Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Roja Oru Idhayam
Oru Roja Oru Idhayam
Oru Roja Oru Idhayam
Ebook146 pages2 hours

Oru Roja Oru Idhayam

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466282
Oru Roja Oru Idhayam

Read more from Usha

Related to Oru Roja Oru Idhayam

Related ebooks

Reviews for Oru Roja Oru Idhayam

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Roja Oru Idhayam - Usha

    21

    1

    ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி முகிலன் நின்றிருந்தான்.

    ஊரிலிருந்து விலகி நல்ல உள்பக்கமாய் அமைந்த தனியான அந்த ஓட்டு வீட்டின் மெலிந்த கம்பிகளில் அவனுடைய வலிமையான விரல்கள் பதிந்திருந்தன.

    இன்னதென்று பெயர் சொல்லமுடியாத தாவரங்கள் புதர்களாக மண்டிக்கிடந்த சுற்றுப்புறம்.

    வேலிகாத்தான் செடியே படல்களாய் மாறி அமைந்திருந்த வேலி.

    அடர்ந்த தோப்பு போன்ற உருவகத்தை ஏற்படுத்தியிருந்த முள் மரங்கள்.

    மனிதனுக்குப் பயன் தரக்கூடிய மரம் என்று பார்த்தால் வேப்ப மரம் ஒன்றுதான் தன் தோகைகளை விரித்துக்கொண்டு படாந்திருந்தது.

    வாழ்க்கையை நேசிக்கும் மனிதர்கள் இருக்குமிடத்தில்தான் பவழமல்லிகையும் பட்டு ரோஜாவும் படருமோ? உபத்திரவமில்லாத யதார்த்த நாட்களை நடத்திச் செல்பவர்களின் அருகாமையில்தான் பொன்னாங்கண்ணியும் பச்சைக் கீரையும் கூட வளருமோ?

    உலகத்தின் மீதே வெறுப்பும் சமுதாய கோட்பாடுகளின் மேல் ஆத்திரமும் முகமூடிகளைக் கிழத்தெறியத் தவிக்கும் வெறியும் கொண்டு வாழும் மனிதர்களின் சுற்றுப்புறத்தில் முருங்கைக் கன்று கூட முளைக்காமல்தான் போய்விடுமோ?

    முகிலன் தலையை உதறிக் கொண்டான்.

    முட்புதர்களிலிருந்து பார்வையை மீட்டு வேப்பமரத்தின் கிளைகளின் மேல் பதித்துக் கொண்டான்.

    வெள்ளை வெள்ளையாக அரும்புகள் விடத் தொடங்கி வசந்த காலமும் கோடைக்காலமும் இணையப்போகிற நாளை எண்ணி வேப்பமரப் பூக்கள் காத்திருந்தன. சித்திரை மாதப்பிறப்பு என்கிற பிரசவ நாளை எதிர்நோக்கி இயற்கை ஒரு மவுனத்தவம் தொடங்கி விட்டதோ என்று தோன்றியது.

    பங்குனி முடியப் போகிறது!

    புதிதாய் ஒரு வருடம் பிறக்கப் போகிறது!

    புது வருடம்!

    தமிழ் வருடம்!

    அம்மாவின் ஞாபகம் அடிமனதிலிருந்து பீறிட்டு எழுந்தது.

    இங்கிலீஷ் படிக்கணும்தாம்பா முகிலா... அது உலகத்தோட நாம எப்பவும் தொடர்பு வெச்சுக்கறதுக்காக! ஆனா வாழறதுக்காக நாம கத்துக்க வேண்டிய மொழி தமிழ்தாம்பா! தமிழ் வருஷப் பொறுப்புதான் நமக்கு திருவிழா! இது என்ன தெரியுமா? வேப்பம்பூ பச்சடி! என்னவெல்லாம் இருக்கு தெரியுமா இதுல? வேப்பம்பூ கசப்புக்கு, புளித்தண்ணி புளிப்புக்கு, வெல்லத்துண்டு இனிப்புக்கும் மாங்காய் துவர்ப்புக்கு, உப்பு உவர்ப்புக்கு, மிளகாய் காரத்துக்கு. அறுசுவையும் கலந்து வருஷப் பிறப்பை வரவேற்கிறோம்பா முகிலன். எல்லா சுவைகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கைங்கற தத்துவத்தை மறைமுகமா உணர்த்துற பக்குவத்தை பெரியவங்க ஏற்படுத்தி இருக்காங்கப்பா. தமிழ்ப் பெரியவங்க...

    ஒவ்வொரு வருடப் பிறப்பின் போதும் அம்மா இதைப் பரிமாறியபடியே சொல்லுவாள். அரும்பு விடத் தொடங்கிய முதிர் சிறுவனாக இருந்தபோதும் சரி, அடர்ந்த மீசையுடன் அவன் கீதாஞ்சலியைப் படிக்கும் இளைஞனாக ஆனபோதும் சரி –

    அம்மா!

    கேட்டுக் கொள்ளும்போது தத்துவங்கள் எல்லாம் மந்திரங்கள் போல் அழகாகத்தான் இருக்கின்றன.

    ஆனால்-

    கடைப்பிடிக்க முயற்சிக்கும்போது அவை முள் நிறைந்த ஆயுதங்களாக அல்லவா மாறிவிடுகின்றன?

    ‘எல்லா சுவைகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை’ என்று எவ்வளவு எளிமையாகச் சொன்னாய்?

    முடியவில்லையே அம்மா!

    இயல்பானதுதான் கசப்பும் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

    பூமியில் இருந்து முளைத்து வந்த கசப்பா இல்லை பூர்ஷ்வாக்களின் ஆதிக்க வெறியில் பிறந்த கசப்பா என்று சிந்திக்க தோன்றிவிட்டதே!

    இயற்கை கொடுத்த கசப்பா இல்லை எல்லாவற்றையும் விலைக்கு வாங்குகிற மனித ராட்சசர்களின் ஈனச்செய்கைகளால் விளைந்த கசப்பா என்று யோசிக்கத் தெரிந்துவிட்டதே!

    முகிலா...

    அப்படியே நின்றான்.

    இறுகிப் பிடித்த விரல்களின் இடுக்கு வழியாக இரும்புப் பொடிகள் உதிர்ந்தன.

    உன்னைத்தானப்பா முகிலா.

    கார்த்தி அழைத்தான்.

    முகிலன் திரும்பாமல் கண்களை மட்டும் அசைத்தான்.

    என்ன யோசனை முகிலா? அடிக்கடி இப்படி நிற்கிறாயே, பிரமை பிடித்தவன் போல... கார்த்தி அவன் தோள்களைத் தொட்டான்.

    நினைவுகள்...

    மலரும் நினைவுகளா...

    எரியும் நினைவுகள்... என்றான் தாடை நொறுங்க. வேப்பமரத்துப் பூ கேட்பாள் என் அம்மா புது வருட நாளில். சைக்கிளை எடுத்துக் கொண்டு அலைவேன் கார்த்தி... சிறு குழந்தைக்குச் சொல்வது போல் வேப்பம்பூ பச்சடி பற்றி சொல்வாள்... இன்னும் அம்மாவின் குரல் கேட்கிறது கார்த்தி... அதோடு சேர்த்து அவள் அலறலும் கேட்கிறது ‘அய்யோ பாவிகளே, விடுங்கள்... என் சேலையை விடுங்கள். ஒன்றும் தெரியாது எனக்கு...’ என்று கதறிய அம்மாவின் குரல்...

    முகிலன் படாரென்று நெற்றியை ஜன்னல் மேல் இடித்துக் கொண்டான். குலுங்கினான்.

    என்னப்பா இது? உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது... நம் இயக்கத்தின் பாலபாடம்தானே அது! விடப்பா முகிலா...

    உணர்ச்சி இல்லாவிட்டால் இயக்கம் ஏது கார்த்தி?

    உணர்ச்சி தேவைதான்... விரயமாக்கிவிடாமல் சேமித்து வை முகிலா... சமயங்களில் தேவைப்படும்போது உபயோகிக்க தோதாக... கார்த்தி அவன் முகத்தை நிமிர்த்தித் தோளில் தட்டினான்.

    என்னப்பா, கிளம்பவில்லையா இன்னும்?

    ஆதியும் சுலைமானும் வந்தார்கள்.

    இதோ... கார்த்தி சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.

    ஆதி... எல்லாம் சரியாக இருக்கிறது இல்லையா? ஒரு தடவை சொல்லேன் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று...

    ஆதி பக்கத்தில் வந்தான். தோழனின் காதில் முணுமுணுத்தான். சரி சரி என்பது போல் கார்த்தி தலையை ஆட்டிக் கொண்டான்.

    வாப்பா... முகிலா...

    கிளம்பினார்கள்.

    இரு ஒரு நிமிடம்... என்று ஆதி எதிரில் வந்து நின்றான்.

    இவ்வளவு விறைப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம் முகத்தை...! கோபம் மனதில் இருக்கவேண்டும்... மனதில்தான் இருக்க வேண்டும்...

    முகிலன் புன்னகைத்தான்.

    சரியாக இருக்கிறது... போய் வாருங்கள்...

    காத்திருந்த இரண்டு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்.

    முகிலனின் ஒரே உதையில் வண்டி கிளம்பிவிட, கார்த்தி தோழர்களைப் பார்த்துக் கையசைத்தான்...

    கரடு முரடான கல்பாதையை விட்டு, மண் சாலைக்கு வந்து நீண்டதூரம் பயணித்து சிமெண்ட் ரோட்டை அடைந்தபோது வெயில் உச்சிக்கு ஏறிவிட்டது.

    அக்னியை உருக்கி எல்லார் தலையின் மீதும் கொட்டிக் கொண்டிருந்த கதிரவனை ஆடுமாடுகள் கூட கோபமாய் பார்க்க, பரபரப்பான தெருவின் மையமான அந்தக் கட்டிடத்தின் முன்பாக வண்டியை கார்த்தி நிறுத்தச் சொன்னான்.

    இரு... உள்ளே போகிறேன்... எவ்வளவு விவரம் தேற்ற முடியுமோ பார்க்கிறேன்...

    ‘மந்திரமூர்த்தி பஞ்சாலை’ என்று பெயர் பொறிக்கப்பட்ட கட்டிடத்தின் வாட்ச்மேன் நிறுத்தி விசாரிக்க, கார்த்தி அவன் கையில் அழுத்திய பச்சை நோட்டுக் கதவைத் திறந்துவிட்டது.

    முகிலன் வேடிக்கை பார்த்தபடி வண்டியின் மேலே உட்கார்ந்தான்.

    சக்கரங்களை உருட்டிக்கொண்டு வாகனங்கள் பறந்தன. குழந்தைகள் வெண்மை உடுப்பில் வீடு திரும்பினார்கள். சின்னஞ்சிறு பெண்கள் கூட்டமாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும் காட்சி ரம்மியமாக இருந்தது. மெத்து மெத்தென்று வெள்ளை நாய்க்குட்டி குறுக்கும் நெடுக்குமாக ஓடியது.

    அம்மா! தாகம்மா! லஸ்ஸி வாங்கிக் குடும்மா... பள்ளிச்சிறுவன் தாயிடம் கத்தினான்.

    தலையை உயர்த்தியது நாய்க்குட்டி,

    ஒன்னைத்தாம்மா கேக்குறேன்! இட் இஸ் வெரி தர்ஸ்ட்டி! லஸ்ஸி வேணும்மா! ப்ளீஸ்மா! லஸ்ஸி... என்றான் விடாமல்.

    விலுக்கென்று நாய்க்குட்டி திரும்பியது.

    முகிலன் வியப்புடன் கவனித்தான்.

    நிலைகொள்ளாமல் இங்கும் அங்கும் விரைந்தபடி எல்லா முகங்களையும் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியை அவன் விழிகள் ஆர்வத்துடன் கவனித்தன.

    லஸ்ஸி... என்றான் மெதுவாக

    சடாரென்று நின்றது. திரும்பிப் பார்த்தது.

    லஸ்ஸி... என்று கைநீட்டினான்.

    அடுத்த கணம் ஓடிவந்து அவன் மேல் ஒட்டிக் கொண்டது. நெஞ்சில் பந்தாக சாய்ந்து கொண்டது.

    2

    "கபிலனுக்கு குறிஞ்சி

    காளிதாசனுக்கு தாமரை

    வேர்ட்ஸ்வொர்த்துக்கு டேஃபாடில்ஸ்

    ஷேக்ஸ்பியருக்கு ரோஜா

    ஷெல்லிக்கு செர்ரி

    டால்ஸ்டாய்க்கு லூப்பீன்"

    தொலைபேசியை வைத்துவிட்டு நிவேதா டேபிளில் கிடந்த அன்றைய தினசரியை எடுத்துக் கொண்டாள்.

    என்னம்மா பேசிட்டிருந்தே ஃபோன்ல? தமிழ் பாதி தெரிஞ்சுது... மத்தது...? என்ன பாஷை? யார்கிட்ட? டிரேயில் தேனீர் கோப்பைகளும் பிஸ்கட்டும் கொண்டு வந்து பார்வதி எதிரில் உட்கார்ந்தாள்.

    நிவேதா சிரித்தாள்.

    "கவிஞர்கள் பேரும், பூக்களோட பேரும்மா, மத்ததெல்லாம்... நம்ப இலக்கியா இன்னிக்கு ஏதோ பட்டிமன்றத்துல பேசப்போறாளாம்... கட்டாயம் நானும் வரணும்னு வேற சொல்லியிருக்கா... பூக்கள் பத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1