Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Melliya Sivappu Kodu
Oru Melliya Sivappu Kodu
Oru Melliya Sivappu Kodu
Ebook107 pages50 minutes

Oru Melliya Sivappu Kodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580100404615
Oru Melliya Sivappu Kodu

Read more from Rajesh Kumar

Related to Oru Melliya Sivappu Kodu

Related ebooks

Related categories

Reviews for Oru Melliya Sivappu Kodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Melliya Sivappu Kodu - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு மெல்லிய சிவப்புக் கோடு

    Oru Melliya Sivappu Kodu

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த அற்புத வரிகள்:

    நம் வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால் நிச்சயம் ஞாபக மறதியும் தேவை.

    மாறன்...

    சொல்லு தமயந்தி.

    இந்த ஹாஸ்பிட்டல் வேண்டாம்.

    ஏன்...?

    ஹாஸ்பிட்டலோட அட்மாஸ்பியரே சரியில்லை. ஏதோ நாலாந்தர திருவல்லிக்கேணி லாட்ஜ் மாதிரி இருக்கு.

    ஹாஸ்பிட்டல்தான் பார்க்க இப்படியிருக்கு. டாக்டர் திறமையானவர். நீ பார்க்கத்தானே போறே.

    டாக்டர் பேர் என்ன சொன்னீங்க...?

    புண்ணியவதி.

    பேரைக் கேட்டா ரொம்பவும் வயசானவர் மாதிரி தெரியுது...?

    நாற்பதிலிருந்து நாற்பத்தஞ்சு வயசுக்குள்ளே இருக்கலாம்.

    அந்த சுமாரான ஹாஸ்பிட்டலின் - ரொம்பவும் சுமாராயிருந்த - ரிசப்ஷன் அறையில் ஒரு சோபாவில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த 30 வயது மாறனையும் 25 வயது தமயந்தியையும் அந்த நர்ஸ் நெருங்கினாள்.

    ஸார், டாக்டரை நீங்க பார்க்கப் போகலாம்.

    இருவரும் எழுந்து வரந்தாவின் கோடியிலிருந்த அந்தக் கண்ணாடித் தடுப்பு அறையை நோக்கிப் போனார்கள். 'டாக்டர் ஈஸ் இன்’ என்று சொன்ன கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய, டாக்டர் புண்ணியவதி வெள்ளைக் கோட்டின் முன்னுச்சி நரைமுடியோடு பார்வைக்குத் தட்டுப்பட்டார்.

    குட் மார்னிங் டாக்டர்.

    வாங்க மாறன், எப்படியிருக்கீங்க...? அம்மாவும் அப்பாவும் எப்படியிருக்காங்க...?

    எல்லாரும் நல்லாயிருக்காங்க டாக்டர்.

    உன்னோட சிஸ்டர் வேல்விழியோட 'லா ப்ராக்டீஸ்' எப்படிப் போயிட்டிருக்கு...?

    வெரி வெல் கோயிங் டாக்டர். அவ இப்போ ஸ்ரீனிவாச அய்யங்கார்கிட்டே ஜூனியராய்ச் சேர்ந்து இருக்கா. இதுவரைக்கும் நாலைஞ்சு கேஸ்களை தனியாவே டீல் பண்ணி ஜெயிச்சும் காட்டியிருக்கா.

    குட். எனக்கு வேல்விழியைப் பத்தி நல்லாவே தெரியும். ஷி ஈஸ் வெரி இன்டலிஜென்ட் அண்ட் ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். இன்னும் ஒரு அஞ்சு வருஷ காலத்துக்குள்ளே வேல்விழி சிட்டியில் இருக்கிற டாப்-டென் லாயர்களில் ஒருத்தியாய் இருப்பா.

    நிச்சயம் டாக்டர். எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு...

    உனக்குக் கல்யாணம் முடிவாயிட்டதாய்க் கேள்விப்பட்டேன். உண்மையா...?

    ஆமா டாக்டர். ஷி ஈஸ் தமயந்தி. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. கடந்த ஒரு வருஷ காலமாய் ஒருத்தரையொருத்தர் விரும்பிட்டிருக்கோம். வீட்ல கல்யாணப் பேச்சை அப்பாகிட்டேயும், அம்மாகிட்டேயும் சொன்னேன். எதிர்ப்பு தெரிவிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா தமயந்தியோட போட்டோவைப் பார்த்ததும் அம்மா, அப்பா, தங்கச்சி வேல்விழி மூணு பேருமே ஓ.கே. சொல்லிட்டாங்க. தமயந்தியை அவளுடைய வீட்டுக்கே முறைப்படி போய்ப் பார்த்து அவளோட பேரண்ட்ஸ் சம்மதத்தோட நிச்சயதார்த்தத்தையும் முடிச்சுட்டோம். ஃபங்ஷன் ரொம்பவும் சிம்பிளாய் வெச்சுட்டதால யாரையும் கூப்பிட முடியலை.

    பரவாயில்லை. என்னிக்குக் கல்யாணம்...?

    பிப்ரவரி ஏழாம் தேதி.

    இன்னும் ஆறுமாசம் இருக்கே. ஏன் இவ்வளவு நாள் தள்ளி வெச்சிருக்காங்க...?

    இன்னும் ஆறு மாசத்துக்குக் குரு பார்வை இல்லையாம்.

    டாக்டர் புண்ணியவதி சிரித்தார்.

    இந்த ஜோஸியர்களுக்கு வேற வேலையில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கல்யாணத்தைத் தள்ளிப்போடறது அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட பொண்ணுக்குக் கல்யாணம் நடந்த போதும் அப்படித்தான் சொன்னாங்க... சொல்லிவிட்டுச் சிரித்த புண்ணியவதி, சில விநாடிகள் அமைதியாய் இருந்து விட்டுக் கேட்டார்.

    "ஸாரி மாறன், நீ என்னைப் பார்க்க வந்திருக்கேன்னா ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் இருக்கப் போய்த்தான் வந்து இருக்கணும். நான் பாட்டுக்கு கதை பேசிட்டிருக்கேன். எனிதிங் இம்பார்ட்டண்ட்...?

    எஸ் டாக்டர்...

    என்ன...?

    ஒரு ப்ராப்ளம். அது சின்ன பிராப்ளமா இல்ல பெரிய ப்ராப்ளமான்னு நீங்கதான்னு சொல்லணும்.

    மொதல்ல நீ ப்ராப்ளத்தைச் சொல்லு.

    மாறன் தயங்கிவிட்டுச் சொன்னான்.

    தமயந்தி இப்போ ரெண்டு மாச கர்ப்பம்.

    புண்ணியவதி சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்குள்ளாகி, பிறகு சுதாரித்துக் கொண்டு புன்னகைத்தார்.

    என்ன, கழுத்துல தாலி ஏறுறதுக்கு முன்னாடியே வாரிசுக்கு ஆசைப்பட்டுட்டீங்க போலிருக்கு...?

    கொஞ்சம் எல்லை மீறிட்டோம், தப்புத்தான்.

    எமோஷனல் எர்ரர். நோ ப்ராப்ளம், இன்னும் ஒரு ஆறு மாசத்துக்குள்ளே உங்களுக்குத்தான் கல்யாணமே நடக்கப் போகுதே.

    இருந்தாலும் டாக்டர்... இந்த விஷயம் வெளியே தெரியும் போது மத்தவங்களோட இளப்பமான பார்வையிலிருந்து தப்பிக்க முடியாதே.

    உன்னோட நிலைமை புரியுது. இப்ப என்ன பண்ணணும்னு நினைக்கிறே...?

    அது வரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த தமயந்தி, முதன் முதலாய் வாய் திறந்தாள்.

    "உடனடியாய் டீ

    Enjoying the preview?
    Page 1 of 1