Genießen Sie diesen Titel jetzt und Millionen mehr, in einer kostenlosen Testversion

Nur $9.99/Monat nach der Testversion. Jederzeit kündbar.

Anusha Appadithan!

Anusha Appadithan!

Vorschau lesen

Anusha Appadithan!

Länge:
80 Seiten
26 Minuten
Freigegeben:
Aug 12, 2019
Format:
Buch

Beschreibung

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Freigegeben:
Aug 12, 2019
Format:
Buch

Über den Autor


Ähnlich wie Anusha Appadithan!

Mehr lesen von Lakshmi Ramanan

Buchvorschau

Anusha Appadithan! - Lakshmi Ramanan

http://www.pustaka.co.in

அனுஷா அப்படித்தான்!

Anusha Appadithan!

Author:

லக்ஷ்மி ரமணன்

Lakshmi Ramanan

For more books

http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

1

தமா! உடனே வா. இட் ஈஸ் அர்ஜென்ட்.

சாரதாவின் குரல் தொலைபேசியில் பதட்டப்பட்டது.

என்ன நடந்தது? என்றாள் மறுமுனையில் தமயந்தி.

காலையிலே காலேஜ் போன அனுஷா இன்னும் திரும்பி வரலே.

அவ்வளவுதானே.... சிநேகிதிங்ககூட சினிமா பார்க்கப் போயிருப்பா. வந்துடுவா. கவலைப்படாதே.

மணி பத்தாகுது.

இருக்கட்டுமே, சினிமா லேட்டாகத் துவங்கி இருக்கலாம். நடுவிலே பவர் கட் ஆகி தாமதமாகி இருக்கலாம்.

தமா!

சொல்லு சாரதா

நான் கவலைப்படறதுக்குக் காரணம் இருக்கு.

என்ன?

அவளுக்கு எம் மேலே கோபம்.

சின்னப் பெண்தானே, சரியாயிடும்.

அவள் பதில் சொல்லாமல் அழுதாள்.

அழறியா சாரதா?

.............

சித்தார்த் போன் பண்ணினாரா?

ம்ஹூம்

அவர் பேசினால் அனுவைக் காணோம்னு சொல்லி இது மாதிரி அழாதே. ரொம்ப ஷாக் ஆயிடுவார்.

இல்லே என்று சற்றுத் தயங்கிவிட்டு.

அனு ஏடாகூடமாய் ஏதாச்சும் செய்துக்கிட மாட்டாளே என்றாள்.

யூ மீன் தற்கொலையா?

ஆமாம்.

எனக்கு உன்னை விட அனுவை நல்லாத் தெரியும். ரொம்ப தைரியமான பெண். அனாவசியமா எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டுக் குழம்பிப் போகாதே – சாரதா.... வர்ஷா - என்ன செய்துக்கிட்டிருக்கா?

அனுஷாவுடைய அத்தனை சிநேகிதிங்களுக்கும் போன் பண்ணிப் பார்த்துட்டா, அங்கே எல்லாம் அவள் போகவே இல்லே, இப்போ தேடப் போறேன்னு கிளம்பிக்கிட்டிருக்கா.

இந்த நேரத்துலே அவளைத் தனியா அனுப்பாதே. நான் வந்தபிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.

சரி. சீக்கிரம் வா தமா.

அவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள் என்பது குரலிலேயே தெரிந்தது.

சாரதா தைரியமானவள். நினைத்ததைச் செய்து முடிப்பவள். நடுவில் எந்த இடர்ப்பாடு வந்தாலும் அவள் சோர்ந்து போனதில்லை.

சின்னக் கவலைகள் அவளை அத்தனை எளிதில் அசைத்துவிட முடியாது.

அவளே அழுகிறாள் என்றால் விஷயம் கவலைக்குரியதுதான்.

அப்படி என்ன நடந்திருக்கும்?

மறுபடியும் தாய்க்கும் மகளுக்குமிடையில் என்ன தகராறு.

அந்த உறவில் விரிசல் விழ யார் காரணம்...? சாரதாவா.... இல்லை மகள் அனுஷாவா?

ஜன்னல் வழியாகக் குளிர் காற்று வந்து உடலைச் சிலுப்பியது.

அதை மூடி விட்டு அலமாரியைத் திறந்து மெல்லிய கம்பளிச் சால்வையை எடுத்து தமா தோள் மீது போட்டுக் கொண்டாள்.

இரவு நேரங்களில் பெங்களூர் நகரம் எப்போதுமே குளிரின் பிடியில் சுருண்டு கொள்ளும். அதுவும் நவம்பர் முதல் மார்ச் வரையில் கேட்கவே வேண்டாம், பொழுது சாய்ந்த பிறகு எங்கு போவதானாலும் தற்காப்புக் கவசமாய் ஒரு சால்வையாவது தேவைப்பட்டது.

சாரதா வீட்டுக்குப் போனால், அனுவைக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடும் வரையில் வீடு திரும்ப முடியாது என்று தோன்றவே, இரண்டு நாட்களுக்குத் தேவையான புடவை இரவிக்கை இதர அன்றாடத் தேவைகளை எடுத்துப் பையில் திணித்துக் கொண்டாள். உடன் வேலை பார்த்த லீலாவுக்கு போன் செய்து, தான் இரண்டு நாட்கள் அலுவலகம் வர இயலாது என்று தெரிவித்தாள்.

சமையலறையில் காஸ் அடுப்பு

Sie haben das Ende dieser Vorschau erreicht. Registrieren Sie sich, um mehr zu lesen!
Seite 1 von 1

Rezensionen

Was die anderen über Anusha Appadithan! denken

0
0 Bewertungen / 0 Rezensionen
Wie hat es Ihnen gefallen?
Bewertung: 0 von 5 Sternen

Leser-Rezensionen