்களில் இருக்கும் சாம்பாரை, டிராலியுடன் தள்ளி வருகிறார்கள்.

    ஒவ்வொரு இலையிலும் நிதானமாக பார்த்து ஊற்றுகிறாள். எதிரெதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு, வைதேகியும், கீதாவும் ஊற்றியபடி வர,

    ‘‘கொஞ்சமா போடும்மா’’

    பெரியவர் ஒருவர் சொல்ல,

    ‘‘சாதத்தை ஒதுக்கிக்குங்க. கொஞ்சமா ஊத்தறேன். அடுத்து ரசம் வரும் வாங்கிக்குங்க"

    ‘‘நல்லதும்மா "

    "எப்படி தான் இப்படி பொறுமையா வேலை செய்யறியோ தெரியலை.’’

    ஆமாம் வைதேகி. இவங்கெல்லாம் பெருமாள் பக்தர்கள். இவங்களுக்கு சாப்பாடுவைக்கறது, பெரிய புண்ணியமான காரியம் இல்லையா? அதுக்கு பொறுமையும், நிதானமும் நிச்சயம் வேணும். அவசரகதியில் மேலும், கீழும் சிந்தாம, இலை பார்த்து பரிமாறணும்

    ‘‘உன்னை போல நல்ல மனசுள்ளவங்க இருக்க தான் செய்யறாங்க.’’

    அவளை பார்த்து சிரித்தபடி டிராலியை தள்ளுகிறாள் வைதேகி.

    இரவு மணி பத்து

    மனம் வேதனைபடும் போதெல்லாம், கோபுரத்திற்கு எதிரே இருக்கும் படிக்கட்டில், வந்து உட்கார்ந்து விடுவாள் கீதா.

    எப்போதும் பக்தர்கள் நடமாடும் அந்த இடம், அங்கிருக்கும் கடைகளில் ஒளிப்பரப்பாகும் பக்தி பாடல்கள் எல்லாமே மனதை அமைதி படுத்தும்.

    ‘பெருமாளே நீயே கதி என்று உன்னை சரணடைந்து விடுவேன். எத்தனையோ உறவுகள்... எல்லாவற்றையும் பிரிந்து தனி ஆளாக...யாரு மற்றவாளாக... இதோ உன் காலடியில் வாழ்ந்து வருகிறேன். :

    யாரை மறந்தாலும். மறக்கமுடியாமல், என் மனதிலும், நினைவிலும் நடமாடும்... அந்த இளம் தளிர்...

    இரண்டு வயது நிரம்பாத என் மகள்... தோளிலும், மார்பிலும் போட்டு சீராட்டி வளர்த்தவள்.

    என் ரத்தத்தின் ரத்தம்...

    அவளை பிரிய வேண்டி வந்து விட்டதே...

    இனி, இந்த ஜென்மத்தில் என் மகளை நான் பார்க்க முடியாது.

    எந்த உறவும் இனி எனக்கு வேண்டாம் என் மனதை மரத்து போக வைத்தாலும், மகளென்ற உறவை மட்டும் விட்டு விலக முடிய வில்லையே...

    அனு... என் அனும்மா... நீ எப்படிம்மா இருக்க? இருபத்திரெண்டு வயது முடிந்த நிலையில், பருவ வயது மங்கையாக அழகும், இளமையும் மிளிர எங்கோ ஒரு இடத்தில் வாழும் என் மகள் அழகு தேவதை.

    கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகளால் துடைக்கிறாள்.

    திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் தங்கியிருக்கும் கட்டிடம். உள்ளே வருகிறாள்.

    ரிஷப்ஷனில் உட்கார்ந்திருந்த கோமளம் புன்னகைக்கிறாள்.

    மணி பனிரெண்டாகுது. இத்தனை நேரம் கோபுரத்தை தரிசனம் பண்ணிட்டு வர்றீயாகீதா?

    காலையிலும் அஞ்சுமணிக்கு எழுந்திடறே... பொழுதுக்கும் அன்னதான கூடத்தில் உட்காராமல் வேலை பார்க்கிறே... ரெஸ்ட் எடுக்க கூடாதா. போய் படு!’’ அக்கறையோடு சொல்கிறாள் கோமளம்.

    கோமளமும், கீதாவை போல நீண்ட வருடங்களாக தேவஸ்தானத்தில் வேலை பார்க்கிறாள்.

    அவள் குடும்பம் கீழ் திருப்பதியில் இருக்கிறது. இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட, கணவன் இல்லாத நிலையில் அவளும் இங்கேயே தங்கி விட்டாள்.

    அமைதியான கீதாவிடம் தனி பிரியத்துடன் பழகுவாள்.

    கீதா இப்படி அடிக்கடி இரவு தூங்காமல், கோவில் வாசலில் உட்கார்ந்து, திருப்பதும், அக்கறையுடன் கோமளம் கேட்பதும் வழக்கமாக நடை பெறும் ஒன்றுதான் என்பதால்,

    புன்னகையே பதிலாக உள்ளே போகிறாள் கீதாராணி.

    கண்ணாடி முன் நிற்கிறான் முரளிதரன்.

    2

    காதோரம் மொத்தமாக முடிகள். அடர்ந்த கேசத்தில் சரிபாதி அளவு நரைமுடி.

    அறுபதை நெருங்கும் வயதில் இதுவே குறைவுதான். இந்த வயதிலும் தலையிலும் வழுக்கை விழாமல், முக அழகின் வசீகரம் குறையாமல் இருப்பது பெரிய விஷயம் தான்.

    அவர் இதழில் புன் முறுவல் பரவுகிறது.

    ஐயா...டிபன் ரெடியா இருக்குங்க. சிவாதம்பி உங்களுக்காக வெயிட் பண்றாரு கதவருகில் நின்று ஏழுமலை சொல்கிறான்.

    சிறிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார் முரளிதரன்.

    அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் தரமானதாக இருப்பதால், ஆர்டர்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

    சிவா தான் கம்பெனியின் மானேஜராக இருந்து பொறுப்பாக எல்லாவற்றையும் பார்க்கிறான்.

    பி.காம் படித்திருப்பதாகவும், தனக்கென்று யாருமில்லை என்று அவன் சொன்ன அடுத்த நிமிஷமே, அவனை வேலையில் சேர்த்துக் கொண்டார்.

    வேலையில் அவன் காட்டும் ஈடுபாடு.

    புத்திசாலி தனம், திறமையும் கலந்து அனைவரிடமும் அன்புடன்

    Enjoying the preview?
    Page 1 of 1