Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Mudivin Kathai
Oru Mudivin Kathai
Oru Mudivin Kathai
Ebook210 pages1 hour

Oru Mudivin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் சொந்த அனுபவமும், நான் சந்தித்த சிலரின் அனுபவங்களும், என் நண்பர்கள் கூறிய சில சம்பவங்களும்தான் இக்கதைகளுக்கு அடிப்படை. ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் சட்டதிட்டத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஒரு சில கதைகள் இன்றைய சமுதாயத்தின் பார்வையாக அமைந்துள்ளன.

ஒரு நாவல் எழுதவேண்டும் என்பதே என் அடுத்த இலக்கு. இந்த 75 வயதில் இந்த ஆசை கொஞ்சம் அதிகம் தானோ என்று தோன்றினாலும், இப்பணியைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். இறைவன் இப்பணியை முடிக்க எனக்கு தேவையான அளவு நேரமும் சக்தியும் அளிக்க வேண்டுகிறேன்.

என் கதைகளுக்கான உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். அது பூங்கொத்தாகவோ அல்லது கற்களாகவோ எதுவாக இருந்தாலும் ஏற்கிறேன். என் கட்டுரைகளுக்கு இதுநாள் வரை எனக்குக் கிடைத்த எண்ணிக்கையில் பெருகும் என் வாசகர்களும், அவர்கள் தயங்காமல் அளிக்கும் ஊக்கமும்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்னை எழுதத் தூண்டுகிறது.

- ஆர்.வி. ராஜன்

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580125904795
Oru Mudivin Kathai

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Oru Mudivin Kathai

Related ebooks

Reviews for Oru Mudivin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Mudivin Kathai - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    ஒரு முடிவின் கதை

    Oru Mudivin Kathai

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli
    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    மொழிபெயர்ப்பாளரின் பார்வையில்...

    அணிந்துரை

    நன்றியுரை

    1. ஒரு முடிவின் கதை

    2. தலைமுறைகளில் மாறிய வரைமுறைகள்

    3. விசுவாசத்திற்கு ஒரு மாரி

    4. மகனின் கடமை

    5. பகற் கொள்ளை

    6. கடவுளின் குழந்தை

    7. ஆத்ம பலம்

    8. எங்கே அவள்?

    9. காதலுக்குக் கண்ணில்லை

    10. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

    11. தறிகெட்ட இளமை

    12. அலையும் ஆவி

    13. ரூமா

    14. நினைத்ததைச் சாதித்த ஷோபா

    15. நட்பு என்பது யாதெனில்...

    ஒரு முடிவின் கதை

    (சிறுகதைத் தொகுப்பு)

    ஆர்.வி.ராஜன்

    தமிழில் காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    என்னுரை

    சமீபத்தில் சில பழைய காகிதங்களைக் கிளறி தேடிக் கொண்டிருக்கும் பொழுது, எனக்கு ஒரு நோட்டுப் புத்தகம் கிடைத்தது. அட! நான், பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் தமிழில் எழுதிவைத்த கதைகள்! நானா இதையெல்லாம் எழுதினேன்? என்னால் நம்ப இயலவில்லை! இன்று என்னால் ஒரு கடிதத்தைக்கூட தமிழில் எழுத இயலவில்லை. காரணம் கிட்டத்தட்ட 45 வருடங்களாக தமிழில் முற்றிலுமாக எழுதுவதில்லை.

    ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறேன். உள்ளூர் வாரப் பத்திரிகையிலும் என் எழுத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை ஆங்கிலத்தில் ஒரு சிறுகதைகூட எழுதவில்லை என்பதை உணர்ந்தேன். அதையும் செய்து பார்த்துவிடலாம் என்று தீர்மானித்தேன்.

    என்னுடைய முதல் கதை 'திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' (Marriages are made in heaven) 2014-ஆம் ஆண்டு எழுதினேன். அதை மிக நெருங்கிய உற்றார், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதை எல்லோரும் பாராட்டி அதனால் மேலும் சில சிறுகதைகளை எழுதினேன்.

    என்னுடைய 'மாறும் சமூகம்' (Changing Society) எனும் கதையை கலைமகள் பத்திரிகையின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

    இக்கதையின் மூலக்கரு இன்றைய சமூகத்திற்கு பொருத்தமானது என்பதை உணர்ந்து கலைமகள் ஆசிரியர் தகுந்த எழுத்தாளருக்கு அனுப்பி, மொழிபெயர்ப்பு செய்வித்து, பத்திரிகையில் வெளியிடும் வரை எனக்கு எந்த விஷயமும் தெரியாததால் எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சிக்கு அளவேயில்லை. இது 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் கலைமகள் பத்திரிகையில் வெளிவந்தது. கலைமகள் போன்ற பாரம்பரிய தரம் மிகுந்த பத்திரிகை என் கதையை வெளியிட்டதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஊக்கமாகக் கருதுகிறேன். 'சலியாத மனம்' எனும் என் கதை 'டிகினிடி டயலாக்' எனும் பத்திரிகையில் வெளிவந்தது. இது ஒரு டிகினிடி ஃபவுண்டேஷன் வெளியீடு. எனது இன்னும் ஒரு கதை இந்த ஆண்டு ஜனவரி 2017, கலைமகள் இதழில் வெளியாகியது.

    இதனால் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள எனது சிறுகதைகளின் தொகுப்பை, தமிழிலும் வெளியிடலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டபோது, மொழிபெயர்ப்புகளுக்குப் பெயர்போன எழுத்தாளர் திருமதி. காந்தலக்ஷ்மி சந்திரமெளலியை அணுகினேன். அவரும் உடனே ஒப்புக் கொண்டது நான் செய்த பாக்கியம். இதோ உங்கள் கையில் என் சிறுகதைகளின் தொகுப்பு - தமிழில்!

    என் சொந்த அனுபவமும், நான் சந்தித்த சிலரின் அனுபவங்களும், என் நண்பர்கள் கூறிய சில சம்பவங்களும்தான் இக்கதைகளுக்கு அடிப்படை. ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் சட்டதிட்டத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஒரு சில கதைகள் இன்றைய சமுதாயத்தின் பார்வையாக அமைந்துள்ளன.

    ஒரு நாவல் எழுதவேண்டும் என்பதே என் அடுத்த இலக்கு. இந்த 75 வயதில் இந்த ஆசை கொஞ்சம் அதிகம் தானோ என்று தோன்றினாலும், இப்பணியைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். இறைவன் இப்பணியை முடிக்க எனக்கு தேவையான அளவு நேரமும் சக்தியும் அளிக்க வேண்டுகிறேன்.

    என் கதைகளுக்கான உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். அது பூங்கொத்தாகவோ அல்லது கற்களாகவோ எதுவாக இருந்தாலும் ஏற்கிறேன். என் கட்டுரைகளுக்கு இதுநாள் வரை எனக்குக் கிடைத்த எண்ணிக்கையில் பெருகும் என் வாசகர்களும், அவர்கள் தயங்காமல் அளிக்கும் ஊக்கமும்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்னை எழுதத் தூண்டுகிறது.

    - ஆர்.வி. ராஜன்

    rvrajan42@gmail.com

    மொழிபெயர்ப்பாளரின் பார்வையில்...

    மறைந்த திருமதி. பிரபா ராஜன் அவர்களின் கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். பிறகு திரு. ஆர். வி. ராஜன் அவர்களை டேக் சென்டரில் (Tag Centre), நடைபெறும் 'தமிழ் புத்தக நண்பர்கள்' நிகழ்ச்சிகளிலும், கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் சந்தித்திருக்கிறேன்.

    திரு. ராஜன் அவர்களின் ஆங்கில எழுத்துக்களை அன்றைய 'ஈவஸ் டச்' எனும் பத்திரிகையில் படித்ததுண்டு, நானும் அதில் எழுதியதுண்டு.

    ஆங்கிலக் கதைகளை மொழிபெயர்க்க என்னை அணுகிய பொழுது நான் தயங்காமல் ஒத்துக் கொண்டாலும், உள்ளூர சிறிது பயம் இருக்கத்தான் செய்தது. காரணம், அவரது ஆங்கிலப் புலமை.

    கதைகளைப் படிக்கையில் இயற்கையான போக்கும், உண்மையான நோக்கும் திரு. ராஜன் அவர்களின் எழுத்தில் இருந்ததை உணர்ந்தேன். இன்றைய தமிழ் வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மொழிபெயர்ப்பைச் செய்ய முழு சுதந்திரம் அளித்த புத்தக ஆசிரியருக்கு என் நன்றிகள்.

    ஓர் ஆங்கில ஆண் எழுத்தாளரின் பார்வையில் சிறு கதைகளைப் படித்து உணர்ந்து, மொழிபெயர்த்தது, ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

    - காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

    அணிந்துரை

    கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

    ஆசிரியர் - கலைமகள்

    என்னுடைய அருமை நண்பர் திரு. ஆர்.வி.ராஜன் எழுதியிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நல்ல கற்பனை வளமும், சொல் ஆற்றலும் மிக்க திரு. ஆர்.வி.ராஜனின் சாதுர்யம் பாராட்டத்தக்கது. இவருடைய பேனா பல இடங்களில் சித்து விளையாட்டை சரியாகச் செய்துள்ளது. ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் இது ஏதோ நம் வீட்டில் நடந்த சம்பவம் போன்று எண்ணத் தோன்றுகிறது.

    ஆர்.வி.ராஜன் அவர்களிடம் எனக்குப் பிடித்த விஷயங்கள் மூன்று. 1. அவருடைய கடினமான உழைப்பு. 2. நேரம் தவறாமை. 3. மனைவியின் மீது அவர் கொண்டுள்ள காதல்.

    ஒரு பூபாளராக விடியலில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் திரு.ஆர்.வி.ராஜன். நீங்கள் கலைமகள் ஆசிரியர்தானே? நான் விளம்பர பிரிவில் இருந்தவன். இப்போது சென்னைக்கு வந்துவிட்டேன். என் மனைவி கதை எழுதுவாள். உங்களுக்கு அனுப்பிவைப்பாள். கலைமகளுக்கு ஏற்புடையதாயின் பிரசுரியுங்கள் என்றார்.

    திருமதி. பிரபா ராஜனின் சிறுகதை கலைமகளில் பிரசுரமானது. பிரபா ராஜன் என்ற எழுத்தாளரின் அபரிதமான கருத்து வளத்தையும், கற்பனை நயத்தையும் கண்டு நான் அதிசயித்ததுண்டு!

    காலம் சில மனிதர்களைச் சீக்கிரமே தனதாக்கிக் கொள்கிறது. அப்படித்தான் நல்ல எழுத்தாளர் பிரபா ராஜன் அவர்களும் இப்பூவுலகை விட்டு மேல் உலகு கந்தர்வர்களுக்கும், தேவர்களுக்கும் கதை சொல்ல புறப்பட்டு விட்டார்.

    காதலாய் கசிந்து கண்ணீர் மல்கி - இப்படி பொருள்படும்படி தேவாரப்பாடல் உண்டு.

    பிரபா ராஜனின் முதல் நினைவு நாளில் நான் நேரிடையாகவே கண்டேன். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நின்றார் ராஜன். அவரால் துக்கத்தை அடக்க முடியவில்லை.

    தன் மனைவியிடம் அன்பாய், ஆசையாய் இருந்த திரு. ராஜன் இப்போது மனைவியின் நினைவோடு சிறுகதைகள் எழுத புறப்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    'பிரபா ராஜன் டேலண்ட் பவுண்டேஷன்' மூலம் பல புதுமுக பெண் எழுத்தாளர்களையும் இவர் அறிமுகப்படுத்தத் தவறவில்லை.

    இவருடைய கதைகளைப் படித்தால் ஹிருதயத்தில் ஈரம் தானாகச் சுரக்கும்.

    ஒரு முடிவின் கதை - சிறுகதைத் தொகுப்பு நூலை திரு.ஆர்.வி.ராஜன் அவர்கள் சிறப்பான முறையில் கொண்டுவந்துள்ளார். மொத்தம் நூலில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் மிக நேர்த்தியான கதைக் களத்துடன் நல்லதொரு விஷயத்தை நாட்டிற்கு சுவைபட எடுத்துக் கூறுகிறது என்றே சொல்லலாம்.

    மற்ற இந்தியர்களைப் போல் இல்லாமல் அனில் இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட்டான். காரணம், வயதான பெற்றோர்கள் மட்டும் அல்ல; தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணமும் அவன் மனதில் ஓங்கி இருந்தது - இப்படி நட்பு என்பது யாதெனில் என்னும் கதையில் எழுதுகிறார் ஆர்.வி.ராஜன். வயதான பெற்றோர்களைக் கவனிப்பது மகனின் கடமை என்பதையும் இந்தியாவில் உயர்படிப்பு படித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லாமல் சொந்த மண்ணிலேயே உத்யோகம் பார்ப்பதுதான் மேலானது என்பதும் ஆர்.வி.ராஜனின் அசைக்க முடியாத எண்ணம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கின்ற கதையில் திருமணத்தின் முக்கியத்துவத்தை சுவைபட விளக்கியுள்ளார் ஆர்.வி.ராஜன் அவர்கள். மனம் ஒத்த தம்பதிகள் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது கதை. கதையிலும் இருக்கிறது, கதை மாந்தர்களிடமும் இருக்கிறது, கதைக் களத்திலும் இருக்கிறது பொருத்தம்.

    வீணா தான் நினைத்தபடி தன் அன்புக் கணவரை தன்னுடனேயே இந்த உலகத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டாள். ஒருவேளை சொர்க்கத்திலேயும் ஆனந்தமாக வாழவேண்டும் என்று நினைத்து விட்டாள் போலும்! சிறுகதையின் இக்கடைசி பாரா கதையின் முழு சுருக்கத்தையும் சொல்லாமல் சொல்கிறது. இதுதான் ஆர்.வி.ராஜன் கற்று வைத்திருக்கும் சித்து விளையாட்டு என்று நான் நம்புகிறேன்.

    கடவுளின் குழந்தை என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதை மனோதத்துவ ரீதியான கதை என்றே சொல்லலாம். பலருக்கு நம்பிக்கை கொடுக்கும் நல்ல கதை! பேச்சுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இன்று பல சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன. அவர்களை தன்னம்பிக்கை உள்ள மனிதர்களாக மாற்றுகிறது. இதைத் தவிர இக்குழந்தைகளுக்கு வீட்டிலேயே படிப்புக் கற்றுக் கொடுத்து தன்னம்பிக்கையையும், சுயசார்பையும் வளர்க்கலாம் என்கிறார் கதாசிரியர்.

    ஒரு முடிவின் கதை இதுதான் நூலின் தலைப்பு. சென்னை புறநகர்ப் பகுதியில் இருந்த கபாலி அபார்ட்மெண்ட்ஸின் ஒரு பிளாட்டின் முன்பு ஏதோ கூச்சல் கேட்டது. இப்படி ஆரம்பிக்கிறது கதை. இந்த ஆரம்பத்திலேயே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறார் ஆர்.வி.ராஜன். மனம் திருந்திய ஒரு ரவுடியின் மகனைச் சுற்றி வருகிறது கதை. கதையின் முடிவில் தினசரி பேப்பரில் வந்த செய்தியை லாவகமாக நுழைத்து கதையை நிறைவு செய்கிறார் கதாசிரியர்.

    கதையை முழுவதும் தெரிவித்து விட்டால் சுவாரஸ்யம் குன்றிவிடும். எனவேதான் மேலோட்டமாக சொல்லியிருக்கிறேன். இதிலேயே கதையின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

    அணிந்துரையில் எவ்வளவு சொல்ல முடியுமோ? அதைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். கதைகளை முழுமையாக சொல்லவில்லை. நீங்கள் இக்கதைத் தொகுப்பினைப் படிக்கும்போது ஒவ்வொரு கதையும் உங்களுக்கு ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத்தரும் என்பதை உணர்வீர்கள்.

    ஆர்.வி.ராஜன் எழுதிய சிறுகதைகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து இருப்பவர் திருமதி.காந்தலக்ஷ்மி சந்திரமெளலி அவர்கள். ஒரு ஆங்கில ஆண் எழுத்தாளனின் பார்வையில் சிறுகதைகளை படித்து உணர்ந்து மொழிபெயர்த்தது ஓர் புதிய அனுபவமாக இருந்தது என்கிறார் திருமதி.காந்தலக்ஷ்மி சந்திரமெளலி. ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலத்தில் இருந்து மாறுபடாமல் சுவை குன்றாமல் எப்படிச் செய்ய வேண்டுமோ அதே போன்று மிகச் சரியான விருந்து படைத்து இருக்கிறார் திருமதி.காந்தலக்ஷ்மி சந்திரமெளலி அவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது!

    ஆர்.வி.ராஜன் அவர்கள் வலைத்தளத்தில் பல ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி வருகிறார். மிகவும் பயனுள்ள குறிப்புகள் அடங்கியதாக இருக்கும் அக்கட்டுரைகள். இவர் விளம்பரத் துறையில் முன்னோடியாக விளங்கியவர். என்னைப் பொறுத்தவரையில் இவர் ஒரு பன்முகத் தன்மை கொண்டவர். இச்சிறுகதைத் தொகுப்பு நூலைப் படிக்கும்பொழுதே இவருடைய பன்முகத் தன்மையை நீங்கள் உணரலாம்.

    அன்புடன்

    கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

    ஆசிரியர் - கலைமகள்

    நன்றியுரை

    முதலில் பெருகிக்கொண்டு வரும் என் வாசகர்களுக்கும், அவர்கள் எனக்கு அளிக்கும் ஊக்கத்திற்கும், என் எழுத்திற்கு அளிக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி.

    பிரபல பத்திரிகை கலைமகளில் என் இரு கதைகளை

    Enjoying the preview?
    Page 1 of 1