Genießen Sie diesen Titel jetzt und Millionen mehr, in einer kostenlosen Testversion

Kostenlos für 30 Tage, dann für $9.99/Monat. Jederzeit kündbar.

Appa

Appa

Vorschau lesen

Appa

Länge:
220 Seiten
1 Stunde
Freigegeben:
Jul 21, 2019
Format:
Buch

Beschreibung

1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி. டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.

“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக் கொள்வீர்களா?”

எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றி வளைக்காமல் நேரடியாக திரு. கோபால் விஷயத்துக்கு வந்துவிட, புருவங்கள் முடிச்சுப்போட சில நிமிடங்களுக்கு யோசித்தேன், பிறகு கேட்டேன்.

“நாயுடு பற்றி எக்கச்சக்க புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. அவரை ஒருதரம்கூடச் சந்தித்திராத என்னால் கூறுவது சாத்தியம் என்று நம்புகிறீர்களா?

துளி தயக்கமின்றி திரு. கோபாலிடமிருந்து பதில் வெளிப்பட்டது. “என் தந்தைக்கு 'அதிசய மனிதர்', 'படிக்காத விஞ்ஞானி', 'விவசாய விஞ்ஞானி', 'தொழில் விஞ்ஞானி', 'படிக்காத மேதை' என்று எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பல பிளஸ் பாயிண்ட், சில மைனஸ் பாயிண்ட்களைக் கொண்ட ஒரு அற்புத மனிதராகத்தான் என்றைக்குமே அவரை நான் உணர்ந்திருக்கிறேன்.

அப்பா சம்பந்தப்பட்ட கோப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அந்தக் கோப்புகளைப் படித்து அவருடைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து விவரங்களைச் சேர்க்க முடிந்தால், அப்பாவை இன்னமும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்; அவருடைய நடவடிக்கை, சிந்தனைகளை இன்னும் பூர்ணமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.

இதை யார் மூலம் நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தபோது, மனதில் வந்து நின்றவர்களில் முக்கியமானவர் நீங்கள். எளிமையாக, அதே சமயத்தில் மனசில் பதியும்படியாக எழுதுவது உங்களுக்குக் கைவந்த வித்தை. அப்பாவை வைத்து இதுநாள்வரை மற்றவர் எழுதிய புத்தகங்களிலிருந்து கட்டாயம் மாறுபட்டு உங்களால் எழுத முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...

தவிர அப்பாவைப் புரிந்து கொள்வதும் அவருடைய கருத்துக்களை ஏற்று நடக்க முயற்சிப்பதும், சரியான வழிகாட்டி இன்றித் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

திரு. கோபால் கூறிய கடைசிக் காரணம் என் மனதில் சின்னதாக ஒரு நீரூற்றைக் கிளப்ப, அடுத்து வந்த நாட்களில் இது சம்பந்தமாய் யோசனை செய்து விட்டு கோயம்புத்தூருக்குச் சென்றேன்.

திரு. கோபாலின் மனைவி சந்திரா, பெண் சாந்தினி, மருமகன் வெங்கட், பிள்ளை ராஜ்குமாரைச் சந்தித்தேன், புகழ்மிக்க கோபால் பாகை, சிந்தனை மாறாமல் சுற்றி வந்தேன். எதிரே இருந்த பிரெஸிடெண்ட் ஹாலில் உள்ள பிரம்மாண்டமான கூடத்தில் திரு. நாயுடுவைப்பற்றி குறிப்புகள் கொண்ட, அம்பாரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். அவர் கையாண்ட, கண்டுபிடித்த நூற்றுக் கணக்கான சாதனங்களை, மியூஸியத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்தேன்.

பார்க்கப் பார்க்க, திரு. நாயுடு அவர்கள் தனக்குள் பல முகங்களை அடக்கிக்கொண்ட வெகு சுவாரஸ்யமான மனிதர் என்பதைத் புரிந்துகொள்ள முடிய, புத்தகம் எழுதச் சம்மதித்தேன்.

மூன்று ஆண்டுகளில் இந்தப் புத்தகம் சம்பந்தமாய், மதிப்புக்கும் அன்புக்கும் உரிய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களிலிருந்து, மூப்பு காரணமாய் வேலையிலிருந்து நின்றுவிட்ட சாதாரண சமையற்காரர் வரை பலரைப் பேட்டி கண்டு, பல ஊர்களுக்குச் சென்று, திரு. நாயுடு லைப்ரரியில் இருந்த அவர் மேற்பார்வையில் பைண்ட் செய்யப்பட்ட அவரைப் பற்றின புத்தகங்களைப் படித்து, தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொண்டபின், அவற்றைத் தொகுத்து எழுத உட்கார்ந்த பிறகே, முதல் முறையாய் எனக்குள் பயம் முளைவிட்டது.

பாடுபட்டு விவரங்களைச் சேகரித்து விட்டோம், சரி… ஆனால் இவற்றை வித்தியாசமாக எப்படித் தொகுப்பது? நின்று, நிதானமாய் யோசிக்கையில் ஒரே ஒரு வழி மூலம்தான் இந்தப் புத்தகத்தை வித்தியாசமாக எழுத முடியும் என்பது விளங்க, என் கருத்தை அடுத்தமுறை திரு. கோபாலைச் சந்தித்தபோது வெளிப்படுத்த, அவர் தீவிரமாய் ஆட்சேபித்தார்.

அவர் விரும்பிய ரீதியில் 'அப்பா' வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை திரு. ஜி. டி. நாயுடு பற்றினதாகவே இருக்கும். அவரை நான் சந்தித்திராத நிலையில் விவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கவே (Authenticity) திரு. கோபால் மூலம் கூற வைக்கும் முயற்சி என்பதை விடாப்பிடியாகச் சொல்லி எப்படியோ திரு. கோபாலைச் சம்மதிக்க வைத்தேன்.

திரு. நாயுடு ஓர் ஆழ்கடல். ஒவ்வொரு தரம் மூழ்கி வெளிப்பட்டபோதும் முத்துக்களும், பழங்களுமாய் விவரங்கள் என் கையில் சிக்கியது நிஜம். அந்தப் பெரிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்த வகையில் ஓர் அழகான, அதே சமயம் வெகுவாக உபயோகிக்கக்கூடிய மாலையாக நான் தொகுக்க முயற்சித்ததின் விளைவுதான் இந்தப் புத்தகம்.

- சிவசங்கரி

Freigegeben:
Jul 21, 2019
Format:
Buch

Über den Autor


Ähnlich wie Appa

Ähnliche Bücher

Buchvorschau

Appa - Sivasankari

http://www.pustaka.co.in

அப்பா

Appa

Author:

சிவசங்கரி

Sivasankari

For more books

http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

முன்னுரை

1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி. டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.

என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக் கொள்வீர்களா?

எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றி வளைக்காமல் நேரடியாக திரு. கோபால் விஷயத்துக்கு வந்துவிட, புருவங்கள் முடிச்சுப்போட சில நிமிடங்களுக்கு யோசித்தேன், பிறகு கேட்டேன்.

நாயுடு பற்றி எக்கச்சக்க புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. அவற்றில் வராத புது விஷயங்களை அவரை ஒருதரம்கூடச் சந்தித்திராத என்னால் கூறுவது சாத்தியம் என்று நம்புகிறீர்களா? தவிர, என்னைத் தேர்ந்தெடுத்து இப்படி ஒரு புத்தகம் எழுதக் கேட்டதற்கு ஏதேனும் விசேஷ காரணங்களும் உண்டா?

துளி தயக்கமின்றி திரு. கோபாலிடமிருந்து பதில் வெளிப்பட்டது.

"என் தந்தைக்கு 'அதிசய மனிதர்', 'படிக்காத விஞ்ஞானி', 'விவசாய விஞ்ஞானி', 'தொழில் விஞ்ஞானி', 'படிக்காத மேதை' என்று எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பல பிளஸ் பாயிண்ட், சில மைனஸ் பாயிண்ட்களைக் கொண்ட ஒரு அற்புத மனிதராகத்தான் என்றைக்குமே அவரை நான் உணர்ந்திருக்கிறேன்.

அதுவும் அவர் மறைவுக்குப் பின்னர், தனியே அமர்ந்து, நடந்து முடிந்த பல சம்பவங்களை மீண்டும் அசைபோட்டபோது, புதுப்புது கோணங்களிலிருந்து அவற்றை, ஏன், அப்பாவையேகூட என்னால் பார்க்க முடிந்தது. அப்பாவைப் பற்றி நான் அறியாத விவரங்கள், கோணங்கள் இன்னும் பலவும் இருக்கலாம் என்பதையும் புரிந்து கொண்ட போது, இது குறித்து ஓர் ஆராய்ச்சி செய்தால் என்ன என்றும் தோன்றியது.

அப்பா சம்பந்தப்பட்ட கோப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவரை நன்கு அறிந்தவர்கள் இன்னமும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கோப்புகளைப் படித்து அவருடைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து விவரங்களைச் சேர்க்க முடிந்தால், அப்பாவை இன்னமும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்; அவருடைய நடவடிக்கை, சிந்தனைகளை இன்னும் பூர்ணமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.

இதை யார் மூலம் நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தபோது, மனதில் வந்து நின்றவர்களில் முக்கியமானவர் நீங்கள். எளிமையாக, அதே சமயத்தில் மனசில் பதியும்படியாக எழுதுவது உங்களுக்குக் கைவந்த வித்தை. அப்பாவை வைத்து இதுநாள்வரை மற்றவர் எழுதிய புத்தகங்களிலிருந்து கட்டாயம் மாறுபட்டு உங்களால் எழுத முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...

தவிர அப்பாவைப் புரிந்து கொள்வதும் அவருடைய கருத்துக்களை ஏற்று நடக்க முயற்சிப்பதும், சரியான வழிகாட்டி இன்றித் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் எழுதப்போகும் இந்தப் புத்தகம், உற்சாகத்தையும், வாழ்க்கையில் தெம்பையும் உண்டு பண்ணக்கூடிய விதத்தில் அமைந்தால், என்னைவிட சந்தோஷிப்பவர் வேறு யாரும் இருக்க முடியாது."

திரு. கோபால் கூறிய கடைசிக் காரணம் என் மனதில் சின்னதாக ஒரு நீரூற்றைக் கிளப்ப, அடுத்து வந்த நாட்களில் இது சம்பந்தமாய் யோசனை செய்து விட்டு கோயம்புத்தூருக்குச் சென்றேன்.

திரு. கோபாலின் மனைவி சந்திரா, பெண் சாந்தினி, மருமகன் வெங்கட், பிள்ளை ராஜ்குமாரைச் சந்தித்தேன், புகழ்மிக்க கோபால் பாகை, சிந்தனை மாறாமல் சுற்றி வந்தேன். எதிரே இருந்த பிரெஸிடெண்ட் ஹாலில் உள்ள பிரம்மாண்டமான கூடத்தில் திரு. நாயுடுவைப்பற்றி குறிப்புகள் கொண்ட, அம்பாரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். அவர் கையாண்ட, கண்டுபிடித்த நூற்றுக் கணக்கான சாதனங்களை, மியூஸியத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்தேன்.

பார்க்கப் பார்க்க, திரு. நாயுடு அவர்கள் தனக்குள் பல முகங்களை அடக்கிக்கொண்ட வெகு சுவாரஸ்யமான மனிதர் என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிய, அவரைச் சந்தித்துப் பழகியிராதது உண்டாக்கிய தயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, புத்தகம் எழுதச் சம்மதித்தேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் புத்தகம் சம்பந்தமாய், மதிப்புக்கும் அன்புக்கும் உரிய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களிலிருந்து, மூப்பு காரணமாய் வேலையிலிருந்து நின்றுவிட்ட சாதாரண சமையற்காரர் வரை பலரைப் பேட்டி கண்டு, இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாய் அளக்கும் தினுசில் பல ஊர்களுக்குச் சென்று, திரு. பெரியபெருமாள் உதவியுடன் ஆயிரக் கணக்கில் இருந்த கோப்புகளைப் படித்து வெவ்வேறு தலைப்புகளில் விவரங்களை அறிந்து, திரு. நாயுடு லைப்ரரியில் இருந்த அவர் மேற்பார்வையில் பைண்ட் செய்யப்பட்ட அவரைப் பற்றின புத்தகங்களைப் படித்து, தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொண்டபின், அவற்றைத் தொகுத்து எழுத உட்கார்ந்த பிறகே, முதல் முறையாய் எனக்குள் பயம் முளைவிட்டது.

பாடுபட்டு விவரங்களைச் சேகரித்து விட்டோம், சரி… ஆனால் இவற்றை வித்தியாசமாக எப்படித் தொகுப்பது? திரு. கோபால், 'உங்கள் புத்தகம் மற்றவற்றிலிருந்து கட்டாயம் மாறுபட்டு இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது' என்றாரே, அதை நிரூபிப்பது எங்ஙனம்?

நின்று, நிதானமாய் யோசிக்கையில் ஒரே ஒரு வழி மூலம்தான் இந்தப் புத்தகத்தை வித்தியாசமாக எழுத முடியும் என்பது விளங்க, என் கருத்தை அடுத்தமுறை திரு. கோபாலைச் சந்தித்தபோது வெளிப்படுத்த, அவர் தீவிரமாய் ஆட்சேபித்தார்.

'என்ன? 'அப்பா' என்கிற தலைப்பில் நான் கூறுவதுபோலப் புத்தகத்தை எழுதப் போகிறீர்களா? முழுக்க முழுக்க அப்பாவைப் பற்றின புத்தகமாக இது இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை; நடுவில் எனக்கு எதற்கு முக்கியத்துவம்? தயவு செய்து இந்த யோசனையைக் கைவிட்டுவிடுங்கள்.'

அவர் விரும்பிய ரீதியில் 'அப்பா' வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை திரு. ஜி. டி. நாயுடு பற்றினதாகவே இருக்கும். அவரை நான் சந்தித்திராத நிலையில் விவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கவே (Authenticity) திரு. கோபால் மூலம் கூற வைக்கும் முயற்சி என்பதை விடாப்பிடியாகச் சொல்லி எப்படியோ திரு. கோபாலைச் சம்மதிக்க வைத்தேன்.

திரு. நாயுடு ஓர் ஆழ்கடல். ஒவ்வொரு தரம் மூழ்கி வெளிப்பட்டபோதும் முத்துக்களும், பழங்களுமாய் விவரங்கள் என் கையில் சிக்கியது நிஜம். அந்தப் பெரிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்த வகையில் ஓர் அழகான, அதே சமயம் வெகுவாக உபயோகிக்கக்கூடிய மாலையாக நான் தொகுக்க முயற்சித்ததின் விளைவுதான் இந்தப் புத்தகம்.

திரு. கோபால் ஆசைப்பட்ட விதத்தில், இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகு, 'அடடா… நமக்கு இப்படி ஒரு தந்தை அமையவில்லையே! என்றாலும் என் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தந்தையாக இருக்க நான் முயலுவேன்' என்றோ; 'என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் என்று சோர்ந்திருந்தேன்; 'அப்பா' புத்தகம் அந்தச் சலிப்பை அகற்றி புது உற்சாகத்தை எனக்கு அளித்துவிட்டது' என்றோ; 'எவருமே குறை, நிறை உள்ளவர்தாம் என்பதையும் குறைகளைக் குறைத்து நிறைகளை வளர்த்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது அவசியம் என்பதையும், இந்தப் புத்தகம் உணர்த்தியது' என்றோ, மனப்பூர்வமாக ஒருசிலரேனும் நினைத்தால், அதுவே இந்தப் புத்தகம் எழுத நான் எடுத்துக்கொண்ட சிரமங்களை நிச்சயம் அர்த்தமுள்ளதாக்கும்.

'அப்பா' உருவாக பேட்டி கொடுத்த, உதவிய ஒவ்வொருவருக்கும் என் விசேஷ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை.

- சிவசங்கரி

பதிப்புரை

இன்றைய இளைய தலைமுறையினரில், குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும்.

முறையான கல்வியோ, பிறரின் உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப் படைத்தவர்கள் பலர் முன்பு இருந்திருக்கிறார்கள். இச்சாதனைகளைச் செய்வது அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக்கூடாது?

இக்கருத்துக்களை மனதில் கொண்டே திரு. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி நாவலாசிரியை திருமதி சிவசங்கரியைக் கேட்டுக் கொண்டேன். சிறந்த கற்பனைக்கும் சீரிய நடைக்கும் பெயர் பெற்ற திருமதி சிவசங்கரியைத் தவிர இப்பணியைச் செய்யப் பொருத்தமானவர் வேறு யார்? இவர், தனது எளிமையான எழுத்தாற்றலால், திரு. நாயுடுவின் வாழ்வில் நடந்த பல அனுபவங்களையும் அருமையாக, அதே சமயம் படிப்பவர்கட்கு சுவையாகவும் தூண்டுதலாகவும் அமையக்கூடிய விதத்தில் தொகுத்தளித்திருக்கிறார். திருமதி சிவசங்கரி, மீண்டும் ஓர் அற்புதமான படைப்பை அளித்திருக்கிறார் என்பதையே இப்புத்தகம் தெளிவாக்குகிறது!

சிற்சில இடங்களில் இப்புத்தகம் தற்பெருமையை லேசாக வெளிப்படுத்துகிறதோ என்ற என் சந்தேகத்தை சிவசங்கரியிடம் வெளியிட்டேன். அதை மறுத்த அவர், மாறாக இப்புத்தகத்தின் குறிக்கோளின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இவ்விடங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டால், அது புத்தகத்தின் அருமையையும் படிப்பவர் மனதில் உண்டாக்கக்கூடிய பாதிப்பையும் சிதைத்துவிடும் என்று அபிப்பிராயப்பட்டார். எனவே, என் சங்கடத்தை ஒதுக்கிவிட்டு அவருடைய கருத்தை நான் ஏற்றேன். இளைய தலைமுறையினர் மட்டுமின்றி ஒருசில பெற்றோருமாவது இப்புத்தகத்தால் பயனுறுவார்கள் என்ற நம்பிக்கையே என் உடன்பாட்டுக்குக் காரணம்!

இப்புத்தகத்தின் கருத்துக்கள் நான் சொல்வதைப் போலவே அமைந்திருந்தாலும், பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் சந்தித்து அவர்களது எண்ணங்களைக் கேட்டறிந்து, என்னுடனும் எனது குடும்பத்தாருடனும் நாட்கணக்கில் அமர்ந்து பேசி விஷயங்களைச் சேகரித்து, திரு. நாயுடு சம்பந்தப்பட்ட ஏராளமான கோப்புகளையும் ஆராய்ந்து குறிப்புகள் எடுத்து, அனைத்தையும் அழகுற புத்தகமாகத் தொகுத்துள்ள பெருமை திருமதி சிவசங்கரிக்கே! அவருக்கு எனது மனப்பூர்வமான நன்றி.

தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து இப்புத்தகம் நல்ல முறையில் வெளிவர உதவிய திரு. நாயுடுவின் அனைத்து நண்பர்களுக்கும் கோப்புகளை ஆராய்ந்து குறிப்புகள் எடுக்க உதவிய திரு. குன்றக்குடி பெரிய பெருமாளுக்கும், திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும், ஓவியர் திரு. மணியம் செல்வனுக்கும் எனது நன்றி…

1

அப்போதெல்லாம் கோபால் பாக் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. வீட்டைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் இல்லை என்றே நினைக்கிறேன். உயர உயரமாய் மரங்கள்… அடர்த்தியாய்... காடு மாதிரி… கொய்யா, மா, ஆரஞ்சு, பிளம்ஸ், பீச் என்று வகைவகையாய் மரங்கள்... கண்ணுக்கெட்டிய வரையிலும் வேறு எந்தக் கட்டடமும் தெரியாமல் மறைத்த மரங்கள்... வனம் மாதிரி இருந்த இடத்தில் பல துஷ்ட மிருகங்களும் வாழ்ந்து வந்ததால் வீட்டை விட்டு வெளியே தனியே போக என்னை அனுமதிக்க மாட்டார்கள். இரண்டு மூன்று ஆட்கள் துணைக்கு வர தோட்டத்துக்குப் போகும் சமயங்களில் பாம்பு, குள்ளநரி, காட்டுப் பன்றி, மயில்கள் என்று பல ஜீவராசிகளைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

வீட்டில் எப்போதும் ஜேஜேவென்று மனிதர்கள் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருப்பார்கள். கிராமத்து ஜனங்கள் ஆகட்டும், வெளியூர் நண்பர்கள் உறவினர்கள் ஆகட்டும், யார் கோயம்புத்தூர் வந்தாலும் தங்குவது கோபால் பாகில்தான். பின் கட்டு பூராவும் கிராமத்துக்காரர்கள் புழங்குவார்கள்; முன்பக்கத்தில் அப்பாவைப் பார்க்க வந்திருக்கும் பெரிய மனிதர்கள், நண்பர்கள்.

அனேகமாய் அப்பா மாலை, இரவு நேரங்களில்தான் வீட்டில் இருப்பார். அவர் ஊரில் இருந்தால் வீடே சுறுசுறுப்பாய்க் காணப்படும். கவர்னரிலிருந்து குடியானவன் வரை அப்பாவை பார்க்க வந்து கொண்டேயிருப்பார்கள் என்பதால், அங்கு போய் தொந்தரவு செய்துவிடுவேன் என்கிற பயத்தில், அம்மாவும் ஆட்களும் என்னை லேசில் வாசல் பக்கத்துக்கு விடவே மாட்டார்கள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நீலகண்ட நாயர்தான் எங்கள் வீட்டுத் தலைமை சமையற்காரர். அவருக்கு நான்கு உதவியாளர்கள். அப்பாவுக்கு வேண்டியதைக் கவனிக்கும் பர்ஸனல் அஸிஸ்டெண்ட் கண்ணன், நடேசன் பிள்ளை, அப்பாவுக்குப் பிரத்யேகமாய் வண்டி ஓட்டும் டிரைவர், இவர்களைத் தவிர இன்னும் பல வேலையாட்கள் வீட்டில் உண்டு; ஆனால் இந்த மூவர்தாம் ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு அப்பாவின் நிழலாக இருந்தவர்கள்.

பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதில் யு.எம்.எஸ். மெயின் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தினது போக, பாக்கி எழுபது எண்பது பஸ்களை அந்த நாட்களில் கோபால் பாக் தோட்டத்தில்தான் இரவில் நிறுத்துவார்கள். மாலை ஏழரை மணி ஆகிவிட்டால் ஒவ்வொரு பஸ்ஸாக பயணத்தை முடித்துக் கொண்டு வந்து சமர்த்தாய் அதனதன் இடத்தில் நிற்பது பார்க்க ஜோராக இருக்கும் என்பதால், பெரியவர்களுக்கும் ஆட்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டுத் தோட்டத்துக்கு ஓடிவிடுவேன். பஸ் டிரைவர்களில் பலர் எனக்காக நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு போன்ற பதார்த்தங்களை அன்போடு வாங்கி வந்து தருவார்கள். ஒவ்வொரு பஸ்ஸிலும் ஏறி

Sie haben das Ende dieser Vorschau erreicht. Registrieren Sie sich, um mehr zu lesen!
Seite 1 von 1

Rezensionen

Was die anderen über Appa denken

0
0 Bewertungen / 0 Rezensionen
Wie hat es Ihnen gefallen?
Bewertung: 0 von 5 Sternen

Leser-Rezensionen