Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thirumanam Nichayikkapadugirathu
Oru Thirumanam Nichayikkapadugirathu
Oru Thirumanam Nichayikkapadugirathu
Ebook199 pages1 hour

Oru Thirumanam Nichayikkapadugirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லக்ஷ்மிரமணன் அவர்களின் 25 கதைகளைத் தொகுத்து “ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம்.
இன்றைய இளைய தலைமுறையினர் படித்து மகிழ, சிந்திக்கத் தூண்டும் கதைகள்.
வார்த்தைகளைச் சுருக்கி மின்னல் வேகத்தில் கருத்தை பளிச்சிட வைக்கும் கதைகள்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580125805024
Oru Thirumanam Nichayikkapadugirathu

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Oru Thirumanam Nichayikkapadugirathu

Related ebooks

Reviews for Oru Thirumanam Nichayikkapadugirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thirumanam Nichayikkapadugirathu - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது!

    Oru Thirumanam Nichayikkapadugirathu!

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது!

    2. கருவி

    3. புன்னகையுடன்....

    4. மனைவி மட்டும்

    5. அந்த முகம்

    6. ஒரு ஜீன்சின் கதை

    7. மூட நம்பிக்கைகள்

    8. அளவோடு…

    9. இதமாக ஒரு கொலை

    10. ட்யூட்டி....

    11. உயிர்

    12. அந்த மாலைப் பொழுதில்...

    13. முளையிலேயே...

    14. ஏழாவது முகம்

    15. கணவன் என்றோர் இனமுண்டு....

    16. ஜாக்கிரதை

    17. தாகம்

    18. வராதே ஞாயிறே!

    19. எதிர்க்கரை பச்சை

    20. சிதைந்து போன சேமிப்பு!

    21. காதல் கட்சி

    22. கல்யாணத்துக்கு ஒரு கண்டிஷன்!

    23. சிவப்பு ரவிக்கை

    24. யுத்தம்

    25. நான் ஒரு இந்தியன்!

    பதிப்புரை

    திருமதி லக்ஷ்மிரமணன் அவர்களின் 25 கதைகளைத் தொகுத்து ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம்.

    இன்றைய இளைய தலைமுறையினர் படித்து மகிழ, சிந்திக்கத் தூண்டும் கதைகள்.

    வார்த்தைகளைச் சுருக்கி மின்னல் வேகத்தில் கருத்தை பளிச்சிட வைக்கும் கதைகள்.

    1. ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது!

    இதோ, மிஸ் ரேவதியைச் சந்தியுங்கள். பொறியியல் படிப்பை முடித்ததும் சென்னையிலேயே வேலையை ஏற்றுக் கொண்டு முதல் மாதச் சம்பளத்தைப் பெற்றவர்களிடம் கொடுத்து வணங்கியவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாள் என்று சொல்லத் தேவை இல்லை.

    இருந்தாலும்…

    பெற்றவர்களான விஸ்வமும் - வனஜாவும் திருமணத்தைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்து அவள் சம்மதத்தையும் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொண்டு விடுவது என்று முடிவு செய்தார்கள்.

    என் எதிர்காலத் திட்டமா... என்ன கேட்கறீங்க அப்பா?

    மகள் திகைத்தாள்.

    உனக்கு ஏற்ற மாப்பிள்ளையை இப்பவே தேட ஆரம்பிக்லாமே என்று யோசனை.

    செய்யுங்க.

    உனக்கு ஏற்கனவே யாரையாவது பிடிச்சிருந்தால் நாங்கள் அதில் மெனக்கெட வேண்டாமே என்று பார்க்கிறோம் இது வனஜா.

    காதலா? நோ மம்மி. எனக்கு காதல் அது இதுக்கெல்லாம் டயம் இல்லை. நீங்க ரெண்டு பேரும் பார்த்து தீர்மானிச்சால் சரி; நான் ஓகே. சொல்லிடறேன்.

    மரங்களே இல்லாமல் போன சூழ்நிலையிலும், சினிமாவிலும் சின்னத்திரையிலும், பீச்சில் நிற்கிற கட்டு மரத்தையும், காதலர்கள் சுற்றிச்சுற்றி ஓடி காதலிக்கும் இந்த யுகத்தில் இப்படி பதில் சொல்லக்கூடிய பெண்ணும் இருக்கிறாளா என்ன?! என்று பெற்றோர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போதே -

    ஆனால்…என்று இழுத்து சஸ்பென்ஸுடன் நிறுத்தினாள் மகள்.

    சொல்லு ரேவதி

    எனக்கு லைப் பார்ட்னராக வருகிறவன் என்னைவிட நாலு சென்டி மீட்டராவது அதிகம் உயரம் உள்ளவனாக இருக்க வேண்டும். இன்னொண்ணு அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போய் அங்கேயே வீடு வாங்கிட்டு செட்டிலாக நினைக்காதவனாக இருக்கணும். வரதட்சனை அது இதுன்னு பேரம் பேசக் கூடாது. என்றாள் அவள்.

    சிங்கப்பூர் பரவாயில்லையா? என்றார் விஸ்வம்.

    நோ... மஸ்கட், லண்டன் எதுவுமே வேண்டாம். இந்தியாவிலேயே இருந்தால் போதும் என்று நினைக்கிற மாப்பிள்ளையாகப் பாருங்க..

    ப்பூ! இவ்வளவுதானே... இன்னும் ஒரே மாதத்தில் ரேவதி கலியாணம் என்றார் அப்பா.

    வனஜாவோ ஜாதக நோட்டைத் தேடி எடுத்து அதிலிருந்த ரேவதியின் ஜாதகத்தை ரோஜா - மஞ்சள் கலரில் இருந்த மழுமழுப்பான காகிதத்தில் அச்சிடக் கொடுத்தாள்.

    இருவருக்குமே ஒரே பெருமை! தங்கள் மகளின் தேச பக்தியைக் குறித்து 'அ' என்பதற்குள் அமெரிக்கா போகணும் என்று துடிக்கிற படித்த பெண்களுக்கு மத்தியில் அவர்களுக்கு ரேவதி ஒரு வித்தியாசமானவளாகத் தெரிந்தாள்.

    அடுத்து 'திருமண மன்றம்' 'ஜோதிடாலாயா' என்று ஜாதகப் பரிவர்த்தனை செய்யும் இடங்களில் ரேவதியின் ஜாதகத்தையும், பயோடேட்டாவையும் கொடுத்துப் பதிவு செய்து கொண்டார்கள்.

    அங்கே கிடைத்த ஜாதகங்களில் பாதி கலிஃபோர்னியா, லண்டன் போன்ற வெளிநாட்டு வரன்களின் ஜாதகங்கள்தான். இந்தியாவில் இருந்த சில பையன்களின் பெற்றோர்கள் வேலைக்குப் போகாத மருமகளாய்த் தேடினார்கள்!

    விஸ்வம் சளைக்கவில்லை. 'வெளிநாடு செல்ல விரும்பாத மணமகன் தேவை' என்று தினசரிகளில் விளம்பரம் கொடுத்தார்.

    உங்கள் மகளுக்கு ஏதோ சைக்கலாஜில் பிராப்ளம் இருக்க வேண்டும். அதுதான் இப்படி கண்டிஷன் போடுகிறாள் யாராவது சைக்ரியாடிஸ்டிடம் காட்டுங்க இப்படி சில எதிரொலிகள்.

    இன்றைய சூழ்நிலையில் ஒரு பென் வெளிநாடு போக விரும்பாதது கூட ஒரு பிரச்னையா? அதற்கு அவள் காரணம் சொல்ல வேண்டுமா? நல்ல கூத்துதான்!

    பெற்றவர்களுக்கு ஒரே மகள், படிப்பும் வேலையும் இருந்தும் அவள் போட்ட சின்ன நிபந்தனையால் திருமண வாய்ப்பே சிக்கலாகிவிட்ட மாதிரித் தோன்றியது விஸ்வத்திற்கு.

    எனக்கு கல்யாணமே வேண்டாம் என்றாள் ரேவதி.

    என்னடி சொல்லறே? வனஜா மலைத்தாள்.

    பின்ன என்னம்மா நீங்க? நம்ம தேசத்துலே எனக்கு ஒரு புருஷன் கிடைக்க வாய்ப்பில்லைன்னு சொல்றீங்களே, வெட்கம்!

    சரி… அப்படியே நீ இந்தியாவிலே இருக்கிறவனைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன்னு வெச்சுக்க. நாளைக்கே அவனுக்கு வாய்ப்பு வந்து வெளிநாட்டுக்குக் கிளம்பிப் போக வேண்டி வந்தால் அப்போ என்ன பண்ணுவே? என்றார் விஸ்வம்.

    கற்பனை பண்ணி எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. அப்படி வந்தால் அப்போ பார்த்துக்கலாம் என்றாள் ரேவதி.

    விஸ்வம் தம்பதிகளின் தேடல்படலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு நாள் தேவராஜன் என்பவர் வீடு தேடி வந்தார்.

    உங்களுக்கு என்னைத் தெரியாது. உங்கள் மகளைப்பற்றி கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்.

    உட்காருங்க.

    தேங்க்ஸ்... என் மகன் சுந்தர், எம்டெக் படிச்சுட்டு வெளிநாடு போகமாட்டேன்னு பிடிவாதமா சிவில் சர்விஸ் பரீட்சை எழுதி கஸ்டம்ஸ் சர்விசில் இருக்கான். அவனுக்கு பெண்ணைத் தேடறதே கஷ்டமாக இருக்கு. சுந்தர் ஆறடி உயரம். பார்க்க ஸ்மார்ட்டாய் இருப்பான். வரதட்சிணை வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாதுன்னு பிடிவாதம் பிடிப்பவன்.

    சம்பந்தி என்று நெகிழ்ந்தார் விஸ்வம்.

    இருங்க பசங்க சந்திச்சுப் பேசட்டும் என்று தேவராஜன் காபி அருந்தி விட்டுப் போனார்.

    ரேவதி-சுந்தர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போயிற்று, மண்டபம் கிடைக்காததால் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது.

    தேநிலவுக்காக அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தபோது ரேவதி வேலை பார்த்த நிறுவனத்தின் சேர்மேன் அவளைக் கூப்பிட்டனுப்பினார்.

    உன் உழைப்பு, புத்திசாலித்தனம், தகுதி எல்லாவற்றையும் மனசில் கொண்டு எங்கள் நிறுவனத்தின் சார்பில் உன்னை அமெரிக்கா அனுப்பி வைக்கத் தீர்மானித்திருக்கிறோம். அங்கே இருந்துண்டு நீ நிறைய பேருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறைந்தது இரண்டு வருஷம் அங்கேயே இருக்கணும் என்றார்!

    - சாவி 09-07-99

    2. கருவி

    வந்தவர்களைச் சதாவுக்கு அடையாளம் தெரியவில்லை.

    அதில் பெரியவர் உயரமாய் ஒல்லியாக இருந்தார். வேட்டியின் மேல் அணிந்த முழுக்கை சட்டை தலையில் படரத் துவங்கிவிட்ட வழுக்கை. பக்கத்தில் நின்ற இளைஞனுக்கு சதாவின் வயதுதான் இருக்கும். என்னைத் தெரியாதா சதா? என்று கேட்டுவிட்டு பிரியத்துடன் அவனைப் பார்த்தார் பெரியவர். பார்த்த முகம்தான்… பழக்கப்பட்ட குரல்தான். எங்கோ நினைவில் தங்கிப்போன எதிரொலியாய் இருந்தாரே தவிர அவர் இன்னார் என்று தெளிவாகவில்லை அவனுக்கு.

    'இல்லை' என்றால் அவர் மனம் புண்படுமோ?

    தெரியாமல் என்ன சார் வாங்க உட்காருங்க உபசரித்தான்.

    அவர் நிச்சயம் உள்ளூர்வாசியல்ல.

    தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் என்பதை ஊகிக்க முடிந்தது.

    பார்த்தியா நாகராஜா! சதா என்னை உடனே அடையாளம் கண்டுப்பான்னு சொன்னேனே, சின்ன வயசிலேயே அவனுக்கு நல்ல ஞாபகசக்தி உண்டு. இல்லாட்டி ஐ.ஏ எஸ் அதிகாரியா வருகிற அளவுக்கு படிச்சு உயர்ந்திருக்க முடியுமா? அவர் பெருமிதத்துடன் மகனைப் பார்த்தார்.

    சதாவுக்கு சங்கோசமாய் இருந்தது.

    வந்தவரோ அவன் ஞாபகசக்தியைப் புகழுகிறார் அவனுக்கோ…

    பெரியவர் கையிலிருந்த துணிப்பையிலிருந்து ஒரு சீப்பு வாழைப் பழத்தை எடுத்தபோது அவன் பார்வை அதன்மீது பதிவாகியிருந்த 'திருவண்ணாமலை' என்கிற பெயரின்மீது பதிந்தது.

    இதெல்லாம் எதுக்கு சார்! அவன் மறுத்ததும் அவர் கையில் திணித்தார்.

    'திருவண்ணாமலை!'

    அந்தப் பெயரில் எத்தனை ஞாபகங்கள் அடக்கி இருந்தன!

    அருணாச்சலேஸ்வரர் கோயில்... அதன் பெரிய பிரகாரம்.

    வரலாறு மிக்க கம்பத்திளையனார் சன்னதி.... அங்கேதான் முருகன் அருணகிரியாரை தடுத்தாட்கொண்டாராம்.

    'பஞ்சபூத ஸ்தலங்களில் இதுவும் ஒண்ணு சார்' என்று சதா எத்தனை முறை சுற்றுலா பிரயாணிகளுக்குச் சொல்லியிருக்கிறான்?

    இந்த ஊரில் கைடாக இருந்து எத்தனை சம்பாதித்துவிட முடியும் சதா? அர்ச்சகர் சுந்தரேசன் கேட்பார்.

    அவன் பதில் சொல்ல முடியாமல் விழிப்பான்.

    அமைதி நிலவும் ரமணாஸ்ரமத்தில் அமர்ந்து தியானம் செய்ய வெளிநாட்டு டூரிஸ்டுகள் நிறைய வருவதுண்டு. விடுதியில் தங்கியிருக்கும் அவர்களில் சிலருக்கு எடுபிடி வேலைகள் செய்து உதவினால் ஐந்தோ பத்தோ கிடைக்கும்.

    சதாவுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் இருந்தாள்.

    அம்மாவுக்குத் தையல் தெரியும். எம்பிராய்டரி செய்ய வரும். நிரந்தர வருமானம் இல்லாததால், லாரன்ஸ் ஸ்கூலில் படித்த சதா, தன் செலவுகளை சமாளிக்க கைட் வேலை பண்ணினான்.

    அப்போது பன்னிரெண்டாவது வகுப்பின் ஆசிரியராக இருந்தவர் இந்த ஜெகதீசன், அவருடைய மகன் நாகராஜன் அல்லவா உடன் நிற்பது!

    சதாவின் தடுமாற்றம் மறைந்தது.

    ஆயின்... ஏதோ ஒன்று நினைவில் இடறி நெஞ்சில் சுமை ஏறியது.

    வகுப்பில் சதாவுக்குத்தான் முதல் இடம்... நாகராஜனும் அவனுடன் படித்தான்.

    அன்று பரீட்சைக்குப் பணம் கட்டவேண்டிய நாள் – கடைசி நாள்!

    சோதனை மாதிரி அம்மாவுக்கும் ஒரு வாரமாய் நல்ல ஜுரம் தையல் இயந்திரம் மூலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.

    சதா ஃபீஸ் கட்ட என்னடா செய்யப் போறே?

    அம்மா அரற்றினாள்.

    கவலைப்படாதீங்க அம்மா... நான் பார்த்துக்கறேன்.

    அவன் ஆறுதல் சொன்னானே தவிர வழி தெரியவில்லை. ஸ்கூல் மைதானத்தில் மரத்தடியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அதில் மணியடித்ததோ வகுப்புகள் துவங்கியதோ அவனுக்குத் தெரியவேயில்லை. சற்றைக்கெல்லாம் பின்னாலிருந்து குரல்…

    சதா... இங்கே என்ன பண்ணுறே... கிளாசுக்குப் போகல்லே?

    ஜெகதீசன் கேட்டார்.

    அவன் மௌனமாய் எழுந்து நின்றான். கண்களிலிருந்து அருவியாய் பாய்ந்து வந்த கண்ணீர்.

    என்ன ஆச்சு சதா...?

    சார்.... பரீட்சை... பணம்.... இல்லே அவன் விசும்பினான்.

    இன்னிக்குத்தான் கடைசி நாளா?

    ஆமாம் சார்!

    அசடு...! இதுக்காக அழுவாங்களா... இந்தா போய் முதல்ல கட்டு.

    சதாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அதெப்படி அவர் கரெக்டாக கட்ட வேண்டிய தொகையை எடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1