Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Aathmavin Kathai
Oru Aathmavin Kathai
Oru Aathmavin Kathai
Ebook201 pages3 hours

Oru Aathmavin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (நமது தாய்நாடு சுதந்திரம் பெற்ற தினம்) எனது முதல் சிறுகதை "காவேரி” மாத இதழில் வெளிவந்தது. அதற்கும் பின் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறு கதைகள், 1500 கட்டுரைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.

கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோதத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் போன்ற துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி உள்ளேன். இவை வானதி, நர்மதா, இமயம், கலைஞன், சாந்தி, பூவழகி பதிப்பகம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ளன.

"ஆனந்தவிகடன்” வெள்ளி விழா, "கல்கி" வெள்ளி விழா ஆகியவற்றில் சிறுகதைப் பரிசுகளையும், "கலைமகள்" இதழின் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசையும் பெற்றிருக்கிறேன். ''இலக்கியச் சிந்தனை" எனது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ம் ஆண்டு எனது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கெளரவித்தது.

பத்திரிகை உலகில் எஸ்.எஸ். வாசன், கி.வா. ஜகந்நாதன், நா. பார்த்தசாரதி, மணியன், ரா. கணபதி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். இப்போதும் “ஞான ஆலயம்”, "ஹெல்த்”, "சிநேகிதி” மாத இதழ்கள் எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

ஆன்மீக உலகில் காஞ்சி மகாப் பெரியவர்கள், ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், அஹோபில மடம் 44வது மடம் ஜீயர் சுவாமிகள், உடுப்பி பேஜாவர் மடசுவாமிகள், சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோருடன் இருந்து ஆன்மிகப் பணிகளை ஆற்றி ஆசிகளைப் பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. காஞ்சி மகா பெரியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை (ஜகம் புகழும் ஜகத்குரு), சுவாமிகள் 100வது ஆண்டு தொடக்கத்தில் தொகுத்து எழுதி உள்ளேன். காஞ்சி காமகோடி மடத்தின் ஆசிகளுடன் இதை ஒமர்ந்தூரில் அன்றைய பாரதப் பிரதமர் திரு. பி.வி. நரசிம்மராவ் வெளியிட்டார்கள்.

ஆன்மிகத் துறையில் சுமார் 200 ஆன்மிகப் பெரியோர்களைத் தரிசித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி “ஞானமன்றம்" என்ற தலைப்பில் ஞானபூமியில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி உள்ளேன்.

2003-04 ம் ஆண்டுகளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் நூல்கள் ஆறு (தெய்வவாக்கு - 1, 2, 3, பாகங்கள், அருளுரைகள் 1, 2 பாகங்கள். அருளாசிக் கட்டுரைகள் -1) என்னால் தொகுக்கப்பட்டு ஸ்வர்ண ஜெயந்தி பீபிரோகண விழாவின் போது வெளியிடப்பட்டது. அப்போது பூஜ்யஸ்ரீ கவாமிகள் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து உள்ளார்கள்.

சுமார் 2000 வாசகர்கள் கேள்விகளுக்கு, “இந்து மதம் பதிலளிக்கிறது”, “மகான்கள் பதிலளிக்கிறார்கள்" என்ற தலைப்புகளிலும், ''அமைதியான வாழ்க்கைக்கு ஆன்மிக வழிகாட்டி” என்ற தொகுப்பிலும், ஞானியர்களின் பதில்கள் மூலம் தெளிவுரை அளித்துள்ளேன்.

"ஞானபூமி" ஆன்மிக மாத இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளேன்.

“உங்கள் நலம்” மருத்துவ மாத இதழின் ஆசிரியராக இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றி உள்ளேன். சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளேன்.

"ஞானச்சுடர்" ஆன்மிக மாத இதழின் ஆசிரியராகச் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றி உள்ளேன்.

இப்போதும் ஆன்மிக, மருத்துவ மாத இதழ்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். சுவாமி கமலாத்மானந்தர், கி.வா.ஜ, வானதி திருநாவுக்கரசு ஆகியோர் என்னுடன் பழகிய நண்பர்கள்.

பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாகக் கடந்து நாற்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளேன். சமுதாய நலப் பணிகளிலும் பங்கு பெற்றுள்ளேன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றில் தலைமை இஞ்சினீயர் என்ற முறையில் பணியாற்றி நல்லாசிகளை, பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504542
Oru Aathmavin Kathai

Read more from Lakshmi Subramaniam

Related to Oru Aathmavin Kathai

Related ebooks

Reviews for Oru Aathmavin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Aathmavin Kathai - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    ஓர் ஆத்மாவின் கதை

    Oru Aathmavin Kathai

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எழுத்துலக அனுபவம்

    கற்பென்பதை...

    கதவின் மேல் ஒரு கை இருக்கிறது!

    ஓர் ஆத்மாவின் கதை

    கற்பனைக் குழந்தை

    பரிசு

    தனிமை

    ஏன் புரியவில்லை?

    ஞாபகம்

    உணர்ச்சிக்கு இடம் இல்லை!

    உனக்குப் பிடித்த ஒன்று

    பிராத்தனை

    உருவமும் நிழலும்

    எழுத்துலக அனுபவம்

    1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (நமது தாய்நாடு சுதந்திரம் பெற்ற தினம்) எனது முதல் சிறுகதை காவேரி மாத இதழில் வெளிவந்தது. அதற்கும் பின் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

    சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறு கதைகள், 1500 கட்டுரைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.

    கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோதத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் போன்ற துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி உள்ளேன். இவை வானதி, நர்மதா, இமயம், கலைஞன், சாந்தி, பூவழகி பதிப்பகம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ளன.

    ஆனந்தவிகடன் வெள்ளி விழா, கல்கி வெள்ளி விழா ஆகியவற்றில் சிறுகதைப் பரிசுகளையும், கலைமகள் இதழின் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசையும் பெற்றிருக்கிறேன். ''இலக்கியச் சிந்தனை" எனது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ம் ஆண்டு எனது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கெளரவித்தது.

    பத்திரிகை உலகில் எஸ்.எஸ். வாசன், கி.வா. ஜகந்நாதன், நா. பார்த்தசாரதி, மணியன், ரா. கணபதி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்.

    இப்போதும் ஞான ஆலயம், ஹெல்த், சிநேகிதி மாத இதழ்கள் எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

    ஆன்மீக உலகில் காஞ்சி மகாப் பெரியவர்கள், ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், அஹோபில மடம் 44வது மடம் ஜீயர் சுவாமிகள், உடுப்பி பேஜாவர் மடசுவாமிகள், சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோருடன் இருந்து ஆன்மிகப் பணிகளை ஆற்றி ஆசிகளைப் பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. காஞ்சி மகா பெரியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை (ஜகம் புகழும் ஜகத்குரு), சுவாமிகள் 100வது ஆண்டு தொடக்கத்தில் தொகுத்து எழுதி உள்ளேன். காஞ்சி காமகோடி மடத்தின் ஆசிகளுடன் இதை ஒமர்ந்தூரில் அன்றைய பாரதப் பிரதமர் திரு. பி.வி. நரசிம்மராவ் வெளியிட்டார்கள்.

    ஆன்மிகத் துறையில் சுமார் 200 ஆன்மிகப் பெரியோர்களைத் தரிசித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி ஞானமன்றம் என்ற தலைப்பில் ஞானபூமியில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி உள்ளேன்.

    2003-04 ம் ஆண்டுகளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் நூல்கள் ஆறு (தெய்வவாக்கு - 1, 2, 3, பாகங்கள், அருளுரைகள் 1, 2 பாகங்கள். அருளாசிக் கட்டுரைகள் -1) என்னால் தொகுக்கப்பட்டு ஸ்வர்ண ஜெயந்தி பீபிரோகண விழாவின் போது வெளியிடப்பட்டது. அப்போது பூஜ்யஸ்ரீ கவாமிகள் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து உள்ளார்கள்.

    சுமார் 2000 வாசகர்கள் கேள்விகளுக்கு, இந்து மதம் பதிலளிக்கிறது, மகான்கள் பதிலளிக்கிறார்கள் என்ற தலைப்புகளிலும், ''அமைதியான வாழ்க்கைக்கு ஆன்மிக வழிகாட்டி" என்ற தொகுப்பிலும், ஞானியர்களின் பதில்கள் மூலம் தெளிவுரை அளித்துள்ளேன்.

    ஞானபூமி ஆன்மிக மாத இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளேன்.

    உங்கள் நலம் மருத்துவ மாத இதழின் ஆசிரியராக இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றி உள்ளேன். சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளேன்.

    ஞானச்சுடர் ஆன்மிக மாத இதழின் ஆசிரியராகச் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றி உள்ளேன்.

    இப்போதும் ஆன்மிக, மருத்துவ மாத இதழ்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். சுவாமி கமலாத்மானந்தர், கி.வா.ஜ, வானதி திருநாவுக்கரசு ஆகியோர் என்னுடன் பழகிய நண்பர்கள்.

    பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாகக் கடந்து நாற்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளேன். சமுதாய நலப் பணிகளிலும் பங்கு பெற்றுள்ளேன்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றில் தலைமை இஞ்சினீயர் என்ற முறையில் பணியாற்றி நல்லாசிகளை, பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

    கற்பென்பதை...

    உமையிடம் மீனாட்சி மறுபடி கடிதத்தை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொன்னாள். அன்றைய இரயிலில்தான் அவர் - உமையின் தகப்பனார் வருகிறார், ஒன்பது மணி இரயிலில். அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவார்.

    சாதாரண வருகை இல்லை அது. உமை கைக் குழந்தையாக இருந்தபோது அவர் கடைசியாக மலேயாவுக்குப் போனது. அப்பால் அவரால் திரும்ப முடியவில்லை. இப்போது அங்கே வியாபாரத்தை முடித்தாயிற்று. இனிமேல் அங்கே தங்கும் உத்தேசமில்லை. அதனால்தான் ஊர் திரும்புகிறார்.

    உமைக்கு விவரம் தெரிந்து விட்ட வயதுதான். தான் சொல்லாமலே அவளுக்குத் தாயின் தனிமை புரியும் இப்போது. ஒரு வயது என்று வந்து, குடித்தனம் என்றால், என்னவென்று அறிந்து கொண்டு விட்ட பருவம். அவளுக்குச் சொல்ல வேண்டியதில்லை; தனக்குள் இப்போது விடியும் ஆறுதலை.

    உமையின் வளர்ச்சியை அவ்வப்போது கடிதத்தில் எழுதியதோடு சரி. அவ்வப்போது சுருக்கமாய்ப் பதில் கடிதம் வரும். நண்பர் மூலம் தகவலும் பணமும் வரும். கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்த சொத்து. ஒரு காரை வீடும், கொஞ்சம் நிலமும் தேறி விட்டன. இங்கே மறுபடியும் ஏதோ ஒரு வியாபாரத்தைத் தொடங்க மீண்டும் பணமும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

    தந்தை திரும்பி வந்து தன்னுடனேயே இருக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் உமையின் மகிழ்ச்சி சொல்லி முடியாது. அவள் அவரைப் புகைப்படத்தில் பார்த்த தோடு சரி. கடிதங்களில் அவர் கையெழுத்தை வைத்துக் கொண்டு அபூர்வமாக ஆராய்ந்து கொண்டிருப்பாள். முதல் தடவையாக இப்போதுதான் அவள் அவரைச் சந்திக்கப் போகிறாள். காலையிலிருந்து வீட்டில் உள்ளுக்கும் வெளிக்குமாக நிலைகொள்ளாமல் அவள் நடந்து கொண்டிருந்த நிலையிலேயே அந்த அமைதியின்மை தெரிந்தது.

    கோவில் மணி அடித்தது. மீனாட்சி, மாடத்தில் விளக்கேற்றிப் பூஜைக்கு உட்கார்ந்து விட்டாள். அன்றைக்கென்று தனியான சமையலுக்கு ஏற்பாடாகி இருந்தது. தெரிந்தவர்களும் பெரியவர்களுமாகப் பத்துப்பேர். எதிர் வீட்டுக்காரர்தான் இரயிலடிக்குப் போயிருக்கிறார், வண்டியைப் பூட்டிக் கொண்டு. விளக்கில் சுடர் குதித்தது. அவள் மனத்திலும் சிறு அகல் ஏற்றி வைத்தாற்போல வெளிச்சம். அவர்களுக்கு மணமானது, அவர்கள் நன்றாக வாழ்ந்தது, உமை அவர்களிடையே தோன்றியது, எதுவும் பெரிதில்லை. இப்போது தொடங்கப் போவது புதிய வாழ்க்கை. வருஷங்களைத் தாண்டி வந்து விட்ட பிறகு ஒருவருடைய உணர்ச்சிகள் மற்றவருக்குத் துணையாக, அநுதாபத்துடன் வழி நடத்தப் போகும் வாழ்க்கை. அந்த எதிர்நோக்கில் அவள் மனம் உயர்ந்தது.

    வாசலில் வண்டி வந்து நின்ற சத்தம்.

    கைப் புத்தகத்தைக் கீழே போட்டுவிட்டு நாலெட்டாய் வாசற்படியில் போய் நின்றாள் உமை. மீனாட்சி சற்றுப் பின் தள்ளித் தூண் மறைவில் நின்றுகொண்டாள். சண்முகம் வண்டியிலிருந்து இறங்கிச் சாமான்களை ஒவ்வொன்றாய் உள்ளே அனுப்பினார். உமை அவரையே வைத்த கண்

    வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    முன் அறையில் புகைப்படத்தில் இருக்கும் உருவத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வயதான களை தோன்றி விட்ட முகம். வழுக்கை விழுந்த தலை. பொட்டில் பழுத்த நரை. லேசாய்க் குழி விழுந்த கன்னம். அவருடைய இளமை மங்கி விட்டது. அதன் வேகம் மீனாட்சிக்குக் கிடைக்கவில்லை. வேலை அதை உறிஞ்சிக் கொண்டு விட்டது. நினைத்தபோது அவளுக்கு ஏதோ ஓர் ஏக்கம் கண்ணில் வந்து நின்றது.

    உமையைத் தோளில் கை வைத்து இழுத்து அணைத்தபடி உள்ளே போனார் சண்முகம். நாற்காலியில் உட்கார்ந்தவர், சிறிது நேரம் உடுப்புக்களைக் கழற்றக்கூட மனம் இல்லாமல் இருந்தார். அவளைப் பிடித்த பிடி தளரவில்லை. அத்தனை நாள் பிரிவும் அந்தச் சிறு நேர ஒட்டுதலில் பரிவாய் வடிந்து கொண்டிருந்தது. தலை மயிரை நீவிக் கொடுத்து, விரல்களை ஒவ்வொன்றாய்ப் பிரித்து, ஆதரவாய் விசாரிக்கும் குரலில் அன்பு மணமாய்க் கமழ்ந்தது.

    அவர் எழுந்து குளிக்கப் போய் விட்டார். தந்தை வாங்கிக் கொண்டுவந்த பட்டுப் புடவை உமையின் மடியில் கிடந்தது. கத்தரிப் பூ நிறம். அவள் பால் நிற வெண்மைக்கு ஏற்றதைப் போல. அந்தப் புடவையின் மென்மையை நீவி உணர்ந்த போது தன் மனத்துக்குத் தானே ஏதோ ஒரு தேறுதல் சொல்லிக் கொள்வதுபோல் இருந்தது.

    தந்தைக்கு இவ்வளவு தூரம் முதுமை வந்திருக்கும் என்று அவள் கற்பனை செய்து பார்க்கவில்லை. இரத்தம் சுண்ட உழைத்து அவர் தன் வாழ்க்கையின் இன்பப் பகுதிகளை வேறு எங்கேயோ கொடுத்து விட்டார். தாய்க்குக் கிடைக்கவில்லை அது. அவள் இளமை இன்னும் மங்கவில்லை. ஆனாலும் என்ன? அவள் இளமை முழுவதும் பாலை நிலவாய் அநுபவிப்பாரின்றிக் கழிந்துவிட்டது. கணவன் அன்பையோ, பாராட்டுதலையோ அவள் உணர்ந்து மகிழ்ந்ததில்லை.

    உமை எழுந்து கண்ணாடியின் முன் முழு உயரம் தெரிய நின்றுகொண்டாள். மார்புக்குக் கீழே புடவையை நீளத் தொங்கவிட்டு, ஒத்திட்டும் பார்த்துக் கொண்டாள். பளபளக்க அழுந்த வாரிய கூந்தல். நடுவகிடு கிளை பிரியுமிடத்திலும், புருவ மத்தியிலும் குங்குமம். மேலாக்கின் வெளியே எட்டிப் பார்த்த பவழமாலை. விரல்களிலும் உள்ளங்கையிலும் பற்றி இருந்த மருதோன்றியின் சிவப்பு. இளமை படரும் உடற்கட்டு.

    தன் பூரிப்பில் தானே மகிழ்ந்தவளாய் ஒரு கணம் நின்றாள். அவள் தாய், அவள் இப்படி நிற்கும்போது சொல்வ துண்டு; அந்த நாளில் நான் இதைப்போலவேதான் இருப்பேன். அவளுக்குப் பெருமையாகத்தான் இருக்கும் அது. அவள் அழகுதான். தந்தையும் அதற்கேற்றவராகத்தான் இருந்திருப்பார் அப்போது. அவர்களுக்கிடையே பங்கிட்டுக் கொண்ட இளமைத் துடிப்பு, பிரியம் கலந்த அனுபவங்கள், ஆசை நெகிழ்ந்த நேரங்கள், அவற்றை அவளால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது இப்போது.

    சொற்ப நேரம் அழகு மின்னி மறையும் வானவில்லாகத் தான் போய்விட்டது அது. பிரிவைப் பொறுத்துக் கொண்டு அவள் தாய் வாழ்ந்துவிட்ட தனிமையில் அவை ஒடுங்கி விட்டன. பெண்மையின் ஆசைகள் அந்தத் தவத்தின் வேகத்தில் எரிந்துவிட்டன. இத்தனை நாள் புரியாவிட்டாலும் இப்போது புரிகிறது. அவளுக்குப் புரியக் கூடிய வயதுதான்.

    அவள் தாயைப்பற்றி மட்டும்தான் நினைக்கிறாள். அவள் தந்தை? அவரும் அப்படி வாழ்ந்தவர்தானே! இந்த விரகத்தை அவரும் பகிர்ந்து கொண்டவர்தானே? அந்த நினைவு எழுந்ததும் அவளுக்கு மறுபடியும் தந்தையைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. உள்ளே போகத் திரும்பினாள். அங்கே வாசற்படியில் அவள் தாய் அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

    ஒரு மாதம் கழிந்துவிட்டது.

    புதிதாகப் பார்த்தவர்களானாலும்கூட, அவளுக்குத் தன் தந்தையிடம் பழகத் தயக்கம் எதுவும் இல்லை. அவ்வளவு நாட்களாக அடக்கிச் சேர்த்து வைத்திருந்த பரிவு அனைத்தையும் இப்போது அவர் அள்ளிக் கொட்டிவிட்டது போலிருந்தது. அவள் மனத்தில் இருப்பவற்றை, அந்த வயதின் ஆசைகளைக் கண்டு கொண்டு விட்டவரைப்போலப் புன்னகை புரிவார். அந்தச் சமயங்களில் அவர் முகம் பலகணி திறந்ததுபோலத் திடீரென வெளிச்சமாகும்.

    ஆனால் அந்தத் தடையற்ற அன்பின் ஓட்டம் அவருக்கு அவள் தாயிடம் பழகும்போது இல்லை. அவர்களுக்கிடையே இன்னும் ஏதோ ஒரு திரை தொங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து வந்துவிட்ட பிறகும்கூட, இன்னும் அவர்களிடையே நெருக்கம் இல்லை. அவளுடைய மனத்தில் விழுந்த அச்சு சரியாக

    Enjoying the preview?
    Page 1 of 1