Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uruvamilla Unarvithu…
Uruvamilla Unarvithu…
Uruvamilla Unarvithu…
Ebook585 pages5 hours

Uruvamilla Unarvithu…

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

தன் தோழி தாமரையின் திருமணத்திற்கு செல்லும் மித்ரா திடீர் மணமகளாக... அவளை திருமணம் செய்து கொள்ளும் அனிருத்தன்.

எதற்குமே ஆசைப்படாத மித்ரா, அவனை விட்டு விலகிச் செல்லவும் சுலபமாக முடிவெடுக்க, அதற்கு அவன் சம்மதித்தானா?

அவளது பெற்றவளை கண்டு கொள்ளும் இடம், அக்கா நிஷாவின் வாழ்க்கைக்கு அவள் உதவும் விதம்...

அனைத்தையும் எவ்வாறு சமன்செய்து வாழ்க்கையை காத்துக் கொண்டாள் என தெரிய தொடர்ந்து படியுங்கள்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580109204776
Uruvamilla Unarvithu…

Read more from Infaa Alocious

Related authors

Related to Uruvamilla Unarvithu…

Related ebooks

Reviews for Uruvamilla Unarvithu…

Rating: 4.277777777777778 out of 5 stars
4.5/5

18 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uruvamilla Unarvithu… - Infaa Alocious

    http://www.pustaka.co.in

    உருவமில்லா உணர்விது...

    Uruvamilla Unarvithu…

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    1

    காலை நேர குளிர் உடலில் ஊடுருவ, அந்த அதிகாலை வேளையில் தான் தங்கியிருக்கும் லேடிஸ் ஹாஸ்டலுக்கு வெளியே பெரும் பரபரப்பில், கையைப் பிசைந்தவாறு காத்திருந்தாள் மித்ரா. கிட்டத்தட்ட ஐந்தடி உயரம்... மிகவும் ஒடிசலான தேகம்.

    இவள் சாப்பிடுவாளா மாட்டாளா? என மற்றவரை எண்ண வைக்கும் உடல்வாகு. அவளைப் பார்த்தவுடன் தெரிவது, முகத்தில் உருண்டையாக கொஞ்சமாக துருத்திக் கொண்டிருக்கும் இரு கண்கள்தான். அவள் மிகவும் ஒல்லியாக இருப்பதால், அவளது விழிகள் என்னவோ அவள் முகத்தில் ஓட்ட வைத்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

    அதற்காக அவள் அழகி இல்லை என்ற அர்த்தமில்லை. இன்னும் கொஞ்சம் பூசினாற்போல் இருந்தால் பேரழகியாக இருப்பாள். ஆனால், அவளது அழகிலோ, நிறத்திலோ, தோற்றத்திலோ எந்தவிதமான அக்கறையும் அற்றவளாக நின்று கொண்டிருந்தாள்.

    சொல்லப்போனால் தன் அழகையோ வனப்பையோ பேணும் எண்ணம் அவளுக்கு கொஞ்சம் கூட இருப்பதாகவும் தெரியவில்லை. அவளது அந்த அழகிய குண்டு கண்களில் இப்பொழுது பெரும் அலைப்புறுதலும், பதட்டமும் மட்டுமே குடிகொண்டிருந்தது. 

    அந்த மாதக் குளிரிலும் உடல் வியர்த்து வழிந்தது. நெற்றியில் பூத்த வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். கழுத்தில் வழிந்த வியர்வையை சுடிதார் துப்பட்டாவால் ஒற்றிக் கொண்டவள், தன்னை யாரும் அந்த நேரம் கவனிக்கிறார்களா எனப் பார்வையை சுழற்றினாள்.

    அந்த மாதத்துக்கே உரிய பனிப்போர்வை அவளைச் சுற்றிப் படர்ந்திருக்க, அதிகாலை நான்கு மணிக்கு அவளை யார் கவனிக்கவாம்? ஆனாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

    பார்வை நொடிக்கொருமுறை தெருமுனையை வருட, மனமோ மத்தளத்தை விட அதிகமாக துடித்துக் கொண்டிருந்தது. 'நான் செய்வது சரியே கிடையாது... இப்படிச் செய்யாதே மித்ரா... நீ செய்வது ஒரு குடும்பத்துக்கே செய்யும் மிகப்பெரும் துரோகம்... வேண்டாம்...' அவள் மனசாட்சி அவளை இடித்துரைக்க,

    மறு மனமோ... 'உன்னிடம் உதவி கேட்பவள் உன் தோழியாக இருப்பவள். அவளுக்கு இப்பொழுது உதவி செய்வதுதான் நியாயம்' மறுமனம் பரிந்துகொண்டு வர, அதையெல்லாம் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    'நான் செய்யும் இந்த செய்கையால், ஒரு குடும்பம் மட்டுமல்ல, இரு குடும்பங்கள் தலை குனிந்து நிற்குமே... ஒரு ஆண்மகனின் தன்மானம் அடி வாங்குமே, அவனது கௌரவம் நசுக்கப்படுமே...' மனம் தவியாய் தவித்தது.

    'இது எனக்கு முன்னமே தெரிந்திருந்தால், நான் ஏதாவது செய்திருப்பேனே... இப்படி இறுதி நிமிடம் சொல்லி என்னை இக்கட்டில் சிக்கவைத்து விட்டாளே...' கையைப் பிசைந்தாள்.

    இந்த நிமிடம் கூட அவளுக்கு உதவ முடியாது என அவளால் மறுத்துவிட முடியும். ஆனால், தோழி அவ்வளவு தூரம் கேட்கையில், இறுதியாக அவளுக்கென இருக்கும் தோழியிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப வேண்டும் என யாசிக்கையில் அவள் எப்படி அச்சாணியமாக மறுக்க?

    அப்படியெல்லாம் மறுத்து பேசிவிட மித்ராவுக்கு தெரியாது. நேரம் கடந்து கொண்டிருக்க, பதட்டமாக தன் மணிக்கட்டில் இருந்த கை கடிகாரத்தை திருப்பி நேரம் பார்த்துக் கொண்டாள்.

    'ச்சே...' பத்து நிமிஷம்தான் ஆகுதா? எனக்கென்னவோ பலமணிநேரம் ஆன மாதிரி இருக்கு...' விரலில் இல்லாத நகத்தை கடித்துக் கொண்டாள்.

    'ஒரு வேளை அங்கே அவளை பிடித்துக் கொண்டிருப்பார்களோ?' அதை எண்ணுகையிலேயே மனம் 'திக்'கென அதிர்ந்து கொண்டது.

    'ச்சே... ச்சே... அப்படியெல்லாம் இருக்காது. 'நான் வந்துட்டே இருக்கேன்'ன்னு தானே போன் பண்ணா...' உடனே தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

    அவள் அவ்வளவு பதட்டத்தில் இருக்க, அதைக் குறைப்பதுபோல் தெருமுனையில் ஒரு வாகனத்தின் முகப்பு விளக்கு தெரிய, பார்வையை கூர்மையாக்கி வெறித்தாள். 'ஒருவேளை வேறு யாராவது இருந்துவிட்டால்... இந்த நேரம் நான் இங்கே நிற்பதைப் பார்த்தால்...' மனதுக்குள் சிந்தைகள் ஓடாமல் இல்லை.

    ஆனால், அந்த தெருவில் அவர்களது ஹாஸ்டல்தான் இறுதி கட்டிடம் என்பதால், சற்று தைரியமாகவே நின்றாள். அவளது எண்ணம் பொய்க்கவில்லை, அந்த வெளிச்சம் பிரகாசமாகி, அவளை நெருங்கி அந்த வாகனம் நிற்க, அடுத்த நொடி அதற்குள் இருந்து வெளியே பாய்ந்தோடி வந்தாள் அவளது தோழி தாமரை.

    மித்து... ஓடிவந்து அவள் கட்டிக்கொள்ள, தானும் அவளை கட்டிக் கொண்டாள். அவள் இரவு உடையிலேயே இருப்பதை கவனித்தவள் சற்று திடுக்கிட்டாள்.

    ஏய்... இப்படியேவா வந்த? சிறு கண்டிக்கும் தொனியில் கேட்க, சற்று சங்கடமாக தோழியை விட்டு விலகி நின்றாள்.

    அதற்குள், காரின் மறுபக்கமிருந்து தாமரையின் காதலன், ஜான் ஆப்ரஹாம் இறங்கி வர, சட்டென தன் குரலை தாழ்த்திக் கொண்டாள்.

    என்னடி இது? இந்த கோலத்தில்... அதுவும் கார்ல... அவள் காதுக்கருகில் வார்த்தைகளை கடித்து துப்ப, தாமரை ஆபிரஹாமை சங்கடமாக ஏறிட்டாள்.

    ஆப்ரஹாம் அவள் கரத்தில் ஒரு பையைக் கடுக்க, அதை வாங்கிக் கொண்டவள், மித்து... உள்ள வா நாம பேசிக்கலாம்... ஆப்ரஹாமிடம் கண்களால் விடைபெற்றுவிட்டு, தோழியை தள்ளிக்கொண்டு அவளது அறைக்குச் சென்றாள்.

    மித்ராவின் அறைத்தோழி ஏதோ அவசர வேலையாக ஊருக்கு சென்றிருக்க, தாமரை அங்கே வர எந்த தடையும் அவளுக்கு இருக்கவில்லை. மித்ராவின் ஹாஸ்டல் கேண்டீன் மூன்றாவது தளத்தில் இருக்க, தாமரை, மித்ராவின் அறைக்குச் சென்றதையும் யாரும் கவனிக்கவில்லை.

    தாமரை... அவள் பேசும் முன்பாகவே, "மித்து... நான் நீட்டா ட்ரெஸ் பண்ணிட்டு வெளியே வந்தால் என்னை யார் வெளியே அலவ் பண்ணுவாங்க? அதுவும் என் அம்மா கண்ணில் மண்ணைத் தூவுறது எவ்வளவு பெரிய விஷயம்னு உனக்கே தெரியும்.

    நைட் முழுக்க தூங்குற மாதிரி நடிச்சு, அவங்களை எல்லாம் தூங்க விட்டு, அவங்க அசருற நேரம் பாத்து கிளம்பி வரதுக்குள்ளே என் உயிரே போய் வந்துடுச்சு... பேசிக்கொண்டே தன் இரவு உடையைக் களைந்துவிட்டு, புதிய சுடிதாரை அணிந்து கொண்டாள்.

    தாமரை, நான்...

    "மித்து... நீயும் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்ட, நானும் கேக்குற அளவுக்கு கேட்டாச்சு. நான் என் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லாமலோ, போராடாமலோ இருந்திருந்தால் ஓகே... ஆனா, என் விஷயத்தை வீட்டில் சொன்ன உடனேயே அவங்க மாப்பிள்ளை பார்த்து, மிரட்டி...

    இல்ல மித்து... எங்களுக்கு நடுவில் இருக்கும் ஜாதியும் மதமும் மட்டும்தான் அவங்க கண்ணுக்குத் தெரியுது. எங்களுக்குள் இருக்கும் நேசம் புரியவே இல்லை. அதை அவங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது. எல்லாம் ட்ரை பண்ணி பாத்துட்டேன்னு உனக்கே தெரியும்... அவள் சொல்ல, அவளது எந்த பேச்சும் மித்ராவை சமாதானப்படுத்தவே இல்லை.

    நீ என்ன சொன்னாலும் என்னால் ஏத்துக்கவே முடியலை தாமரை. நீ உறுதியா இருந்தால், அவங்க என்ன உன்னை கை காலை கட்டியா மணவறையில் உக்கார வைக்க முடியும்?.

    இந்த மாதிரி மூணாவது மனுஷியா பேசுறது ரொம்ப ஈசி, ஆனா, அதை அனுபவிக்கும் ஆளுக்கு மட்டும்தான் உண்மையான நிலை புரியும். கையில் விஷ பாட்டிலை காட்டி மிரட்டும் போது, உறுதியாவது மண்ணாவது சலித்துக் கொண்டாள்.

    நான் அங்கே இருந்து கிளம்பி இங்கே வரக் காரணமே, உன்னை அவங்களுக்கு தெரியாது என்பதால்தான். என் மத்த ப்ரண்ட்ஸ் வீட்டில் தேடினாலும், இங்கே வரவே மாட்டாங்க. அது எனக்கு நல்லாவே தெரியும்... பரபரப்பாக இயங்கி, தன்னை கொஞ்சமாக அலங்கரித்துக் கொண்டாள்.

    தாமரை, நீ சொல்றது எல்லாம் சரி... அந்த மாப்பிள்ளை என்ன தப்பு பண்ணார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு அவமானம்? ஒரு ஆம்பளை கல்யாணத்தை நிறுத்தினா என்னவிதமான விளைவுகள் ஒரு பெண்ணுக்கு ஏற்படுமோ, அதே அளவு விளைவுகள் ஒரு பெண், கல்யாணத்தை நிறுத்தினா அந்த ஆணுக்கும் ஏற்படும்னு ஏன் உனக்குத் தோணவே இல்லை இவளை மணக்கவிருந்த அவன்மேல் இரக்கம் சுரந்தது.

    "நானும் சொல்லிடலாம்னுதான் நினைச்சேன்... எத்தனையோ முறை முயற்சியும் செய்தேன். ஆனா... இந்த கல்யாணம் நின்னாலே செத்துப் போவோம்னு என்னை மிரட்டினால் நானும் என்னதான் செய்ய?

    கொஞ்சநாள் முன்னாடியே கிளம்பிடலாம்னா... அவருக்கு புதிதாக வீட்டை பார்த்து தயார் செய்ய கொஞ்சம் அவகாசம் தேவையா இருந்தது. அதுக்குள்ளே இவங்க முஹூர்த்தநாளையே முடிவு பண்ணிட்டாங்க. எனக்கு வேற வழி இல்லை... அது உனக்கே தெரியும்... அவள் பேச்சை முடித்துக்கொண்டு கிளம்ப முயல, தன் நெற்றியை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

    நீ என்னதான் சொன்னாலும், நீ செய்வதை என்னால் ஒத்துக்க முடியலை தாமரை. நீ வீட்டுக்கு ஒரே பொண்ணு... தான் பேசுவதால் எந்த பலனும் இல்லை என்றாலும் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.

    அந்த நினைப்பு அவங்களுக்கும் இருக்கணும் தானே. ஒரே பொண்ணோட ஆசையை நிறைவேற்றி வைப்பதை விட, அவங்களுக்கு அவங்க ஜாதி, மதம்தான் பெருசுன்னா என்னால் என்ன செய்ய முடியும்? உடையை மீண்டுமாக சரி செய்து கொண்டவள், கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள்.

    அந்த அவர்கிட்டே... அவருக்கு என்ன பதில் வச்சிருக்க? அவள் முதுகின் பின்னால் கோபமாக இரைந்தாள்.

    லூசு... அதுக்குத்தான் உன்னை கோர்த்து விடலாம்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன். ரெண்டுபேரும் கடைசி வரைக்கும் ஒத்துவரவே இல்லை நான் என்ன செய்ய? வெகு சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட, அப்படியே விக்கித்து நின்றுவிட்டாள்.

    ச்சீ... என்னடி பேச்சு இது? கடிந்துகொண்டாள்.

    "அட... நான் ஒண்ணும் விளையாட்டுக்கு சொல்லலம்மா... சீரியசாத்தான் சொல்றேன். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை... வேண்ணா கிளம்பி மண்டபத்துக்கே போய், அவரையே கட்டிக்கோ... எனக்கு முழு சம்மதம்.

    அதைவிட... மனுஷன் ரொம்ப நல்லவர்... தனக்கு நிச்சயமான பொண்ணுன்னு தெரிஞ்சும், ஒரு நாள் கூட என்கிட்டே வரம்பு மீறி பேசினதோ, வழிந்ததோ இல்லை... அதில் ஜெம் தான்... அவள் சான்றிதழ் வழங்க கோபமாக அவளை முறைத்தாள்.

    அப்போ வேணும்னுதான் அவர் மீட் பண்ணனும்னு சொல்லும் போதெல்லாம் நான் வேலை பாக்கும் காபி ஷாப்புக்கே அவரை கூட்டி வந்தியா? தன் முட்டைக்கண்கள் இன்னும் விரிய, அதிர்வாக கேட்டாள்.

    "ரொம்ப சீக்கிரம் கண்டு புடிச்சுட்ட போ... சரி, இதுக்குமேலே எனக்கு உன்கிட்டே பேச நேரமில்லை... உடனே நாங்க பெங்களூர் கிளம்பியாகணும். அங்கே இருக்கும் சர்ச்சில்தான் எங்க வெடிங்... உனக்கு அட்ரஸ் சொல்லலைன்னு தப்பா நினைக்காதே... எனக்கு சேப்ட்டி ரொம்ப முக்கியம்.

    என்னை என் போனுக்கு கூப்பிடாதே... அதை மண்டபத்திலேயே விட்டுட்டு வந்துட்டேன்... வெளியே வந்தாள்.

    அவள் வெளியே வரவே, அவள் அருகே வந்த ஆப்ரஹாம், கிளம்பலாமா...? அவளிடம் கேட்டவன், மித்ராவைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தான்.

    மித்ராவால் பதிலுக்கு புன்னகைக்க முடியாமல், ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு நிற்க, ரொம்ப தேங்க்ஸ் மித்து... நான் கிளம்பறேன் தாமரை, அவளை இறுக கட்டிக்கொண்டு விடுவிக்க, தலை அசைத்தாள்.

    தாமரை வேகமாக சென்று காரில் அமர்ந்துகொள்ள, அடுத்த நொடி கார் பெரும் வேகத்தில் கிளம்பிச் சென்று கண்ணை விட்டும் மறைந்தது. அவள் செல்லவே, தன் அறைக்குத் திரும்பியவளுக்கு அங்கே இருக்க முடியாமல் ஒருவித அவஸ்தை மனதை அழுத்தியது.

    தாமரையை கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவளுக்குத் தெரியும். அதுவும் அவர்களது நட்பு துவங்கியதே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்துதான். மித்ரா, தான் வேலை பார்க்கும் பள்ளிக்குச் செல்லும் அதே பேருந்தில்தான் தாமரை தன் அலுவலகம் செல்வாள்.

    அன்று அப்படி ஒரு சம்பவம் நேரும் வரைக்கும் அது அவர்கள் இருவருக்குமே தெரியாது. பொதுவாக பெண்கள் கல்லூரிக்கு, வேலைக்குச் செல்லும் அந்த பரபரப்பான நேரங்களில், அவர்களை உரசிப் பார்ப்பதற்கென்றே சில இடி மன்னர்கள் பேருந்தில் பயணிப்பார்களே.

    அப்படி ஒரு நாள் ஒரு இடிமன்னனிடம் சிக்கிக் கொண்டாள் மித்ரா. பொதுவாக அவள் உயரம் குறைவான காரணத்தால், பேருந்தின் மேல் கம்பியை அவளால் எப்பொழுதுமே பிடித்துக்கொள்ள முடியாது.

    சீட் கம்பியை பிடித்தவாறு அவள் நின்றிருக்க, அவளுக்கு பின்பாக வந்து நின்ற அவன், அவள் பின்பக்கத்தில் உரச, சட்டென அவன் உரசலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து கொண்டாள். அவனை கோபமாக முறைக்க வேண்டும், திட்ட வேண்டும் என மனம் பரபரத்தாலும், அதை செய்ய முடியாத ஒருவித படபடப்புதான் அவளை சட்டென வந்து தொற்றிக் கொண்டது.

    அவள் சங்கடமாக நெளிவதும், விலகி நிற்க முயல்வதும், வியர்த்து வழிவதுமாக இருக்க, அவளது சங்கடத்தை, அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தாமரை உணர்ந்து கொண்டாள்.

    சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவள், ஹல்லோ... நானும் கொஞ்ச நேரமா பாத்துட்டு இருக்கேன்... இவங்களை டிஸ்டப் பண்ணிட்டே இருக்க? ஒழுங்கா நிக்க முடியலையா? அவள் கேட்க, உடன் மேலும் பலரும் சேர, அங்கே நிற்காமல் சட்டென அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான்.

    அவன் செல்லவே, தே..ங்..க்..ஸ்... தன் கையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறே மித்ரா உரைக்க,

    அவனைப் பாத்து முறைச்சாலே அவன்ல்லாம் விலகி நிப்பான்... நீங்க என்னங்க இப்படி பயந்துக்கறீங்க தாமரை கேட்க, அமைதியாகவே நின்றுகொண்டாள்.

    அதன் பிறகு, தினமும் இருவரும் பேருந்தில் சந்திக்கையில் மெல்லிய புன்னகையை பரிமாறிக் கொள்வதில் துவங்கிய நட்பு, நாளடைவில் ஒருவரைக் காணவில்லை என்றால் எங்கே? எனத் தேடும் அளவுக்கு இறுகியது.

    தாமரை வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு அருகே இருக்கும் காபி ஷாப்பில் மித்ரா மாலையில் பகுதிநேர வேலை பார்க்க, அவர்கள் நட்பு மேலும் இறுக அது காரணமாக அமைந்தது.

    தாமரையின் காதல் துவங்கி, திருமணம் வரைக்கும் அவளுக்குத் தெரியவர, தன்னால் முடிந்த அளவுக்கு தாமரைக்கு அறிவுரை சொன்னாள். ஒரு குடும்பத்தின் அருமையும், உறவுகளின் தேவையும் அது இல்லாதவர்களுக்கு தானே நன்கு தெரியும்.

    ஆனால்... அனைத்தும் தோல்வியில் முடிந்திருப்பதை கண்டு மித்ராவுக்கு துக்கம் பெருகியது. நேரம் ஐந்தை நெருங்க பார்த்துக் கொண்டிருக்க, இதற்குமேல் படுத்தாலும் உறங்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

    'தாமரை சுயநலமாக யோசித்தாளா? இல்லையென்றால் அவளது பெற்றோர் அவளைப் புரிந்துகொள்ளவில்லையா?'

    'இப்பொழுது திருமண மண்டபத்தில் அவள் இல்லாதது தெரிந்திருக்குமா? அங்கே என்ன நடந்து கொண்டிருக்கும்? அவளுக்கு கணவனாக வர இருந்தவர் என்ன நிலையில் இப்பொழுது இருப்பார்?'

    'அவர்களது இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமோ?' எதை எதையோ நினைத்து பெரிதும் கலங்கிப் போனாள்.

    அவனை அவளும் பார்த்திருக்கிறாள். தாமரை இப்படி ஒரு முடிவை எடுத்ததை அறிந்த பிறகு, அவனிடம் சொல்லி, அவனை அலர்ட் செய்ய முயன்றிருக்கிறாள். ஆனால் அவை அனைத்துமே வெறும் முயற்சிகளாக மட்டுமே இருந்திருக்கிறது.

    அவனை நெருங்கி, அவன் எதிரில் நின்று, தாமரையைப் பற்றி, அதுவும் தன் தோழி தன்னிடம் நம்பிக்கை வைத்து சொன்ன ஒரு விஷயத்தை அவனிடம் சொல்லிவிட அவளால் முடியவில்லை. அதைவிட, காபி ஷாப்பில் அவள் அவன் அருகே சென்றாலே, ஏதோ ஆடர் எடுக்கத்தான் அவள் அருகே வருகிறாள் என எண்ணி பேசுபவனிடம் அவள் என்ன சொல்லிவிட முடியும்?

    அத்தனையிலும், தாமரை அவளை தன் தோழி என அறிமுகம் செய்து வைத்திருந்த போதிலும், ஒரு சின்ன சிரிப்பு கூட இல்லாமல் அழுத்தமாக அவளை ஏறிட்டு பார்ப்பவிடம், தன் இதழ் பிரித்து தன் வேலை நிமித்தமாக தவிர, வேறு வார்த்தைகளே வந்ததில்லையே.

    தாமரையின் தவறு தனது தவறாகத் தோன்ற, படுக்கையில் சும்மா அமர்ந்திருக்க கூட அவளால் முடியவில்லை. அந்த நேரம், தாமரை தனக்கு திருமண அழைப்பிதழ் கூட கொடுக்கவில்லை என்ற உண்மை புரிய, தலையே வெடித்துவிடும்போல் இருந்தது.

    'அழைப்பிதழ் இருந்தால் மட்டும் என்ன செய்து விடுவாய்? மண்டபத்துக்கு போவாயா? போய்... என்ன செய்வாய்? அவரிடம் இப்பொழுது உண்மையைச் சொல்வதால் என்ன பலன் ஏற்பட்டுவிடும்? உன்னைப் பார்த்தவுடன் அவரது எதிர்வினை என்னவாக இருக்கும்?' ஹையோ மனம் தவியாய் தவித்தது.

    அவளது பார்வை எதேச்சையாக தாமரை விட்டுச் சென்றிருந்த கவரின்மேல் நிலைக்க, 'ஹையோ... இதை தெரியாமல் விட்டுட்டு போய்ட்டா போல, நானும் இருந்த குழப்பத்தில் கவனிக்கவே இல்லையே...' தன்னையே நொந்தவளாக அந்த கவரைக் கையில் எடுத்தாள்.

    அது வெற்று கவராக இருந்தாலும், அவள் விட்டுச் சென்றிருந்த இரவு உடைக்கு அடியில்... கொஞ்சமாக தலை காட்டியவாறு இருந்த ஏதோ ஒன்று அவள் கவனத்தைக் கவர, உடையை நகர்த்திவிட்டு, அதை தன் கரத்தில் எடுத்தாள்.

    அதை கையில் எடுக்கையிலே உணர்ந்துகொண்டாள்... அது ஒரு திருமண அழைப்பிதழ். அதுவும், தாமரை வெட்ஸ் அனிருத்தன் என்ற பெயரைப் பார்த்துவிட்டு ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்.

    'நேற்று வரைக்கும் அழைப்பிதழை தன் கண்ணிலேயே காட்டாதவள், இன்று ஏன் வைத்துவிட்டுச் சென்றாள்?' கேள்வி பிறக்க, பதிலும் சேர்ந்தே புரிந்தது.

    சற்று நேரத்துக்கு முன்னர் அவள் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளின் பொருள் புரிய, 'நான் அங்கே செல்ல வேண்டும் என்று இதை வைத்துவிட்டுச் சென்றாளா? அது எப்படி முடியும்?' சிந்தித்தாலும், வேகமாக அதைப் பிரித்து, பார்வையை அதில் பதித்தாள்.

    தங்க நிறத்தில் அருமையாக எழுத்துக்கள் மின்ன, அந்த ஒரு அழைப்பிதழின் மதிப்பை அதுவே சொன்னது. 'நடக்காத திருமணத்துக்காகவா இவ்வளவு செலவு?' எண்ணம் எழுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

    முகூர்த்த நேரம் காலை ஆறுமுப்பது என இருக்க, இன்னும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருப்பதை உணர்ந்து கொண்டாள். திருமண மண்டபம் இருக்கும் இடம், அவளது ஹாஸ்டலில் இருந்து பத்து நிமிட பயண தூரத்தில் இருக்க, அவள் மனம் அதிர்ந்தது.

    'விஷயம் வெளியே தெரிந்து, அவருக்கு ஏதும் அவமானம் சேரும் முன்னர் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டால், அவரது வீட்டார் அங்கிருந்து கிளம்பி சென்றுவிடலாமே.

    'மற்றவர்களின் பேச்சை அவர் கேட்க வேண்டி இருக்காதே... முயற்சி செய்து பார்த்துவிடுவோமா?' என்ற எண்ணம் தோன்ற, அடுத்த நிமிடம் பரபரவென குளித்து, பத்தே நிமிடங்களில் ஒரு புடவையை அணிந்துகொண்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

    ஆனால்... அவள் எதை தடுக்க வேண்டும் என எண்ணி கிளம்பினாளோ, அந்த சம்பவம் அதற்கு முன்பே அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

    2

    அதிகாலை ஐந்து முப்பது மணி. இருள் பிரியாத அந்த நேரத்தில், தனக்கு மிகவும் பரிட்சயமான ஆட்டோவை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மண்டபத்துக்கு ஐந்தே நிமிடங்களில் வந்து சேர்ந்துவிட்டாள் மித்ரா.

    நடந்து வந்திருந்தால் கூட வந்திருக்க முடியும். ஆனால், இருக்கும் பதட்டத்தில் அவளால் நடக்க முடியும் என்றே தோன்றாததால் மட்டுமே ஆட்டோவில் வந்தாள்.

    அம்மாடி, நான் நிக்கவா கிளம்பட்டுமா? இந்த நேரத்தில் அவள் தனியாக எங்குமே சென்றதில்லை என்பதால் அந்த வயதான டிரைவர் கேட்டார்.

    தாத்தா... நீங்க இருங்க, நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன் தன் முகத்தில் அரும்பிய வியர்வையை மெல்லியதாக துடைத்துக் கொண்டாள்.

    அவள் முகத்தில் என்ன கண்டாரோ? என்னமா, ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல் அவளை இப்படி கண்டதே இல்லை என்பதால் ஆதரவாக கேட்டார்.

    இல்ல... அப்படியெல்லாம் எதுவும் இல்லை... ஒரு நிமிஷம்... நான் உள்ளே போயிட்டு வந்துடறேனே... தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியம் என்பது புரிய வேகமானாள்.

    சரிம்மா பாத்து போ... நான் அப்படி ஓரமா இருக்கேன்... அந்த நேரத்தில் அவரது உடனிருப்பு பெரும் பலத்தைக் கொடுத்தது.

    மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க, ஆறரைக்கு முகூர்த்தம் என்பதால், மண்டபத்தில் தங்கியிருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக எழுந்து கொள்வது அவளது பார்வைக்குப் பட்டது.

    'இப்பொழுது முதலில் எங்கே சென்று யாரிடம் என்ன சொல்ல?' ஒரு நொடி கையைப் பிசைந்தாள்.

    அவளுக்கு இப்படியான விசேஷங்களில் எல்லாம் கலந்துகொண்டு பழக்கமே இல்லை. 'எந்த பக்கம் செல்வது?' என யோசனையில் ஒரு நிமிடம் அவள் திணற, பார்வையோ அந்த இடத்தையே சுழன்று அலசியது.

    அவளது தேடலுக்கு பலனாக 'மணமகள் அறை' என்ற வாசகம் அவள் கண்களில் பட, மேடைக்கு இடதுபக்கம் ஓடிய படிக்கட்டில் வேகமாக தாவி ஏறினாள். அந்த அறையை நெருங்கும் முன்பே... உள்ளே இருந்து பெரும் கூச்சலும், குழப்பமுமான ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தது.'

    இதுக்குத்தான் நான் படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா? என்னவோ எல்லாத்தையும் பாத்துக்குவேன்னு சொன்ன... இப்போ என்ன ஆச்சு பார் ஒருவர் கத்திக் கொண்டிருக்க,

    நான் கண்ணு கூட மூடாம அவளை பாத்துக்கிட்டுதான் இருந்தேன். பாவி மக, இப்படி செய்வான்னு நான் நினைக்கலையே... ஒரு பெண்மணியின் அழுகுரல் அவளைத் தீண்டியது.

    மாப்பிள்ளை வீட்டுக் காரங்களுக்கு இப்போ என்ன பதில் சொல்வது? அவங்க ஏதாவது கேள்வி கேட்டா முகத்தை எங்கே கொண்டுபோய் வச்சுக்குறது? இதை யார் அவங்ககிட்டே சொல்வது? அவர் மீண்டுமாக மனைவியிடம் பொரிய, மித்ரா அப்படியே நின்றுவிட்டாள்.

    அதிகாலை முகூர்த்தத்துக்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு என்பதால், மண்டபத்தில் மிதமான மக்களே இருந்தார்கள். அதுவும், மணமகள், மணமகன் அறை முதல் மாடியில் என்பதால், இவர்களது பேச்சும் கீழே இருந்தவர்களை எட்டவில்லை.

    அவர்களது பேச்சைக் கேட்ட மித்ரா, 'ஹையோ... அவருக்கு இன்னுமே தெரியாதா? இவங்க ஏன் இப்படி பண்றாங்க? அவர்கிட்டே தானே முதல்ல சொல்லணும்' அவள் மனதுக்குள் யோசனை ஓடியது.

    அவளைப் பற்றி தெரிஞ்சும் நீ எப்படி அவளை தனியா விட்ட?.

    நான் எங்கே அவளை தனியா விட்டேன்? ரெண்டுமணி வரைக்கும் ஒரு போட்டுகூட தூங்காமல் முழிச்சு காவல் காத்துக்கிட்டுதான் இருந்தேன். அதுக்குப் பிறகு செத்த கன்னசந்தேன்... முழிச்சுப் பாத்தா அவளைக் காணோம்.

    ஆமா... இப்போ சொல்லு... வீட்டு விஷயம் வெளியே தெரிஞ்சால் அவமானம்னு யார்கிட்டேயும் சொல்லாமல் மறைச்சு... இப்போ... இந்த அவமானத்தை எப்படி சகிக்க? வெளியே இருக்க சொந்தக்காரனுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றது? மனைவியிடம் மகளது காதல் தெரிந்த உடனேயே, மகளை கொஞ்ச நாள் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடலாம் என அவர் சொன்னதை கேட்காமல் போய்விட்டாரே என்ற கோபம் அவருக்கு.

    இப்போ என்னங்க செய்ய?.

    ஆமா... இப்போ கேளு... மகளைக் காணவில்லை என்ற பதட்டத்தில் அவரால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.

    தாமரையின் தாயோ வாய் மூடி விசும்பியவர், இதுக்குமேலே இங்கே இருக்க முடியாது... வாங்க கிளம்பிடலாம்... அவர் சொல்லவே,

    நீ கிளம்பிப் போய்டுவ... நம்ம பேச்சை நம்பி வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டு ஆட்களுக்கு என்ன பதில் வச்சிருக்க? அவர் கேட்க, தாமரையின் தாயின் அழுகுரல் மட்டுமே கேட்டது.

    இவர்கள் இங்கே வாதாடிக் கொண்டிருக்க, மித்ராவோ எதிரில் இருந்த மணமகன் அறையைப் பார்த்தாள். படிக்கட்டுக்கு இடப்பக்கம் மணமகள் அறையும், வலப்பக்கம் மணமகன் அறையும் இருக்க, இவர்கள் அறைக்குள் பேசுவது மற்றவர்களை எட்டவில்லை.

    மித்ராவால் அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. எப்படியாவது அனிருத்தனை இந்த அவமானங்களில் இருந்து, தலை குனிவில் இருந்து காக்க வேண்டும் என்று தோன்ற, வேகமாக மணமகன் அறையை நோக்கி விரைந்தாள்.

    இன்னும் சற்று நேரத்தில் மணவறையில் அமர வேண்டியவனின் முன்னால் சென்று, 'உனக்கு மனைவியாக வேண்டியவள் வேறு ஒருவனுடன் சென்றுவிட்டாள்' என எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால், 'அது உனக்கு எப்படித் தெரியும்?' எனக் கேட்டால் என்ன பதில் சொல்வது?

    சட்டென மனதுக்குள் குளிர் பிறந்தாலும், அவளால் பின்வாங்க முடியவில்லை. ஆழமாக மூச்செடுத்து தன்னை சரி செய்தவள், மிகுந்த தயக்கத்தோடு அறைக்கதவை தட்டினாள்.

    அடுத்த நிமிடம் அறைக்கதவு திறக்கப்பட, கதவைத் திறந்த அந்த புதியவனை சிறு குழப்பமாகப் பார்த்தாள். 'வேறு திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டோமா?' அவள் யோசனையோடு கையில் இருந்த அழைப்பிதழை பார்க்க,

    அவளது குழப்பமான முகத்தைப் பார்த்தவன், நீங்க சரியான கல்யாணத்துக்குதான் வந்திருக்கீங்க. மாப்பிள்ளை கிளம்பிகிட்டு இருக்கான்... அவன் பின்னால் திரும்பிப் பார்த்து சொல்ல, அறைக்குள் இன்னும் சிலருடன் அனிருத்தன் இருப்பது அவளுக்குத் தெரிந்தது.

    'அவர் என்னவோ தனியா இருப்பார்ன்னு பார்த்தால்... இப்படி...?' அவன் அறைக்குள் இவ்வளவு பேரை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளைப் பொறுத்த வரைக்கும் ஆண்களுடனான அவளது பேச்சு எல்லாம் ஒன்றிரண்டு வார்த்தைகளாகத்தான் இருந்திருக்கிறது. இது... அவள் தயங்க...

    டேய் மாப்ள... பொண்ணுகிட்டே இருந்து உனக்கு ஏதோ சேதி வந்திருக்கு போலடா... என்னன்னு வந்து கேள்... உரைத்தவன் அவளை அறைக்குள் அழைக்கவில்லை.

    யார்டா...? கேட்டவன் நண்பர்களை விலக்கிவிட்டு முன்னால் வர, மித்ராவைப் பார்த்தவன், கொஞ்சமாக பரிட்சயமான முகபாவனையைக் காட்டினான்.

    ஹாய் மித்ரா நீங்களா...? மணமகள் அறை அங்கே... ஒரு வேளை அவள் தெரியாமல் இங்கே வந்துவிட்டாளோ என்று எண்ணினான்.

    இல்ல... நான்... எனக்கு... அவள் திணற, அவனது புருவம் முடிச்சிட்டது.

    டேய்... எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்கடா... உள்ளே வாங்க... அவள் முகத்தில் இருந்த ஒருவித கலவரம், வியர்வை வழிய அவள் நின்ற தோற்றம்... எதுவோ சரியில்லை என்ற உணர்வை அவனுக்கு கொடுக்கவே, நண்பர்களை வெளியேறச் சொன்னான்.

    அதே நேரம், அவனது தாய் அங்கே வந்தவர், என்னப்பா ரெடி ஆயிட்டியா? இது யார்...? உன் பிரண்டா? வாம்மா... திருமண அவசரம் அவர் முகத்தில் தெரிந்தது. கூடவே... அப்படி ஒரு சந்தோஷமும் தெரிய, அந்த சந்தோசம் நொடியில் காணாமல் போகப் போகிறதே என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.

    அம்மா... உள்ளே வாங்க... வாங்க மித்ரா... இருவரையும் அறைக்குள் அழைத்தவன், அவர்கள் முதுகுக்குப் பின்னால் கதவை சாற்றினான்.

    சொல்லுங்க மித்ரா... அவன் நேரடியாக விஷயத்துக்கே வர,

    என்ன சொல்லச் சொல்ற அனிருத்? இப்போ பேசுறதுக்கு எல்லாம் நேரமில்லை... இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ மணவறையில் உக்காரணும், சீக்கிரம்... அவனை அவசரப்படுத்தினார்.

    அம்மா, ஒரு ரெண்டு நிமிஷம் பேசுறதால் எதுவும் ஆகிடாது... நீங்க சொல்லுங்க கையைப் பிசைந்து கொண்டிருந்த அவள் பக்கம் திரும்பினான்.

    சார்... அது... தா...தா...தாமரை... இ..ங்கே.. இல்...லை... அவளால் தான் சொல்ல வந்ததை கோர்வையாக சொல்ல முடியவில்லை. அங்கே இருக்கும் சந்தோசம் அத்தனையையும் தான் ஒருத்தி கெடுப்பதுபோல் ஒரு எண்ணம்.

    ஆனால் அது அப்படி இல்லை என்பது அவளுக்கும் தெரியும். ஆனால்,ஒரு விரும்பத்தகாத செய்தியைச் சொல்கையில், அவளால் எப்படி முழுதாக சொல்ல முடியும்?

    என்ன? என்ன சொல்றீங்க? தாமரை இங்கே இல்லையா? அப்படின்னா? அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவள் சொல்ல வரும் செய்தி புரிவது போலவும், புரியாதது போலவும் ஒரு தோற்றம்...

    ஆனால் அவனது தாய்க்கு அப்படி இல்லை போல... என்னம்மா சொல்ற? மணமேடையில் உக்கார வேண்டிய நேரத்தில்... இப்படி பொண்ணு இல்லன்னு வந்து சொல்ற? அவர் தன்னை மீறி அதிர்ச்சியில் குரல் உயர்த்த, வேகமாக தாயை தன் கை வளைவுக்குள் இழுத்துக் கொண்டான்.

    அதே நேரம்... அனிருத்... அனிருத்... அவனது தந்தையின் குரல் பெரும் பதட்டத்தில் வெளியே ஒலிக்க, அம்மா... கொஞ்சம் பதட்டப்படாம இருங்க... அவனுக்குள் எழுந்த பெரும் அதிர்ச்சியை மறைக்க முயன்று தோற்று, முனகியவன் கதவைத் திறந்தான்.

    வெளியே நண்பர்களின் முகங்கள் அனைத்தும் பேரதிர்ச்சியில் இருக்க, தந்தையின் முகத்தில் இருந்த பதட்டமும், தவிப்பும்... மித்ரா சொன்ன சேதியில் இருந்த உண்மையை அவனுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.

    ரேவதி... ருத்ரா... உள்ளே நுழைந்தவருக்கு விஷயத்தை அவர்களிடம் எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை.

    என்னங்க... இந்த பொண்ணு என்னவோ சொல்றாங்க... நீங்க கொஞ்சம் என்னன்னு கேளுங்க கணவனிடம் ஓடினார்.

    மனைவியை தாங்கிக் கொண்டவர், நீ யாரும்மா...? அவளிடம் கேட்க,

    நான்... தாமரையோட தோழி... தயங்கி தயங்கி, தலையைக் குனிந்தாள்.

    அனிருத் இவர்களது எமோஷனல் எதிலும் கலந்துகொள்ளாமல், அமைதியாக சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டான். அவனது நண்பர்கள் அனைவரும், அவனிடம் ஒருவித மன்னிப்பை வேண்டிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட, அறைக்குள் மிஞ்சியவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

    ஹையோ... என் புள்ளைக்கா இப்படி நடக்கணும்? இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னவனை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சேனே... அவனுக்கு இப்படி ஒரு அவமானத்தை தேடி வைக்கவா இதைச் செய்தேன்? இப்போ நான் என்ன செய்வேன்? ரேவதி வாய்விட்டே அழுது அரற்ற, பாஸ்கருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

    சொந்தத்தை எல்லாம் கூட்டி வச்சு இப்படி ஆயிப் போச்சே... இனிமேல் என் புள்ளை எப்படி தலை நிமிந்து நடப்பான்? அவரால் தாங்க முடியவில்லை. தாயின் எந்த பேச்சுக்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

    என்னங்க... என்னவாம்...? எனக்கு தெரிஞ்சாகணும்? ரேவதி அறையில் இருந்து வெளியேற முயல, அவரைத் தடுத்து நிறுத்தினார்.

    என்னை விடுங்க... கணவரது கரத்தை உதறியவர் மணமகள் அறையை நோக்கிச் சென்றார். பாஸ்கரும் மனைவியின் பின்னால் செல்ல, அவளது பார்வை அனிருத்தை ஏறிட்டது.

    'விஷயத்தை சொல்லிவிட்டோம்... சென்று விடுவோமா?' என எண்ணியவள் அவன் முகம் பார்க்க, அதில் தெரிந்த இறுக்கம், ஒருவித அவமானம், செயல்பட முடியாத ஒரு நிலை... அவனை அப்படியே விட்டுச் செல்ல அவளால் முடியவில்லை.

    சார்... அவள் தயக்கமாக அழைக்க, அதற்குள்ளாகவே விஷயம் மண்டபம் முழுக்க பரவி, பெண்ணைப் பற்றிய விமர்சனம் ஒரு பக்கமும், பெற்றவர்கள் அவளை ஒழுங்காக வளர்க்கவில்லை என ஒரு பக்கமும், மணமகனுக்காக அனுதாபப்படும் விதத்தில், அவனது தன்மானத்தையே சீண்டிப் பார்க்கும் விமர்சனங்களும் அரங்கேற, அவளாலே அதை கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.

    ரேவதி, மணமகள் அறைக்குச் சென்று, உங்க பொண்ணுகிட்டே சம்மதம் கேட்டுத்தானே இந்த கல்யாணத்தை நிச்சயம் பண்ணீங்க. இப்போ உங்க பொண்ணு இப்படி செஞ்சுட்டாளே, இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? கேள்வி கேட்க,  அவர்கள் என்ன பதில் சொல்வதாம்?

    உங்க பொண்ணு ஒருத்தன் மேலே ஆசைப்படுவது உங்களுக்கு முதலிலேயே தெரியுமா இல்லையா? சொல்லுங்க... அவர் கத்த,

    அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தால் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கவே மாட்டாங்களே அவர்களது உறவுக்கார பெண்மணிதான் பதில் கொடுத்தார்.

    நான் அவங்ககிட்டே கேள்வி கேட்டேன். அவங்க பதில் சொல்லட்டும் ரேவதி விடுவதாக இல்லை.

    எங்களை மன்னிச்சிடுங்க... எங்க பொண்ணு இப்படி செய்வான்னு நாங்க எதிர்பாக்கவே இல்லை. இது எங்களுக்கும் அவமானம்தான்... தாமரையின் தந்தை இடைபுக,

    உங்களுக்கு என்னங்க அவமானம்? மணவறை வரை வந்த என் மகனது நிலையை நினைச்சுப் பாருங்க. அவன் மனசு என்ன பாடுபடும்? தன் மகன் இனிமேல் மறுபடியும் இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு சம்மதிப்பானா என்பது கேள்விக்குறியாகும் நிலை வந்துவிடும் என்பதில் அவருக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லையே.

    இவர்கள் ஒரு பக்கம் போராட, மணமகன் அறைக்குள் கையைப் பிசைந்தவாறு நின்ற மித்ரா, சார்... நான்... சாரி... இப்படியெல்லாம்... அவனிடம் என்ன சொல்லி ஆறுதல் சொல்லவென்று அவளுக்குத் தெரியவே இல்லை.

    அவனோ, இதுக்கு முன்னாடி என்கிட்டே பேச வந்தது எல்லாம் இதைப் பத்தி தானா? அவள் முகம் பார்க்க முடியாமல், தரையைப் பார்த்தவாறே குரல் இறுக, கைமுஷ்டி இறுக கடினமாக கேட்டான்.

    ஆ..ஆ...மா... தாமரை கிட்டே... அவள் எதையோ துவங்க, அவன் சட்டென நிமிர்ந்து பார்த்த பாவனையில் அவள் வாயடைத்துப் போனாள்.

    உங்களுக்கு கண்டிப்பா இன்னொரு நல்ல பொண்ணு கிடைப்பா... பேச பயமாக இருந்தாலும் அவனுக்கு தைரியம் சொல்லவேண்டும்போல் இருந்தது.

    அதற்குள் பெண் வீட்டாரிடம் பேசப் போன ரேவதியும், பாஸ்கரும் வந்துவிட, அம்மா... வாங்க கிளம்பலாம்... இதுக்கு மேலே இங்கே இருக்க வேண்டாம்... அவன் தன் பட்டு சட்டையை கழற்ற, வேகமாக வந்த ரேவதி அவனைத் தடுத்தார்.

    இல்ல... என் புள்ளையோட கல்யாணத்தை நடத்தாமல் நான் இங்கே இருந்து வர மாட்டேன். என்னங்க... மண்டபத்தில் தேடுங்க... அவர் சொல்ல,

    அம்மா... இன்னுமா எனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு ஆசைப் படுறீங்க? இந்த அவமானமே எனக்கு போதும்... இன்னொரு அவமானத்தை என்னால் தாங்கிக்க முடியாது... அங்கே இருந்த யாரின் முகத்தையும் அவனால் ஏறிட்டு பார்க்கவே முடியவில்லை.

    ஆண்டவா... நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? ஏன் என் புள்ளையை இப்படி சோதிக்கற? அனிருத், இந்த அம்மா சொன்னா கேப்ப தானே... அவன் கழட்டிய இரண்டு பட்டன்களையும் அவரே போட்டுவிட்டார்.

    பாஸ்கரோ... ரேவதி... இதென்ன விளையாட்டு விஷயமா? நிதானமா இரு மனைவியை அடக்க முயன்றார்.

    ரேவதிக்கு ஒரு விஷயம் உறுதியாகத் தெரியும்... இன்று அவனது திருமணம் நடக்கவில்லை என்றால், நிச்சயம் அவனது வாழ்க்கையில் அடுத்ததாக இப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பே அவன் அளிக்க மாட்டான் என்பது உறுதியாகத் தெரியும். பெற்றவர்களுக்கு தங்கள் மகனைப் பற்றி தெரியாதா என்ன?

    எனவேதான் அவ்வளவு பிடிவாதமாக இருந்தார். அது பாஸ்கருக்கும் புரிந்ததுதான். ஆனால், சொந்தத்தில் அவன் கட்டுவதற்கு தக்கன பெண்ணே இல்லை என்பதால் மட்டுமே அவனுக்கு அசலில் பெண் பார்த்தார்கள்.

    அப்படி இருக்கையில், திடுமென பெண்ணை பார் எனச் சொன்னால் என்ன செய்வது? தங்கள் ஒரே மகனின் திருமணம் இப்படியா ஆக வேண்டும் என்ற வேதனை அவரையும் ஆக்கிரமித்தது.

    என்னங்க... நான் ஏன் இப்படி தவிக்கறேன்னு உங்களுக்குமா புரியலை? அவர் அழுது அரற்ற, ஒதுங்கி நின்றிருந்த மித்ராவின் கண்களும் கலங்கியது.

    அனிருத்தின் முகத்தைப் பார்த்தே... 'இனிமேல் அவன் வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்ற முடிவுக்கு அவன் வந்திருப்பது தெரிய, தவித்துப் போனாள். அதற்குள்ளாக தாமரையின் வீட்டினர், உறவுகள் என அனைவரும் கிளம்பிப் போயிருக்க, மண்டபத்தில் அவர்கள் மட்டுமே மிஞ்சினர்.

    என்ன அண்ணி... நம்ம அனிருத்துக்கு என்ன குறைச்சல்... கொஞ்ச நாள் போனால் இவளை விட நல்ல பொண்ணாவே பாத்து செய்யலாம்... அவரது உறவுகள் கொடுத்த தைரியத்தை எல்லாம் கேட்கும் நிலையில் ரேவதி இல்லை.

    பாஸ்கரோ, எல்லாம் கொஞ்சம் எங்களை தனியா விடுங்க... கூடவே உங்க பக்கம் ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க... அவர் சொல்ல, அனைவரும் சற்று கலைந்து சென்றார்கள்.

    அனிருத் அங்கே இருந்த பால்க்கனி கதவைத் திறந்துகொண்டு அங்கே சென்று நின்றுவிட, அவன் தன் உணர்வுகளை, கொந்தளிப்பை கட்டுப்படுத்த போராடுவது மித்ராவுக்கு நன்றாகவே தெரிந்தது.

    ரேவதி, ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கற? நடந்தது நடந்து போச்சு... இதை அப்படியே கொஞ்சம் ஆறப் போடுவோம்... எல்லாம் நல்லபடியா நடக்கும் அவருக்கு சொல்வதுபோல் தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டார்.

    இவ்வளவு பேசுறீங்களே... அவன்கிட்டே போய்... பிறகு நான் ஒரு கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்னு ஒரு வார்த்தை மட்டும் வாங்கிட்டு வாங்க, நாம இப்போவே இங்கே இருந்து போகலாம்... அவர் சொல்ல, அங்கே வெளியே நின்றிருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1