Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Madiyil Naan Uranga...
Un Madiyil Naan Uranga...
Un Madiyil Naan Uranga...
Ebook136 pages47 minutes

Un Madiyil Naan Uranga...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100804018
Un Madiyil Naan Uranga...

Read more from Vimala Ramani

Related to Un Madiyil Naan Uranga...

Related ebooks

Reviews for Un Madiyil Naan Uranga...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Madiyil Naan Uranga... - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    உன் மடியில் நான் உறங்க…

    Un Madiyil Naan Uranga...

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    ஆதித்யா திரும்பிப் படுத்தான். புது இடம், புது சூழ்நிலை. தூக்கம் வர மறுத்தது. புதிய பூபாளங்கள் பாடப்பட்டாலும், இவன் பழைய நீலாம்பரியில் இருந்தான். மணி ஐந்து இருக்குமா? எங்கோ ஒற்றைக் குயில் 'குக்கூ' என்று கூவிக் கொண்டிருந்தது. குரலில் இனிமையைக் காணோம். தனியாகக் கச்சேரி பண்ணித் தொண்டை வற்றி விட்டதோ என்னவோ!

    எங்கோ பால்காரரின் சைக்கிள் மணி சத்தம். அதைத் தொடர்ந்து 'பால்' கூச்சல்.

    இனித் தூக்கம் வராது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்து முதுகும் படுக்கையும் தேய்ந்தது தான் மிச்சம்.

    ஆதித்யா எழுந்தான். சோம்பலை முறித்து அதன் முதுகை உடைத்தான். 'மார்னிங் எக்ஸர்சைஸ்' செய்து பழக்கப்பட்டவன்.

    இன்று என்னவோ சோம்பலாக இருந்தது. நாளை எக்ஸர்சைஸ் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று வாஷ் பேசின் அருகில் பல் துலக்கப் போனான். புது ப்ளாட். இன்னும் பெயிண்ட் வாசனை அதில் மிச்சமிருந்தது.

    இப்போது ஏரியா ஏரியாவாகப் புதிது புதிதாக முளைத்திருக்கும் ப்ளாட்களில் இதுவும் ஒன்று. இன்னும் பாதிப் பேர் குடி வரவில்லை.

    குத்துவிளக்கேற்றிக் குடிப் புக யாரும் இல்லாததால் இவனே ட்யூப் லைட்டை ஏற்றிக் குடி புகுந்து விட்டான்.

    தேர்ட் ஃப்ளோர். லிஃப்ட் இல்லாததால் ஏறி இறங்கக் கொஞ்சம் மூச்சு வாங்கியது. இப்போது பழகி விட்டது. பாதி ப்ளாட்கள் காலி.

    சிலருக்கு ட்யூ கட்டாததால் பொஸஷன் கிடைக்கவில்லை. சிலர் நாள் நட்சத்திரம் பார்த்ததால் இன்னும் குடி வரவில்லை.

    ஆக, ஆதித்யா எதுவும் பார்க்காமல் வந்து விட்டான். இப்போது தான் பார்க்கிறான், பல் துலக்கியபடியே வாஷ் பேசினின் குழாயைத் திறந்து விட்டதில் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. எண்ணங்களோடு டேப்பையும் நிறுத்தினான்.

    ஆதித்யா பல் துலக்கி முடித்தான். அடுத்து, காப்பி சாப்பிடக் கீழே இறங்கி ஓட்டலுக்குப் போக வேண்டும். மூன்று மாடி இறங்கி, மறுபடியும் திரும்ப ஏறி... நோ, குளித்து முடித்து ஆபீஸ் கிளம்பும்போது ஒரேயடியாகக் காப்பி, டிபன் என்று எல்லா இழவையும் முழுங்கி விட்டுத் தொலையலாம்.

    தாறுமாறாகக் கிடந்த துணிகளை ஒழுங்குபடுத்த நினைத்துத் தோற்றுப் போய், மூலைக்கு ஒன்றாக வீசி எறிந்தான்.

    'ஆதி, உங்களுக்கு ஆனாலும் ரொம்பக் கோபம் ஜாஸ்தி!' மனத்துள் சாயா கொஞ்சினாள்.

    'உனக்கென்ன, சொல்லுவே. என் பொஸிஷன்லே இருந்து பார்த்தால் தெரியும்.'

    'உங்க பொஸிஷனுக்கு என்ன? நல்லாத்தானே இருக்கு?'

    'மண்ணாங்கட்டி!'

    'மண்ணாங்கட்டி நல்லா இருக்காது.'

    'மண்ணாங்கட்டியின் மொத்த உருவமே நீதான். நீ நல்லா இல்லையா?'

    'கிண்டல் பண்ணினீங்க...'

    ‘என்ன பண்ணுவே?'

    'காணாமல் போயிடுவேன். அப்புறமா நீங்க சினிமா ஹீரோ மாதிரி மலை, காடு, மரம், சிகரம்னு அத்துவானக் காட்டிலே எல்லாம் நின்னுட்டு, 'சாயா... சாயா...'ன்னு கூப்பிட்டாலும் எதிரொலிதான் பதில் தரும். என் ஒலி கேட்காது!’

    'ஆ..... பெரிய பாலசந்தர்! டைரக்டோரியல் டச்சஸ்ஸோட பேசறதா நினைப்பு.'

    'இது டைரக்டோரியல் டச்சஸ் இல்லே, மேட்ரிமோனியல் டச்சஸ்,' என்றவள், சட்டென்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டுக் காணாமல் போய் விட்டாள்.

    சாயா!

    சாயா என்றால் நிழல். அவள் நிழலாக மறைந்து போனாள்.

    இவன் நிஜமாகக் காத்திருக்கிறான். 'சாயா...... சாயா...' என்று கூவி அலுத்துப் போனான், ஆதித்யா

    கடைசியில் சாயா விட்டுவிட்டுத்தான் போய் விட்டாள். நிழலாகிப் போய் விட்டாள். இவனிடம் அவளது புகைப் படங்களை மட்டும் விட்டுவிட்டு நிழலாகிப் போய் விட்டாள். இவன் நிஜமான உணர்வுகளுடன், சாயாவின் நிழலான புகைப் படங்களுடன் கண்ணீருடன் காத்திருக்கிறான்.

    ###

    2

    வாட்ச்மேன்... வாட்ச்மேன்... ஆதித்யா இரைந்து கூப்பிட்டான்.

    கோழிக் கூடு போன்ற ஒரு மரக் குடிசைக்குள் முடங்கிக் கொண்டிருந்த வாட்ச்மேன் கழுத்தை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான். 'வாட்ச்மேன்' என்ற பதத்திற்கு ஏற்பத் தலையில் முண்டாசு, கையில் ஒரு தடி, டார்ச், காக்கி யூனிபார்மில் காட்சியளித்தான்.

    என்ன சார்?

    பக்கத்து ஓட்டல்லே இருந்து டிபன் வாங்கிட்டு வருவியா? இந்தா அஞ்சு ரூபாய். நீயும் சாப்பிடு. இன்னிக்கு உடம்பு சரியில்லே. அவ்வளவு தூரம் நடந்து போய்ச் சாப்பிடச் சோம்பலா இருக்கு.

    வாட்ச்மேன் தலையைச் சொறிந்ததும், உற்சாகப்படுத்திப் பணத்தை நீட்டினான்.

    நீங்க உங்க பிளாட்டுக்குப் போங்க. டிபன் பொட்டலத்தை உங்க ப்ளாட்டிலே சேர்க்கிறேன், என்று வாங்கிக் கொண்டான்.

    இவன் தன் ப்ளாட்டுக்குத் திரும்பினான். முப்பதினாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து இரண்டு வருடம் காத்து ஸ்டேஜ் ஸ்டேஜாக ஐம்பதினாயிரம் அறுபதினாயிரம் என்று பணம் கட்டி, கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்தை விழுங்கி உள்ள ப்ளாட் இது.

    இவன் வீடு. இவன் உழைப்பின் சேமிப்பு

    'ஒரு சொந்த வீடு இருக்கா? வேலை இருக்கா? ஏதாவது ஸ்டேட்டஸ் இருக்கா? எந்தத் தைரியத்திலே சாயாவைச் காதலிச்சேன்னு என்கிட்டே சொல்லி, தைரியமாப் பொண் கேட்க வந்திருப்பே? உனக்கு என்ன திமிர்!' அன்று சாயாவின் தந்தை நரசிம்மன் நரசிம்மவதாரம் எடுத்தபோது, அன்றைக்கு இவன் தலை குனிந்து தான் நின்றான்

    இன்று இவனுக்கு அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டது.

    இவனுக்கு உத்தியோகம் இருக்கிறது. சமூகத்தில் ஸ்டேட்டஸ் இருக்கிறது. எனக்குச் சொந்த வீடு இருக்கிறது என்பதை அந்தக் கிழவனுக்குச் சொல்லிக் காட்ட வேண்டும் என்ற வீம்பில் இவன் இராப்பகலாக உழைத்து ஐந்தே வருடங்களில் இவன் கட்டிக் கொண்ட வீடு இது.

    இவன் பெரிய மனிதன் ஆகிவிட்டான் என்ன பிரயோசனம்? சாயா தான் இல்லை.

    அன்று சாயா சொன்னாள்: ‘ஆதி அப்பா சொன்னதைக் கேட்டு இப்படி மனசு ஒடிஞ்சு போயிட்டீங்களே! அவர் என் அப்பா. என்னோட நலன்லே அக்கறை கொண்டவர் அவர் அப்படித்தான் பேசுவார். உடனே நீங்க தலை குனிஞ்சிட்டுத் திரும்பிப் போயிடறதா? நீங்க கேட்ட அத்தனை தகுதிகளோட உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க நான் வெள்ளை குதிரையிலே வருவேன்னு சவால் விட வேண்டாமா?’

    'புரியாமல் பேசாதே, சாயா. சவால் விட்ட போதுமா? சாதிக்க வேண்டாமா?’

    'இந்தச் சந்தேகமே உங்க வெற்றிகளை ஒதுக்க விடுகிறது. என்னால் முடியும் என்ற நம்பிக்கை, ஏன் உங்களுக்கு, வரவில்லை?’

    'எந்த நம்பிக்கையோடு நான் சவால் விடுவேன்?’

    'ஏன், என் மேலே நம்பிக்கை இல்லையா?’

    ஆதித்யா அவளைப் பார்த்தான். ‘உன்னை நம்பினால்...’

    'நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் ஆதி. என் சாயா

    Enjoying the preview?
    Page 1 of 1