Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udaintha Nilakkal - Part 1
Udaintha Nilakkal - Part 1
Udaintha Nilakkal - Part 1
Ebook348 pages3 hours

Udaintha Nilakkal - Part 1

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக்கொண்டு நிலாவையும் இவர்கள் உடைத்துவிடக்கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள்' உலவும். ஆனால் இந்த 'உடைந்த நிலா'க்களோ காதலால் 'உடைந்த நிலா'க்கள்!

தலைப்பையே ரசித்தேன்.

தேயும் நிலா, மறையும் நிலா என்ற சொற்றொடர்கள் உண்டு. 'உடையும் நிலா' என்ற சொற்கோர்வை ஆழமானது.

கோவை மாவட்டத்தில் பிறந்து பிரம்மாண்டமாக உயர்ந்த உடுமலை நாராயணக் கவியாரின் மண்ணில் உதயமாகி ஒளிவீசும் நிலா நம் கவிஞர் பா. விஜய். பாக்யா வார இதழில் பல வாரங்களாக இவரெழுதிய கவிதை வரலாற்றை, வரலாற்றுக் கவிதையைப் படித்தேன்... முழுவதுமாய்.

சரித்திர காலங்களில் கால் வைத்து, வெளிநாட்டிலிருந்து உள்நாடு வரை கவிதை வாகனத்தில் ஏறிச் சுற்றுப் பயணம் செய்தது போலிருந்தது. மறைந்து போன, மறைக்கப்பட்ட காதல் நிகழ்ச்சிகளைக் கவிதைகளாய்த் தொகுப்பது இதுதான் முதல்முறை என எண்ணுகிறேன்.

கி.பி., கி.மு.வில் நடந்த நிஜங்களை நம் கண்முன்னே நிறுத்துகிறார் கவிஞர்.

இதைப் படிக்கும் எல்லோருக்கும் தானும் காதலிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வையும், காதல் என்றால் என்னவென்று பொருள் விளக்கத்தையும் கொடுக்கும்.

நல்ல சொல்லாட்சி - சிறந்த கற்பனை வளம் - நிறைந்த அர்த்தம் - ஆகியவையோடு இந்நூல் நெய்யப்பட்டிருக்கிறது.

'உடைந்த நிலா’க்களில் என்னைக் கவர்ந்த நிலா 'கம்பர் செய்த கொலை' என்ற கவிதை! என் இளம் வயதில் பாகவதர் நடித்து வெளிவந்த 'அம்பிகாபதி' படம் பார்த்திருக்கிறேன். அதை மீண்டும் கவிஞர் பா.விஜய் எழுதிய எழுத்தின் மூலம் இரண்டாம் முறையாய்ப் பார்த்த மனநிறைவு ஏற்படுகிறது.

உதடுகளோடு உதடுகள் ஒட்டாமல் முத்தம் தரும் அமராவதியிடம், "தமிழில் உயிரெழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுகள் ஒட்டாதது போல் உன் முத்தம் இருக்கிறதே!'' என்று கூறி, ''நீயே சொல்லிப் பார்... அ... ஆ... இ... ஃ வரை உதடுகள் ஒட்டாது!" என்று அம்பிகாபதி பேசுவதாக அமைத் காட்சியமைப்பும், வசன முறையும் ரசிக்கத் தக்கது.

சங்க காலத்தில் இருந்து இக்கவிதையை எழுதியிருந்தால், குலோத்துங்கச் சோழனே, பரிசில் பல தந்து அரசவைப் புலவராக்கிக் கெளரவித்திருப்பான். அதே போ, 'பெண்மையே சரண’த்தில் சூரியனுக்குச் சொந்தமான பூ தாமரையா? சூரிய காந்தியா?' என்று விவாதத்தோடு கவிதைகளை ஆரம்பித்துத் தீர்ப்புத் தரும் முறை அற்புதமானது.

'முகாரி ராகத்தில்
பூ + தீ = வாலிபம்
வாலிபம் + பூ = காதல்
வாலிபம் + தீ = காமம்
ஆசை + கவிதை = பருவம்
பருவம் + கவிதை = காதல்
பருவம் + ஆசை = காமம்
என்று கவிதைக் கணக்குப் போட்டு என் புருவங்களை மேலுயர்த்தியிருக்கிறார் கவிஞர்.

புதுக்கோட்டைக்கு அருகில் நடந்த ‘வெள்ளையம்மா வெள்ளைச்சாமி' நிஜங்களைத் தத்ரூபமாக அந்தக் கிராமிய மண் வாசனையடிக்கும் வார்த்தைகளோடு பின்னிப் பின்னிக் கவிதை புனைந்திருக்கும் முறை புவியீர்ப்பு போல் ஈர்க்கிறது.

தஞ்சையின் சரபோஜி மன்னரின் வாழ்வைப் பற்றிய கவிதையைப் படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் மனதில் புள்ளி வைத்துக் கோலம் போட்டன. நான் சரபோஜி மன்னரின் நிறுவனத்துப் பள்ளியில்தான் படித்தேன்.

முத்தம்பாள் சத்திரத்தில் அவள் நினைவாக ஒரு கவியரங்கம் நடத்த வேண்டும். உண்மைகளை வெளியே கூற வேண்டும் என்ற நீண்டநாள் ஆசையைக் கவிஞர் பா.விஜய் பூர்த்தி செய்து விட்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவை முத்தம்பாள் சத்திரத்தில் நடத்த வேண்டும் என்பது என் ஆசை!

நான் படித்த பள்ளியின் அஸ்திவாரத்தடியில் மறைந்திருந்த ரகசியத்தை வெளிக்கொணர்ந்த இக்கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

உளிச் சத்தத்தில் ஒரு பெண்ணை வர்ணிக்கையில்
'தலைகீழாய் தொங்கும்
தங்கநிற வினாக்குறி போன்ற
நாசி!
ஒரு விரால் மீன்குஞ்சு
தாராளமாய் வசிக்குமளவு
இருக்கும் தொப்புள்”
என்ற கவிதையில் முந்தைய வரிகளில் கவிஞரின் உவமை நயமும், பிந்தைய வரிகளில் கவிஞரின் வயதுக்குள் இருக்கும் வாலிபத்தின் துள்ளலும் தெரிகிறது. இந்நூலில் ஒவ்வொரு கதையைக் கவியாக்கம் செய்கிற போதும், அதைத் துவங்குகிற முறை வித்தியாசமான முறையாகக் காணப்படுகிறது.

இந்நூல் ஒவ்வொரு கதையைக் கவியாக்கம் செய்கிற போதும், அதைத் துவங்குகிற முறை வித்தியாசமான முறையாகக் காணப்படுகிறது. இந்தப் புதிய முறை கவிதைகளுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

திரைப்படப் பாடல்களில் பாடல் எழுதிப் பவனி வருகிற கவிஞர் பல புதிய படங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கவிஞருக்கு என் வாழ்த்துகள்! அனைவருக்கும் என் வணக்கங்கள்!

இப்படிக்கு
உவமைக் கவிஞர்
சுரதா

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127104408
Udaintha Nilakkal - Part 1

Read more from Pa. Vijay

Related to Udaintha Nilakkal - Part 1

Related ebooks

Related categories

Reviews for Udaintha Nilakkal - Part 1

Rating: 4.388888888888889 out of 5 stars
4.5/5

18 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udaintha Nilakkal - Part 1 - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    உடைந்த நிலாக்கள் - பாகம் 1

    Udaintha Nilakkal - Part 1

    Author:

    பா.விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தாஜ்மஹாலுக்குப் பின்னால்

    2. தீக்குளித்த ரோம்

    3. உளிச்சத்தம்

    4. கல் சிந்திய கண்ணீர்

    5. முகாரி ராகம்

    6. வில்லால் ஒரு வேள்வி

    7. கம்பர் செய்த கொலை

    8. பெண்மையே சரணம்

    9. கேரள மான வீரன்

    10. ஒரு இரத்த வழக்கு

    11. பூப்போட்ட கைக்குட்டை

    12. போறாளே செகப்புக் குயிலு

    13. காதல் எனும் தீவிரவாதம்

    14. இதயத்துக்குள் ஒரு இதயம்

    15. வாழை மரப் பொன்ஞ்சல்

    16. நிலவின் கர்ஜனை

    17. விதியல்ல சதி

    உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் அணிந்துரை

    உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக்கொண்டு நிலாவையும் இவர்கள் உடைத்துவிடக்கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள்' உலவும். ஆனால் இந்த 'உடைந்த நிலா'க்களோ காதலால் 'உடைந்த நிலா'க்கள்!

    தலைப்பையே ரசித்தேன்.

    தேயும் நிலா, மறையும் நிலா என்ற சொற்றொடர்கள் உண்டு. 'உடையும் நிலா' என்ற சொற்கோர்வை ஆழமானது.

    கோவை மாவட்டத்தில் பிறந்து பிரம்மாண்டமாக உயர்ந்த உடுமலை நாராயணக் கவியாரின் மண்ணில் உதயமாகி ஒளிவீசும் நிலா நம் கவிஞர் பா. விஜய்.

    பாக்யா வார இதழில் பல வாரங்களாக இவரெழுதிய கவிதை வரலாற்றை, வரலாற்றுக் கவிதையைப் படித்தேன்... முழுவதுமாய்.

    சரித்திர காலங்களில் கால் வைத்து, வெளிநாட்டிலிருந்து உள்நாடு வரை கவிதை வாகனத்தில் ஏறிச் சுற்றுப் பயணம் செய்தது போலிருந்தது. மறைந்து போன, மறைக்கப்பட்ட காதல் நிகழ்ச்சிகளைக் கவிதைகளாய்த் தொகுப்பது இதுதான் முதல்முறை என எண்ணுகிறேன்.

    கி.பி., கி.மு.வில் நடந்த நிஜங்களை நம் கண்முன்னே நிறுத்துகிறார் கவிஞர்.

    இதைப் படிக்கும் எல்லோருக்கும் தானும் காதலிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வையும், காதல் என்றால் என்னவென்று பொருள் விளக்கத்தையும் கொடுக்கும்.

    நல்ல சொல்லாட்சி - சிறந்த கற்பனை வளம் - நிறைந்த அர்த்தம் - ஆகியவையோடு இந்நூல் நெய்யப்பட்டிருக்கிறது.

    'உடைந்த நிலா’க்களில் என்னைக் கவர்ந்த நிலா 'கம்பர் செய்த கொலை' என்ற கவிதை! என் இளம் வயதில் பாகவதர் நடித்து வெளிவந்த 'அம்பிகாபதி' படம் பார்த்திருக்கிறேன். அதை மீண்டும் கவிஞர் பா.விஜய் எழுதிய எழுத்தின் மூலம் இரண்டாம் முறையாய்ப் பார்த்த மனநிறைவு ஏற்படுகிறது.

    உதடுகளோடு உதடுகள் ஒட்டாமல் முத்தம் தரும் அமராவதியிடம், தமிழில் உயிரெழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுகள் ஒட்டாதது போல் உன் முத்தம் இருக்கிறதே!'' என்று கூறி, ''நீயே சொல்லிப் பார்... அ... ஆ... இ... ஃ வரை உதடுகள் ஒட்டாது! என்று அம்பிகாபதி பேசுவதாக அமைத் காட்சியமைப்பும், வசன முறையும் ரசிக்கத் தக்கது.

    சங்க காலத்தில் இருந்து இக்கவிதையை எழுதியிருந்தால், குலோத்துங்கச் சோழனே, பரிசில் பல தந்து அரசவைப் புலவராக்கிக் கெளரவித்திருப்பான்.

    அதே போ, 'பெண்மையே சரண’த்தில் சூரியனுக்குச் சொந்தமான பூ தாமரையா? சூரிய காந்தியா?' என்று விவாதத்தோடு கவிதைகளை ஆரம்பித்துத் தீர்ப்புத் தரும் முறை அற்புதமானது.

    'முகாரி ராகத்தில்

    பூ + தீ = வாலிபம்

    வாலிபம் + பூ = காதல்

    வாலிபம் + தீ = காமம்

    ஆசை + கவிதை = பருவம்

    பருவம் + கவிதை = காதல்

    பருவம் + ஆசை = காமம்

    என்று கவிதைக் கணக்குப் போட்டு என் புருவங்களை மேலுயர்த்தியிருக்கிறார் கவிஞர்.

    புதுக்கோட்டைக்கு அருகில் நடந்த ‘வெள்ளையம்மா வெள்ளைச்சாமி' நிஜங்களைத் தத்ரூபமாக அந்தக் கிராமிய மண் வாசனையடிக்கும் வார்த்தைகளோடு பின்னிப் பின்னிக் கவிதை புனைந்திருக்கும் முறை புவியீர்ப்பு போல் ஈர்க்கிறது.

    தஞ்சையின் சரபோஜி மன்னரின் வாழ்வைப் பற்றிய கவிதையைப் படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் மனதில் புள்ளி வைத்துக் கோலம் போட்டன.

    நான் சரபோஜி மன்னரின் நிறுவனத்துப் பள்ளியில்தான் படித்தேன்.

    முத்தம்பாள் சத்திரத்தில் அவள் நினைவாக ஒரு கவியரங்கம் நடத்த வேண்டும். உண்மைகளை வெளியே கூற வேண்டும் என்ற நீண்டநாள் ஆசையைக் கவிஞர் பா.விஜய் பூர்த்தி செய்து விட்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவை முத்தம்பாள் சத்திரத்தில் நடத்த வேண்டும் என்பது என் ஆசை!

    நான் படித்த பள்ளியின் அஸ்திவாரத்தடியில் மறைந்திருந்த ரகசியத்தை வெளிக்கொணர்ந்த இக்கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

    உளிச் சத்தத்தில் ஒரு பெண்ணை வர்ணிக்கையில்

    'தலைகீழாய் தொங்கும்

    தங்கநிற வினாக்குறி போன்ற

    நாசி!

    ஒரு விரால் மீன்குஞ்சு

    தாராளமாய் வசிக்குமளவு

    இருக்கும் தொப்புள்"

    என்ற கவிதையில் முந்தைய வரிகளில் கவிஞரின் உவமை நயமும், பிந்தைய வரிகளில் கவிஞரின் வயதுக்குள் இருக்கும் வாலிபத்தின் துள்ளலும் தெரிகிறது.

    இந்நூலில் ஒவ்வொரு கதையைக் கவியாக்கம் செய்கிற போதும், அதைத் துவங்குகிற முறை வித்தியாசமான முறையாகக் காணப்படுகிறது.

    இந்நூல் ஒவ்வொரு கதையைக் கவியாக்கம் செய்கிற போதும், அதைத் துவங்குகிற முறை வித்தியாசமான முறையாகக் காணப்படுகிறது. இந்தப் புதிய முறை கவிதைகளுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

    திரைப்படப் பாடல்களில் பாடல் எழுதிப் பவனி வருகிற கவிஞர் பல புதிய படங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரைக் கண்டுபிடித்துப் பட்டைத் தீட்டி ஒளி வீசச் செய்து, தமிழுக்குத் தந்த திரு. கே.பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி!

    கவிஞருக்கு என் வாழ்த்துகள்! அனைவருக்கும் என் வணக்கங்கள்!

    இப்படிக்கு

    உவமைக் கவிஞர்

    சுரதா

    *****

    1. தாஜ்மஹாலுக்குப் பின்னால்

    (தாஜ்மஹால் என்ற கல் காவியம் இரண்டு காதல் காவியங்களால் உருவானது. ஒன்று ஷாஜஹான், மும்தாஜ். மற்றொன்று ஹரின், திலோத்தி. மும்தாஜ் இறந்ததும் சோகத்தில் ஆழ்ந்த ஷாஜகான் மும்தாஜுக்கு ஒரு மஹால் எழுப்ப வேண்டுமென்று முடிவு கொண்டார். அந்த மஹாலுக்கான மாதிரி ஓவியம் வரையும் பணி அரச சபை ஓவியன் ஹரிணிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹரினின் மனைவிதான் திலோத்தி.)

    காதல் என்பது அஹிம்சை அல்ல;

    தீவிரவாதம்!

    காதல் என்பது சரணாகதியல்ல;

    தன்னை உணருதல்!

    உலகில் எல்லா நதிகளும்

    சிரித்துக் கொண்டுதான் ஓடுகின்றன!

    அழுது கொண்டு ஓடும் ஒரே நதி

    யமுனை நதிதான்!

    மும்தாஜ் என்ற

    முப்பத்தேழு வயதுப் பெளர்ணமி

    உதிர்ந்ததிலிருந்து ஷாஜஹான் கண்களில்

    கண்ணீர் என்ற நட்சத்திரங்கள்

    உதிர்ந்து கொண்டிருந்தன.

    சிறகுகள் இல்லாத

    பறவையாய் மும்தாஜின்

    கல்லறை!

    கல்லறை அருகே பறவையில்லாத

    அறுந்த சிறகாய் ஷாஜஹான்!

    ரத்தத்தில் நுரை பொங்க நுரை பொங்க

    காதலில் ஷாஜகான்

    கண்களின் கரை பொங்கக் கரை பொங்க

    உயிர் சிந்துகிறார்.

    "என் கண் ஒரு மலராய்

    இருந்திருந்தால், கல்லறை மீது

    பறித்து வைத்திருப்பேன்"

    முனகியபடி கல்லறையின்

    கால்மாட்டில் அமருகிறார்.

    ஷாஜகான் கண்களில் திரளுகிற

    ஒரு நட்சத்திரம்

    கல்லறை மீது சொட்டுகிறது

    கல்லறைக் கற்கள் சிலிர்க்கின்றன!

    நடந்தது இதுவே!

    ஷாஜகான் ஒரு கல்லைச் செதுக்கினான்.

    மும்தாஜ் என்ற சிற்பம் கிடைத்தது!

    சிற்பம் உடைந்துவிட்டது!

    செதுக்கியவன் கல்லாகிவிட்டான்!

    பேரரசர் ஜஹாங்கீர் ஷாஜகான்

    உயிர்தெழ வேண்டுமெனில்

    அவர் 'கனவு'

    கனவாகிவிடக் கூடாது.

    மும்தாஜுக்கு மஹால்

    எழுப்பப்பட வேண்டும்!

    மாலை!

    சூரிய கிரணங்கள் விண்ணில்

    வர்ணகலா வித்தை செய்கிறது!

    யமுனை நதி

    மொகலாய சாம்ராஜ்யம் போலவே

    மெளனம் அனுஷ்டிக்கிறது!

    அமைச்சரும் நண்பருமான ஆசிப் வருகிறார்!

    அவருக்குப் புரிகிறது!

    ஷாஜகான் என்ற கப்பல்

    மூழ்கத் துவங்கிவிட்டது!

    அந்தக் கப்பலுக்கு மும்தாஜ்தானே கடல்!

    ஏழு லட்சம் வீரர்களின் தலைவன்

    பாழடைந்து உட்கார்ந்திருக்கிறான்!

    ஒரு ராஜாதி ராஜா தரிசனம்

    சருகாய்க் காட்சி அளிக்கிறது.

    "பேரரசே!'' அழைக்கிறார் ஆசிப்.

    மும்தாஜோடு பேசிக் கொண்டிருந்த

    ஷாஜகான் திரும்புகிறார்!

    மும்தாஜ் காற்றில் கரைகிறாள்!

    பேரரசர் ஒரு பூவை எடுத்து வீசி

    கல்லறையின் மீது அமர்ந்த ஓர்

    ஈயைத் துரத்தி விடுகிறார்!

    மொகலாய சிங்கம்

    உடல் பொருள் ஆவி ஒடுங்கிக்

    காணப்படுவதில் கண் கசிகிறார்

    ஆசிப்!

    ''ஹொசூர்! தங்கள் உடல் நலம்

    பரிசோதிக்க வைத்தியர்

    வந்திருக்கிறார்!''

    ஷாஜகானின் மூடிய விழிகள்

    திறக்கின்றன!

    கண்களுள் வெறுமை!

    ''நீ என் நண்பனா?"

    சிங்கம் கர்ஜிக்கிறது!

    சொல், நீ என் நண்பனா?

    சிங்கம் இருமியபடி உறுமுகிறது!

    ஆசிப் திணறுகிறார்!

    ''நீ என் நண்பனாக இருந்திருந்தால்

    வைத்தியனையா அழைத்து வந்திருப்பாய்?

    எமனையல்லவா அழைத்து வரவேண்டும்!''

    ஷாஜகான் கண்மூடித் திறந்தார்

    வெறுமை மறைந்தது!

    "நண்பனே! எனக்கான வைத்தியன்

    அதோ வருகிறான் பார்!''

    அனைவரும் நோக்கினர்!

    பேரரசர் காட்டிய திக்கில்

    கையில் மாதிரி ஓவியச் சுருளுடன்

    மான்போல் வந்து கொண்டிருந்தான்

    ஓவியன் ஹரின்!

    ''ஆலம்பனா!'' அஐழக்கிறான்

    அந்த இளம் வயது ஓவியன் ஹரின்!

    ஷாஜகான் ஹரினைப் பார்க்கிறார்!

    மும்தாஜ் மஹால் என்கிறார்!

    ஹரின் ரின் வரைந்த மாதிரி ஓவியத்தை

    ஆலம்பனாவிடம் சமர்ப்பிக்கிறான்!

    ஷாஜகான் அதில் மூழ்குகிறார்!

    அனைவரும் அசந்தனர்!

    ஆனால் கண்களைத் தாழிட்டுக்

    கொள்கிறார் அரசர்!

    'இது நான்காவது மாதிரி ஓவியம்!

    இதுவும் சரியில்லையா?'

    ஹரின் வாடுகிறான்!

    ''ஓவியம் அழகாக இருக்கிறது!

    மும்தாஜ் அழகாக இருப்பாள்!

    ஓவியம் சோகமாக இல்லை!

    நான் சோகமாக இருக்கிறேன்!

    மும்தாஜையும் என்னையும் கலந்த

    ஒரு ஓவியம் தேவை!''

    ஷாஜகான் இதைத்தான் சிந்தித்தார்.

    "மும்தாஜ் ஒரு பேரழகி

    அழகை ஓவியமாக்கினேன்!

    மும்தாஜ் ஒரு மொகலாய ரோஜா

    ரோஜாவை ரோஜாவால் வரைந்தேன்!

    ஏன் அரசருக்கும் அது பிடிக்கவில்லை?

    அவர் உயிரை ஏன் ஓவியம்

    தொட்டுத் தடவிச் சிலிர்க்கவில்லை?

    ஹரின் இதைத்தான் சிந்தித்தான்!

    இறகாய்ச் சென்றவன்

    விறகாய் இல்லம் திரும்புகிறான்!

    புதுமண வாழ்வு

    திலோத்தி பூக்கூடையோடு

    வெளிப்பட்டுப் புன்னகைக்கிறாள்!

    பல் தெரியாது புன்னகைக்கும் பெண்

    ஓ... இவள் சாருஹாசினி வகை!

    விறகு மீண்டும் இறகாகிறது!

    ஹரின் திலோத்தியைக் கண்களால்

    கிள்ளுகிறான்! அவள் ஓடுகிறாள்!

    பூக்கூடை கீழே விழுந்து

    பூக்கள் சிதறுகின்றன!

    ஹரின் துரத்துகிறான்!

    இறைந்த பூக்களைக் காண்கிறான்!

    "ஏய்! புன்னகையிலிருந்து பூக்களைக்

    கொட்டிவிட்டு எங்கே ஓடுகிறாய்

    திலோத்தி?''

    திலோத்தி என்ற பதினாறு வயதுப் பாற்கடலை

    ஹரின் என்ற ஓவியனின் உதடுகள்

    குடிக்கத் துவங்குகின்றன.

    பெண் கடலைக் குடித்து

    முடித்தவர் யார்?

    முற்றுப்புள்ளிகளே இல்லாமல்

    கதை எழுத

    முத்தங்களால் மட்டும்தானே முடியும்!

    எழுதினான்... எழுத எழுத

    இசையும் கவிதையும் புறப்பட்டது!

    ஹரினின் உதடுகள்

    விடுதலையாகின்றன.

    திலோத்தியின் மேனி

    விடுவிக்கப்படுகிறது!

    நீலம் பூத்த மங்கிய இருள் விலகி,

    கண்களுள் ஒளி தோன்றுகிறது!

    ஹரின் துள்ளிப் பரப்புகிறான்.

    திலோத்தி எரியும் தன் உதடுகளுக்குப்

    பாலாடை தடவியபடி

    ஹரினைக் குறும்பாய் நோக்குகிறாள்!

    புரிந்த ஹரின் சிரிக்கிறான்!

    ''மலரே! இதழில் காயமா?"

    அவள் வெட்கத்தால் சில்லென்று ஒரு

    கவிதை பூக்கிறாள்!

    மீண்டும் ஒரு மன்மதலீலை

    சொர்க்கத்தின் கதவைத் தட்டுகிறது!

    அப்போது ஒரு ராஜாங்க தலை

    ஓவியன் வீட்டைத் தட்டுகிறது!

    இன்பத்தில் மூழ்கிய தம்பதிகளுக்கு

    கதவு தட்டும் ஓசை எட்டுகிறது!

    ஹரின் மனம் கதவைத் திட்டுகிறது!

    திறந்தான் கதவை - ஓலை!

    பிரித்தான் ஓலையை - செய்தி!

    படித்தான் செய்தியை - ஹரின்

    திகைத்தான்! மிரண்டான்!

    திலோத்தியும் ஓலையைப் படித்தாள்!

    'மொகலாயப் பேரரசு அமைச்சர்

    ஆசிப்பின் கட்டளை!

    இன்னும் ஒரே ஒரு ஓவியம்தான்

    நீ வரையலாம்...

    அது அரசர் மனம்படி அமைய வேண்டும்!

    இல்லையேல்... மரண தண்டனை!'

    இரவு என்னும் இன்பத் தேன்

    மண் தரையில் கொட்டுகிறது!

    ஹரின் திலோத்தியின் மனதை

    தேள்கள் வந்து கொட்டுகிறது!

    விஞ்ஞானம் - நிலாவைக்கல் என்கிறது.

    கவிதைகள் - நிலாவைப் பெண் என்கிறது.

    இரண்டுமே சரிதான்.

    நிலா ஒரு கல்தான்!

    நிலா ஒரு பெண்தான்!

    எப்படியெனில், பெண் ஒரு கல்தான்!

    ஆனால், அந்தக் கல்தான்

    யுகங்களை, அண்ட சராசத்தை,

    மானுடத்தை இந்த நொடிவரை

    மலர வைத்துக் கொண்டிருக்கிறது.

    அந்தக் கல் பல சிற்பிகளைச்

    செதுக்கியிருக்கிறது.

    மரண தண்டனை என்ற தீர்ப்பின்

    அதிர்விலிருந்து மெல்ல வெளியேறிக்

    கல்லானாள் திலோத்தி.

    காதல் - ஹரினுக்குச் சிறகு!

    காதல் - ஷாஜஹானுக்குப் புதை மணல்!

    சிறகடிப்பவனுக்கு

    புதைந்து கொண்டிருப்பவனின் மனோநிலை...

    இமயத்தைவிட இரண்டு அடிகள் அதிக

    தூரத்திலிருக்கிறது என்பதைத்

    திலோத்தி உணர்ந்தாள்.

    'அரசர் அழகான ஓவியம் கேட்கவில்லை

    சோகமான அழகைக் கேட்கிறாரோ!'

    Enjoying the preview?
    Page 1 of 1