Genießen Sie diesen Titel jetzt und Millionen mehr, in einer kostenlosen Testversion

Kostenlos für 30 Tage, dann für $9.99/Monat. Jederzeit kündbar.

Anupama

Anupama

Vorschau lesen

Anupama

Länge:
91 Seiten
32 Minuten
Freigegeben:
Feb 26, 2020
ISBN:
6580131505079
Format:
Buch

Beschreibung

இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.

இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.

இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

Freigegeben:
Feb 26, 2020
ISBN:
6580131505079
Format:
Buch

Über den Autor


Ähnlich wie Anupama

Ähnliche Bücher

Buchvorschau

Anupama - Latha Mukundan

http://www.pustaka.co.in

அனுபமா

Anupama

Author:

லதா முகுந்தன்

Latha Mukundan

For more books

http://www.pustaka.co.in/home/author/lathamukundan-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 1

அம்மா... அம்மா... யாரோ கூப்பிடும் ஒலி கேட்டு வெளியே வருகிறாள் அனுபமா. ஜன்னல்களுக்கெல்லாம் வெள்ளையும் நீலமும் கலந்த பூப்போட்ட திரைகளை மாட்டிக் கொண்டிருந்தவள், அப்படியே அதைத் தொங்க விட்டு விட்டு வந்து கதவைத் திறக்கிறாள்.

யார்... என்ன வேணும்? எதிரே ஒரு அறுபது வயது இருக்கும் முதியவனைப் பார்த்துக் கேட்கிறாள். தலை மயிர் முழுவதும் கொட்டிப் போய் கண்ணுக்கு அடியில் வாயின் ஓரங்களில் எல்லாம் சுருக்கம் விழுந்து, யார் இந்தப் பெரியவர் என்று நினைத்தபடி கண்களில் 'நீர் யார்' என்ற கேள்வியைத் தேக்கியபடி அவரைப் பார்க்க,

வந்தும்மா... நான் ஐயா ஆபீசிலே வேலை பண்றேங்க அடுத்த வருஷம் ரிடையர் ஆயிடுவேனுங்க.

சரிப்பா. அதெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்றே? ஜயா இங்கே இல்லே. ஆபீசுக்குப் போயிருக்காரு அனுபமா கூற.

இல்லைங்க, ஐயாதான் அனுப்பிச்சாரு. நேத்துதான் வந்தோம். வீட்டுலே சாமான் செட்டெல்லாம் க்ளீன் பண்ணி வைன்னு சொன்னாரு. வீட்டு வேலை செய்யறவங்களைக் கூட ஏற்பாடு பண்ணச் சொன்னாரு. நாளைக் காலை வேலை செய்யறவங்களைக் கூட்டிகிட்டு வந்துடறேன்.

அவன் சொல்லச் சொல்ல அனுபமாவிற்கு பயம் வந்தது. இந்தக் கிழவன் யாரோ எவரோ? உள்ளே வந்து மண்டையில் ஒன்று போட்டு இருக்கும் சாமான்களைத் தூக்கிக் கொண்டு போய் விட்டால்...

கொஞ்சம் இருப்பா, ஐயாவிற்கு போன் பண்ணிக் கேக்கறேன். அவங்களைக் கேக்காம யாரையும் வேலைக்கு வச்சுக்க முடியாது. கதவைச் சாத்திவிட்டு செல்போனில் கணவனைத் தொடர்பு கொள்கிறாள்.

ஏங்க ஏதோ ஒரு கிழவன் வந்திருக்கானே...

ஆமாம். நான்தான் அனுப்பிச்சேன். அவனை வச்சுகிட்டு ஸ்க்ரீன் மாட்டி, கட்டிலை எல்லாம் மாட்டி சோபாவை பிரிச்சுப் போட்டு எல்லாம் செய்.

வந்தவனை உள்ளே அழைத்து வேலைகளை ஆரம்பித்தாள். வயதானவன் ஆனதாலோ என்னவோ சற்று மந்தமாகத்தான் வேலை செய்கிறான். கண் சரியாகத் தெரியவில்லையோ என்னவோ, ஓட்டை இருக்கும் இடத்தில் ஸ்குரூவை திருகாமல் வெளியே மணிக்கணக்காக ஸ்குரூவைத் திருகிக் கொண்டு இருக்கிறான். எத்தனை முறை கூப்பிட்டாலும் ரொம்ப நேரம் கழித்து 'என்னம்மா' என்கிறான். 'காது கேக்கலைம்மா' என்கிறான்.

'சே! என்ன மனுஷன் இவர். உதவிக்குன்னு இப்படிப்பட்ட ஆளையா அனுப்புவாங்க?' எரிச்சல் அடைகிறாள்.

ஒரு வழியாக சாமானைப் பிரித்துப் போட்டு சுத்தம் செய்து கதவுக்கெல்லாம் ஸ்க்ரீன் கட்டி, கூட வந்த ஆளைவிட அனுபமாதான் மாய்ந்து மாய்ந்து வேலை செய்கிறாள்.

சில இடங்களில் சுவற்றில் ஆணி அடிக்க வேண்டும் என்றவன் ஆணியை வைத்து அடித்து சுவற்றை ஓட்டையாக்கி விட்டான். இதில் ஆணி இறங்காது அம்மா, டிரில் பண்ணிதான் ஆணியை இறக்க முடியும் என்றான்.

ஒரு வழியாக சாமான்களைப் பிரித்து ஷெல்பில் அடுக்கி, எலக்ட்ரீஷியனை வரவழைத்து ஃபேனை மாட்டி பல்புகளை மாட்டி என்று அனுபமாதான் லோல்பட்டுக் கொண்டிருந்தாள்.

சுமார் மூன்று மணிக்கு கணவன் நாகராஜே வந்து விட்டான்.

என்ன அனு சுவரெல்லாம் பூகம்பம் ஏற்பட்ட பூமியோட மேல்பகுதியாட்டம் இருக்கு.

ஆமா நல்லா அனுப்பிச்சீங்க. ஆணி அடிக்கறேன்னு ஹால் சுவர், பெட்ரூம் சுவர், சமையல் ரூம் சுவர் எல்லாம் நாசம் பண்ணிட்டான். இத்தனை அடிச்சும் ஆணி இறங்கலே சுவர்தான் பள்ளமா போச்சு.

சரி விடு. இவன் ஒரு பியூன்தான் இருக்கான். இன்னும் ரெண்டு பேர் லீவுலே போயிருக்காங்களாம் என்றவன்.

சரி ஓட்டல்லே சாப்பாடு எடுத்துட்டு வந்துடச் சொல்றேன். நாளைக்கு வேலைக்கு ஆளை கூட்டிகிட்டு வந்துடச் சொல்லி இருக்கேன். செட்டில் ஆயிடுவோம். என்று புன்னகைத்தவாறே பாக்கி வேலைகளை முடிக்கிறான்.

ஏங்க அஞ்சு மணிக்கு ஓட்டலுக்கு அனுப்பியிருக்கீங்க. இன்னும் வரலியே.

சற்று கவலையுடன் எட்டிப் பார்த்தவாறே கேட்கிறாள் அனுபமா. இவர்கள் இருக்கும் பகுதியே ஊருக்கு வெளியே எத்தனையோ கிலோ மீட்டர் தள்ளி வரவேண்டும் என்று நாகராஜ் சொல்லி இருக்கிறான். கம்பெனி தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு இங்கேயே குவார்ட்டர்ஸ் போல் கட்டிக் கொடுத்திருக்கிறது.

நாகராஜ் மானேஜர் பதவியில் இருப்பதால் உயர் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் இவனின் குடியிருப்பு இருந்தது. ஒரு வீட்டிற்கும், இன்னொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளியே இருந்தது. ஓவென்று தனியாக யாருமில்லாமல் அனுபமாவிற்கு இந்த இடமே பிடிக்கவில்லை. மெல்லிய பெருமூச்சு விட,

என்னாச்சு அனு? என்று பெருமூச்சு

Sie haben das Ende dieser Vorschau erreicht. Registrieren Sie sich, um mehr zu lesen!
Seite 1 von 1

Rezensionen

Was die anderen über Anupama denken

0
0 Bewertungen / 0 Rezensionen
Wie hat es Ihnen gefallen?
Bewertung: 0 von 5 Sternen

Leser-Rezensionen