Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagam Enbathu...
Ulagam Enbathu...
Ulagam Enbathu...
Ebook153 pages59 minutes

Ulagam Enbathu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறு கதைகள் எழுதுவது என்பது ஒரு கலையா இல்லையா என்பதை எழுதுகிறவன் சொல்ல முடியாது. ஆனால் எண்ணத்தை வெளிப்படுத்த முயல்கிற, நெருக்கமானவர்களோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிற ஒரு தவிப்பு, ஆர்வம், இவை கலந்த ஓர் இனிய அனுபவம் என்றே நான் உணர்கிறேன்.

'கதை ஆசிரியர் எதற்காக எழுதுகிறார்?' என்பதைப் பற்றி வெகு ரஸமாக விளக்கியிருப்பவர் என்னுடைய வணக்கத்துக்குரிய அமரர் கல்கி. உலகத்தைப் படைப்பதில் கடவுள் காணுகிற ஆனந்தம், கதை எழுதுகிற ஆசிரியனுக்கும் கிடைக்கிறது என்பார் அவர். (பார்க்க... அமரர் கல்கி எழுதிய விமர்சனங்களின் தொகுப்பான 'படித்தேன்... ரஸித்தேன்')

என்னுடைய முதல் சிறுகதை - அச்சில் வெளியானது 1973 ஆம் ஆண்டில். நூற்றுக்கணக்கில் எழுதி விட்டேன் என்று என்னால் சொல்லிக் கொள்ள முடியாது. இருப்பினும் தொடர்ந்து அரிதாகவேனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரைகள், பத்திரிகைப் பேட்டிகள் என்று பல துறைகளிலும் தடம் பதிக்கும் இதழாளனாகப் (Journalist) பரிமாணம் அடைவதில் உள்ள சங்கடம் இதுதான். ஆனால் நான் இதழியல் பணிகளோடு விட்டு விடாமல் படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து இருந்து வருகிறேன். இது என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பு.

வாழ்க்கையின் நளினங்களை மட்டும் அப்படியே உணர்ந்து உள்வாங்கி எழுதுகிறேன். எனவே பரபரப்பான எழுத்தாளன் என்று என்னால் முகம் காட்ட முடியவில்லை. நளினங்களை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதும்; அவலங்கள் வேண்டாம் என்பதை என்னுடைய எழுத்துக்கள் அனைத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளேன். அந்த வகையில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'உலகம் என்பது...', 'செவ்வரளி பூத்த வீடு', 'மறுபடியும் என் புல்வெளியில்’ போன்றவை, எழுதியபோது எனக்குத் தந்த மகிழ்ச்சியைவிட, அச்சில் படித்தபோது பேரானந்தத்தை நல்கின.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127904460
Ulagam Enbathu...

Read more from Subra Balan

Related to Ulagam Enbathu...

Related ebooks

Reviews for Ulagam Enbathu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagam Enbathu... - Subra Balan

    http://www.pustaka.co.in

    உலகம் என்பது...

    Ulagam Enbathu…

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. செவ்வரளி பூத்த வீடு

    2. உலகம் என்பது...

    3. பாதையெல்லாம் பூவிதழ்கள்!

    4. அறுபதுக்கு நாற்பது

    5. மரத்தடியில்...

    6. முறைப்பு

    7. தேபேந்திரநாத்தின் குறிப்பேடு

    8. 'என் பெயர் குட்டிப் பிசாசு...'

    9. ஒப்பீடுகள்

    10. மனசில் 'மளக்'

    11. மிருத்யுஞ்சயனின் சந்தேகங்கள்...

    12. மரங்களும் கவிதை சொல்லும்...!

    13. மிரட்டும் விழிகள்

    14. முப்பதாம் முழுநிலவில்...

    15. மறுபடியும் என் புல்வெளியில்

    கவிஞர் வாலியின் அணிந்துரை

    திரு சுப்ர பாலன் அவர்கள், எனக்கு வானதி பதிப்பகம் வழங்கிய கொடை.

    ஆம்; அவரது அறிமுகம் அங்குதான் ஏற்பட்டது. கொடை என்று சொல்லுமளவிற்கு அவரது பண்புகள் என்னை வெகுவாக ஈர்த்தன.

    நான் திருச்சி மாவட்டம்; அவர் புதுக்கோட்டை மாவட்டம். அந்தக் காலத்தில் அப்படித்தான் இருந்தது.

    ஆக, பக்கத்து மாவட்டக்காரர் என்ற வகையிலும் ஒரு பாந்தவ்யம் உண்டு.

    இவை தவிர அவருடைய சிறுகதைகளுக்கு அணிந்துரை வழங்குமளவு எனக்கு ஒரு சின்னத்தகுதி உண்டு.

    நானும் என் வாழ்க்கையைச் சிறுகதையில் தொடங்கியவன்தான்.

    1952 ஆகஸ்ட் மாதக் கலைமகளில் 'பிராந்தி' என்கிற சிறுகதைதான் என் முதல் கதை. பிறகு சில காலத்திலேயே நான் இசைத் தமிழுக்கு மாறிவிட்டேன். அது கவிதையில் என்னை இறக்கிவிட்டது.

    திரு. சுப்ர பாலனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும்போது, பழைய நினைவுகளை யெல்லாம் என் மனம் அசைபோட ஆரம்பித்தது.

    சிறுகதைக்குக் கருவாக, ஒரு எதிர்பாராத முடிவு இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் படித்து முடிக்கையில், சட்டையில் முதல் நாள் தடவிய வாசனை திரவியம் - மறு நாளும் லேசாக மணந்து கொண்டிருப்பது போல் -

    ஒரு நல்ல சிறுகதையின் முடிவு, நம் நினைவில் சிலநேரம் மணம் வீசி நிற்றல் வேண்டும்.

    ஒரு சிறுகதை எழுத - ஒரு சிறு சம்பவமே போதும். அதை எவ்வளவுக்கெவ்வளவு இயல்பாகச் சொல்லுகிறோமோ - அந்த அளவு நம் மனத்தில் ஒட்டிக் கொள்ளும்.

    ஒரு சிறு பொறியை, ஊதிக் கனல் வளக்கும் ஆற்றல்தான் சிறுகதை எழுதுவோருக்கு வேண்டும்.

    அந்த ஆற்றல் என் அருமை நண்பர் திரு. சுப்ர பாலன் அவர்களிடம் அபரிமிதமாக இருக்கிறது. நான் அனைத்துக் கதைகளையும் படித்து விட்டுத்தான் சொல்கிறேன்.

    அவருக்கு அந்நாளைய கல்கியைப்போல் - ஆற்றொழுக்காக - அநாவசிய படாடோபங்களின்றி - வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அழகு கைவந்த கலையாயிருக்கிறது.

    தனது மொத்த புத்திசாமர்த்தியத்தையும் இறக்கி வைத்து ஒரு படைப்பைப் படைத்தலினும் - வாசகனைத் தன்னோடு அழைத்துச் செல்லும் அளவுக்கு ஒரு எளிவந்த தன்மை எழுத்தில் இருக்க வேண்டும்.

    'செவ்வரளி பூத்த வீடு', 'உலகம் என்பது', 'மனசில் 'மளக்' ஆகிய கதைகள், வாசித்த பிறகும் அவற்றின் ஈரம் உலராமல் என் இதயம் சிறிது நேரம் ஒருவகைக் கச கசப்பில் இருந்தது.

    சுருங்கச் சொன்னால்.

    'மணிக்கொடி' காலத்து பி.எஸ்.ராமையாவின் சிறு கதைகளையும், பின்னாளில் பிரபலமான திரு. சுகி. சுப்ரமணியத்தின் சிறுகதைகளையும் படிப்பது போன்ற –

    ஓர் உணர்வு; ஒரு நிறைவு - இந்தச் சிறுகதைகளில் இழையோடுகின்றன.

    திரு. சுப்ர பாலன் அவர்கள், எழுத்துலகிற்குப் புதியவரல்ல.

    இதுதான் ஆதவன் என்று - நான் அகல்விளக்கு ஏற்றிக் காட்டவேண்டிய அவசியமில்லை.

    இருப்பினும் -

    நல்ல சிறு கதைகள் இன்றைய ஏடுகளில் காணக் கிடப்பது அரிதாயிருக்கும் காலத்தில் -

    இதுபோன்ற ஒரு சிறந்த சிறுகதைத் தொகுப்பை வானதி அதிபர் வெளியிடுவது சாலச்சிறந்த பணியாகும்.

    ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டிய சிறுகதைக் தொகுப்பு இது.

    மானுட உணர்வு அனைத்துச் சிறுகதைகளிலும் அடி நாதமாக ஒலிக்கின்றது.

    வாசகர்கள் இதை வரவேற்பார்கள், வாழ்த்துவார்கள் என்பதில் எனக்கு அய்யமில்லை.

    நல்ல நண்பர் திரு சுப்ர பாலன் அவர்களுக்கு என் அன்பும் மரியாதையும்.

    கவிஞர் வாலி

    *****

    என்னுரை

    சிறு கதைகள் எழுதுவது என்பது ஒரு கலையா இல்லையா என்பதை எழுதுகிறவன் சொல்ல முடியாது. ஆனால் எண்ணத்தை வெளிப்படுத்த முயல்கிற, நெருக்கமானவர்களோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிற ஒரு தவிப்பு, ஆர்வம், இவை கலந்த ஓர் இனிய அனுபவம் என்றே நான் உணர்கிறேன்.

    'கதை ஆசிரியர் எதற்காக எழுதுகிறார்?' என்பதைப் பற்றி வெகு ரஸமாக விளக்கியிருப்பவர் என்னுடைய வணக்கத்துக்குரிய அமரர் கல்கி. உலகத்தைப் படைப்பதில் கடவுள் காணுகிற ஆனந்தம், கதை எழுதுகிற ஆசிரியனுக்கும் கிடைக்கிறது என்பார் அவர். (பார்க்க... அமரர் கல்கி எழுதிய விமர்சனங்களின் தொகுப்பான 'படித்தேன்... ரஸித்தேன்')

    என்னுடைய முதல் சிறுகதை - அச்சில் வெளியானது 1973 ஆம் ஆண்டில். நூற்றுக்கணக்கில் எழுதி விட்டேன் என்று என்னால் சொல்லிக் கொள்ள முடியாது. இருப்பினும் தொடர்ந்து அரிதாகவேனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரைகள், பத்திரிகைப் பேட்டிகள் என்று பல துறைகளிலும் தடம் பதிக்கும் இதழாளனாகப் (Journalist) பரிமாணம் அடைவதில் உள்ள சங்கடம் இதுதான்.

    ஆனால் நான் இதழியல் பணிகளோடு விட்டு விடாமல் படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து இருந்து வருகிறேன். இது என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பு.

    வாழ்க்கையின் நளினங்களை மட்டும் அப்படியே உணர்ந்து உள்வாங்கி எழுதுகிறேன். எனவே பரபரப்பான எழுத்தாளன் என்று என்னால் முகம் காட்ட முடியவில்லை. நளினங்களை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதும்; அவலங்கள் வேண்டாம் என்பதை என்னுடைய எழுத்துக்கள் அனைத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளேன். அந்த வகையில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'உலகம் என்பது...', 'செவ்வரளி பூத்த வீடு', 'மறுபடியும் என் புல்வெளியில்’ போன்றவை, எழுதியபோது எனக்குத் தந்த மகிழ்ச்சியைவிட, அச்சில் படித்தபோது பேரானந்தத்தை நல்கின.

    *****

    1. செவ்வரளி பூத்த வீடு

    ஒன்றரை கிரவுண்ட் பரப்பில், தீப்பெட்டி அடுக்கு மாதிரி இல்லாமல் சொந்தமாய் ஒரு வீடு கிடைக்குமானால் அதுதான் சுவர்க்கம், இந்த நாட்களில். தென்னைமரம், கேணி, கத்தும் குயிலோசை, தென்றல் இப்படியெல்லாம் பாரதிக்கிருந்த 'பேராசை' எதுவும் நமக்கு இல்லை.

    போகிற போதும், வருகிற போதும், வம்புக்கு இழுக்கிற மாதிரி கண்களில் படுகிறது அந்த வீடு. நுழைவாயில் அருகே சுவரில் பதித்த அழகான வெள்ளைப் பளிங்கில் 'காயத்ரி' என்று எழுதியிருக்கிறது. அம்பிகையின் பெயராகவும் இருக்கலாம், அல்லது வீட்டுக்கார மகாராணி அல்லது பெண்ணின் பெயராகவும் கூட இருக்கலாம்.

    ஆனால் யாருக்கும், தபால்காரர் உட்பட 'காயத்ரி' என்று சொன்னால் தெரியாது. செவ்வரளி பூத்திருக்குமே அந்த வீடு என்று சொன்னால்தான் புரியும். இத்தனைக்கும் வருஷம் முழுவதுமே செவ்வரளி பூத்திருப்பதில்லை. சமயங்களில் மஞ்சள் நிறக் கொன்றையும், சிவப்பு இருவாட்சியும் கூடக் கொத்துக் கொத்தாய்ப் பூத்துப் பார்வையைச் சுண்டி இழுக்கும்.

    என்னை வந்து பறித்துக் கொண்டு போயேன் என்று கெஞ்சுகிற மாதிரி கூட இருக்கும். அந்த வீட்டில் வசிக்கிறவர்களுக்கும் இந்த மலர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு நாள் கூடச் செடிகளிலிருந்து அவர்கள் யாரும் மலர் கொய்ததாய் நினைவில்லை. சாலையில் போகிற வருகிறவர்கள் எட்டுகிறவரை பறிப்பதுதான். அதையும் மாடியிலிருந்து யாரேனும் பார்த்தால் கூடத் தடுப்பதில்லை.

    ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது நாங்கள் அந்தத் தெருவில் குடி வந்து. முதலில் கொஞ்சம் தயக்கம். அப்புறம் வெள்ளிக்கிழமைகளில் மட்டும், பாதித் திருட்டுத் தனமாய்க் கொஞ்சம் மலர்களை, அதுவும் இருள்பிரிகிற நேரத்தில் பறித்து வருவது, என்று தொடங்கியது.

    ஒருநாள் சின்னவன் கண்ணன்தான் அந்த வீட்டின் கதவைத் தட்டி நேரடியாகவே கேட்டான். ஸார், கொஞ்சம் பூப்பறிச்சுக்கலாமா? அம்மா பூஜைக்காகக் கேட்கிறா என்று முறையான அனுமதி கேட்டான். அவனுக்கு எதுவுமே வெளிப்படையாக இருக்க வேண்டும். திருட்டுத்தனம் வேண்டாம் என்பான்.

    ஆஹா! வேணும்ங்கறதைப் பறிச்சுக்கோ. ஆனாக் கிளையை மட்டும் உடைச்சு வைக்காதே, என்று நிபந்தனையோடு கூடிய அனுமதி கிடைத்தது.

    தினமும் அது அவனுடைய வேலையாகிவிட்டது. கைக்கு, எட்டியவரை என்பதெல்லாம் போய், கட்டைச் சுவர் மேலேயும் ஏறி நின்று பூக்கொய்ய ஆரம்பித்தான்.

    எங்கள் வீட்டுப் பூஜையறை சுவாமிகளுக்கு ஒரே கொண்டாட்டமாய் இருந்திருக்க வேண்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1