Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyariya Nokkame Ungalathu Valimai
Uyariya Nokkame Ungalathu Valimai
Uyariya Nokkame Ungalathu Valimai
Ebook209 pages49 minutes

Uyariya Nokkame Ungalathu Valimai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதன் என்றும் அவரவர் வாழ்வில் எண்ணங்களை வல்லமைப்படுத்தியே ஆக வேண்டும். காரணம் ஏதோ காரணத்தால் தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு வாழ்வதற்கு தன்னை முறையான வாழ்வியல் தத்துவங்களை புரிந்து கொள்வதற்கும் புதுமையான உலகை படைக்கக் கூடிய சிந்தனை தகவல்களை அறிந்து கொள்வதற்கு புதிய யுக்தியை கையாளக்கூடிய வல்லமை எண்ணத்திற்கு மட்டுமே ஆனது. ஆகவே எண்ணத்தை வலிமைப்படுத்தி மாற்றங்களால் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உயரிய நோக்கோடு எழுதப்பட்ட நூல்தான் "உயரிய நோக்கமே உங்களது வலிமை" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களுக்கும், இந்நூலுக்கு நோக்கம் தந்த அண்ணன் திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும், உற்சாகம் தந்த தங்கை திருமதி. பால்மணி அவர்களுக்கும், எழுத்துப் பணியில் உத்வேகம் கொடுத்த என்னுடைய மனைவி திருமதி. சாந்தி அவர்களுக்கும், மற்றும் அவ்வப்போது பாராட்டி பெருமை சேர்த்த என் பெற்றோர்கள், உற்றார் - உறவினர்கள், சுற்றத்தார்கள், மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்.

மு.ப.நடராசன், M.A. (SD), M.B.A., MHRM.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124704326
Uyariya Nokkame Ungalathu Valimai

Read more from M.P.Natarajan

Related to Uyariya Nokkame Ungalathu Valimai

Related ebooks

Reviews for Uyariya Nokkame Ungalathu Valimai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyariya Nokkame Ungalathu Valimai - M.P.Natarajan

    http://www.pustaka.co.in

    உயரிய நோக்கமே உங்களது வலிமை

    Uyariya Nokkame Ungalathu Valimai

    Author:

    மு.ப. நடராஜன்

    M.P. Natarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mp-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அனுபவம்

    எதிர்காலம் உன் கையில்

    சேமிப்பு

    நிதானம்

    சமுதாயம்

    மனிதனின் சபதம்

    மனிதனின் அனுபவத்திறன்

    ஆக்கமும் ஊக்கமும்

    நல்ல அணுகுமுறை

    மனநிலையை உருவாக்குங்கள்

    எதிர்பார்ப்பு

    நல்ல நடத்தை

    வெற்றிக்கான இலக்கு

    உன்னை வெல்ல

    ஆயுதமே உன் மனம்

    உழைப்பின் உன்னதம்

    திறமைகளை கற்றுக் கொள்ள

    சாதியுங்கள்

    செம்மையான செயல்கள்

    சமூக அக்கறை

    குறிக்கோள்

    திடமான திட்டம்

    பேச்சுத்திறன்

    எண்ணங்கள்

    உறுதிமொழி

    நல்ல செயல்கள்

    சீரிய நோக்கம்

    சமூக முன்னேற்றம்

    எண்ணச் சிறகுகள்

    மனதுக்குப் பயிற்சி

    சாதனை இடம்

    நேசியுங்கள்

    இயல்பான மனநிலை

    மோசமான புழுக்கம்

    திரும்பி பார்க்க வையுங்கள்

    நீ ஒரு உலக சாம்பியன்

    புதிதாய் சாதிக்கலாம்

    பாராட்டு

    கனவு முயற்சிக்கும்

    கடந்துபோன நொடி

    எண்ணத்தின் வலிமை

    செயலாக்கும் ஆற்றல்

    பொறுமையை நிதானப்படுத்து

    வெற்றிக்கு ஆசைப்படு

    சிந்தனை செய்

    எண்ணத்தை வல்லமைப்படுத்து

    வாழ்வு புனிதமாக...!

    வானவீதியில் வலம் வரலாம்

    தகுதியை நிர்ணயம் செய்

    வெற்றியை எட்டும் நோக்கம்

    ஆரோக்கியமான வாழ்வு

    சோதனையின் மறுபக்கம் சாதனை

    உன்னைப் புரிந்து பார்

    புகழ் பிராகாசிக்கட்டும்

    மனித நேயமும் மகத்தான சக்தியும்

    அற்புதத்தை உணர்ந்துவிடு

    உனக்காக இந்த உலகம்

    உன்னதத்தை உணருங்கள்

    விழிப்புணர்வு

    மன வலிமையின் உன்னதம்

    வெற்றியை உணருங்கள்

    முன்னேற்றம் காண்போம்

    சாதனை

    சாதுர்யம்

    கொள்கை

    தெய்வபலம்

    புதுமை

    எதிர்கொள்

    சுயகௌரவம்

    அகிம்சை

    உண்மை

    எதிர்நீச்சல்

    வாழ்க்கைப் பாடம்

    கனவு காணுங்கள்

    வசந்தகாலம்

    நேசம் கொள்

    முடியும்

    வெற்றியை சுவாசியுங்கள்

    எண்ண அதிர்வுகள்

    நோக்கம் நிறைவேற...

    ஆண்டவரே! வலிமை கொடு

    சந்தர்ப்பம்

    அனுபவம்

    மனத்திடம்

    கனவுகள் ஜெயிக்கட்டும்

    உணர்வுகளின் வெளிப்பாடு

    மனநிறைவு

    உயரிய நோக்கமே உங்களது வலிமை

    (இது ஒரு தன்னம்பிக்கை தரும் தலைமைத்துவ திறனாய்வு பதிப்பு நூல்)

    என்றும் கனத்த நினைவுகளுடன்...

    எனக்குள் எண்ணைக் குவியல்களை

    உத்வேகமாய் விளைய வைத்த

    அன்பு ஆசான் உம்மை

    வணங்கிட யுகங்கள் போதாது...!

    "வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி,

    அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய

    வெற்றியைப் போல கொண்டாடக் கற்றுக் கொள்ளுங்கள்."

    - டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.

    வாழ்த்துரை

    மு.ப.நடராசன் எழுதிய இத்தொகுப்பு படிக்க கிடைத்தது.

    இது அவரது வாழ்வின் அனுபவங்களை சில தருணங்களின் ஒளிக்கீற்றுகளை அதன் தகிப்புடன் உண்மையின் வீச்சுடன் கூர்மையாக வெளிப்படுத்துவதில் மு.ப.நடராசனின் வரிகள் வேறு விதமானது. மனிதனின் லெளகீக வாழ்வின் அச்சங்களைச் சென்றடைவதற்குரிய வழிகளை சொல்லுபவையாக இருக்கின்றன.

    இவர் எழுதிய படைப்பு இளைஞர்களுக்குக் கற்றுக் கொள்ள பல ஆலோசனைகளுமாகத் தெரிவிக்கிறார்.

    என்றும் பல படைப்புகளை வெளியிட எனது வாழ்த்துக்கள்.

    - அ.எக்பர்ட் சச்சிதானந்தம்

    காஞ்சிபுரம்.

    பதிப்புரை

    இச்சமூகத்தில் ஒரு தனிமனிதன் தாய், தந்தைக்கு குழந்தையாக பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், மறைகிறான், மண்ணில் புதைக்கப்படுகிறான். இது உலக வாழ்வில் எதார்த்தமான உண்மைகளைக் குறிக்கிறது. ஆனால் ஏனோ இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மனிதனாகிய நாம் சில சந்தர்ப்பச் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு தடுமாற்றங்களும், ஏமாற்றங்களும், தடைகளும், சோதனைகளும் ஏற்படுகிறது.

    இதன் காரணம் என்னவாக இருக்கக்கூடுமென ஆராய்ந்து அறிந்து பார்த்தால் நம்மை காலம்காலமாய் அறியாமை என்னும் பேய் ஆட்டிப் படைத்திருக்கிறது.

    நமக்கென்ற ஓர் உன்னதமான அடையாளம் இல்லாமல் ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம், ஏதோ மறைந்தோம் என்ற சலிப்புகளால் விதி என்ற கூற்று சதி செய்யப்பட்டு அடையாளம் காணாமல் போனவர்கள் ஏராளம்.

    ஆகவே நாம் அதிலிருந்து மீண்டிட தனக்கென உயரிய நோக்கத்தை அடைந்தால் உயரிய வெற்றி கிடைக்கும். அப்போதுதான் மனிதனின் மகத்துவம் புரிய வரும். அறிவைப் பலப்படுத்தி சிந்தனை சக்தி நமக்குள் ஏற்பட்டு, சீரிய செயல்பாடுகளை செய்து முடிக்க வழிகள் பிறக்கும். உயரிய வெற்றி கிடைக்கும் என்பதனை உணரவே இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது.

    இப்புத்தகத்தினைப் படித்துப் பயன் பெற்று உன்னதமான உயர்வினைப் பெற மனதார வாழ்த்துகிறது இப்பதிப்பகம். புத்தகம் படிப்பதில்தான் சமூக மரபுகளைப் பாதுகாக்க முடியும். அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள். நன்மை பெறுங்கள்.

    என்னுரை

    மனிதன் என்றும் அவரவர் வாழ்வில் எண்ணங்களை வல்லமைப்படுத்தியே ஆக வேண்டும். காரணம் ஏதோ காரணத்தால் தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு வாழ்வதற்கு தன்னை முறையான வாழ்வியல் தத்துவங்களை புரிந்து கொள்வதற்கும் புதுமையான உலகை படைக்கக் கூடிய சிந்தனை தகவல்களை அறிந்து கொள்வதற்கு புதிய யுக்தியை கையாளக்கூடிய வல்லமை எண்ணத்திற்கு மட்டுமே ஆனது. ஆகவே எண்ணத்தை வலிமைப்படுத்தி மாற்றங்களால் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உயரிய நோக்கோடு எழுதப்பட்ட நூல்தான் உயரிய நோக்கமே உங்களது வலிமை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களுக்கும், இந்நூலுக்கு நோக்கம் தந்த அண்ணன் திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும், உற்சாகம் தந்த தங்கை திருமதி. பால்மணி அவர்களுக்கும், எழுத்துப் பணியில் உத்வேகம் கொடுத்த என்னுடைய மனைவி திருமதி. சாந்தி அவர்களுக்கும், இந்நூலை மிகச் சிறந்த முறையில் கணிப்பொறி செய்து வழங்கிய திரு. செல்வின் ராஜா அவர்களுக்கும், மிகச் சிறப்பாக அச்சிட்டு தந்த மீனாட்சி டிசைனர்ஸ் உரிமையாளர் திரு. க.பாலகுருசாமி அவர்களுக்கும் மற்றும் அவ்வப்போது பாராட்டி பெருமை சேர்த்த என் பெற்றோர்கள், உற்றார் - உறவினர்கள், சுற்றத்தார்கள், மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்.

    மு.ப.நடராசன், M.A. (SD), M.B.A., MHRM.

    உயரிய நோக்கமே உங்களது வலிமை

    (இது ஒரு தன்னம்பிக்கை தரும் தலைமைத்துவ திறனாய்வு பதிப்பு நூல்)

    அனுபவம்

    ஒரு செயலில் அனுபவம் வாய்த்திருந்தாலே போதும். தெரிந்து கொள்ளும் மற்ற விவரங்கள் அதிகமில்லை.

    அனுபவமே நாம் கற்றுக் கொள்ளும் முக்கியப் பாடமாகும்.

    அனுபவம் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அரிய பொக்கிசம்.

    அனுபவத்தின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளும் விவரங்கள் அதிகம்.

    அனுபவமே ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிகாட்டுதலை தரும்.

    அனுபவம் ஆக்க சிந்தனைக்கு வழிகாட்டுதலாய் அமைகிறது.

    எதிர்காலம் உன் கையில்

    எதார்த்தமான சிந்தனையும் தீவிரமாக செயலாகும் போது பல நன்மை உண்டாகிறது.

    நாம் நினைக்கும் காரியங்கள் நல்லபடியாக நடந்துவிட்டால் அது அதிர்ஷ்ட வசமே.

    நம்முடைய வாழ்க்கை நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்ற உணர்வு வேண்டும்.

    நிஜமான எண்ணம் உருவாகும் போது போலித்தனமான எண்ணம் புதைக்கப்படுகிறது.

    எதையும் துணிந்து ஒரு செயலை பற்றி ஆராயும் போது சில உண்மைகள் புலப்படுகிறது.

    நாம் எதிர்காலத்தை பற்றிய நிகழ்வுகள்

    Enjoying the preview?
    Page 1 of 1