Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Ennam Sivappaagirathu
Oru Ennam Sivappaagirathu
Oru Ennam Sivappaagirathu
Ebook103 pages39 minutes

Oru Ennam Sivappaagirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pushpa Thangadurai, an exceptional Tamil novelist, Written over 1000+ Novels and 300+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
Oru Ennam Sivappaagirathu

Read more from Pushpa Thangadurai

Related to Oru Ennam Sivappaagirathu

Related ebooks

Related categories

Reviews for Oru Ennam Sivappaagirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Ennam Sivappaagirathu - Pushpa Thangadurai

    12

    1

    ஆறு மணிக்கு இன்ஸ்பெக்டர் சிங் மங்கள விலாஸ். பங்களாவை அடைந்தார். உள்ளே தோரணங்களும் பேப்பர்க் கொடிகளும் கட்டியிருந்தன. வாசல் தோட்டத்தில் நிறைய கலர் பல்புகள் புஷ்பித்திருந்தன. ‘அப்பா’ மியூசிக் நடுங்கும் ரிதம்களோடு வந்து கொண்டிருந்தது. இன்னும் கூட்டம். சேரவில்லை என்றாலும் ஒரு திருவிழா தோற்றம் அங்கே வந்திருந்தது.

    சீக்கிரம் மணிவாசகத்தைப் பார்க்க விரும்பினார் சிங். இரவு டின்னருக்கு இருக்க விரும்பவில்லை. முக்கியமான கேஸ் ஒன்று இருக்கிறது. தமது வாழ்த்தினைத் தெரிவித்துவிட்டு, அதிக பட்சம் ஒரு கூல்டிரிங்க் சாப்பிட்டுவிட்டு உடனே போய் விடவேண்டும் என்று தீர்மானித்திருந்தார்.

    காலியாக இருந்தது. இரண்டே இரண்டு பேர் எட்டத்து போகன்வில்லா பக்கம் பேசிக்கொண்டடிருந்தார்கள்.

    முகப்புக்குப் போனார்.

    பெரிய யானை முகம் ஒன்று அவரை வரவேற்றது. அந்த நாளில் வேட்டையாடி யாரோ முகத்தை மட்டும் சுவரில் ஒட்டவைத்திருந்தார்கள்.

    உள்ளே இருந்து சாம்பாரும் வெங்காயமும் வாசனை வீசின. பின்புறத்தில் பெரிய சமையல் நடக்க வேண்டும்.

    போர்டிகோவில் ஏறினார்.

    அடுத்த ஹாலும் அதை அடுத்த பெரிய அறைகளும் தெரிந்தன. தெரிந்த மனிதர் ஒருவரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்கள்? எல்லோரும் உட்கார நாற்காலி எங்கே? ஒருவேளை பார்ட்டி மாடியில் நடக்குமோ?

    படிகளில் ஏறினார். பழைய தேக்கு மர ஜொலிப்புகள்.

    படிகள் முழுவதிலும் சிவப்பு ரத்னக் கம்பளம்.

    இரண்டு திருப்பத்தில் மாடி கொண்டு போய்விட்டது. பெரிய வராந்தா! அதிலும் யாரும் இல்லை. சிங் நடந்தார். முதல் அறையில் வாசனைகள் நிரப்பியது.

    ஹலோ! என்று சொல்லிக் கதவைத் திறந்தார். யாருமில்லை. ஆனால் நிறைய பூமாலைகள். கூடையிலும், ஹாங்கர்களிலும்.

    அடுத்த அறையில் உக்கிராண சாமான்கள்.

    அதற்கு அடுத்த அறை!

    அது அவ்வளவு பிரசித்தியாகப் போகிறது என்று அவருக்குகுத் தெரியாது.

    அது ஒரு குட்டி ஹால் போன்று இருந்தது. காலியாக இருந்தது. மெல்லிய வெளிச்சத்தோடு இருந்தது. ஒரு கட்டிலும் இரண்டு சோபாக்களும் இருந்தன.

    ஹலோ! என்றார்.

    பதில் இல்லை-யாரும் இல்லை.

    உள்ளே இரண்டாம் அடி வைத்தார். மூன்றாவது அடி. வைத்தபோது,

    கால் கொஞ்சம் தடுமாறியது. ஏன் என்று தெரியவில்லை, அடுத்த கணம்...

    உடம்பில் ஒரு சின்ன பூகம்பம் போல நடுக்கம். எதிரே திடீரென்று இரண்டு மனிதர்கள் தோன்றினார்கள். ஒருவன் மீசை வைத்திருந்தான். மற்றவன் கயிறு வைத்திருந்தான். இரண்டு பேருக்கும் முப்பது வயதுக்குள் இருக்கும்.

    அவர்கள் திடீரென்று ஒரு கோரமான காரியத்தில் ஈடுபட்டார்கள்.

    கட்டில் அருகில் போய் இருவரும் குதித்தார்கள். கட்டிலில் இப்போது யாரோ படுத்திருந்தார்கள்.

    ஒருவன் போய் படுத்திருந்தவரின் கைகளைப் பிடிக்க, மற்றவன் அவர் முகத்தில் ஒரு தலைகாணியைத் தூக்கி அமிழ்த்தினான்.

    படுத்திருந்தவர் மூச்சுத் திணறினார். அந்தப்புறம் இந்தப்புறம் புரள முயன்றார். ஆனால் அந்த இருவர் அவரைப் புரள விடவில்லை. தலைகாணிக்காரன் அழுத்து அழுத்து என்று அழுத்தினான்.

    படுத்திருந்தவர் சிறிது நேரம் தவித்தார். பிறகு மெல்ல மெல்ல அவருடைய அசைவுகள் குறைந்து கொண்டு வந்தன. கடைசியில் அவர் உடல் ஓய்ந்து விட்டது. அவர் இறந்து விட்டார்.

    சிங் ஆச்சரியமுடன் அந்த இருவரையும் பார்க்க, அவர்கள் அவரது பார்வையிலிருந்து விலகினார்கள்.

    சிங் ஆச்சரியத்தோடு ஓடி படுத்திருந்தவரின் கட்டில் பக்கம் வந்தார்.

    படுத்திருந்தவருக்கு ஐம்பது வயது இருக்கும். முன் தலை லேசாக வழுக்கை. கண்கள் பிதுங்கி இருந்தன. ஜிப்பா போட்டிருந்தார். கையில் தங்க கடிகாரம்.

    சிங் திகைப்பானார். நடந்ததெல்லாம் உண்மையா?

    சில கணங்கள் யோசித்து நின்றபோது அவர் கண்களில் பட்டென்று ஏதோ விலகுவது தெரிந்தது.

    கண்ணைத் துடைத்துப் பார்த்தார்.

    ஆச்சரியம்!

    அந்த அறை முழுதும் காலியாக இருந்தது. கட்டிலில் பார்த்தார். அதில் யாரும் இறந்து கிடக்கவில்லை

    திடுக்கிட்டு சுற்றிவரப் பார்த்தார். வெளியே போய் வராந்தாவைப் பார்த்தார். அடுத்த அறையைப் பார்த்தார்

    திரும்பி பழைய அறைக்கு வந்து சன்னல் வழியே வெளியே பார்த்தார்.

    பாத்ரூம் போய்ப்பார்த்தார்.

    கடைசியில் கூரையையும் பார்த்தார். ஆச்சரியம்! கொலை செய்த இரண்டு பேர்களையும் காணவில்லை. கொலை செய்யப்பட்டவரையும் காணவில்லை.

    திகைத்து நின்றார். அது ஒரு மனப்பிரமை என்று சற்று நாழிகைக்குப் பிறகு தான் தெரிந்தது.

    அப்போது தான் அந்த விஷயம் உதயமாயிற்று.

    அவருக்கு நடந்தது ஒரு அமானுஷ்யக் காட்சி. ஈ. எஸ். பி வகையறாக்களைச் சேர்ந்தது.

    இதைப் போல் நிகழ்ச்சிகள் எத்தனையோ பேருக்கு நடந்ததை அறிந்திருக்கிறார். பிரபல விஞ்ஞானிகளும் இந்த நிகழ்ச்சிகளை அறிந்திருக்கிறார்கள். ‘இது எங்கள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது’ என்று கை விட்டு விட்டார்கள்.

    அந்த ஈ. எஸ். பி. பரிமாண நிகழ்ச்சி அவருக்கு அன்று நடந்து விட்டது.

    அதிசயத்துடன் வெளியே வந்தார்.

    அந்த மங்கள விலாஸில் ஒரு பார்ட்டி ஏற்பாடாகி இருந்தது.

    சேவா கிளப் என்று ஒரு நிறுவனம். ஏழைகளுக்கு நிறைய சேவை செய்வது. அதன் நான்காவது ஆண்டு விழாவை அந்த பங்களாவில் கொண்டாடினார்கள்.

    நண்பர் ஒருவர் சிங்கை வற்புறுத்தி அழைத்திருந்தார். எனவே அவர் போயிருந்தார்.

    சிங் மீண்டும் வராந்தா வந்த போது நண்பர் மணிவாசகம் வாங்கோ! வாங்கோ! என்று ஓடி வந்தார்.

    நடந்ததை அவரிடம் சொல்லலாமா என்று ஒரு ஆர்வம்.

    ஆனால் மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைப்பார்களோ? வெறும் மனப்பிராந்தி என்று நினைக்கலாம். எனவே சொல்லவில்லை.

    மணிவாசகம்

    Enjoying the preview?
    Page 1 of 1