Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Raagam lm
Kalyana Raagam lm
Kalyana Raagam lm
Ebook303 pages2 hours

Kalyana Raagam lm

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.

இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.

இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131505077
Kalyana Raagam lm

Read more from Latha Mukundan

Related to Kalyana Raagam lm

Related ebooks

Reviews for Kalyana Raagam lm

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Raagam lm - Latha Mukundan

    http://www.pustaka.co.in

    கல்யாண ராகம்

    Kalyana Raagam

    Author:

    லதா முகுந்தன்

    Latha Mukundan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lathamukundan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 1

    பத்தாவது முறையாக தன் கையைத் திருப்பி நேரத்தைப் பார்க்கிறாள் ஜமுனா. மணி மூன்றைத் தொட்டுக் கொண்டிருந்தது. மூன்றரை மணிக்கு தான் கம்ப்யூட்டர் வகுப்பில் இருந்தாக வேண்டும். இன்னும் வேலைக்குச் சென்ற அம்மாவைக் காணவில்லை. சாதாரணமாக இரண்டரை மணிக்கே வந்து விடுவாளே அம்மா. இன்று என்ன ஆயிற்று? இத்தனை நாட்களில் ஒருநாள்கூட மதியம் இரண்டரை மணியைத் தாண்டியது இல்லை. மணி இரண்டு முப்பது ஆகும் போதே வீட்டு வாசலில் டாண் என்று வந்து நிற்பாள் அம்மா. இன்னும் ஏன் காணவில்லை? இரண்டரையைத் தொடும் போது ஆரம்பித்த பதட்டம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துப் பதட்டமாகவும், கவலையாகவும் ஆனது. ம்.... ஹும் இனிமேலும் இங்கிருந்து கொண்டு கவலைப்படுவதைவிட அம்மா வேலை செய்யும் வீட்டிற்கே போய் வந்தால் என்ன?

    அவசரம், அவசரமாகக் கதவைப் பூட்டியவள் சற்று பதற்றத்துடன் கிளம்பிப் போகிறாள். அம்மா வேலை செய்யும் வீடு இரண்டு தெரு தள்ளித்தான் இருக்கிறது. காலையிலேயே முக்கால்வாசி வேலையை முடித்து விடுவாள் அம்மா. இரண்டு மணிக்கு சென்று, தோய்த்து காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துவிட்டு, இருக்கும் ஒன்றிரண்டு பாத்திரங்களை தேய்த்து விட்டு, வாசலில் நீர் தெளித்து கோலமிட்டு வரவேண்டியது. மிக மிக மெதுவாக வேலை செய்தாலும் மூன்று மணிக்குள் வந்து விடலாம். இன்று ஏன் இத்தனை நேரம் ஆயிற்று? அம்மாவிற்கு ஏதாவது ஆகியிருக்குமா?

    நினைப்பதற்குள் அம்மா வேலை செய்யும் வீட்டை அடைய, தெரு வாசல் சுத்தமாக பெருக்கப்பட்டு கோலம் போடப்பட்டு..... அம்மா அந்த வேலையை முடித்திருக்கிறாள் என்று தெரிந்தது. வேலை என்னமோ முடித்து விட்டாள் என்று தோன்றுகிறது. வீட்டுக்குப் புறப்பட்டு வந்துவிட வேண்டியதுதானே! 'நான் கம்ப்யூட்டர் கிளாஸுக்குப் போகணும்னு அம்மாவுக்குத் தெரியாதா?' லேசான கோபத்தோடு அழைப்பு மணியை அழுத்த, அம்மா வேலை செய்யும் வீட்டுக்கார அம்மாள் கதவைத் திறக்கிறாள்.

    அம்மா... ஜமுனா சற்று தயங்கியவாறே ஆரம்பிக்க, அப்பவே போயிடுச்சே. உங்கம்மா இரண்டரை மணிக்கு மேலே ஒரு நிமிஷம் கூட இங்கே தங்க மாட்டாளே... சொல்லிவிட்டு வீட்டுக்கார அம்மாள் கதவை மூடிக் கொண்டாள். கதவை மூடிய விதத்திலிருந்து தன்மேல் அந்த அம்மாளுக்கு எரிச்சல் என்று தோன்றியது. 'ஒருவேளை அந்த அம்மாள் தூங்கிக் கொண்டிருக்கலாம். தான் எழுப்பி விட்டதால் கோபமாக இருக்கலாம். மெல்லிய பெருமூச்சு இழையோட, மறுபடியும் விடுவிடுவென்று வீட்டை நோக்கி நடக்கிறாள்.

    அம்மா இருக்கும் சுவடே தெரியவில்லை. தான் பூட்டியது பூட்டியபடி இருக்க, ஜமுனாவிற்கு உண்மையிலேயே கலவரம் வந்தது. 'என்ன இது வேலை செய்யும் இடத்திலும் காணோமே?' மனதிற்குள் பயம் குடைய லேசான அழுகை வந்தது. அம்மா எங்கே போனாள்? ஏதேனும் விபரீதமாக ஆகிவிட்டதா? மனது தடக் தடக்கென்று அடித்துக் கொள்ள கையைப் பிசைகிறாள். தனக்கு இருக்கும் ஒரே ஆதாரம் தன் தாய்தான். அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்..... பின் தன் நிலைமை?

    அடுத்த தெருவில் இருக்கும் அப்பாவின் நண்பர் கோபாலன் வீட்டிற்குப் போகிறாள். அம்மா சற்று நேரம் வரவில்லை என்றால் கோபால் மாமா வீட்டிற்குத்தான் போயிருப்பாள். அப்பாவின் நண்பர் கோபாலின் மனைவி சரளாவும் அம்மாவிற்கு வயதுத் தோழி. ஒரு வேளை 'சரளா ஆன்ட்டியைப் பார்த்து பேசப் போயிருக்காங்களா?' மனதில் எழுந்த அந்த சந்தேகம் நொடிப் பொழுதில் மறைந்தது. 'சி...... சீ... சான்ஸே கிடையாது. அம்மா போகிறேன் என்றால் எங்குமே சொல்லாமல் கிளம்ப மாட்டாள். இருந்தும் மனது கேட்காமல் கோபால் மாமா வீடு, சற்று தள்ளி இருக்கும் விஜயா சித்தி வீடு, மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் தந்தையினுடைய அம்மா வீடு, மற்றும் தெரிந்தவர், அறிந்தவர் எல்லார் வீட்டிலேயும் தேடி ஆகிவிட்டது. அம்மா எங்குமே இல்லை.

    இன்னும் ஒரு வீடு பாக்கி இருக்கிறது. அம்மாவின் கணவர், அதாவது தன்னுடைய தந்தையின் வீடு. ஒரு வேளை அம்மா அங்கே போயிருப்பாளா? இருக்கவே முடியாது என்று இதற்கும் மனம் அடித்துக் கூறியது. தன் தந்தையைத் தானே பார்க்க விருப்பப்படாமல் இருக்கும் போது தன் தாய் எப்படி ஆசைப்படுவாள்?

    இருந்தும் மனது கேட்காமல் தந்தையின் இல்லத்தை அடைகிறாள். தந்தை சுப்ரமணியை எங்கும் காணவில்லை. இவர் எங்கே போய்த் தொலைந்தார். அப்பா ஒரு அரசாங்க பள்ளியில் வாத்தியார் என்று பெயர்தான். வேலைக்கு வெட்டியாகப் போய் விட்டு வருவார். வாங்கும் சம்பளத்தில் குடி, சூதாட்டம், ரேஸ் என்று ஒழித்து விடுபவர். ஒரு எட்டணாவை முழுதாக வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுத்தவரில்லை. புருஷன் பணம் தராவிட்டாலும் பெண்டாட்டியை லட்சியம் செய்யாவிட்டாலும் கணவனே தெய்வம் என்று வாழ்ந்தவள் தன் தாய். அப்பா இருக்கும் பணத்தை ஒழித்துவிட்டு பணத்திற்காக சற்று வசதி படைத்த இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட போதுதான் தன் தாய் சிவகாமி தனியே வந்து விட்டாள். அப்பாவின் திருமணத்திற்குப் பிறகு தானும் அம்மாவும் தனிக் குடித்தனம் போனோம். அம்மா வீட்டு வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்தாள். இரண்டு வீட்டு வேலை பிடித்துக் கொண்டு, தன்னையும் படிக்க வைத்துக் கொண்டு... பத்து வருடங்கள் ஓடியேதான் போய் விட்டது. இரண்டு தெரு தள்ளித்தான் இருக்கிறோம். ஆனாலும் அப்பாவைப் பார்ப்பதில்லை. பொது இடங்களில் ஒருவரை ஒருவர் எதேச்சையாக சந்தித்துக் கொள்வதோடு சரி. பார்க்கும் போதெல்லாம் அப்பா கேட்பார்.

    என்ன பண்றே இப்போ? அப்பாவின் இரண்டாவது மனைவி மலர்விழி ஒரு வார்த்தை கூட பேசாமல் முகத்தைத் தூக்கி இடித்துக் கொண்டு போவாள்.

    இன்று அவள் வீட்டிற்குப் போய் அம்மாவைத் தேட வேண்டுமா என்ன? ஒரு நிமிடம் தயங்கி நின்ற கால்களைத் துரிதப்படுத்துகிறாள். நமக்கு நம் வேலை தான் முக்கியம். வந்த வேலையைப் பார்ப்பதை விட்டு விட்டு இது என்ன தேவை இல்லாத சிந்தனைகள்?

    சற்று தைரியமாக வீட்டினருகே சென்று அந்த மரகேட்டை பிடித்துக் கொண்டு நிற்கிறாள். இங்கிருந்து பார்த்தாலே வீட்டில் யாருமே இல்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. பிறகு கேட்டு என்ன ஆகிவிடப் போகிறது? சற்று திரும்பி நடந்தபோது சின்னம்மா பெரிய தொண்டையோடு கூப்பிடுகிறாள்.

    என்னம்மா என்னிக்கும் இல்லாத அதிசயம்? சீராட வந்துட்டே மலர்விழியின் வார்த்தைகள் மனதில் கோபத் தீயை மூட்ட.

    உங்களோட சீராட யாரும் இங்கே வரலை. எங்கப்பாவை பார்க்க வந்தேன்?

    என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது? முகவாய்க் கட்டையில் இடித்துக் கொண்டவள்,

    உங்கப்பா சரோஜாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஜோஸியர் வீடு வரைக்கும் போயிருக்கார்.

    அதற்கு மேல் ஜமுனா அங்கு நிற்கவில்லை. தன்னை விட இரண்டு வயது இளையவள் சரோஜா. மலர்விழியின் செல்ல ஏக போக வாரிசு. அதற்கு திருமண ஏற்பாடெல்லாம் நடக்கிறது. ஆனால் தனக்கு? தன்னை யாரோட பெண் போல நினைத்து அப்பா தண்ணீர் தெளித்து விட்டாற் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் மூத்தவள் என்னை விட்டுவிடத் தோணுமா என்ன?

    'ஆமா நீ இருக்கற இருப்பில் கல்யாணம் தான் ஒரு கேடு?' மனது இடிக்க தனக்கு இப்போது திருமணம் தேவை இல்லைதான். இல்லையென்றாலும் தந்தை என்ற கடமையை தன் தந்தை செய்ய வேண்டாமா? இப்படியா ஒரேயடியாக தன்னை தலை முழுகிவிடுவது. கேட்க வந்த கேள்வியைக் கேட்காமலேயே திரும்பிப் போகிறாள். மனம் மட்டும் தன்னை ஒதுக்கி விட்ட தந்தையை நினைத்து கோபப்பட்டது. மெல்லிய பெருமூச்சு இழையோட, மறுபடியும் அம்மாவைத் தேட ஆரம்பிக்கிறாள், அக்கம் பக்கம், எதிர் வீடு, பக்கத்து வீடு எல்லாவற்றையும் ஒரு சுற்று சுற்றி வந்தாகி விட்டது. அம்மா நிஜமாகவே எங்கே போனாள்?

    ஒருவேளை கல்யாணி அம்மாள் வீட்டிற்குப் போயிருப்பாங்களா? கல்யாணி அம்மாளை நினைக்கும் போதே மனம் நன்றி உணர்வில் திளைத்தது. அறுபத்து ஐந்து வயதுடைய முதியவள். ஊரிலேயே மிக மிக செல்வந்தர்கள். எக்கச்சக்க நிலபுலன்கள். அரண்மனை போல் மிக பிரம்மாண்டமான வீடு. வீடு முழுவதும் வேலை செய்யும் வேலைக்காரர்கள் என்று மிக மிக வசதியாக வாழ்பவர்கள்.

    முப்பது வயது நிரம்பிய பெரிய மகன் விஜயன். இருபத்திரண்டு வயது சிறியவன் ஜகன். கல்யாணி அம்மாளின் கணவர் என்றோ பரலோகம் போனவர். விஜயனுக்குத் திருமணம் ஆகி மகன், மகளோடு நகரத்தில் தனியாக வாசம். சிறியவன் ஜகன் பள்ளியில் மிக மிக நன்றாகப் படித்து பின் ஐ.ஐ.டி.யில் இடம் பெற்று இந்த வருடம் முடித்து வரப் போகிறவன். இன்னும் இரண்டு நாளில் வந்துவிடப் போவதாகக் கேள்வி. ஜகனைப் பற்றி நினைக்கும் போதே முகம் மலர்ந்து சிவந்து விடுகிறது.

    ஜகன் நல்ல உயரமாக பளீரென்ற நிறத்தோடு, பார்ப்பதற்கு சற்று அழகாகவே இருப்பான். அவனைவிட மூன்று வயது சிறியவள் ஜமுனா. மூன்று வகுப்புகள் குறைவு. தனக்கு மூன்று வருடம் முன்னால் படிக்கும் அவனை அதிசயத்தோடு, பிரியத்தோடு, மதிப்போடுதான் பார்ப்பாள் ஜமுனா. நாளாக நாளாக அவன் குணங்களைப் பார்த்து, பார்த்து மதிப்பு இன்னும் கூடத்தான் செய்தது.

    சட்டென்று மனம் திட்டியது. இது என்ன பைத்தியக்கார பழக்கம்? அம்மா என்பவள் எங்கே போனாள் என்று தெரியவில்லை. நான் யாரைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கிறேன், சே!

    தன் நினைவுகளை ஒதுக்கிவிட்டு ஓடுகிறாள். கல்யாணி அம்மா இருந்தால் தானும் சேர்ந்தே தேடித் தந்து விடுவார். மூலை முடுக்கெல்லாம் ஆட்களை அனுப்பி, ஆமாம் அந்த அம்மாள் இருக்கும் போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்? மனது சற்று ஆறுதல் அடைந்தது.

    அப்பா மறுமணம் புரிந்து கொண்டவுடன், அம்மா தன்னையும் அழைத்துக்கொண்டு தனியே பிரிந்து வந்த போது முதலில் கல்யாணி அம்மாவிடம் தான் வேலைக்குச் சேர்ந்தாள். சேரும்போது இருந்த நிலைமையும், பிறகு இருந்ததையும் நினைத்துப் பார்க்கிறாள் ஜமுனா.

    காலையில் தன்னைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு அம்மா வேலைக்குப் போய் விடுவாள். மதியம் சாப்பிட அம்மாவைத் தேடி அவர்கள் வீட்டிற்குச் சென்றால் தனக்கு என்று எடுத்து வைத்த சாதம், குழம்பு என்று அம்மா தனக்குப் போடும் போதே மாமி வந்து விடுவாள்.

    ‘பாவம் குழந்தை பசியோடு வந்திருக்கும் இன்னும் கொஞ்சம் சோற்றைப் போடு' என்பாள். 'பொரியல் ஏன் வைக்கலை? பொரியல் கொஞ்சம் வை' என்பாள். வயிறு நிரம்ப நிரம்பப் போட்டு அனுப்புவாள். ஜமுனா பள்ளிக்குச் சென்றபின் அவள் அம்மாவையும் உட்கார வைத்துச் சோற்றைப் போட்டு அனுப்புவாள். பள்ளி சீருடைகளோ படிக்க புத்தகம், நோட்டுகள் என்று எல்லாமே வாங்கித் தருவாள்.

    இது போதாதென்று என்றாவது ஒரு நாள் வெளியே அழைத்துப் போய் வேண்டிய பொருட்களை வாங்கித் தந்து கல்யாணி அம்மா போல் பெண் இருப்பதே அரிது. மனம் சற்று சாந்தப்பட்டது. கல்யாணி அம்மாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு என்ன சொல்கிறாரோ அதன் படி நடப்பதுதான் உசிதம். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அம்மாவைக் கண்டு பிடித்து விடுவாள் கல்யாணி அம்மாள்.

    அந்த கிராமத்துலயே சற்று பணக்காரத்தனமான வீடு. கிட்டத்தட்ட ஆறு ஏக்கரில் அமைந்திருக்கும் அந்த தனி வீடு பார்ப்பவர்களை கட்டாயம் வசியப்படுத்தி விடும். முன்புறம் முழுவதும் பூந்தோட்டங்கள். அங்கங்கே வேம்பு, அரச மரம், மாமரம் என்று இருக்க, பக்கவாட்டில் பத்து தென்னை மரங்களும், பனை மரங்களும் அப்படியே அழகை அள்ளிப் பருகச் செய்து விடும். பின் பக்கம் முழுவதும் கொய்யா, மாதுளை, சம்பங்கிப் பூ என்று விஸ்தீரமான தோட்டம் உண்டு. நடுவே காய்கறித் தோட்டங்களும் வீடே பச்சு பச்சென்று மிக மிக அழகாகத் தோன்றும். போதாக் குறைக்கு தோட்டத்தில் ஒரு ஊஞ்சல் உண்டு. எத்தனையோ நாட்கள் யாரும் இல்லாதபோது ஆடிப் பார்த்ததுண்டு.

    பகல் பொழுதில் பெரும்பாலும் கல்யாணி அம்மாள் ஊஞ்சலில் அமர்ந்தபடிதான் வேலையே செய்வார். தனக்கு மட்டுமல்ல எத்தனையோ ஏழைகளை வாழ்விப்பவர் அந்தக் கல்யாணி அம்மாள், உதவி என்று கேட்டு விட்டாலோ இல்லை பிறருக்கு உதவி வேண்டும் என்று தெரிந்து விட்டாலோ, வலிய வந்து உதவி செய்யும் குணம் கல்யாணி அம்மாளுக்கு.

    கல்யாணி அம்மாளின் கணவர் பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு விபத்தில் மாண்டு போனவர் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். வீடு, சமையல் என்று இருந்திருந்த கல்யாணி அம்மாள் எல்லாவற்றையும் தன் தலைமையின் கீழ் கொண்டு வந்து, இரண்டு குழந்தைகளையும் நல்ல படிப்பு படிக்க வைத்து, பெரியவன் பி.காம் படித்து ஸி.ஏ. படித்து நகரத்திலேயே வேலைக்குப் போய் திருமணம் புரிந்து பிள்ளை, பெண்ணை பெற்று வாரம் ஒருமுறை பஸ்ஸில் பிரயாணித்து தாயாரை பார்க்க வந்து போவான். ரொம்பவே சிடு மூஞ்சுதான். சனிக்கிழமை காலை வந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று விடுவான். யாரைப் பார்த்தாலும் வள் வள்ளென்று விழுவான். ஜமுனாவிற்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.

    சற்று பெருமூச்சோடு இதை நினைத்தவாறே ஜமுனா சென்று அழைப்பு மணியை அழுத்த, கதவைத் திறந்தவனைப் பார்த்து சற்று திகைத்தவாறே நிற்கிறாள்.

    *****

    அத்தியாயம் 2

    ஹாய் ஜமுனாவா? இப்படி வளர்ந்திருக்கறது? பென்டாஸ்டிக், என்றவனைப் பார்த்தவளுக்கு வெட்கம் வந்தது. ஜகனா இது? இந்த நான்கு வருடங்களில் எத்தனை அழகைக் கொண்டு வந்திருக்கிறான். ஒரு நிமிடம் பேச்சற்று அவனைப் பார்த்தவாறே நிற்கிறாள். இன்னும் அதிகமான வெளுப்போடு, சற்று அடர்த்தியான மீசையோடு பம்மென்ற கன்னங்களில் சிவப்போடு, அழகின் மொத்த உருவாக நிற்கிறான்.

    ஜமுனா அத்தனை நிறமில்லை. மாநிறத்திற்கும் வெளுப்பிற்கும் இடைப்பட்ட நிறம். சாதாரணமாகப் பார்த்தால் வெள்ளை என்றுதான் சொல்வார்கள். இருந்தாலும் மாநிறத்தில் தான் சேர்த்தி. நல்ல பெரிய கண்கள். சுண்டியிழுக்கும் பார்வை. சிவந்த சற்று பெரிய உதடுகள். நல்ல கூர்மையான நாசி, கிரேக்க சிலை போன்ற உடலமைப்பு, என்னதான் மாநிறமென்றாலும் இரண்டாவது முறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி தான் ஜமுனா. இருந்தும் ஜகனின் அழகிற்கு முன்னால் சூரியனுக்கு முன்னால் வைக்கப்பட்ட அகல் விளக்கு போல் உணர்கிறாள் ஜமுனா.

    சங்கடத்தில் மனது நெளிந்தது. என்னப்பா பேச்சே வரலியா? என்னாச்சு? ஜகன் சொடக்கு போட்டு கேட்க, ஜமுனாவின் கன்னங்கள் சிவந்தன. அம்மாவின் ஞாபகம் கூட மறந்து தான் போனது. ஜகனின் அருகாமை அசத்தியது.

    ஹலோ என்ன விஷயம்? உம் முகமெல்லாம் வாடிப் போயிருக்கு? உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுது.

    அவன் கேட்ட பின்தான் தான் எதுக்காக வந்திருக்கிறோம் என்று தெரிய, சாரி... அம்மாவைப் பார்க்கணும்.

    இதுக்கு எதுக்கு சாரி. உள்ளே போய்ப் பாரேன்.

    தேங்க்ஸ் என்றவள் அங்கிருந்து வீட்டினுள் போகிறாள்.

    ஒவ்வொரு அறையாகத் தேடித் தேடி வீட்டின் பின்புறம் வந்தபோது கல்யாணி அம்மாள் ஏதோ வேலையாக இருந்தார்கள்.

    வா... ஜமுனா… என்னம்மா கம்ப்யூட்டர் கிளாஸுக்கு லேட்டாயிடுச்சா? நான் உங்கம்மாகிட்ட அப்பவே சொன்னேன். கேட்டாதானே. நம்ம ஜகன் வந்திருக்கானில்லே. தம்பிக்குப் பிடிக்கும்னு பாலை திரட்டிகிட்டு இருக்காங்க, சிவகாமி... ஜமுனாவே வந்தாச்சு.

    எனக்கும் முடிஞ்சிடுச்சு சொன்னவாறே கைகளைத் துடைத்தபடி வெளியே வருகிறாள் சிவகாமி.

    என்னம்மா இது? நீ பாட்டுக்கு இங்க வந்துட்டே நான் எங்கல்லாம் தேடினேன் தெரியுமா? ஒரு போன் பண்ணக்கூடாதா?

    இல்லை ஜமுனா. இத்தனை நேரம்.. நேரமாகவில்லைன்னு நெனச்சு பேசாம இருந்துட்டேன்.

    ஜமுனா மெல்லிய பெருமூச்சை விட்டாள். அம்மாவைக் காணோம் காணோம்னு பதறிகிட்டு இருக்கேன். எப்படி துளிகூட பதட்டமில்லாமல் அம்மா பேசுகிறாள்?

    நான் எப்படி எல்லாம் தேடினேன். எவ்வளவு கூலா பதில் பேசறீங்க? பாருங்கம்மா கல்யாணி அம்மாளிடம் ஜமுனா சிணுங்குகிறாள்.

    சிவகாமி நீ பண்ணது தப்புதான். அப்பவே கிளம்புன்னேன். போனாவது பண்ணியிருக்கலாம். எப்படித் துடிச்சுப் போயிட்டா பாரு?

    எங்கடி போயிடுவேன்? இந்த வீடு விட்டா அந்த வீடு. அதுவும் வேலை செய்யற நேரத்துலே தான் அங்க இருப்பேன். மீதி நேரமெல்லாம் இங்க தானே. முதல்லயே நீ இங்க வந்திருக்கறதுதானே மகளை செல்லமாகக் கடிகிறாள் சிவகாமி.

    சரி இங்கயே லேட்டாயிடுச்சு. ஒரு வழியா டிபனை சாப்பிட்டு கிளம்பு. இங்கேருந்து பக்கம்தானே. இப்படியே கிளம்பிப் போயிடு. கல்யாணி அம்மாள் பரிவோடு கூற,

    நோட்புக் எல்லாம் வீட்டுலே வச்சிட்டு வந்துட்டேன். நான் போகணும்மா பணிவோடு பேசுகிறாள் ஜமுனா.

    நீ ஒண்ணும் போக வேண்டாம். சிவகாமி நீயும் சாப்பிட வா. கூடவே நம்ப முத்துவை கூப்பிட்டுகிட்டு போய் நோட்டு புஸ்தகத்தைக் கொடுத்தனுப்பு.

    என்னம்மா நீங்க முத்து அந்த பட்டு போன மரத்தை வெட்டிகிட்டு இருக்கான்.

    வீரய்யா எங்கே?

    டிரைவர் தம்பி வெளிலேதாங்க உக்காந்துகிட்டு இருக்கு.

    பின்னே அவனை அழைச்சுகிட்டு போ?

    எதுக்குமா? நீங்க வேற சிவகாமி மறுக்க,

    நீ ஒண்ணும் பேசாதே. முதல்லே சாப்பிடு. அப்புறம் கிளம்பு.

    "என்னம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1