Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Manithan Oru Veedu Oru Ulagam
Oru Manithan Oru Veedu Oru Ulagam
Oru Manithan Oru Veedu Oru Ulagam
Ebook516 pages7 hours

Oru Manithan Oru Veedu Oru Ulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview
Languageதமிழ்
Release dateJan 6, 2018
ISBN9789352441907
Oru Manithan Oru Veedu Oru Ulagam

Related to Oru Manithan Oru Veedu Oru Ulagam

Related ebooks

Reviews for Oru Manithan Oru Veedu Oru Ulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Manithan Oru Veedu Oru Ulagam - Jeyakanthan

    (சிதம்பரம்)

    முன்னுரை

    பொதுவாக எனது புத்தகங்களுக்கு நான் எழுதும் முன்னுரைகளைப் பலரும் பாராட்டுகிறார்கள். பயனுடையது என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் எனது அன்புக்கும் மதிப்புக்கும் பெரிதும் பாத்திரரான ஒரு நண்பர் - 'நீங்களே உங்கள் கதைகளைப் பற்றிப் பேசிக் கட்டியங் கூறுவது எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை' என்று ஒவ்வொரு முறை சந்திக்கிறபோதும் கூறி வருகிறார். அவர் ஏன் அவ்விதம் கூறுகிறார் என்பதும் எனக்குப் புரிகிறது. ஆயினும் நான் எழுதுகிற காரியமே சில நிர்ப்பந்தங்களின் நிமித்தமே நிகழ்வது என்பதால் இந்த முன்னுரைக்கும் அதே நிர்ப்பந்தம் காரணமாகிறது.

    சரத்சந்திரர்கூடத் தனது நாவல்களுக்கு முன்னுரை எழுதுவதில்லையென்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்தேன். 'நானூறு பக்கம் எழுதிய நாவலில் விளக்க முடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரை விளக்கி, வாசகர்கள் விளங்கிக்கொள்ளப் போகிறார்கள்' என்பாராம் சரத்சந்திரர்.

    சரத்சந்திரர் சொல்லுவது அவருக்குச் சரி. 'நானூறு பக்கம் விளங்காத ஒரு விஷயத்தை எழுதுகிற நான் இன்னும் நாலு பக்கம் ஏன் எழுதக் கூடாது? விளங்குகிறவனுக்கு இந்த நாலு பக்கமே போதும்' என்று எனக்குத் தோன்றுவதால், நாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.

    ஒரு நாவலைப் பற்றிப் பேச, எழுதுகிறவனுக்கு அந்த நானூறு பக்கத்தில் நிச்சயம் இடம் ஏற்படாது. அதன் முன்னுரையில்தான் சொல்ல முடியும், அல்லது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    மேலும், என்னைப் பற்றியும் எனது எழுத்துக்கள் பற்றியும் நடக்கிற விவாத விமர்சனங்களுக்கு இன்னொரு பத்திரிகையையோ இன்னொருவரின் தயவையோ நாடாமல் சுதந்திரமாக, சொந்தமாக இந்தப் பக்கங்களை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

    என் கதைகளை மட்டும் விரும்பிப் படிக்கிறவர்கள், இது அவற்றுக்குச் சம்பந்தமற்ற விஷயம் என்று கருதுகிறவர்கள் இவற்றைப் படிக்காமல் புரட்டித் தள்ளிவிட்டு, தங்களுக்கு உகந்த பிற பக்கங்களைப் படிப்பது குறித்து எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை.

    ஒரு நாவலையோ, ஒரு தொகுதியில் உள்ள சிறுகதைகளையோ எழுதிய காலத்தில் அதுபற்றிக் கூறப்படுகிற கருத்துக்களையும் சந்தேகங்களையும் நான் எந்தவிதப் பிரதிபலிப்பும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

    வாசகர்களின், விமர்சகர்களின், பத்திரிகைக்காரர்களின் ஆலோசனைகள் எதுவும் எனது எழுத்துக்களை அது எழுதப்படுகிறபோது பாதிக்காத மனக் கவசங்களை நான் அணிந்துகொள்கிறேன்.

    எல்லாருடைய அபிப்பிராய - விமர்சன - விவாத -தூஷண - ஸ்தோத்திர இரைச்சல்களை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த நான் ஜடமல்ல என்று காட்டுவதற்காகவும், அவர்களையும் அவர்களது இலக்கியப் பிரக்ஞைகளையும் அங்கீகரிக்கும் பொருட்டும் நான் முன்னுரையில் கதையைப் பற்றியும் என்னைப் பற்றியும் பேசுகிறேன்.

    தமிழ் இலக்கிய மரபில் இது மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது. 'பாயிரம் அல்லது பனுவல் அன்று' என்பது நன்னூல் சூத்திரம்.

    ஆசிரியன், மாணவன், நண்பன் ஆகியோர் ஒரு நூலுக்குப் பாயிரம் எழுதலாம். எனது முன்னுரைகளை இந்த மூன்று கோணங்களிலிருந்தும் நான் எழுதுகிறேன்.

    எவ்வளவு எழுதினாலும் 'இன்னும் விளக்க' எதிலும் இன்னும் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன்.

    இந்தக் கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களும் தரையில் காலூன்றி நிற்கிற - நாம் எங்கெங்கோ சந்தித்த மனிதர்கள்தான் என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். அதே மாதிரி இதில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளும் உணர்ச்சிகளும்கூட நாம் நமது வீட்டிலும் நமது உறவிலும் அனுபவித்தவைதாம் என்று சொல்லுதல் தகும்.

    ஆனால் இதில் வருகிற ஹென்றி மிகவும் கற்பனாலங்காரமாகத் தோற்றமளிக்கிறான் - எனும் கூற்றை மறுப்பது சாத்தியப்படாது என்று அறிந்தே இவனை நான் அறிமுகம் செய்தேன்.

    காந்திஜியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொல்லவில்லையா? 'வருகிற தலைமுறையில் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று சொல்லுவதை நம்புவதுகூடச் சிரமமானதாயிருக்கும்' என்று.

    அந்தப் பாத்திரம் மிகவும் 'ஐடியலிஸ்டிக்'காக இருக்கிறதுதான். 'ஐடியலிஸ்டிக்'கான மனிதர்களை, ஏன் - 'மிஸ்டிக்'கான மனிதர்களைக்கூட நடைமுறை வாழ்க்கையில் நாம் நிறையச் சந்திப்பதில்லையா?

    'இப்படியொரு மனிதனைப் பார்த்ததில்லை' என்று கூறுவது இது சாத்தியமல்ல என்பதற்கு வலுவூட்டும் கருத்து ஆகாது. 'பார்ப்பீர்கள் - பாருங்கள்' என்பதே அதற்குப் பதிலாகும். 'தேடுங்கள்; கண்டடைவீர்கள்' என்ற ஏசுநாதரின் வாக்கு அவர் தன்னைப் பற்றி, தீர்க்கதரிசிகளைப் பற்றி, நல்லவர்களைப் பற்றி, நல்லவை பற்றிக் கூறிய வாசகமாகவே நான் கொள்கிறேன்.

    பிறவிக்குருடனான திருதராஷ்டிரன் தனது புத்திரர்களான தருமனையும், துரியோதனனையும் அனுப்பி உலகமும் மனிதரும் எவ்விதம் இருக்கிறார்கள் என்று அறிந்து வந்து கூறப் பணித்தனன்.

    தருமன் உலகையும் மனிதரையும் பார்த்து மகிழ்ந்து கூறினான்: 'புருஷர்கள் உத்தம சீலராய், பெண்கள் பதிவிரதைகளாய், மக்கள் சத்திய சந்தராய் வாழ்கிறார்கள்' என்று.

    துரியோதனன் சொன்னான்: 'புருஷர்கள் சோரர்களாகவும், ஸ்திரீகள் விபசாரிகளாகவும், மக்கள் காமுகர்களாகவும் இருக்கிறார்கள்' என்று.

    குருட்டுத் திருதராஷ்டிரன் உலகையும் மக்களையும் தருமனைப் போலவோ, துரியோதனனைப் போலவோ அல்லாமல், அவர்கள் கூற்றினால் - முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொண்டானாம்! இந்தக் கதையை ஒரு கிராமத்துக் கிழவனே எனக்குச் சொன்னான்; வியாசன் அல்ல.

    மகாபாரதம் பெரிய இதிகாசம் என்று தெரியாத பாமரர்களால்தான் அது எனக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. நமது வாழ்க்கையில் படித்த முட்டாள்களும் பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள். நகரம் வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறது. கிராமம் அழகிய இயற்கைச் சூழலில் தானும் ஓர் அழகு, இயற்கையின் வதனத்தில் தான் ஒரு சிந்தூரத்திலகம் என்றெல் லாம் தெரியாமல் உழைப்பை யோகமாய்ப் பயின்று வாழ்கிறது.

    நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம்.

    வாசகர்களில், விமர்சகர்களில் தருமர்களும் உண்டு; துரியோதனர்களும் உண்டு. நான் திருதராஷ்டிரன் நிலையிலிருந்தே இதனை எழுதினேன்.

    இதை நான் ஒரு தொடர்கதை என்றே அழைக்க விரும்புகிறேன். பத்திரிகையில் வெளியாகும் தொடர்கதைகள் எதையும் நான் படித்துப் பயின்றதில்லை. அதுபோல் ஒன்று எழுத வேண்டும் என்று முயன்றதுமில்லை. நாவல் என்று ஏதோ ஒன்று இருப்பதாக நம்பியதுண்டு. அது தமிழில் வளம் பெறவில்லை என்று விமர்சனக்காரர்கள் சொன்னார்கள். அதற்கான எவ்விதமான தயாரிப்புமின்றி ஏதோ ஒரு ஆசையினால் எனக்குத் தகுதியிருப்பதாக நம்பி, இந்த வசை என்னால் கழியட்டும் என்று பெரும் ஆசை கொண்டு (பேராசை அல்ல) நான் பேசியதும் உண்டு. அதற்கான முயற்சிகள் ஏதும் நான் செய்ததில்லை. திட்டமிட்டு ஒரு விஞ்ஞானி மாதிரி, அல்லது ஆராய்ச்சிக்காரன் மாதிரி எல்லாவிதமான 'ரெஃபரன்ஸ்'களுடனும் முனைந்து மனம் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடுவது எனக்கு மிகவும் சலிப்பைத் தருகிறது. அதற்குரிய நேரமும் நிதானமும் எனக்கில்லை. எனவே நாவல் என்பது என்னைப் பொறுத்தவரை கைக்கெட்டாத கனவு என்று அது பற்றிய கனவுகளிலேயே நான் சஞ்சரித்தேன்.

    நான் எனது சூழ்நிலைகளுக்கேற்ப, எனது இயல்பு கெடாமல், சூழ்நிலையில் கரைந்து போகாமல் அவற்றைச் சரியாகவே பிரதிபலிக்குமாறு படைக்கப்பட்டிருக்கிறேன். சூரியனின் கதிர்கள் எல்லாப் பொருள்களின் மீதும் படுகிறது. ஆனால் அந்தச் சூரியனையே ஒரு கண்ணாடியோ அல்லது கையளவுத் தண்ணீரோ (Reflector) தான் திரும்பவும் காட்டும். அப்படி ஒரு சிறிய கண்ணாடி நம்முள் எங்கேயோ ஒட்டிக்கொண்டிருப்பது சர்வ சத்தியம். நான் அதன் மினுக்கல்களை இந்த வாழ்க்கையில் எத்தனையோ இருளிலும் காண்கிறேன்.

    'ஒரு மனிதன்' என்ற தலைப்பில் ஒரு பெரிய கதையை என்னுள் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கதையின் ஆரம்பமும் முடிவும், இடையில் நடப்பனவும் மிகத் தெளிவாக என்னுள் அடிக்கடி முகிழ்த்து சரம் சரமாய்ப் பெருகும். இந்தப் புவனம் முழுவதும் மலர்க்காடாய்த் தெரியும். ஒவ்வொரு இதழும் மிகத் தெளிவாகத் தென்படும். பிறகு எல்லாம் கனவு போல் மறந்து போகும். கண்ட கனவை நினைவுகூர்வதற்காகக் கண்களை மூட மறுபடியும் ஓர் அற்புதக் கனவு தொடரும். இப்படி ஓர் தன்னிலை மயக்கமாக, சுயானுபூதியாக இந்தக் கதை இன்னும் நிறைய என்னோடு இருக்கிறது.

    பின்னர் இந்தக் கதைக்கு 'ஒரு வீடு' என்ற தலைப்புக் கொடுக்கலாமா? என்று யோசித்து, 'ஒரு உலகம்' என்று மாற்றி கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து என் கனவு மாதிரியே எல்லாவற்றோடும் தொடர்பு கொண்ட ஒரு முழுமையான தலைப்பு மிகப் பொருத்தமாகக் கிடைத்தது. வீட்டில் மனிதரும் உண்டு. மனிதரில் உலகமும் உண்டு. இந்த மூன்றும் எப்படி வேண்டுமானாலும் ஒன்றோடொன்று புகுந்துகொள்ளும், அறம், பொருள், இன்பம் மாதிரி; பக்தி, ரசனை, படைப்பு மாதிரி.

    இந்தத் தலைப்புக் குறித்து, இதை எழுதத் தொடங்கும்போது நான் ஒரு விளக்கம் தந்திருக்கிறேன்:

    'ஒரு உலகமா? - ஓர் உலகமா?' வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் ஆக இருப்பின் 'ஓர்'தான் போட வேண்டும் என்பது தமிழ் இலக்கண மரபு. இது தெரிந்தே 'ஒரு உலகம்' என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் சரியாகக் கடைப்பிடிப்பதென்றால் 'ஓர் உலகம்' என்று எழுதுவது கூடச் சரியில்லை. 'ஓருலகம்' என்றே எழுதுதல் வேண்டும். எளிமை கருதி கால வழுவினால் 'ஓர் உலகம்' என்று எழுதிப் புரிந்துகொள்கிற வழக்கத்தை நாம் தற்காலத்தில் கைக்கொண்டுள்ளோம். அதேபோன்று பொருள் கருதி 'ஒரு உலகம்' என்று எழுதுவதே இங்கே பொருந்தும் என்று நான் துணிந்தேன்.

    இலக்கணத்தில் சொல்லியிருக்கிறது என்பதற்காக வேறு பலமான காரணங்கள் இருந்தும்கூட அவசியம் கருதி ஒரு மாற்றத்தைச் செய்யவோ, ஏற்கவோ, பக்குவம் பெறாவிட்டால் ஒரு மொழியும் வளர்ச்சியும் முடங்கிப்போகும்.

    'அவளே ஒரு உலகம்' என்று சொல்லும்போது உலகம் என்று நாம் கருதுகிற இந்தப் பூமி உருண்டைக்கும் இங்கே சொல்லப்படுகிற உலகத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஓருலகப் பிரஜை என்பதற்கும் ஓர் உலகப் பிரஜை என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஓருலகம் என்பது ஒரு 'தியரி'யும், ஓர் உலகப் பிரஜை என்பது இப்போதே ஓர் நடைமுறையும் ஆகும். எனவே பழைய மரபுகளுக்கு விரோதமாக இதனை விரும்பி, இலக்கணம் தெரிந்து, ஓர் அர்த்தத்துடனேயே நான் 'ஒரு உலகம்' என்று எழுதியிருக்கிறேன்.

    இந்த நாவலின் கதை இடம் பெறுகிற கிராமம் இன்ன இடத்தில்தான் என்று என்னால் சொல்ல முடியாது. காலத்தைக் கூடக் குறிப்பாக எப்போது என்று சொல்லுவது என்னுடைய நோக்கமல்ல. சில சம்பவங்கள் சில பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படும் காலச் சூழ்நிலை முதலியன இது தற்காலம் அல்லது நிகழ்காலம் என்பதை உணர்த்துவதாக அமைந்தால் அதற்குக்கூட நான் பொறுப்பில்லை.

    எந்த மண்ணின் வாடையையும் இந்தக் கதையில் வீசவைக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குக் கிடையாது. வட்டார வழக்குகளை வடித்துத் தரவும் எனக்கு உத்தேசமில்லை. 'மனிதனுக்கு இந்த மனித வாழ்க்கையைப் பற்றிய பற்றும் பயமும், கதை கதையாக அமைந்த தனி மனிதர்களால் உருவாகும் வாழ்க்கை பற்றிய வரலாறும், இந்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு தனி மனிதனுடைய நிறைவும், பயமும், நம்பிக்கையும் இந்த நாவல் பிறக்கக் காரணமாயின!' என்று எழுதி அதைத் தொடர்ந்து இந்தத் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கினேன். ஒரு தயக்கமுமில்லாமல் 'லாரியில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள்!' என்று ஆரம்பித்தேன் . . .

    மிகச் சாதாரணமான எந்தத் தொடர்கதை எழுத்தாளரையும் போல ஒவ்வொரு வாரமும் 'எத்தனை பக்கம் எழுதினால் எத்தனை பக்கம் அச்சில் வரும்' என்கிற கடமை நிறைவேற்றமாகவே இதனை நான் எழுதினேன். ஆனால் ஒவ்வொரு வாரமும் சுவை கூட்ட வேண்டும் என்பது எனது கடமை என்று நான் நினைக்கவில்லை. அதை எழுதுகிறபோதே, எழுதுகிற அனுபவத்தினால் ஏற்பட்ட சுவை எனக்குக் கூடிப்போனதால் மேலும் பதினைந்து வாரங்கள் இந்தத் தொடர்கதையைத் தொடர்ந்து எழுதினேன். ஆனாலும் எனக்கு இதை முடிக்க மனமில்லை. முடிவும் தெரியவில்லை. இதை எழுதி எழுதி வெளியிடாமல், முன்புபோல் மனத்தில் அசை போட்டு நான் மட்டும் இதில் கொஞ்ச காலம் லயிக்க வேண்டும் என்பதால் முதல் பாகத்தோடு நிறுத்தினேன்.

    முதல் பாகத்தின் இறுதியில் இந்தக் கதையைப் படிக்க நேர்ந்த 'வாசகர்களுக்கு' நான் எழுதினேன்:

    "இந்தத் தொடர்கதையை இருபத்தைந்து வாரங்களுக்கு எழுதுவதாய் நான் ஆனந்த விகடனில் ஒப்புக்கொண்டேன். அப்போது என் மனத்தில் இருந்த கதையே வேறு. அந்தக் கதையை வெளியே சொல்வதுகூட ஒரு அபத்தம் என்று இப்போது தோன்றுகிறது.

    இந்த நாவலின் முதல் வரியை எழுதிய பிறகு அடுத்த வரியும், முதல் அத்தியாயத்தை எழுதிய பிறகு அடுத்த அத்தியாயமுமாய் இதன் திசை எனக்குத் தெளிவுபட ஆரம்பித்தது. நான் ஒப்புக்கொண்டபடி இந்தக் கதையை முடிக்க முடியாததால் மேலும் சில வாரங்கள் எழுத விரும்பியபொழுது பெருந்தன்மையோடு தனது சில பக்கங்களை எனக்கு ஒதுக்கிக் கொடுத்த ஆனந்த விகடனுக்கு எப்போதும் போல் என்றும் நான் நன்றி பாராட்டுகிறேன்.

    என்னளவில் இந்தத் தொடர்கதை முடிவு பெறாததேயாகும். எனவேதான் இரண்டாவது பாகத்தை உடனடியாகத் தொடங்கும் உத்தேசமில்லாமலே இந்த முதற்பாகத்தை முடித்திருக்கிறேன். இப்போது எனக்கே ஓர் இடைவேளை தேவைப்படுவதே அதற்குக் காரணம்.

    நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.

    கவர்ச்சியை நோக்கமாய்க் கொண்டு ஆண் - பெண் உறவையும் பெண்ணின் உடலையும் வர்த்தகப்பொருள் ஆக்குகின்ற இன்றைய பெரும்பாலான 'இலக்கிய உத்தி'கள் என்னை அறியாமலேயே - இந்த நாவலின் இயல்பு காரணமாகவே முற்றிலும் இதில் தவிர்க்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

    இந்தக் கதையை நான் மிகவும் ரசித்து எழுதினேன். இது எனக்கு ஒரு விசேஷமான அனுபவம். இதைப் பற்றி வாசகர்களின் அபிப்பிராயங்களையோ விமர்சகர்களின் கருத்துக்களையோ நான் சேகரிக்க முயன்றதில்லை. ஆனால் பிறரது அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் மதித்து நான் குறித்துக்கொள்கிறேன்.

    இதன் அடுத்த பாகங்களை எழுத வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது. எதையும் செய்வதற்கு அது சம்பந்தப்பட்ட ஒரு மனிதனின் ஆசை மட்டும் போதாது.

    'வாழ்க்கையின் இருண்ட பகுதிகளையே காட்டுகிறவன்' என்று என்னைப் பற்றி பாமரத்தனமான ஓர் இலக்கிய அபிப் பிராயம் இருக்கிறது. ஆனால் இந்தக் கதை வாழ்க்கையின் ஒளி மிகுந்த பகுதிகளை மட்டும் காட்டுகிறது. மனிதர்களின் பலவீனத்தையே, அழுத்தம் தந்து, ஆணி அறைந்து காட்டுவதை நான் எனது நோக்கமாகவோ செயலாகவோ எப்போதும் கொண்டிருந்ததில்லை. எளிமையும் அதே சமயம் உயர்வும் மிகுந்த மனிதப் பண்புகள் என்னை எப்போதும் வசீகரிக்கின்றன.

    'நான் அறிந்தவரை தமிழில், பரவலாக நாம் அறிந்திருக்கிற காதலும் ஸெக்ஸும் இல்லாத முதல் நாவல் இதுதான்' என்று ஒரு நண்பர் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. இதன் இரண்டாவது பாகமும் இப்படித்தான் அமையுமா என்று எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் அப்படிப்பட்ட நோக்கத்துடன் இது எழுதப்படவில்லை. எனினும் இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரை அது ஒரு உண்மைதான் என்பதை நான் எப்படி மறுக்க முடியும்! இந்த நாவலின் அல்லது தொடர்கதையின் இரண்டாம் பாகத்தை எழுதுவதெனின் நான் ஆனந்தவிகடனிலேயே எழுதுவேன். இப்போது இந்த முதல் பாகத்தையே ஒரு முழு நாவலாகக் கருதி ஏற்றுக்கொள்ளுமாறு நான் வாசகர்களை வேண்டிக்கொள்கிறேன்."

    அந்த எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இன்னும் முடியாத இந்தத் தொடர்கதையை எழுதவும் இடையில் நிறுத்திக்கொள்ளவும் அனுமதித்த ஆனந்த விகடனின் பெருந் தன்மையும் என்மீது அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையும் மிகவும் மேலானவை. அவர்களுக்கும் இதைப் புத்தகமாக வெளியிடுகிற மீனாட்சி புத்தக நிலையத்தாருக்கும் நன்றி பாராட்டுகிறேன்; மீண்டும் . . .

    த.ஜெயகாந்தன்

    23.3.73

    சென்னை - 31

    (முதல் பதிப்பின் முன்னுரை)

    வாழ்க்கையின் அழைப்பு

    1970-களின் ஆரம்பத்தில் கேரளம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஓர் ஆய்வேட்டிற்காக ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலை எடுத்திருந்தேன். அப்போது எங்கள் துறையின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஜேசுதாசன். அந்த ஆய்வேடு தொடர்பாகச் சென்னை சென்று ஜெயகாந்தனைச் சந்தித்தேன். ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்தபோது, அநேகமாக ஒவ்வொரு நாளும் மாலையில், ஆழ்வார்பேட்டையில் மாடியொன்றிலிருந்த அவரது 'சபை'க்குச் செல்வது வழக்கம். 'ஆனந்த விகடன்' வார இதழில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவல் தொடராக வெளிவந்துகொண்டிருந்த காலகட்டம் அது.

    ஒரு நாள் மாலையில் சென்றபோது, தன் நண்பர்களுடன் சேர்ந்து 'சோப்பெங்கப்பா . . . சோப்பெங்கப்பா . . .' என்று நாவலில் வரும் பாடல் வரிகளைப் பாடி ஆடிக்கொண்டிருந்தார் ஜெயகாந்தன். அந்தத் தொடரைப் பற்றி அவர் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோதும், நடந்த சில சம்பவங்களையும் நேரில் சந்தித்துப் பேசிய மனிதர்களையும் நினைவுகூர்வது போலவே விவரித்துக்கொண்டிருந்தார். அந்த அளவில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஜெயகாந்தன் எழுதிய நாவல் இது. நாவலின் முன்னுரையிலும், இதை எழுதுமுன்னர் இந்தக் கதை 'ஓர் தன்னிலை மயக்கமாக, சுயானுபூதியாக'த் தன்னுள் இருந்துகொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    *

    'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' ஜெயகாந்தனின் ஏனைய நாவல்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. பொதுவாக ஜெயகாந்தனின் நாவல்களும் குறுநாவல்களும் நகரத்து நடுத்தர வர்க்கத்தினர் சார்ந்தவையாகவோ அல்லது பொருளாதார ரீதியாகக் கீழ்நிலையிலுள்ள நகரத்து மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தவையாகவோதான் அமைந்துள்ளன. இந்த நாவல் முற்றிலும் கிராமத்தின் வாழ்க்கைச் சூழலைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறது. பர்மா, பெங்களூரில் நடக்கும் சம்பவங்கள் பாத்திரங்களின் பேச்சுகள் மூலமாகவும் நினைவு கூர்தல்கள் மூலமாகவும்தான் சொல்லப்பட்டுள்ளன. நாகரிகத்தின் காலடிச்சுவடுகள் அதிகமும் படிந்திராத, தமிழகத்தின் வடபகுதிக் கிராமம் ஒன்றை மையமாகக்கொண்டே இந்த நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சம்பவங்கள் நிகழும் காலகட்டம் நாவலில் குறிப்பாகவே உணர்த்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானியர் ரங்கூனைப் பிடித்ததும் சபாபதிப் பிள்ளை, மைக்கேல், அவர் மனைவி மூவரும் இந்தியாவுக்குத் தப்பியோடி வரும் வழியில் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் காரேஜில் அனாதைக் குழந்தையாகக் கண்டெடுக்கப்படுகிறான் ஹென்றி. இருபது, இருபத்தைந்து வயதில் ஹென்றி கிருஷ்ணராஜபுரத்துக்கு வருவதாக வைத்துக்கொள்ளலாம். ஹென்றி 'பப்பா'வின் வீட்டை முதன்முதலில் பார்த்தலும், 'முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் பூட்டப்பட்ட' அந்த வீட்டின் கதைகள் அவன் மனதில் படர்வதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஒரு சந்தர்ப்பத்தில், போஸ்ட் ஆபீஸ் அய்யர் தன்னை 'நடராஜன்' என்று அறிமுகம் செய்துகொண்டார். இப்போது கொஞ்ச காலமாக அவர் தன் பெயரோடு 'அய்ய'ரைச் சேர்த்துக்கொள்வதில்லை என்று தேவராஜன் சொல்கிறான். இந்தச் சம்பவங்கள் மூலம், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் எழுச்சி பெற்ற காலகட்டத்தில் - உத்தேசமாக 1960களில் - நாவலில்வரும் சம்பவங்கள் நிகழ்வதாகக் காலப்பின்னணியை நாம் ஊகித்துக்கொள்ளலாம்.

    மண்வாசனை என்ற பெயரில் கிராமத்தின் இயற்கைக் காட்சிகளையும் கிராமத்து மனிதர்களின் பழக்கவழக்கங்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்துடன், மிகைப்படுத்தித் திணிக்காமல், கிராமத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் மனோபாவங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான அளவில் இயல்பாகவே அவை நாவலில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

    *

    எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம் - மொழி, என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அவை குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வமோ அக்கறையோ இல்லாத, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் மனப்பான்மை கொண்ட ஒரு உலகப் பொது மனிதனாகவே இந்த நாவலில் ஹென்றி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அவனை ஒரு லட்சியக் கதாபாத்திரம் என்றும் சொல்லலாம். ஹென்றி போன்ற லட்சியக் கதைமனிதர்களை மையமாகக்கொண்டு தமிழில் நிறையவே எழுதப்பட்டுள்ளன. அவையனைத்தும் கதைகளாக நின்றுவிட, 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலாக - ஒரு கலைப் படைப்பாக அமைந்திருக்கிறது. ஹென்றி சந்தித்துப் பழகும் மனிதர்கள், அவர்களின் பிரச்சினைகள், சந்தோஷங்கள், சங்கடங்கள், எதிர்பார்ப்புகள், அவற்றை அவன் எதிர்கொள்ளும் விதம் - அவை இந்த நாவலில் சித்திரிக்கப்படும் விதம் -அந்நியனான அவனை அந்த மண்ணின் புழுதியில் அழுந்தக் காலூன்றி நிற்கும் யதார்த்தமான மனித ஜீவனாக்கிவிடுகின்றன.

    இவ்வகையில் பார்க்கும்போது, ஹென்றி பாத்திரப் படைப்பு குறித்த சுந்தர ராமசாமியின் மதிப்பீட்டை நாம் தெளிவாக உள்வாங்கிக்கொள்ள முடியும். அவர் கூறுகிறார்: ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஹென்றி என்ற கதாபாத்திரம் சமூகத்துக்கு வெளியே நிற்கிறான். நம்மை ஒத்த பழக்கவழக்கங்களைக் கொள்ளாதவனை அந்நியன் என்று நாம் சொல்கிறோம். அவனைப் புறக்கணிக்கிறோம். அவன்மீது ஒரு முத்திரையைக் குத்துகிறோம். சமூகத்துக்கு அவன் ஆகாதவன் என்கிறோம். தொடர்ந்து அந்த நாவலுக்குள் பயணம் செய்கிறபோது ஹென்றியும் நம்மைப் போன்ற மனித உணர்ச்சி கொண்டவன்தான் என்ற உண்மை வெளியாகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மை விட அதிக மனிதத்தன்மை கொண்டவன் என்பது வெளிப்படுகிறது (இவை என் உரைகள், ப. 184).

    நாவலில் வரும் பப்பா, மம்மி மட்டுமல்லாமல், துரைக் கண்ணு உள்பட அனைத்து மனிதர்களும் சற்றே வித்தியாசமான வார்ப்புகள்தாம். என்றாலும் நாவலின் போக்கில் அவர்கள் எல்லாருமே காலப் பெருநதியில் 'நீர்வழிப் படூஉம் புணைபோல்' ஓடிக்கொண்டிருக்கும் எளிய மனித ஜீவன்கள்.

    *

    ஜெயகாந்தன் தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் பல சந்தர்ப்பங்களில் நீண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தும் போதும் வாசிப்பனுபவத்தில் சலிப்பையோ, நெருடலையோ ஏற்படுத்துவதில்லை. இன்றைய படைப்பாளிகளில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் சிலரின் மொழிநடைகூட வாசிக்கும் தருணத்தில் பிரமிப்பையும் பின்னர் யோசிக்கும் வேளையில் ஒருவிதச் சலிப்புணர்வையும் ஏற்படுத்துவது போலல்லாமல், மிகையலங்காரமற்றதாக, எளிமையும் சரளமுமிணைந்த கலையழகு கொண்டதாக, வாசக மனத்தை அலை பாயவிடாமல் தன்வயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது ஜெயகாந்தனின் நடை. நிதானமாகப் பாய்ந்தோடும் நதியின் நீரோட்டம்போல் புதுமையும் ஈர்ப்பும் மிகுந்ததாகவிருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு பகுதி:

    தர்மகர்த்தா கண்களை மூடிக்கொண்டும், துரைக்கண்ணு ஒவ்வொரு வரிக்கும் தலையை அசைத்து அசைத்து ஆமோதித்தவாறும், போஸ்ட் ஐயர் தனது வலது பாதத்தின் ஆட்டத்தை நிறுத்தி, மார்மீது கைகளைக் கட்டிய வண்ணமாகவும், வேலுக்கிராமணி கண்களை விழித்துப் பார்த்து ஒரு காதையும் வலக்கரத்தால் மடக்கிக்கொண்டு உன்னிப்பாகவும், மணியக்காரர் பிரப்பம்பாயில் வெறும் விரலால் ஏதோ எழுத்தும் சித்திரமும் வரைந்துகொண்டும், ஒரு மூலையில் நின்றிருந்த பாண்டு அந்த வாசகங்களில் ஒன்றுமே புரியாமல் ஆனால் மிகுந்த மரியாதையோடும் - எல்லோருமே வெகு சிரத்தையுடன் தேவராஜன் படிப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

    நீண்ட ஒரே வாக்கியமாக அமைந்திருக்கும் இந்தப் பகுதி தெளிந்த நீரோட்டம் போன்ற சரளமான போக்குடனும், நாவலில் வரும் பாத்திரங்களின் குணவியல்புகளை அவர்களின் குறிப்பிட்ட செயல்களின் மூலம் உணர்த்துவதாகவும் அலங்காரமில்லாத எளிமையுடன் வெகு நுட்பமாக அமைந்திருப்பதை நாவலைப் படிக்கும் வாசகர்கள் தெளிவாகவே உணர முடியும்.

    நாவலில் நான்காவது அத்தியாயத்தில் வரும் பஞ்சாயத்துக் கூட்டத்தில் ஹென்றி - துரைக்கண்ணு விவகாரம் குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் தத்தம் அபிப்ராயங்களை வெளிப்படுத்தும் காட்சிகளை விரிவாகவே - சுமார் ஐம்பது பக்கங்களில் - விவரிக்கும் ஜெயகாந்தன் இறுதியில், மேலே குறிப்பிட்டுள்ள பத்தியில், அனைவரையும் அவர்களின் விசேஷக் குணவியல்புகளுடன் ஒரே சட்டகத்தில் - சினிமாவில் ஒரே 'ஷாட்'டில் காட்சிப்படுத்துவதுபோல் - உட்படுத்தியிருப்பதும் கவனிக்கத் தகுந்தது.

    *

    நெருடலில்லாத நீண்ட வாக்கியங்களைச் சரளமாக எழுதிச் செல்வது போலவே, நீண்ட உரையாடல்களைச் சலிப்பேற்படுத்தாதவாறு அமைப்பதிலும் கலைத்திறன் கைகூடியவர் ஜெயகாந்தன். இவரது கதாபாத்திரங்கள் சலிப்பேதுமில்லாமல் நிறையவே பேசிக்கொண்டிருப்பார்கள். ஜெயகாந்தன் படைப்புகளின் பலமும் சிலபோது பலவீனமென்றும்கூட இதனைச் சொல்லலாம். விமர்சகர்களில் சிலர், ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் அவரது குரலிலேயே பேசுவதாகவும், அளவுக்கு மீறிப் பேசுவதாகவும் கூறுவதுண்டு. இந்த நாவலைப் பொறுத்தவரையில் அத்தகைய விமர்சனப் பார்வை பொருந்தாது என்று சொல்லலாம். இதில் வரும் நீண்ட உரையாடல்களும் பாத்திரங்களின் பேச்சுகளும் தர்க்கபூர்வமான விவாதங்களாக இல்லாமல், பேசுபவர்களின் குணவியல்புகளை உணர்த்துவனவாகவும் நாவலின் இயக்கத்தை நகர்த்துவனவாகவுமே அமைக்கப்பட்டுள்ளன. தனது பப்பாவின் மூலம் அறியவந்த தனது கடந்தகால வாழ்க்கையை ஹென்றி நினைவுகூர்வது, அவற்றில் தேவையானவற்றை மட்டுமே தேவராஜனிடம் அவன் கூறுவது, பப்பா - மம்மி பற்றிய அவனது நினைவோட்டங்கள், ஊர்ப் பஞ்சாயத்தில் நடைபெறும் நீண்ட விவாதங்கள், மனவோட்டங்கள் இவற்றைப் படிக்கும் வாசகர்கள், இதனை உணர்ந்துகொள்ளவியலும்.

    ஜெயகாந்தன் படைப்புகளில் அவரது குறுக்கீடு - எல்லாவற்றையுமே அவர் அல்லது அவரது கதாபாத்திரங்கள் பேசிவிடுவது - வாசக அனுமானங்களுக்கு, வாசிப்பில் அவனது பங்களிப்புக்கு அதிகளவில் இடமில்லாமலாக்கிவிடுவதான விமர்சனப் பார்வையும் உண்டு. இதுவும் இந்த நாவலைப் பொறுத்தவரையில் பொருந்தாது. பழனியுடன் ஓடிப்போன, பப்பாவின் மனைவி - புலவர் வீட்டு மருமகள் - என்னவானாள்? சித்தப்பிரமை பிடித்து நிர்வாணமாக அலைந்து திரியும் அந்த இளம்பெண் 'பேபி' யார்? அவள் அந்த ஊருக்கு ஏன் வருகிறாள்? ஹென்றி சொல்வதற்கு மட்டும் உடன்பட்டு அவள் ஆடை அணிந்துகொள்வதேன்? கயிற்றுக்கட்டிலில் கால்மேல் கால் போட்டபடி 'ஒரு எஜமானியின் கம்பீரத்தோடு அவனைப் பார்த்து'ச் சிரிப்பதேன்? ஹென்றியின் புதுவீட்டில், சுடர்கள் எரியும் குத்துவிளக்கைக் கூடத்தின் நடுவே வைத்துவிட்டு, முற்றத்தில் இறங்கி நின்று குத்து விளக்குக்கு நேரே - கூடத்தில் அமர்ந்திருந்த அந்தக் கும்பலையே வணங்குவது மாதிரி - முழந்தாளிட்டுப் பூமியில் சிரம் பதிய வணங்கிவிட்டு வந்தது போலவே திரும்பிப் போவதேன்? ஹென்றி அவளைத் திரும்ப அழைக்காததேன்? இந்த மர்ம முடிச்சுகளை வாசகர்கள் தங்கள் வாசக அனுபவங்களுக்கேற்ப அவிழ்த்துக்கொள்ளலாம்.

    *

    'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது சங்கக் கவிதையின் வரி. இரண்டுக்கும் மனிதனே பொறுப்பு. இரண்டும் அவனுள்ளேயே உருக்கொண்டு, சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கேற்பப் பிளவுற்று, இருவேறு போக்குகளாக - தர்மம் ஜ் அதர்மம், நன்மை ஜ் தீமை, நல்லது ஜ் கெட்டது, நல்லொழுக்கம் ஜ் தீயொழுக்கம் - எதிரெதிர் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மத - ஒழுக்கக் கோட்பாடுகள் இந்த எதிரெதிர் போக்குகளுக்கு அதீத அழுத்தம் கொடுத்தன. அதிகார வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதை இறுகப் பற்றிக்கொண்டது. இந்த வேறுபட்ட மனப் போக்குகள் சமூகத்தின் சகல நிலைகளிலும் வெவ்வேறு கோணங்களில் எதிரெதிர் துருவங்களாக நின்று மோதிக்கொண்டிருக்கின்றன. இன்றைய மனித சமூகம் நாடு, மதம், இனம், மொழி, அரசியல், பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் பிளவுண்டு கிடக்கிறது. அதிகார மட்டத்தில் நிகழும் இந்தப் பிளவுகளும் மோதல்களும் அதற்கு வெளியேயும் விரிந்து, சமூகத்தின் அடிநிலை வரை நிலைகொண்டுள்ளது. கருத்தியல் வேறுபாடு என்ற எல்லையைத் தாண்டி, முரண்பட்ட நம்பிக்கைகளின் மோதல்களாகத் தொடர்கிறது. இந்த மோதல்கள் மனித உறவுகளையே சிதறடித்தும் வருகின்றன. கருத்தியல் ரீதியான வேறுபாடுகள், முரண்பாடுகளின் மோதல்களாக அல்லாமல் நெகிழ்ச்சியான முறையிலேயே அணுகப்பட வேண்டும்; அதுவே மனித உறவுகளிடையே நல்லிணக்கத்தை நிலவச் செய்யும் என்பதை இந்த நாவல் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

    நாடு, இனம், மொழி, சாதி, மதம் கடந்த நிலையில், பரந்த மனப்போக்குடன் எதையும் அணுகும் பார்வை வாய்க்கப் பெற்றால், கருத்து வேறுபாடுகளுக்கிடையேயான இடைவெளி வெகுவாகக் குறையக்கூடும். எனவேதான், இவ்வெல்லைகளைக் கடந்த ஒரு பொது மனிதனை - ஹென்றியை - நாவலின் மையக் கதாபாத்திரமாக உருவாக்கி, அவனது செயல்பாடுகளின் மூலமாகப் பல்வேறு மனப்போக்குகளையும் இணக்கமான முறையில் அணுகக்கூடிய பார்வைக் கோணத்தை முன்வைக்கிறார் ஜெயகாந்தன். ஹென்றி, தேவராஜன் இருவரும் இருவேறு பார்வைகளில் வாழ்க்கையை நோக்குகிறவர்கள். ஆனால் அவர்களின் பார்வைக் கோணங்கள் முரண்பட்ட மோதல்களாக அல்லாமல் நெகிழ்ச்சியான முறையில் அணுகப்படுவதால், அவர்களிடையேயான நட்புறவு கருத்து வேறுபாடுகளினூடாகவும் நீடிக்கிறது. எல்லா விஷயங்களிலும் எல்லா மனிதர்களிடமும் இந்த அணுகுமுறை ஏற்படும்போது, வாழ்க்கை இப்போதையதை விடவும் இன்னும் மேலானதாக அமையும் என்பதை இந்த நாவல் அனுபவபூர்வமாகவே உணர்த்துகிறது.

    ஹென்றியின் இந்த நெகிழ்ச்சியான அணுகுமுறை படிப்பறிவின் மூலம் பெற்றதல்ல. அவன் பள்ளிக்குச் சென்று படித்தவன் அல்ல. ஒரு படிப்பாளியும் அல்ல. இந்த வாழ்க்கையிலிருந்தே அவன் அதைக் கற்றுக்கொள்கிறான். "முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புக்கள் இல்லாத, சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, புகார்கள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புக்கள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே தழைத்த'' குடும்பத்தில் சுதந்திரமாக வளர்ந்ததால் அவன் கற்றுக்கொண்டது. கிருஷ்ணராஜபுரம் கிராமத்து மக்களின் வாழ்க்கை மூலமாகப் பெறும் அனுபவங்கள் அதற்கு மேலும் வலுசேர்க்கின்றன. எனவே, ஹென்றியின் - ஜெயகாந்தனின் இந்தப் பார்வைக் கோணம், ஒரு கருத்துருவமாக அல்லாமல், அனுபவத்தின் மூலம் பெறப்படும் - கண்டடையப்படும் கருத்துருவமாக நாவலில் வெளிப்படுவதால், 'ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம்' நாவல், ஒரு சிறந்த கலைப் படைப்பாக நிலைªறுகிறது.

    என் உள்ளம்தான் ஹென்றி, . . . . என்று ஜெயகாந்தன் கூறியிருக்கிறார் (ஜெயகாந்தன் பேட்டிகள், ப. 131). இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில் 'திரும்பல்' என்றொரு பாடல் எழுதியிருந்தார் ஜெயகாந்தன். அதன் கடைசிப் பகுதி:

    ஆடையும் மானமும் இல்லாததோர் வெளியினில்

    ஆடி மகிழ்ந்திட விரும்புகிறேன்

    கூடவும் கூடியும் குரோதம் வளர்க்கவும்

    கூடாதென்று திரும்புகிறேன்

    (தீபம், ஏப்ரல் 1972)

    இந்தப் புறச் சான்றுகள் மேலே கூறிய வாசிப்பனுபவத்துக்கு மேலும் வலுவூட்டுவனவாக உள்ளன.

    *

    'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவல் எழுதப்பட்டு இப்போது முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய சூழலில், இன்றைய வாசிப்பில் இந்த நாவல் எத்தகைய அனுபவத்தைத் தருகிறது என்று பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.

    இந்த நாவல் எழுதப்பட்டது, உலகமயமாக்கல் அல்லது தாராளமயமாக்கல் பற்றி - பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார முனைப்புகள் இத்தனை அதிவேகப் பாய்ச்சலாக நிகழக்கூடும் என்பதுபற்றி - சற்றும் சிந்தித்துப் பார்த்திராத காலத்தில்; அறிவியல் வளர்ச்சி காரணமான 'நாகரிக'த்தின் அசுரக் கரங்கள் கிராமங்கள் நோக்கி மெல்லவே நீண்டுகொண்டிருந்த காலத்தில்; நகரத்தின் வசதிவாய்ப்புகள் கிராமத்தையும் சென்றடைய வேண்டும் என்ற சிந்தனை பரவலாகக் கவனம்கொள்ளப்பட்ட காலத்தில்; கிராமத்து மக்களின் வாழ்க்கையும் மெல்ல நகரத்தை நோக்கி நகரத் தொடங்கியிருந்த காலத்தில். அந்தக் காலகட்டத்தில் ஒரு கலைஞன் தனக்கேயான தொலைநோக்குப் பார்வையில், வருங்காலத்தில் மனித வாழ்க்கை எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடிகள் குறித்துச் சிந்தித்ததன் விளைவு இந்த நாவல் என்றும் சொல்லலாம்.

    கிருஷ்ணராஜபுரம் என்னும் அழகிய, சிறிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜன், கிராமத்து மக்களின் பழக்கவழக்கங்களில் அதிருப்தி கொண்டவனாக, சில சமயம் வெட்கம் கொள்கிறவனாக, அந்தக் கிராமத்துச் சூழலில் ஓர் அந்நியனாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான். கிராமம் நகரம் மாதிரி ஆக வேண்டும், கிராமத்து மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் 'நவீனமாகவும் ஸைன்டிஃபிக்காகவும்' மாற்ற வேண்டுமென்னும் விருப்பம் கொண்டவனாக இருக்கிறான்.

    எங்கோ பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, தனது வளர்ப்புத் தந்தையின் சொந்த ஊரான கிருஷ்ணராஜபுரத்துக்கு வந்து, புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கும் ஹென்றி, அந்தக் கிராமத்தின் சூழலுக்கேற்ப ஹென்றி பிள்ளையாகி, கிராமத்து வாழ்க்கையை அதன் இயல்புகளோடு ஏற்றுக்கொள்கிறான். கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகளிலும் தனக்கு உவப்பானவற்றையே காண்கிறான். தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டுக்கு மின்சார இணைப்பு வேண்டும் என்கிற விருப்பம்கூட இல்லாதவனாக, லாந்தர் விளக்கின் ஒளியே தனக்குப் போதும் என்கிறவனாக இருக்கிறான். திருமணத்துக்கு எதிரானவன் அல்ல அவன்; தனக்குத் திருமணம் அவசியமில்லை என்று நினைக்கிறான். எனக்குக் கூழ் மட்டும் போதும்; எல்லாரும் கூழே குடிக்க வேண்டும் என்றா நான் சொல்லுகிறேன்? நீங்கள் சொல்லுகிற மாதிரி இந்தக் கிராமங்களும் இங்கே வாழ்கிற மக்களும் நகர வாழ்க்கையோடு பேதமறக் கலந்து போகிற நாள் வரலாம், வரட்டும் . . . அதற்கு நானும் ஏன் ஆசைப்பட வேண்டும் என்பதே வாழ்க்கை குறித்த ஹென்றியின் நிலைப்பாடாக இருக்கிறது. இருவருக்குமிடையேயான இந்த முரண்பட்ட பார்வைகளும் இணக்கமான நட்புறவுமே நாவலின் அடிப்படைச் சரடாகும். வாழ்க்கை குறித்து நாம் யோசிக்க வேண்டியதும் அதுவேயாகும். அவ் வகையில், முன்பகுதியில் குறிப்பிட்டது போல, அன்றைய சூழலின் வாசிப்புக்குப் பொருத்தமானதாக இருந்தது இந்த நாவல்.

    1990-களின் ஆரம்பத்தில் நம் நாட்டில் அறிமுகமான உலகமயமாக்கல் கொள்கையினால், அதன் அசுரத்தனமான, விபரீதமான வளர்ச்சியினால் நமது வாழ்க்கை முறைகளும் பழக்கவழக்கங்களும்கூட வேகமாகவே மாற்றமடைந்து வருகின்றன. மனிதர்களின் தேவைகள் திட்டமிட்டு அதிகரிக்கப்படுகின்றன. தேவைகளுக்காட்படும் மனிதர்கள், தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, தேவைக்கதிகமாக உழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மனிதனின் அன்றாட வாழ்க்கை பரபரப்பானதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் மாறி வருகிறது. சுருங்கச் சொன்னால் மனிதனும் ஒரு யந்திரமாகவே உருமாறி வருகிறான். இதனால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் மனிதன் அதை அடையும் நிலையிலும், அனுபவிக்கும் வாய்ப்பை இழந்தவனாகி அவதிப்படுகிறான்.

    நகரங்களில் மட்டுமல்லாமல் சிறிய கிராமங்களிலும்கூட உலகமயமாக்கலின் ஆழமான பாதிப்பை இப்போது காண முடிகிறது. நாளிதழ்கள், இதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்களின் மூலம்

    Enjoying the preview?
    Page 1 of 1