Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kaadhal Kanakku
Oru Kaadhal Kanakku
Oru Kaadhal Kanakku
Ebook99 pages36 minutes

Oru Kaadhal Kanakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100804321
Oru Kaadhal Kanakku

Read more from Vimala Ramani

Related to Oru Kaadhal Kanakku

Related ebooks

Reviews for Oru Kaadhal Kanakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kaadhal Kanakku - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    ஒரு காதல் கணக்கு

    Oru Kaadhal Kanakku

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    மகேந்திரன் மூளையைக் குழப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

    கணக்கு சரியாகவே 'டாலி' ஆக மாட்டேன் என்கிறது...

    அட... வாழ்க்கை தான் 'டேலி! ஆவதில்லை... தொலைகிறது, ஜன்மாந்திர பாவம் பாக்கி... கணக்குக் கூடவா...?

    மகேந்திரன் ஒரு பெரிய வங்கியின் ஆபீஸர்... இப்போது தான் ப்ரேபஷனரி பீரியட் முடிந்து, பாங்க் எக்ஸாம் எல்லாம் 'பாஸ்' செய்து கொடுப்பதைக் கொடுத்து, வாங்குவதை வாங்கி இன்று ஆபீஸராக இருக்கிறான்...!

    இந்தச் சின்ன வயதிலேயே அவன் இத்தனை பெரிய பதவிக்கு வந்ததில் சிலருக்கு ஆச்சர்யம், சிலருக்குப் பொறாமை... சிலருக்குக் கோபம்...

    ஆக அவன் வாழ்வில் நவரசங்களும் இருந்தன... அவன் அடிக்கடி கணக்கு ஒன்று சொல்லுவான். வாழ்க்கைக் கணக்கு ஒன்று உண்டு...

    மகிழ்ச்சிகள் பெருக்கிக் கொள்ளப்பட வேண்டும்... துன்பங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்... நண்பர்கள் கூட்டிக் கொள்ளப் படவேண்டும்... விரோதிகள் கழித்துக் கொள்ளப் படவேண்டும்...!

    கணக்கு நன்றாகத்தான் இருக்கிறது... விரோதியை நண்பன் என்று, நண்பனை விரோதி என்று தப்பாக கணக்குப் போட்டு கூட்டிக் கழித்தால்...?

    என்ன விடை வரும்...?

    கம்ப்யூட்டராக இருந்தால் 'எரர்' என்று எழுதிக்காட்டும்...!

    இங்கு மனிதனே 'எரர்...’

    உம்... இன்னும் இந்தியாவின் எல்லாத்துறைகளிலும் கம்ப்யூட்டர், வருவதற்கு பல வருடங்கள் ஆகும்...!

    அது சரி... இப்போது மகேந்திரனின் குழப்பத்தின் காரணம் தானே...?

    வேறு ஒன்றுமில்லை இன்று பார்த்து வங்கியின் அத்தனை ஸ்டாப்களும் ஏதோ அடையாள வேலை நிறுத்தமாம்...!

    இவன் தான் ஆபீஸராய், அடையாளமாய் இந்த வங்கியில் அட்டண்ட்ரிலிருந்து ஆபீஸர்வரை இவன் ஒருவனே, ஒருவனே...!

    இந்த லக்ஷணத்தில்...

    என்ன ஸார் பேங்க் உண்டா...? - என்று அனாவசியமாகக் கேள்வி கேட்டு அன்புத் தொல்லை தருகிற அன்பு கஸ்டமர்கள்...

    ஏன் ஸார் எப்.டி போட்டால் என்ன இன்ட்டரஸ்ட் தருவீர்கள்...?

    - என்று எப்டி போடாமலே கேள்வியை மட்டுமே கேட்டுத் தொல்லை படுத்துகிற ஒரு வாடிக்கையாளர் கம் நண்பர்!

    உங்க பேங்கிலே சர்வீஸே போறாது ஸார். ஒரு நூறு ரூபாய் செக்கை வைச்சுட்டு கவுண்டர்லே நூறு நிமிஷமா பழி கிடக்கறேன். ஒத்தர் கண்ணிலே காணோம்... - என்கிற சிலர்.

    பாங்கின் 'கஸ்டமர்' ஒருவர் 'போனில்' சண்டைவேறு போட்டார்!

    வேறு ஒன்றுமில்லை. அவருடைய 'செக்' ஒன்றை பேங்க் டிஸ்ஹானர் பண்ணி விட்டதாம்...!

    அக்கௌண்டிலே பணம் இல்லேன்னா 'செக்' 'பவுண்ட்ஸ்' ஆகும் சார்...

    என்று இவன் யதார்த்தமாகச் சொல்ல,

    அந்தப் பெரிய மனிதர் 'போனில்' பிடிபிடி என்று பிடித்து விட்டார்.

    அது எங்களுக்குத் தெரியும் ஸார்...! ஆப்டர் ஆல் பிச்சைக் காசு ஐந்நூறு ரூபாய் அதுக்காக பணத்தைக் கட்டி இருக்கமாட்டேனா... இது கூட சர்வீஸ் தான் ஸார்... வேண்டாததுக்கு எல்லாம் ஆயிரம் தடவை 'போன்' பண்ணி அரட்டை அடிக்கிறீங்களே! எஸ். பி. கிளார்க் பண்ணிய தப்புக்கு இவன் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்...

    பொழுது போகாமல் இவனிடம் அரட்டை அடிப்பதற்காகவே வரும் நண்பர் கூட்டம் ஒன்று!

    ஆக இத்தனை களேபரத்தின் நடுவில் -

    ஆளும் இல்லாமல் தான் ஒருவன் அத்தனையும் சமாளித்த படி இவன் கணக்கை கூட்டிக் கழித்துப் பார்த்தபோது கணக்கில் வேறு குழறுபடி...!

    என்ன இழவு சனியன்...!

    மகேந்திரனுக்குக் கோபம் வந்தது...

    'சட்'டென்று அம்மாவின் நினைவு வந்தது...

    அம்மா இவனை அன்புடன் 'மஹி' என்பாள்.

    மஹி... உனக்கு ஆ...ஊன்னா...கோபம் வந்துடறது. கோபம் கொடிய வியாதி மாதிரி. அந்த நேரத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. கோபத்துக்கு நீ உன் அப்பாவைக் கொண்டுட்டே...! இப்படித் தான் உங்கப்பாவுக்கும்... ஆ... ஊன்னா கோபம் வந்துடும்... அர்த்தமில்லாதது எல்லாம் கோபம். இதோ பார் மஹி... கோபம் வந்தா பேசாம கண்களை மூடிண்டு அஞ்சு நிமிஷம்... அஞ்சே அஞ்சு நிமிஷம் ஆண்டவனை நினை... இல்லே பேசாம பேப்பர் பென்சிலை எடுத்து ஸ்ரீராம ஜெயம் நூறு எழுது... அப்பறம் ஆற அமற யோசிச்சுப் பார்... கோபம் திட்டாய்ப் பறந்துடும்...

    அம்மா சொல்வது சரி... அப்பாவை அவனுக்கு பார்த்த நினைவே இல்லை!

    எல்லாம் அம்மா தான். புகைப்படத்தில் அப்பாவைப் பார்த்தாலே பயங்கரமாகத் தான் இருக்கிறது. முரட்டு மீசையும், தீக்ஷிண்யமான கண்களும், மில்டரி ஆபீஸர் மாதிரி ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1