Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manitham Punitham
Manitham Punitham
Manitham Punitham
Ebook196 pages1 hour

Manitham Punitham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய சூழலில் மனிதனை மனிதனாக வாழவைக்கத் தடையாக உள்ள பல்வேறு வாழ்வியல் நடைமுறைப் பரிமாணங்களை, இந்நூலில் பல்வேறு தலைப்புகளின் கீழ்ச் சுவையாக அலசி ஆய்ந்து எழுதியுள்ளார்.

வணங்குதலுக்கும், வழிபடுதலுக்கும் உரிய “பெற்றோரைப் பேணுதல் பேரறம்” என்ற தலைப்புடன் தொடங்கி, பெண்கள் போகப்பொருள் அல்ல, தடம் மாறும் இளைஞர்கள், முதுமையை வெல்வோம், மலரட்டும் மனிதநேயம், பார்போற்றும் பண்பாடு, அளவான பணம் வளமான வாழ்வு, ஆணவம் அழிவைத்தரும், கந்துவட்டித் தொழில் இழிவானது, ஒன்றுபடுவோம், ஊழல் இலஞ்சம் ஒழிப்போம், தூய்மைக் கிராமம் தூய்மை பாரதம், நீர்நிலைகள் கோவில்கள் எனப் பல்வேறு தளங்களில் பயணித்து மொத்தம் 21 தலைப்புகளின் கீழ் தன் படைப்பாற்றலின் வாயிலாக வாசகர்களுக்கு அற்புதமான, சுவையான, நெஞ்சம் இனிக்கும் கட்டுரைகளை விருந்தாகப் படைத்துள்ளார்.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580147007447
Manitham Punitham

Related to Manitham Punitham

Related ebooks

Reviews for Manitham Punitham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manitham Punitham - N. Perumal

    https://www.pustaka.co.in

    மனிதம் புனிதம்

    Manitham Punitham

    Author:

    நா.பெருமாள்

    N. Perumal

    For more books

    https://www.pustaka.co.in/home/author/n-perumal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியர் விவரம்

    பிறந்த நாள் : 12.5.1947

    பிறந்த ஊர் : குப்பல்நத்தம், பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம்

    முகவரி : பிளாட் எண் : 46, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை-44

    படிப்பு : பி.எஸ்.ஸி; எம்.ஏ;

    பெற்றோர் : வெ. நாராயணசாமி, சுதந்திர போராட்ட வீரர் திருமதி. நா. ராமக்கம்மாள்

    மனைவி : கோகிலா. எம்.ஏ;

    பிடித்தது : பொதுநலம்

    பிடிக்காதது : சுயநலம்

    பயப்படுவது : முதுமையில் தனிமை

    பலம் : இடைவிடா உழைப்பு

    பலவீனம் : அனைவரிடத்தும் அன்பை எதிர்பார்த்தல்

    அணிந்துரை

    நடிகர் சக்ரவர்த்தி

    மும்பை

    சிந்தனையில் தெளிவும், முற்போக்கான எண்ணங்களும், தொலைநோக்குப் பார்வையும், சமுதாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்ற இலட்சியமும், வாய்மையே வெல்லும் என்றவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியும், தமிழுக்குத் தன்னுடைய எழுத்துகளால் அணிகலன்கள் சூட்டிவரும் அன்பு நண்பர் பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    திரு.பெருமாள் அவர்களது ஒவ்வொரு படைப்பிலும் சமுதாயச் சிந்தனையைப் பார்க்கிறேன். சமூகத்தின் மேல் அவருக்கு இருக்கும் அக்கறையைப் பார்க்கிறேன். சரளமாகச் செல்லும் அவரது எழுத்துநடை, தமிழ் மேல் அவருக்கு இருக்கும் காதலைக் காட்டுகிறது. தமிழ்ப் பண்பாட்டு எண்ணங்களோடும், முற்போக்குச் சிந்தனைகளோடும் எழுதுவதோடு நின்றுவிடாமல், அவற்றைப் பின்பற்றி வாழ்ந்துவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார்.

    அவருடைய மனிதம் புனிதம் என்ற இந்த நூல் அவருக்கு நிச்சயம் மகுடம் சூட்டும் என்பதில் ஐயமில்லை. மனிதனைப் புனிதமாக்கும் முயற்சியாக, அவனைச் செதுக்கிச் செப்பனிட முயன்றிருக்கிறார். மனிதனைப் புடம்போட்டுப் புனிதனாக்க வழிகாட்டுகிறார். மனிதம் என்பது புனிதம் நிறைந்தது. அது பாழ்பட்டுக்கிடக்கிறது என்பதை இதயத்தாழ் திறந்து விளக்குகிறார்.

    இந்தச் சமூகத்தின் யதார்த்த நிகழ்வுகளைப் படம்பிடித்து, அச்சமின்றி அச்சிட்டு இருக்கிறார். மனிதம் புனிதம் என்பதன் மகத்துவத்தை மனத்தில் பதிய வைக்கிறார்.

    நண்பரது கட்டுரைகள் அனைத்தும் மனிதநேய மகுடத்தில் பதிக்கப்பட்ட இரத்தினங்கள்; வாழ்க்கைப் பாடங்கள்.

    பெற்றோரைப் பேணுதல் பேரறம் என்ற முதல் கட்டுரையைப் படிக்கும்போது கல் நெஞ்சம் படைத்தவர்கள் கூடக் கண்ணீர்விடுவர்.

    முதியோர் இல்லங்கள் பெருகிவிட்ட இந்தக்காலச் சூழ்நிலையில், ஃபாஸ்ட் ஃபுட் இளைஞர்கள் மனதில் பாச விதையை நட்டு, பெற்றோரைப் பேணவேண்டும் என்ற பெரு நெறியைப் பதிய வைக்கிறார்.

    இந்தக் கட்டுரையைப் படித்தபோது என் கண்கள் கலங்கின. காலஞ்சென்ற என் தாய் தந்தையரை எண்ணி, தானாகவே என் கரங்கள் குவிந்தன.

    பெண்களைப் போற்றவேண்டும், இளைஞர்களை நல்வழிப்படுத்தவேண்டும், முதியோரை மதிக்கவேண்டும், பொதுநலம் காக்கவேண்டும், பொதுவாழ்வைப் புனிதமாக்கவேண்டும், ஆணவம் அகற்றவேண்டும் என்பது போன்ற வாழ்வின் யதார்த்தங்களைக் கண்ணியத்தோடும், நேர்மையோடும் நண்பர் படம்பிடித்துக் காட்டியுள்ளது பாராட்டுக்குரியது.

    இன்றையக்காலச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட கட்டுரைகள், இன்றையத் தலைமுறையினரும், நாளையத் தலைமுறையினரும் அறிந்து கொள்ளவேண்டிய அற்புதமான பாடங்கள்.

    இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் ஒவ்வொருவர் மனமும் புனிதம் ஆவது உறுதி. இந்நூல் நீதி நெறிகளின் அரிச்சுவடி.

    இளைய சமுதாயத்தை மனிதநேயத்தோடு வாழ வழிகாட்டும் ஒரு மனிதநேயப் பெட்டகம். பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் கற்றுத்தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நீதிநெறி நூல்.

    மனிதநேயத்தை, மனித இதயங்களுக்குக் கொண்டுசெல்லும் மிகச்சிறந்த எதார்த்தப் படைப்பு.

    நண்பர் திரு. என். பெருமாள் அவர்களின் தமிழ்த்தொண்டு மேலும் தொடர்ந்திட, சிறந்திட வாழ்த்துகிறேன்.

    சகோதரர் திரு. டிராட்ஸ்கி மருது அவர்களின் முகப்போவியம் இந்த புத்தகத்திற்கு மகுடம் சூட்டி இருக்கிறது. அறிவுக்கண்கொண்டு பார்க்கும்போது, மனிதம் புனிதம் என்ற தலைப்பின் மகத்துவத்தை அற்புதமாகச் சித்தரிக்கிறது அவரது தூரிகை.

    அன்புடன்,

    உங்கள் நெஞ்சகலா நண்பன்

    நடிகர் சக்ரவர்த்தி

    மும்பை

    வாழ்த்துரை

    து.நா. ராமநாதன், இ.ஆ.ப.,

    (பணி நிறைவு)

    முன்னால் அரசுச் செயலாளர், தமிழ்நாடு

    என் அருமை நண்பர் திரு.நா. பெருமாள் அவர்களின் எழுத்துலகப் பயணத்தில் இரண்டாவது மைல்கல்லான மனிதம் புனிதம் என்ற நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமையடைகின்றேன்.

    காந்தியச் சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடும், இடையறாத பற்றும்கொண்டுள்ள அவர் எழுதிய முதல்நூல் வாழும் தெய்வம் மகாத்மா.

    வருவாய்த்துறையில் தனது கடினஉழைப்பாலும், இன்முகத்துடன் கூடிய அணுகுமுறையாலும், பொதுமக்கள், சக அலுவலர்கள் என அனைவரது அன்புக்குப் பாத்திரமாக விளங்கி, மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரிந்து, பணிநிறைவு பெற்றபின் எழுத்துப்பணியைத் தொடர்கின்றார்.

    ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள மனிதம் புனிதம் என்ற தலைப்பைப் பார்த்தவுடன், என்றும் மக்கள் கவிஞராக விளங்கும் தெய்வத்திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில்வையடா, வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலதுகையடா என்ற திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் மலர்கின்றன.

    கிரேக்கப் பேரறிஞர் சாக்ரடீஸ் ஒருமுறை, பகலிலே விளக்குடன் எதையோ தேடுவதுபோல் தெருவில் சென்றுகொண்டிருந்தாராம். ‘பகலில் விளக்கா?’ என்று ஆச்சரியப்பட்ட பலருள் ஒருவர் மட்டும் துணிந்து அவரிடம், ‘பகலில் விளக்குடன் என்ன தேடுகின்றீர்கள்?’ என்று கேட்க, ‘மனிதனைத்தான் தேடுகின்றேன் அய்யா’ என்றாராம், உலகம் போற்றும் அந்த மாபெரும் தத்துவஞானி. அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் மனிதனாக வாழக் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

    ஆசிரியரின் ஆழ்ந்த சிந்தனையும், தமிழ் இலக்கியங்களில் அவருக்குள்ள தணியாத ஆர்வமும், இந்நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து பொருத்தமான பாடல்களை உரிய இடத்தில் மேற்கோள்காட்டி, எழுத்துக்கலையின் உச்சத்தை இலகுவாகத் தொடுகின்றார்.

    இன்றைய சூழலில் மனிதனை மனிதனாக வாழவைக்கத் தடையாக உள்ள பல்வேறு வாழ்வியல் நடைமுறைப் பரிமாணங்களை, இந்நூலில் பல்வேறு தலைப்புகளின் கீழ்ச் சுவையாக அலசி ஆய்ந்து எழுதியுள்ளார்.

    வணங்குதலுக்கும், வழிபடுதலுக்கும் உரிய பெற்றோரைப் பேணுதல் பேரறம் என்ற தலைப்புடன் தொடங்கி, பெண்கள் போகப்பொருள் அல்ல, தடம் மாறும் இளைஞர்கள், முதுமையை வெல்வோம், மலரட்டும் மனிதநேயம், பார்போற்றும் பண்பாடு, அளவான பணம் வளமான வாழ்வு, ஆணவம் அழிவைத்தரும், கந்துவட்டித் தொழில் இழிவானது, ஒன்றுபடுவோம், ஊழல் இலஞ்சம் ஒழிப்போம், தூய்மைக் கிராமம் தூய்மை பாரதம், நீர்நிலைகள் கோவில்கள் எனப் பல்வேறு தளங்களில் பயணித்து மொத்தம் 21 தலைப்புகளின் கீழ் தன் படைப்பாற்றலின் வாயிலாக வாசகர்களுக்கு அற்புதமான, சுவையான, நெஞ்சம் இனிக்கும் கட்டுரைகளை விருந்தாகப் படைத்துள்ளார்.

    ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும், நாம் படித்ததை நினைவுக்கு கொண்டுவந்து அசைபோடுவதற்கு ஏற்ற வகையில் சுருக்கமாக, அக்கட்டுரையின் சாரத்தை வடித்தெடுத்துத் தந்துள்ளது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது.

    கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை அருகி, அணுக்குடும்பங்களின் எண்ணிக்கை பெருகுவதை, நவீனப் பொருளாதாரச் சூழலில் தவிர்க்க இயலாத ஒருவிளைவு என்று ஏற்றுக்கொண்டாலும், தங்களை நெஞ்சிலும் தோளிலும் சுமந்து வளர்த்து வார்த்தெடுத்தப் பெற்றோரைப் பிள்ளைகள் அந்திமக் காலத்தில் அலட்சியப்படுத்துவதையும், அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் தள்ளிவிடுவதையும் ஆசிரியர் வன்மையாகக் கண்டிக்கின்றார்.

    பெண்களைத் தெய்வங்களாகப் போற்றும் நமது புண்ணிய பூமியில், சமீப காலங்களில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகளைப் பட்டியலிட்டு, பெண்கள் போகப்பொருள் அல்ல என்று அறைகூவியும், இத்தகைய பாலியல் குற்றங்களை அறவே ஒழிக்க அரசு, பெற்றோர், சமுதாயம் ஆகிய மூன்று தளங்களிலும் செய்யப்படவேண்டிய சீர்த்திருத்தங்களையும் குறிப்பாக ஆண் வர்க்கத்திற்குத் தேவைப்படும் மனமாற்றத்தையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    பெண் உரிமை என்ற முழக்கத்தின் முகமூடிக்குப் பின்னர், பண்பாட்டு வரம்பு மீறலையும், மரபு மீறலையும் தவிர்க்க, முகநூல், வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராகப் பொதிந்து உள்ள ஆபத்துகளையும் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

    எவராலுமே தவிர்க்க இயலாத முதுமையை எதிர்கொள்ள, உழைக்கும் காலத்திலேயே மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செவ்வனே பதிவு செய்துள்ளார்.

    உள்ளத்தாற் பொய்யாதொழுகின், தன்னலமற்றவர்களே வரலாறு ஆகிறார்கள், பொது வாழ்வு புனிதமானது ஆகிய கட்டுரைகளில், ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்’ என்ற வினாவுக்கு விடையாக, பொதுவாழ்வில் நேர்மையின் உச்சத்தைத்தொட்ட லால்பகதூர் சாஸ்திரி, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், கக்கன், அறிஞர் அண்ணா ஆகியோரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.

    இன்றைய இளைஞர்களில் பலர், அறநெறிகளையும், தேசிய நலன்களையும் மறந்து கட்டவிழ்த்துவிடப்பட்டக் காளைகளைப்போல, கடிவாளம் இல்லாத குதிரைகளைப்போல தடம் மாறிப் பயணிப்பதைப் பதிவிட்டு, அவர்களை நல்வழிப்படுத்த நாம் செய்யவேண்டியவை யாவை எனத் தக்க ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது.

    முகநூலும், வலைத்தளங்களும், கைப்பேசிச் செயலிகளும் வாழ்க்கை என்றாகிவிட்ட சூழ்நிலையில், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இறந்தகாலச் செய்தியாகிவிட்டது எனக் கவலையைப் பகிர்ந்துகொள்ளும் ஆசிரியர், ஜான் ரஸ்கினின் கடையனுக்கும் கடைத்தேற்றம், கார்ல் மார்க்ஸின் மூலதனம், பீச்சர்ஸ்டோவின் அங்கிள் டாம் கேபின் ஆகிய புத்தகங்கள் ஏற்படுத்திய மகத்தான மாற்றங்களை, புரட்சிகளை மனத்தில் பதியும்படி பதிவிட்டுள்ளார்.

    இக்கட்டுரையைப் படிக்கும் இன்றைய இளைஞர்கள் வாசிப்பின்கண் தங்கள் கவனத்தைத் திருப்புவார்கள் எனக்கட்டியங் கூறலாம்.

    கந்துவட்டிக் கொடுமைகளால் நலிந்தோரும், வேறு வழியின்றிக் கடன் வாங்குவோரும் சந்திக்கும் கொடுமைகள் பற்றி ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். உடனடியாகக்

    Enjoying the preview?
    Page 1 of 1