Genießen Sie diesen Titel jetzt und Millionen mehr, in einer kostenlosen Testversion

Kostenlos für 30 Tage, dann für $9.99/Monat. Jederzeit kündbar.

Appa Pillai

Appa Pillai

Vorschau lesen

Appa Pillai

Bewertungen:
5/5 (1 Bewertung)
Länge:
62 Seiten
23 Minuten
Freigegeben:
Feb 7, 2020
ISBN:
6580105704945
Format:
Buch

Beschreibung

அப்பா பிள்ளை
வாழ்வின் ஓட்டத்தில் தந்தை மகனாகவும், மகன் தந்தையாகவும் மாறும் சூழல் ஏற்படுகிறது. எதனால்? இந்த அப்பாவும் பிள்ளையும் கற்பனையல்ல. நிஜம். இரத்தமும் சதையுமாய் வாழ்பவர்கள். அன்பு நிறைந்ததே வாழ்க்கை. கலைமகளில் முதற்பரிசு பெற்ற குறுநாவல் இது. புஸ்தகாவில் மட்டுமே எக்ஸ்க்ளூஸிவாக வெளியாகிறது. உங்கள் கருத்துக்குக் காத்திருக்கிறேன்.
Freigegeben:
Feb 7, 2020
ISBN:
6580105704945
Format:
Buch

Über den Autor


Ähnlich wie Appa Pillai

Mehr lesen von Vidya Subramaniam

Ähnliche Bücher

Buchvorschau

Appa Pillai - Vidya Subramaniam

http://www.pustaka.co.in

அப்பா பிள்ளை

Appa Pillai

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

1

ஐந்து மணிவாக்கில் வந்தால் ரிப்போர்ட் கிடைக்கும் என்று கூறியிருந்தார்கள் ஸ்கேன் சென்ட்டரில். மணி நாலேகால். காலாற நடந்துபோய், பார்க்கில் அரைமணி நடந்துவிட்டு போனால் சரியாக இருக்கும். அங்கிருந்து பத்து நிமிட நடைதூரத்தில் டாக்டரின் மருத்துவமனை. சற்றுநேரம் காத்திருந்து ஆறுமணிக்கு டாக்டரிடம் ரிப்போர்ட்டைக் காட்டிவிட்டு வந்துவிடலாம். சுந்தரேசன் வாஷ்பேஸின் அருகில் சென்று முகம் கழுவித் துடைத்துக்கொண்டு கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துவிட்டு பேண்ட்டும் ஷர்ட்டும், மாற்றிக் கொண்டார்.

எங்க கிளம்பியாறது? அடுக்களையிலிருந்து காப்பி வாசத்தோடு வசந்தாவின் கேள்வியும் வந்தது.

"ரிப்போர்ட் வாங்கவேண்டாம்?’

காப்பியைக் குடிங்கோ. தனியா போகவேண்டாம். நானும் வரேன்.

நீ எதுக்குமா? நா வாக்கிங் போயிட்டு அப்டியே வாங்கிண்டு, அப்டியே டாக்டரையும் பார்த்து காட்டிட்டு வரலாம்னு இருக்கேன்.

எனக்கொண்ணும் வேலையில்ல. நானும் வரேன். ராத்திரிக்கு அடைக்கு நனைச்சிருக்கேன். வந்து அரைச்சா அஞ்சே நிமிஷம்.

அடையா?

உங்களுக்கு வழக்கம் போல கஞ்சிதான். டாக்டர் சொல்லாம இனி எதுவும் தரமாட்டேன் உங்களுக்கு.

ஒரு விள்ளல்கூடத் தரமாட்டயாக்கும்?

மாட்டேன். வயத்த வலி முதுகு வலின்னு படாதபாடு பட்டாச்சு. தலையும் புரியாம, காலும் புரியாம, ஒவ்வொரு டாக்டரா அலைஞ்சுண்டு இருக்கோம். இருக்கற டெஸ்ட் எல்லாம் ஒண்ணொண்ணா எடுத்துண்டு இருக்கோம். இன்னிக்கு எடுத்திருக்கற டெஸ்ட் ரிசல்ட்டைப் பார்த்துட்டு டாக்டர் ஒண்ணுமில்லை, தாராளமா அடை கொடுக்கலாம்னு சொன்னா, ஒரு விள்ளல் என்ன, முழு அடையே முருங்கையிலை போட்டு வார்த்து தரேன்

சரி சரி கிளம்பு

அவர் லேப் ரசீதை எடுத்து வைத்துக்கொண்டு அதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனை ரிசல்ட் கோப்பையும் பையில் எடுத்து வைத்துக் கொண்டார்.

பரசு ஃபோன் ஏதானம் பண்ணினானா?

இல்லை. கோச்சிங் கிளாஸ் போயிருப்பான். டாக்டர்க்கு படிச்சுட்டு ஐஏஎஸ் ஆவேன்னு பிடிவாதம் பிடிக்கறவன் இவன் ஒருத்தனாதான் இருப்பான். படிச்ச படிப்புக்கு நல்ல வேலை கிடைச்சுது. ஆனா இவன் என்னடான்னா பார்ட்டைம் டாக்டராதான் போவேன்னு குறைந்த சம்பளத்துக்கு அரைநாள் வேலைக்கு போயிட்டு மீதிநாள் ஐஏஎஸ் கோச்சிங் போறான். கிளினிக் வெச்சா நன்னாவே சம்பாதிக்கலாம். ஒண்ணு ரெண்டு வருஷத்துல வேண்டிய பணம் சேர்த்துண்டு மேல்படிப்புக்கு முயற்சிக்கலாம். ஆனா அதுலயும் இவனுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. அதென்ன ஐஏஎஸ் ஆசையோ தெரியலை. நீங்களும் அவனுக்கு புத்தி சொல்லாம ஒத்து ஊத்திண்டு இருக்கேள். நல்ல அப்பா நல்ல பிள்ளை!

எத்தனையோ டாக்டர்கள் ஐஏஎஸ் ஆகியிருக்கா தெரியுமோ?

"ஏன்னா..வலிகிலி இல்லையே. வாக்கிங் வேற

Sie haben das Ende dieser Vorschau erreicht. Registrieren Sie sich, um mehr zu lesen!
Seite 1 von 1

Rezensionen

Was die anderen über Appa Pillai denken

5.0
1 Bewertungen / 0 Rezensionen
Wie hat es Ihnen gefallen?
Bewertung: 0 von 5 Sternen

Leser-Rezensionen