Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kathavu Thattapadukirathu
Oru Kathavu Thattapadukirathu
Oru Kathavu Thattapadukirathu
Ebook137 pages44 minutes

Oru Kathavu Thattapadukirathu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Oru Kathavu Thattapadukirathu

Read more from Rajeshkumar

Related to Oru Kathavu Thattapadukirathu

Related ebooks

Related categories

Reviews for Oru Kathavu Thattapadukirathu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kathavu Thattapadukirathu - Rajeshkumar

    21

    1

    "உங்க பெயரே கதிர்தானா?"

    நோ... நோ... என்னோட பேர் கதிரேசன், டிஸ்கோ டான்சர்னா பேரும் கொஞ்சம் மாடர்னா இருக்க வேண்டாமா? அதனால தான் பேரைச் சுருக்கி கதிர் என்று வெச்சுகிட்டேன்.

    இந்த டிஸ்கோ டான்சை யார்கிட்டேயிருந்து கத்துகிட்டீங்க?

    யார்கிட்டேயிருந்தும் நான் கத்துக்கலை. நானே முயற்சி பண்ணி, நானே கத்துகிட்டேன்.

    எத்தனை வருடமா டான்ஸ் பண்றீங்க?.

    அஞ்சு வருடமா! இருபதாவது வயசுல என்னோட பயிற்சியைத் தொடங்கினேன். இந்த இருபத்தஞ்சாவது வயசுலதான், ரேடியோ ஸ்டேஷனில் இருந்து நீங்க வந்து என்னை பேட்டி எடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன்...

    ரேடியோ ஸ்டேஷனில் இருந்து வந்திருந்த கமலநாதன் சிரித்தார்.

    உங்க லட்சியம்?.

    இந்தியா பூராவும் தெரியக்கூடிய அளவில் பெரிய டிஸ்கோ, டான்சரா வரணும்.

    கடைசியா ஒரு கேள்வி... மிஸ்டர் கதிர்?.

    கேளுங்க.

    உங்க கல்யாணம் எப்போ?

    இந்தக் கேள்விக்கு நான் கண்டிப்பா பதில் சொல்லணுமா கமலநாதன்?

    சொன்னா சந்தோசம்.

    ஓகே. சொல்றேன். நான் இப்போ, ஒரு பெண்ணை காதலிச்சிட்டிருக்கேன்...

    உண்மையாகவா?

    ஆனால், அவள் என்னைக் காதலிக்கிறாளான்னு தெரியாது. அவளும் என்னை காதலிக்கிறதாயிருந்தால் அடுத்த ஆறு மாசத்துல என்னோட கல்யாணம் நடக்கும்.

    கமலநாதன் சிரித்துக்கொண்டே எழுந்து வாழ்த்துக்கள் என்றார்.

    கதிர் ஏதோ சொல்ல வாயெடுத்த விநாடி...

    அவனுடைய கிரீன் அறையிலிருந்த இண்டர்காம் மெல்லச் சிணுங்கிக் கூப்பிட்டது.

    கமலநாதன் விடை பெற்றுக் கொள்ள, கதிர் இண்டர்காமின் ரிசீவரை எட்டி எடுத்தான்.

    அலோ...

    மறுமுனையில் ஓட்டல் மானேஜர் பிலிப்ஸ் பேசினார்,

    என்ன கதிர் பேட்டி முடிஞ்சுதா?

    முடிஞ்சது சார்.

    ரசிகர்கள் காத்திட்டிருக்காங்க. மேடைக்கு எப்ப வருவீங்க?

    பத்தே நிமிடம்! வந்துடறேன். சார்.

    சீக்கிரம் வாங்க அவர் ரிசீவரை வைத்துவிட, கதிர் எழுந்தான். சுவரில் பதிந்திருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான்.

    கதிருக்கு அசாத்திய உயரம். ரோஜா நிறம். பெண்களுக்கு இருப்பது போன்ற அடர்ந்த புருவங்களுக்கு கீழே குளிர்ச்சியைக் கொட்டும் கண்கள். சற்றே சதைப் பிடிப்பான கன்னங்கள். மேல் உதட்டுக்கு மேலே பத்து மில்லி மீட்டர் அகலத்தில் கபில்தேவ் மீசை.

    அகலமான பீரோவைத் திறந்து, தொங்கிக் கொண்டிருந்த விதவிதமான டிரஸ்களை பார்த்தபடியே, எந்த டிரஸ்சில் நுழையலாம் என்று யோசித்தான்.

    யோசித்துக் கொண்டிருந்த, அவனுடைய அறைக் கதவை யாரோ டொக் டொக் கென்று சப்தித்தார்கள்.

    கதிர் திரும்பிப் பார்த்து எஸ்... பிளீஸ் என்றான்...

    குள்ளமாய். குண்டாய் மரக் கலர் கோர்ட்டுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு, யாரோ உள்ளே நுழைந்தார்கள். பல் வரிசை உறுத்தலாய் தெரிய சிரித்தார்.

    தொந்தரவுக்கு மன்னிக்கனும்.

    யார் நீங்க?

    என் பெயர் சங்கரன். புதுசா அடையாரில் ஆரம்பிச்சிருக்கிற ‘எவர் ஹெவன்’ ஓட்டல்ல மானேஜரா இருக்கேன்.

    ரொம்ப சந்தோசம். உட்காருங்க.

    கதிர் நாற்காலியைக் காட்ட, அவர் உட்கார்ந்தார். கதிரும் எதிரே இருந்த நாற்காலியில் நிரம்பிக் கொண்டே கேட்டான்.

    என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

    சங்கரன் காது வரை சிரித்தார்.

    நீங்க ஆடற டான்ஸ் எங்க ஓட்டல் முதலாளிக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.

    கதிர் புன்னகைத்தான்.

    இதைச் சொல்றதுக்காக மாத்திரம் நீங்க இங்க வந்திருப்பீங்கன்னு நான் நினைக்கலை...

    மிஸ்டர் கதிர்! ரொம்ப சரியா சொன்னீங்க. நீங்க எங்க ஓட்டல்ல டிஸ்கோ டான்ஸ் பண்ணணும்னு ஓட்டல் முதலாளி ஆசைப்படரார்.

    சாரி. இந்த ஓட்டல்ல நான் இப்போ ரெகுலரா ஆடிட்டிருக்கேன்.

    ஏதாவது காண்ட்ராக்டு போட்டிருக்கீங்களா?

    அதெல்லாம் இல்லை.

    பின்னே எங்க ஓட்டல்ல ஆடறதுக்கு உங்களுக்கு என்ன தயக்கம்? நீங்க இங்கே என்ன சம்பளம் வாங்கறீங்கன்னு எனக்கு தெரியும். அதைக்காட்டிலும் மூணு மடங்கு நாங்க தர்றோம். ஐந்து ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துக்குவோம். நீங்க பிரியப்பட்டு கேட்கிற அட்வான்சைத் தர்றோம்... பேசிக் கொண்டே தான் கொண்டு வந்திருந்திருந்த தோல் பையைப் பிரித்து நீளமான செக் புக்கை எடுத்து வெளியே வைத்தார் சங்கரன். கோட் பாக்கெட்டிலிருந்து பேனாவையும் உருவிக்கொண்டிருந்தார்.

    ம்... சொல்லுங்க. அட்வான்ஸ் எவ்வளவு கேட்கறீங்க, கதிர்?.

    கதிர் அந்த செக் புத்தகத்தை எடுத்து, அவருடைய தோல் பைக்குள்ளேயே போட்டு ஜிப்பையும் இழுத்து மூடினான். புன்னகை செய்தான்.

    சாரி மிஸ்டர் சங்கரன். நான் இந்த ஓட்டலை விட்டு வேற எந்த ஓட்டலிலும் டான்ஸ் பண்ண விரும்பலை,

    காரணம்?

    ஆரம்ப காலத்துல என்னோட ஆர்வத்தை புரிஞ்சுகிட்டு இந்த ஓட்டலோட முதலாளிதான் என்னை மேடையில் ஏத்தினாங்க. அவங்களா போனு சொல்கிற வரைக்கும் நான் இங்கே ஆடிக் கொண்டுதான் இருப்பேன்.

    சங்கரன் சிரித்தார்.

    உங்களுக்கு அதிகப்படியான நன்றியுணர்ச்சி மிஸ்டர் கதிர். உங்களை வைத்து, இந்த ஓட்டல்காரங்க நிறைய சம்பாதிக்கிறாங்க. நீங்க அஞ்சு வருடமா இந்த ஓட்டல்ல ஆடறீங்க. இதுவரைக்கும் நீங்க என்ன சம்பாதிச்சிருக்கீங்க? சொந்தத்துல வீடோ காரோ உங்களுக்கு உண்டோ?

    கதிர் கொஞ்சம் கோபமாய் எழுந்து நின்று, இடுப்பில் கை வைத்து அவரைப் பார்த்தான்.

    சங்கரன்! நீங்க எப்படி என் கிரீன் அறைக்குள்ளே வந்தீங்க?

    நான் உங்க நண்பர். ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டே சொல்லணும்னு வரவேற்பறையில் சொல்லிவிட்டு வந்தேன்.

    அதே மரியாதையோட இப்போ வெளியே போயிடறீங்களா? சங்கரன் முகம் சிவந்து போய் எழுந்தார். கதிர். ஏதோ சொல்ல முயன்றவரை கையமர்த்தி, கதவின் வாசல் பக்கம் கையைக் காட்டினான் கதிர்.

    தயவு பண்ணி போயிடுங்க சங்கரன். நான் மூட் அவுட்டாகி ஏதாவது கத்திடுவேன். அப்படி நான் கத்தறதை. நீங்க அவமானமா நினைச்சுடுவீங்க...

    சங்கரன் விருட்டென்று எழுந்தார்.

    கொஞ்சம் நிதானமா யோசியுங்க, கதிர்.

    நான் யோசிச்சு முடிக்க பத்து வருடமாகும். பரவாயில்லையா, சங்கரன்?

    சங்கரன் தோல் பையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, வேகமாய் வாசல் கதவைத் தாண்ட, கதிர் மறுபடியும் கண்ணாடிக்கு முன்பாக வந்து நின்றான்.

    ஜரிகை இழை வேய்ந்த வெள்ளை நிற சர்ட்டையும், பொன்னிற இழை வேய்ந்த கறுப்பு பேண்டையும் அணிந்து, முகத்திற்கு லேசாய் பவுடர் தீற்றி, ஒழுங்காய் சீவியிருந்த தலையை மறுபடியும் சீவிக்கொண்டான் கதிர். ஷூ அணிந்து கிரீன் அறையை விட்டு வெளியே வந்தான்.

    ஓட்டலுக்கு கீழே அண்டர் கிரவுண்டில் இருந்த ஆடிட்டோரியம் ஹாலில் இரைச்சல் கிளம்பிக் கொண்டிருந்தது.

    ஓட்டல் மானேஜர் பிலிப்ஸ் எதிர்பட்டார்.

    சீக்கிரமா மேடைக்குப் போ கதிர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியலை.

    இதோ போறேன் சார்.

    இந்நேரம் வரைக்கும் உன்னோட அறையில பேசிட்டிருந்தது யாரு?

    ஒரு நண்பர் சார்.

    போயிட்டாரா?

    இப்பத்தான் போனார்

    சரி. நீ சீக்கிரம் மேடைக்குப் போ.

    கதிர் தலையாட்டிவிட்டு, பூமிக்கு கீழே ரகசியமாய் போன மாடிப்படிகளில் நடந்து உள்ளே போனான். கடைசி படிக்கட்டைத் தொட்டதும், உள்ளே வெளிச்சமாய் அரங்கம்

    Enjoying the preview?
    Page 1 of 1