Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Enathu Innuyir
Nee Enathu Innuyir
Nee Enathu Innuyir
Ebook158 pages1 hour

Nee Enathu Innuyir

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொலவடையே தவறு. வினை விதைத்தால் வினையே விதைத்தவனை அறுத்துப் போட்டுவிடும் என்ற பேருண்மையை விளக்கும் கதைதான் நீ எனது இன்னுயிர்.

ஒரு பெரிய பட்டுப்புடவை சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான ரெங்கநாதன் தன்னுடைய சொந்தத் தம்பிகளால் மிக மோசமான முறையில் வஞ்சிக்கப்படுகிறார். முந்நூறு கோடி ரூபாய் சொத்துக்களை இழந்ததுகூட அவரைப் பாதிக்கவில்லை, தான் பிள்ளைகள்போல் வளர்த்த தம்பிகள் தன்னைக் கொடூரமாக முதுகில் குத்திவிட்டார்களே என்ற அதிர்ச்சியில் இதயம் வெடித்து இறந்துவிடுகிறார்.

ரெங்கநாதனின் மனைவி பரிமளா, மகன் சிவா, மகள் மால்யா, பரிமளாவின் தங்கை பத்மா – இவர்கள் எப்படி சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்ந்துகாட்டி துரோகிகளைப் பழிவாங்குகிறார்கள் என்பதுதான் நீ எனது இன்னுயிர் குறுநாவலில் கதைச் சுருக்கம்.

நடுவே சிவாவிற்கும் சஞ்சனாவிற்கும் இடையே மலரும் இனிமையான காதல், சூப்பர் ஸ்டார் போன்ற ஒரு பெரிய நடிகர் காட்டும் அன்பு, இறைவனின் புகழ்பாடும் துறவி அம்பிகா தேவியின் ஆன்மிக விளக்கங்கள் என்று கதை தொடர்கிறது. கடைசியில் வினை விதைத்தவர்களை அவர்கள் விதைத்த வினை எப்படி அறுக்கிறது என்று சொல்கிறது நீ எனது இன்னுயிர்.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580142407508
Nee Enathu Innuyir

Read more from Varalotti Rengasamy

Related to Nee Enathu Innuyir

Related ebooks

Reviews for Nee Enathu Innuyir

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Enathu Innuyir - Varalotti Rengasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ எனது இன்னுயிர்

    Nee Enathu Innuyir

    Author:

    வரலொட்டி ரெங்கசாமி

    Varalotti Rengasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    காலை ஐந்தரை மணி. சூரியன் அப்போதுதான் கிழக்கை எல்லாம் சிவப்பாக்கித் தனது வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தான். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்ட சாலையில் இருந்த அந்தப் பெரிய மாளிகை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது. ஒருலட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்டிருந்த சோனி ம்யூசிக் சிஸ்டத்தில் சுழன்றுகொண்டிருந்த குறுந்தகட்டின் மூலமாக எம்.எஸ். தனது தேனினும் இனிய குரலில் திருப்பதி வெங்கடேசப் பெருமானை எழுப்பிக்கொண்டிருந்தார்.

    அந்தக் குடும்பத்தின் தலைவரான ரெங்கநாதன் தன் ஐம்பத்தி மூன்றாவது வயதில் தன்னிடம் தஞ்சமாகிவிட்ட உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவற்றிற்காக அந்த மாளிகையின் பின்னால் இருந்த பெரிய தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தார். சென்னையிலும் காஞ்சிபுரத்திலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த மிகப்பெரிய பட்டுப்புடவை சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக இருப்பதினால் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள், தன்னுடைய ஆசை மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதால் உண்டான மன அழுத்தம் இவற்றினால்தான் அந்த நோய்கள் அவரிடம் வந்து சேர்ந்திருந்தன.

    அவருடைய மூத்த மகள் மால்யா. ஐந்தேமுக்கால் அடி உயர தங்கச்சிலை. கட்டடக்கலையில் இளங்கலைப்பட்டம் பெற்று சென்னையின் பிரபல இண்டீரியர் டெக்கரேட்டராகக் கொழித்துக் கொண்டிருக்கிறாள் என்பது உண்மைதான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் எம்.எல்.எம். திருமண மண்டபத்தில் ஊரே வியந்து பாராட்டும் வகையில் விமரிசையாக அவளுடைய திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள்கூட முழுமையாகக் கணவனிடம் வாழவில்லை மால்யா. கணவன் என்ற போர்வையில் இருந்த அந்தக் கயவனிடம் திருமண முறிவு பெறுவதற்குள் அவளுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது.

    நடந்தத கெட்ட கனவா நெனச்சி மறந்துரும்மா. உனக்கு சூப்பரா ஒரு மாப்பிள்ளை பாக்கறேன். கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாம் ஜாம்னு இரும்மா.

    இன்னொரு கல்யாணமா? சத்தியமா என்னால முடியாதுப்பா. இந்தக் கல்யாணத்துல பட்ட காயம் ஆறி வரதுக்கே இன்னும் ஆறு ஜன்மம் ஆகும்ப்பா.

    நாலையும் யோசிக்க வேண்டாமா? எங்க காலம் முடிஞ்சப்பறம் உனக்கு யாரும்மா ஆதரவா இருப்பா?

    வேற யாருப்பா வேணும்? என் சிவா இருக்காம்ப்பா. அவன் போதும்ப்பா எனக்கு…

    சிவா ரெங்கநாதனின் பிள்ளை. மால்யாவின் செல்லத் தம்பி. இருவருக்கும் இடையில் ஆறு வயது வித்தியாசம். மால்யா சிவாவின் மேல் உயிரையே வைத்திருந்தாள். சிவாவுக்கும் அக்காதான் முதல் தோழி.

    சிவா எல்லாரையும்போல் பி.இ. படித்து முடித்துவிட்டுத் தன் தந்தையின் தொழிலில் சேர்ந்தான். ஒருநாள் அவனை கடையில் சந்தித்த மால்யாவிடம் பொரிந்து தள்ளிவிட்டான்.

    இந்தப் புடவையப் பாருக்கா. அறுபதாயிரத்தி சொச்சம்னு விலை போட்டிருக்காங்க. வெறும் ஜரிகைதான் தெரியுது. புடவை எந்தக் கலர்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது.

    இந்தக் கொடுமையப் பாரேன். இது மணமகள் புடவையாம். அறுபதாம் கல்யாணம் கொண்டாடற மணமகள்தான் இதுல அழகா இருப்பா.

    இது பாரு. அரதப் பழசு. மஞ்சள் புடவை. அரக்கு கரை. மெட்ராஸ்ல ஜட்கா வண்டியும் டிராமும் ஓடின காலத்துல வந்த கலர்.

    எப்படி புடவைய டிசைன் பண்ணனும்னு ஏன்க்கா என்கிட்ட கேக்க மாட்டேங்கறாங்க?

    அன்றிரவே மால்யா தன் தந்தையுடன் சண்டை போட்டு சிவாவை டெல்லியில் இருக்கும் ஒரு புகழ் பெற்றக் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மேற்படிப்பு படிக்க அனுப்பி வைத்தாள்.

    ரெங்கநாதனின் மனைவி பரிமளா குடும்பத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட உத்தமி. அவள் ரெங்கநாதனைக் கைப்பிடித்தபோது இரட்டைப் பிறவிகளான அவர் தம்பிகளைத் (முருகேசன், செல்வக்குமார் பத்து வயது). தன் பிள்ளைகளாக வளர்த்தது பரிமளாதான்.

    அப்போது ரெங்கநாதன் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தனியாகக் கடை ஆரம்பிக்கலாம் என்று அவர் யோசித்தபோது தன் நகைகளை எல்லாம் கழட்டிக் கொடுத்து அவருக்கு உறுதுணையாக இருந்தது பரிமளாதான்.

    ரெங்கநாதனிடம் இருந்த அடிப்படைத் தொழில் நேர்மை, யாராக இருந்தாலும் கனிவாகப் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் வல்லமை ரெங்கா சில்க்ஸின் அசுர வளர்ச்சிக்கு இவைதான் மூல வித்துக்கள். மைலாப்பூரில் பச்சரிசிக்காரத் தெருவில் பத்துக்குப் பத்து இடத்தில் தொடங்கிய ஜவுளிக்கடை வேகமாக வளர்ந்து பதினைந்தே வருடங்களில் ஜி.என். செட்டி சாலையில் ஆறுமாடி குளிரூட்டப்பட்ட சொந்தக் கட்டடம், காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை தயாரிப்பு, இந்தியா முழுவதும் பட்டுப்புடவை மொத்த வியாபாரம் என்று ஒரு பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்திருந்தது. இவைதவிர பல விலைமதிப்புள்ள சொத்துக்கள் அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்தன.

    ரெங்கநாதனுடைய தம்பிகள் மேஜரானவுடன் அவர்களுக்கும் சமமான பங்கு கொடுத்துப் பார்ட்னராக்கிக் கொண்டார். அவர்களுக்கு பெரிய இடங்களில் பெண் பேசி மணமுடித்தது பரிமளாதான். அவர்களுக்காகத் தன் கணவனிடம் சண்டை போட்டு அவர்களுக்கென்று தனி வீடு வாங்கிக் கொடுத்துக் குடியமர்த்திய பெருமையும் பரிமளாவையே சேரும்.

    தம்பிகள் இன்றளவும் தினமும் காலை அண்ணனிடம் அன்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுதான் நாளைத் தொடங்குவார்கள். என்னதான் தொழிலில் சம பங்கு உள்ள பங்குதாரர்களாயிருந்தாலும் அண்ணனுக்குச் சமமாக அவர் அறையில் தங்களுக்கு இருக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

    ஆனால் இதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னால்வரைதான். இப்போது எல்லாவற்றையும் வேறு கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தது ரெங்கநாதனுக்குத் தெரியாது. ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் ரெசிடன்சி ஹோட்டலில் நள்ளிரவுவரை மது அருந்திவிட்டுப் பல ரகசியத் திட்டங்கள் போட்டதும் ரெங்கநாதனின் கவனத்துக்கு வரவில்லை.

    நாற்பது நிமிட நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு தோட்டத்தில் தான் வழக்கமாக அமரும் இடத்தில் அலுப்புடன் வந்து அமர்ந்தார் ரெங்கநாதன். தனக்கு முன்னால் அடுக்கி வைக்கப்பட்ட நாளிதழ்களிலிருந்து ஹிண்டு இதழை எடுத்து கடைசிப் பக்கத்தில் தினமும் வரும் தங்கள் கடை விளம்பரத்தைப் பார்த்தபிறகுதான் அன்றைய செய்திகளைப் படிக்கத் தொடங்கினார்.

    மாமா காபி வந்தது பத்மா. பரிமளாவின் ஒரே தங்கை. திருமணமாகி மூன்றே வருடங்களில் அரசு வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கணவன் விபத்தில் இறந்துவிட்டான். கருணை அடிப்படையில் அவளுக்குக் கிடைத்த வேலையில் தகுதி அடிப்படையிலும் உழைப்பின் அடிப்படையிலும் வேகமாக முன்னேறிப் பல ஊர்களில் அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு இன்று சென்னையில் உள்ள அந்த வங்கியின் மைலாப்பூர் கிளையில் மேலாளராக இருக்கிறாள்.

    கணவன் இறந்தது முதல் ரெங்கநாதனின் குடும்பத்தோடுதான் இருக்கிறாள் பத்மா. கவிதை எழுதுவது, கம்ப்யூட்டர் மொழி கற்றுக்கொள்வது, கிடார் வாசிப்பது என்று மனதிற்குப் பிடித்த வேலைகளைச் செய்தபடி வாழ்க்கையைச் சந்தோஷமாக ஓட்டிக் கொண்டிருக்கும் உற்சாகப் பேர்வழி அவள்.

    மால்யாவைவிட ஏழு வயதுதான் பெரியவள் பத்மா. மால்யாவும் பத்மாவும் உயிர்த்தோழிகள். மால்யா தன்னைச் சித்தி என்று அழைத்து அன்னியப்படுத்திவிடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள்.

    அவளுக்கும் சிவா என்றால் உயிர். சிவாவிற்கு என்ன பிரச்சினை வந்தாலும் சித்தி பத்மாவிடம்தான் முதலில் ஆலோசனை கேட்பான். கல்லூரியில் எகிப்து நாட்டுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தபோதுகூட பத்மாவிடம்தான் பேசினான் சிவா.

    சித்தி ஒரு லட்சத்தி நாப்பதாயிரம் ரூபாய் ஆகுது. அதான் பேர் கொடுக்கல.

    முட்டாள் முட்டாள். மொதல்ல பேரக் கொடுடா. அந்தப் பணத்த உங்கப்பாவும் சித்தப்பாக்களும் அரைமணி நேரத்துல சம்பாதிச்சிருவாங்க…

    அது தெரியும், சித்தி. ஆனா அப்பாகிட்ட கேட்டா படிக்கும்போது எதுக்கு இப்படி ஊதாரித்தனமாச் செலவு பண்றேன்னு திட்டுவாரு.

    அத என்கிட்ட விட்ரு. நான் பாத்துக்கறேன்.

    மறுநிமிடமே பேங்கிலிருந்து நேராக ரெங்கநாதன் கடைக்குச் சென்றாள் பத்மா.

    மாமா, ஒரு விஷயத்துல உங்க ஆலோசனை தேவைப்படுது.

    சொல்லும்மா.

    எங்க பேங்க்ல ஆபீசருங்க எல்லாம் சேந்து ஈஜிப்ட் டூர் போறாங்க, மாமா.

    சந்தோஷமான விஷயம்தானே.

    இல்ல, மாமா. ஒண்ணு ஒண்ரை லட்ச ரூபா செலவாகும் போலருக்கு. அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

    அடப் போம்மா. ரூபாய என்ன தலையிலயா கட்டிக்கிட்டு போப்போறோம்? நீ ஒரு பைசா செலவழிக்காதம்மா. மொத்த செலவையும் நானே ஸ்பான்ஸர் பண்ணிடறேன். வரும்போது அங்க ரெண்டு துணிக்கடைக்குப் போய் போட்டோ எடுத்துட்டு வந்தேன்னு வச்சிக்கயேன் நம்ம பிசினஸ் செலவா எழுதிரலாம். அதுக்கான இன்கம்டாக்ஸ் மிச்சம்.

    ரொம்ப தேங்க்ஸ், மாமா.

    அவர் முன்னால் உட்கார்ந்திருக்கும்போதே சிவாவை செல்போனில் கூப்பிட்டாள் பத்மா.

    Enjoying the preview?
    Page 1 of 1