Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravugal Menmaiyanavai
Uravugal Menmaiyanavai
Uravugal Menmaiyanavai
Ebook217 pages1 hour

Uravugal Menmaiyanavai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு தாய்க்கு அவள் குழந்தைகள் அனைவருமே முக்கியமானவர்கள்; பாசத்திற்குரியவர்கள். ஓர் எழுத்தாளருக்கும் அவரது படைப்புகளுக்குமிடையே உள்ள உறவும் இப்படிப்பட்டதுதான். என் படைப்புகள் அனைத்துமே எனக்கு முக்கியமானவை. அவற்றில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் படிப்பவர்கள் மனதில் சில நிமிடங்களாவது நிலைக்க வேண்டும் என்பது என் ஆசை.
இந்தத் தொகுப்பில் வெளியாகும் ஐந்து குறுநாவல்களில் 'பாலை மண்ணில் புதையுண்ட நீரோடை' என்கிற குறுநாவல் கலைமகள் 'அமரர் ராமரத்னம்’ குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பின்னர் 'அனுபமா' என்கிற தலைப்பில் இதை நான் நாடக வடிவாக்கிக் கொடுக்க சென்னை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியது.
‘உறவுகள் மென்மையானவை’, ‘எத்தனை முகங்கள்’, மற்றும் 'அந்த நதி எங்கே போகிறது' இவை மூன்றும் அமுதசுரபியில் பிரசுரமானவை. 'அந்த நதி' குறுநாவல் போட்டியில் பரிசு வாங்கியது என்கிற கூடுதல் சிறப்பை உடையது.
வணக்கம்.
லக்ஷ்மி ரமணன்
Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580125805088
Uravugal Menmaiyanavai

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Uravugal Menmaiyanavai

Related ebooks

Reviews for Uravugal Menmaiyanavai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravugal Menmaiyanavai - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    உறவுகள் மென்மையானவை

    Uravugal Menmaiyanavai

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உறவுகள் மென்மையானவை

    2. பாலை மண்ணில் புதையுண்ட நீரோடை

    3. எத்தனை முகங்கள் எத்தனை மனிதர்கள்

    4. ஒரு மனைவி காதலியாகிறாள்!

    5. அந்த நதி எங்கே போகிறது?

    என்னுரை

    ஒரு தாய்க்கு அவள் குழந்தைகள் அனைவருமே முக்கியமானவர்கள்; பாசத்திற்குரியவர்கள். ஓர் எழுத்தாளருக்கும் அவரது படைப்புகளுக்குமிடையே உள்ள உறவும் இப்படிப்பட்டதுதான். என் படைப்புகள் அனைத்துமே எனக்கு முக்கியமானவை. அவற்றில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் படிப்பவர்கள் மனதில் சில நிமிடங்களாவது நிலைக்க வேண்டும் என்பது என் ஆசை.

    இந்தத் தொகுப்பில் வெளியாகும் ஐந்து குறுநாவல்களில் 'பாலை மண்ணில் புதையுண்ட நீரோடை' என்கிற குறுநாவல் கலைமகள் 'அமரர் ராமரத்னம்’ குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பின்னர் 'அனுபமா' என்கிற தலைப்பில் இதை நான் நாடக வடிவாக்கிக் கொடுக்க சென்னை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியது.

    ‘உறவுகள் மென்மையானவை’, ‘எத்தனை முகங்கள்’, மற்றும் 'அந்த நதி எங்கே போகிறது' இவை மூன்றும் அமுதசுரபியில் பிரசுரமானவை. 'அந்த நதி' குறுநாவல் போட்டியில் பரிசு வாங்கியது என்கிற கூடுதல் சிறப்பை உடையது.

    வணக்கம்.

    லக்ஷ்மி ரமணன்

    1. உறவுகள் மென்மையானவை

    முரளியின் தாய் வீணா பாலில் தோய்த்து எடுத்தது போல், வெளுப்பாக, உயரமாக, வாளிப்புடன் மேக்கப் போட்ட சினிமா நடிகையைப்போல் பார்க்க அழகாக இருப்பாள்.

    அவன் தந்தை அசோகன் அந்த அழகின் அடிமை.

    அந்த அழகின் முன், குரல் எழும்பிப் பேசாத ஊமை.

    அவர் புதுதில்லியிலேயே பிரபலமான வியாபார நிறுவனம் ஒன்றில் உதவி மானேஜர்.

    இன்று கல்கத்தா, நாளை கனடா என்று பறந்து கொண்டிருப்பவர்.

    வீட்டைச் சுற்றி ரோஜாத் தோட்டம்.

    அதைப் பராமரிக்க ஓர் ஆள்.

    வீட்டுப் பொறுப்பைச் சுமக்க ரோஸம்மா என்கிற உதவிப் பெண்.

    இத்தனையும் அடங்கிய வசதியான வாழ்க்கை அவர்களுடையது.

    வீணாவுக்கு அது போதவில்லை.

    விலைவாசி ஏறிக் கிடக்கிற இந்தக் காலத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் சம்பாதித்தால்தான் கொஞ்சமாவது தட்டுப்பாடு இல்லாமல் வசதியாக வாழ முடியும். அசோக் டியர், நீங்களும் வெளியூர் போய் விட்டால் கொட்டுக் கொட்டென்று எனக்குப் பொழுதே போகாது. ப்ளீஸ் நானும் வேலைக்குப் போகிறேனே என்று கெஞ்சி எப்படியோ அசோக்கின் அனுமதியை வாங்கிவிட்டாள்.

    பி.காம். பட்டதாரியான அவளுக்குத் தனியார் நிறுவனம் ஒன்றில் ‘ரிஸப்ஷனிஸ்ட்' வேலை கிடைத்து விட்டது.

    வேலை நேரம் போக மீதியை வீணா தன் அழகைக் காத்துக் கொள்ளவும், டின்னர், டீ பார்ட்டி என்று ஒன்று விடாமல் போய் அதைக் காட்டிக் கொள்ளவும் செலவழித்தாள்.

    முரளிக்குத் தன் பெற்றோர்களிடம் அபரிமிதமான பாசம் உண்டு.

    ஆனால், அவர்களுக்கு?

    அந்தக் கேள்வி கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி 70 எம்.எம். சைஸில் வளர்ந்து அவன் மனத்தை அடைத்துக் கொண்டு நின்ற போது அவன் அதற்குப் பதில் தெரியாமல் திண்டாடிப் போனான். முரளிக்கு அப்படி ஒரு சந்தேகம் எழவும் காரணம் இருந்தது.

    அவன் சின்னப்பையனாக இருந்தபோது ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து அவன் இடதுகால் போலியோவினால் பாதிக்கப்பட்டது.

    அந்த நோயின் பிடியிலிருந்து காலை விடுவித்துக் கொள்ள அவன் ஒரு பெரிய போராட்டமே நடத்த வேண்டி இருந்தது.

    'பிஸியோ தெரபி' மூலமும், சிறு அறுவைச் சிகிச்சைகள் மூலமும் டாக்டர்கள் அவனைக் குணப்படுத்த முயன்றும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

    அவன் நடந்த போது லேசான விந்தலாக ஊனத்தின் சாயல் அவனிடம் படிந்து போயிருந்தது தெரியத்தான் செய்தது.

    தன்னை எல்லாரும் கவனிக்கிறார்களோ? தன்னுடைய இயலாமையை அவர்கள் இரக்கத்துடன் பார்க்கிறார்களோ? அவர்கள் உதடுகளில் லேசாகக் கேலிப் புன்னகை தெரிகிறதோ? என்றெல்லாம் அவன் தனக்குள் எண்ணிக் குமைந்து போனான்.

    சாதாரணமான எந்தச் சூழ்நிலையிலும் அவன் நிம்மதியாக, சரளமாக இருக்க முடியாமல் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை அவனைக் கவ்விக் கொண்டது. அவனால் தன் வயதையொத்த மற்றக் குழந்தைகளுடன் சகஜமாகப் பழகவும் விளையாடவும் முடியவில்லை.

    தன்னுடைய இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் அவன் மனம் பெற்றோர்களிடமிருந்து அதிகக் கவனிப்பையும், அன்பையும் பரிவையும் எதிர்பார்த்தது.

    முரளியின் மனத்தை அவனுடைய குறையையே நினைத்து மறுகுவதிலிருந்து திசை திருப்பிவிட்டு அவனுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும்படிச் செய்ய வீணாவுக்கோ, அசோகனுக்கோ நேரம் இருக்கவில்லை.

    அதனால் தனக்கு ஏற்பட்டுவிட்ட இந்தக் குறையினால்தான் அவர்கள் தன்னை நேசிக்கவில்லையோ என்கிற கவலையில் சிக்குண்டு அவன் தடுமாறிப் போனான்.

    வீணாவுடைய லயிப்புகள் வேறுவிதமாக இருந்தன.

    எத்தனை அழகாக இளமையோடு அப்சரஸ் மாதிரி இருக்கிறாள் பார்த்தாயா? என்று பார்க்கிறவர்கள் தன்னை விமரிசிப்பதை அவள் பெரிதும் விரும்பினாள்.

    மாலை வேளைகளில் ஆபீஸிலிருந்து திரும்பியதும் குளித்து உடை மாற்றித் தன்னைத் தினுசு தினுசாக அலங்கரித்துக் கொண்டு தயாராக நிற்பாள்.

    அசோகன் வந்ததும் இருவருமாகக் கிளப்புக்கோ, பார்ட்டிக்கோ கிளம்பிவிடுவார்கள்.

    அசோகன் ஊரில் இல்லாத நாட்களில் கூட அவள் வீட்டில் தங்கியதில்லை. யாராவது சிநேகிதிகளோ, அசோகனின் நண்பர்களோ வந்து அவளை அழைத்துப் போய்விடுவார்கள்.

    அவர்கள் இருவரும் புகைமண்டலத்தில் உலவி, மதுவில் நீந்திவிட்டு இரவு திரும்பி வரும்போது நெடு நேரமாகி விட்டிருக்கும். முரளியும் மின்னியும் அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள்.

    ஆயா ரோஸம்மாதான் அவர்களுக்குக் கதவைத் திறப்பாள்.

    முதல் நாள் தாமதித்து இரவில் வீடு திரும்ப நேர்ந்திருந்தால் சில தினங்களில் மறுநாள் மாலைவரை முரளியால் தன் தாயைப் பார்க்க முடியாது.

    அதுபோன்ற சந்தர்ப்பங்களில் வீணா எழுந்திருக்கவே நேரமாகும்.

    ஆயா, எனக்கு அம்மாவைப் பார்க்கணும்.

    அவங்க தூங்கறாங்க ராசா. நீ இஸ்கோலுக்குப் போயிட்டு வந்தாவுட்டுப் பாரு என்று ரோஸம்மா அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

    வெயில் குளிர்... அது எந்தக் காலமாக இருந்தாலும் காலையில் ஏழரை மணி ஸ்கூல்தான் அவனுக்கு.

    பொழுது விடிந்து தயாராகிக் கிளம்பாவிட்டால் லேட்டாகிவிடும்.

    முரளியை எழுப்பி அவனுக்கு ஓவல் கரைத்துக் கொடுத்து இதமாகக் குளிக்க வெந்நீர் விளாவிக் கொடுத்து, இடையில் மின்னியைக் கவனித்து எல்லாருக்கும் சிற்றுண்டி தயாரித்து எல்லாப் பொறுப்புகளையும் ரோஸம்மா ஏற்றுக் கொண்டு குறையின்றிச் செய்து முடித்தாள்.

    சில சமயங்களில் ரோஸம்மாவின்மீது முரளிக்குச் சொல்ல முடியாத கோபம் வரும்.

    ‘இவள் இருப்பதால்தானே அம்மா தன்னைப்பற்றி எதிலுமே கவனம் செலுத்தாமல் இருக்கிறாள். இந்த ரோஸம்மாவை இம்ஸித்து எப்படியாவது வேலையிலிருந்து துரத்திவிட்டால்...?'

    அந்தக் குரோதம் அவன் மனத்தில் தோன்றிப் போய் விட்ட நாட்களில் அவனைச் சமாளிப்பதே ரோஸம்மாவுக்குப் பெரிய பிரச்சினையாகிப் போகும்.

    பொழுது புலர்ந்ததும் அவனை எத்தனை எழுப்பினாலும் எழுந்திருக்கமாட்டான்.

    உண்மையில் தூங்குகிறவனைத்தான் எழுப்ப முடியும். கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு வேண்டுமென்றே தூங்குவது போல் பாசாங்கு செய்கிறவனை எப்படி எழுப்ப முடியும்?

    என் ராஜாக்கண்ணு எழுந்திரும்மா. கொஞ்சலுடன் அவனை எழுப்ப அவள் நெருங்கி வருகையில், சரக்கென்று திரும்பி அவள் கூந்தலைப் பலமாகப் பிடித்து இழுப்பான்.

    அந்த அதிரலில் அவள் முகம் சிவந்து கண்களில் நீர் முட்டிப் போனாலும், அவள் குரலை உயர்த்தி ஒரு பேச்சுக் கூடப் பேசமாட்டாள். அடுத்து...

    நறுக்கென்று இரத்தம் வருகிறமாதிரி அவளைப் புறங்கையில் கிள்ளுவான்.

    பாலைக் குடிக்காமல் டம்ளரோடு எடுத்து அவள் மீது விசுறுவான்.

    என் ராசாவுக்கு என்ன கோவம்?

    அவனுடைய பிடிவாதங்களை மௌனமாக ஜீரணித்துக் கொண்டு அவள் புன்சிரிப்புடன் அவனைக் கேட்கும் போது அவன் அடங்கிப் போவான்.

    அவன் செய்த மௌன யுத்தங்கள் அவளை என்றுமே பாதித்ததில்லை.

    முரளி செய்யும் ஆர்ப்பாட்டங்களை ரோஸம்மா ஒரு முறைகூட அவன் பெற்றோர்களிடம் வெளிப்படுத்திக் காட்டிக் கொடுத்ததில்லை.

    அவள் அபூர்வமாக ஒரு வாரம் ஊர்ப் பக்கம் போக நேர்ந்தபோது....

    அவள் இல்லாவிட்டால் அந்த வீட்டில் நிலைமை எப்படி இருக்கும் என்பதும் முரளிக்குப் புரிந்து போயிற்று. வீணாவின் எரிச்சலும் கோபமும், முணு முணுப்புகளும் அவனும் மின்னியும் வாங்கிய வசவுகளும் அடிகளும், கிடைத்த தீய்ந்து போன டோஸ்டும், வாயில் வைக்க வழங்காத சாப்பாடும்......

    பள்ளிக்கூடத்துக்கு நேரத்துக்குப் போக முடியாமல் அங்கே வேறு தண்டனை கிடைத்தது.

    அப்படியும் மாலை வேளைகளில் வெளியே போவதை அவன் பெற்றோர்கள் நிறுத்தவில்லை.

    அவனையும் மின்னியையும் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு வேலைக்காரனைக் காவல் வைத்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள்.

    ரோஸம்மா திரும்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது முரளிக்கு.

    அதன் பின் அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை அவன் நிறுத்திவிட்டான்.

    அசோகனுடன் பேச அவனுக்கு அபூர்வமாகச் சந்தர்ப்பங்கள் தனிமையில் கிடைப்பதுண்டு.

    டாடி, இன்னிக்குச் சாயந்திரம் வெளியிலே போகப் போறீங்களா? அவன் ஏக்கத்துடன் கேட்பான்.

    ஏன்? வாரப் பத்திரிகை ஒன்றைப் பிரித்து வைத்துக் கொண்டு அதிலிருந்து பார்வையை வெளியே எடுக்காமலேயே கேட்பார் அசோகன்.

    இன்னிக்கு மட்டும் வீட்டுலே இருங்களேன் டாடி.

    ………….

    ஏதாச்சும் கதை சொல்லுங்க டாடி.

    எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை இல்லை. ரோஸம்மாவைக் கேள்.

    அவ சொல்ற கதையைக் கேட்டு எனக்குப் போரடிச்சுடுத்து.

    ……………

    இல்லேன்னா சில்ட்ரன்ஸ் பிலிம் போகலாம் டாடி.

    எந்தப் படம் போகணும்னு சொல்லு. நான் டிரைவரை அனுப்பி இப்பவே உனக்கு, மின்னிக்கு, ரோஸம்மாவுக்கு மூணு பேருக்கும் டிக்கெட் வாங்கிண்டு வரச்சொல்றேன்.

    நோ டாடி. நான் உங்ககூடத்தான் போவேன்.

    டோன்ட் பீ ஸில்லி. எனக்குக் குழந்தைகள் படம்னா பிடிக்காது.

    அப்போ பெரியவங்க பார்க்கிற மாதிரி அமிதாப்பச்சன் படம் ஏதாவது போகலாம்.

    இன்னொரு நாள் பார்க்கலாம். எனக்கு இப்போ டைம் இல்லை.

    அந்த இன்னொரு நாள் வரவே வராது என்பது முரளிக்குத் தெரியும்.

    'தினம் கிளப்புக்கும், பார்ட்டிக்கும் போக மட்டும் உங்களுக்கும் அம்மாவுக்கும் டைம் இருக்கா?' என்று அவன் மனசுக்குள் பொருமுவானே தவிர, வெளிப்படையாக அவரைக் கேட்க அவனுக்குத் துணிவு இருந்ததில்லை.

    மின்னியாவது சின்னவள். நான்கு வயதுதான் ஆகிறது. அவளை வெளியிடங்களுக்கு அழைத்துப் போனால் தொந்தரவு செய்வாள் என்று அவளைப் பெற்றோர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டுப் போவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், அவன் பெரியவன் தானே.

    அவனுடன் சினிமாவுக்குக்கூட அவர்கள் வரத் தயங்குவானேன்?

    ஒருவேளை அவனுடைய குறை? பார்க்கிறவர்கள் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்றே அவனை அவர்கள் தவிர்த்து விடுவார்களோ?

    வேறு ஏதும் சரியான காரணம் இருப்பதாகத் தெரியவில்லையே.

    அவனுடன் படித்த மற்றக் குழந்தைகள் எல்லாம் தங்கள் பெற்றோர்களுடன் வெளியிடங்களுக்குப் போய் வரவில்லையா?

    தாங்கள் போய்வந்த இடங்களைப் பற்றியும், பார்த்தவற்றையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் போது முரளியின் முகம் தொங்கிப் போகும்.

    தன்னுடைய காலை வெறுப்புடன் பார்த்தான். தன் பெற்றோர்கள் விலகிப் போவதற்குக் காரணம் அதுவாகத் தான் இருக்கும் என்கிற முடிவுக்கு வந்தான்.

    ஆனால், உண்மை அது அல்ல.

    குழந்தைகளைப் பெற்றுவிட்டார்களே தவிர, வீணாவுக்கோ அசோகனுக்கோ அவர்களை வளர்க்கிற பொறுமையோ, அவர்களுடைய மனத்தில் அலைபாய்கிற மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளுகிற சூட்சுமமோ கிடையாது.

    குழந்தையும் வீட்டில் இருக்க வேண்டிய குளிர்ப்பதனப் பெட்டிபோல், சோபாவைப் போல், நாய்க் குட்டியைப் போல் ஒரு சாதனம் என்றுதான் நினைத்தார்கள். அசோகனுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பாசங்கூட வீணாவுக்கு இல்லை. இல்லை, இருந்துதான் அதை அவளுக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லையோ?

    தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கையில் சில சந்தர்ப்பங்களில் அசோகனுக்கே சலிப்பு ஏற்பட்டதுண்டு.

    இருப்பினும் வீணாவுக்கு அதை எடுத்துச் சொல்லி அவளைக் கண்டிக்கவும், தங்கள் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் தைரியம் வராததால் பேசாமல் இருந்து விட்டார். அசோகன் சுமூகமான மனநிலையில் இருக்கும் போது முரளிக்கு அவர் முகத்தைப் பார்த்தாலே புரிந்து போகும்.

    Enjoying the preview?
    Page 1 of 1