Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathai Vamsam
Devathai Vamsam
Devathai Vamsam
Ebook256 pages2 hours

Devathai Vamsam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவயதில் மலரும் காதல் சொல்லப்படாமலேயே போய்விட, பிரிந்த காதலர்கள் வாழ்வில் இணைந்தார்களா என்று சொல்லும் தேவதை வம்சம்.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580148207510
Devathai Vamsam

Read more from Latha Subramanian

Related to Devathai Vamsam

Related ebooks

Reviews for Devathai Vamsam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathai Vamsam - Latha Subramanian

    https://www.pustaka.co.in

    தேவதை வம்சம்

    Devathai Vamsam

    Author:

    லதா சுப்ரமணியன்

    Latha Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்.1.

    அத்தியாயம் 2.

    அத்தியாயம்.3.

    அத்தியாயம் 4.

    அத்தியாயம்.5.

    அத்தியாயம். 6.

    அத்தியாயம் 7.

    அத்தியாயம் 8.

    அத்தியாயம்.9.

    அத்தியாயம் 10.

    அத்தியாயம் 11.

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13.

    அத்தியாயம் 14.

    அத்தியாயம்.15.

    அத்தியாயம் 16.

    அத்தியாயம் 17.

    அத்தியாயம் 18.

    அத்தியாயம் 19.

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21.

    அத்தியாயம் 22.

    அத்தியாயம் 23.

    அத்தியாயம் 24.

    அத்தியாயம் 25.

    அத்தியாயம் 26.

    அத்தியாயம்.1.

    காலைப் பொழுது விடிந்து விட்டது என்று கோழி மகிழ்ச்சியோடு கொக்கரக்கோ என்று கூவும் சப்தமும், பறவைகள் இறக்கையை சிலிர்த்தபடி படபடவென அடித்த சப்தமும் கீதமாய் இருக்க, அந்த கோட்டை போன்ற வீட்டின் வாயிலை வேலைக்காரி ஞானம் சாணித் தெளித்து கோலம் போட்டு விட்டு எழுந்தாள்.

    தேவங்குடியின் எல்லையில் இருக்கும் சிவன் கோயிலில் உதயகால பூஜைகள் ஆரம்பிக்க எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் சிவாஷ்டகம் ஒலிபெருக்கி வாயிலாக ஊரையே எழுப்பிக் கொண்டு இருந்தது.

    புழக்கடையில் கோனார் வந்து பால் கறந்துக் கொடுத்ததை பின் வாசற்படியில் நின்று வாங்கிக் கொண்டாள் அந்தக் கோட்டை வீட்டின் இல்லத்தரசி பர்வதவர்த்தினி.

    காலையில் எழுந்து குளித்து முடித்து வந்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு வந்தால் பால் கறந்து ரெடியாக இருக்கும்.

    காலை வேளையில் வாசல் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாயிலில் கண் வைத்து யார் போகிறார், யார் வருகிறார் என்று நோட்டம் இட்டுக் கொண்டிருக்க, காது உள்ளே இருந்து காப்பியோடு வரும் மனைவியின் கால் கொலுசு சப்தத்திற்காகக் காத்து இருப்பார் பண்ணையக்காரர் சங்கரலிங்கம்.

    தேவங்குடியின் பெரிய பண்ணைக்காரர் சங்கரலிங்கம். அம்பலவாணன், சிவகாமியின் மகன் சங்கரலிங்கம். வீட்டிற்கு ஒரே மகன். அவருக்கும் ஒரே மகன். நான்கு தலைமுறையாக அந்தக் குடும்பத்தில் ஒரே மகன் தான்.

    அம்பலவாணன் பெரிய பணக்காரராக இருந்தாலும் மிகவும் நல்லவர். தயாள குணம் நிறைந்தவர். மனைவி சிவகாமியோ கணவனுக்கு ஈடான பணம் படைத்தவர். செருக்கு நிறைந்தவர். அதிக பணத்தினால் திமிரோடு யாரையும் மதிக்காமல் எடுத்தெறிந்து பேசும் தன்மையைக் கொண்டவர்.

    பங்காளிகளுக்குப் பிரித்து கொடுத்த சொத்துக்கள் போக சங்கரலிங்கம் பங்காக இருநூறு இருநூற்றியைம்பது ஏக்கர் நிலம் வந்தது. ஒற்றைப் பிள்ளை என்பதால் மொத்த சொத்தும் இவருக்கே.

    பங்காளிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால் பாகப்பிரிவினையில் மற்றவர்களுக்கு நிலங்கள் குறைவாகவே கிடைத்தது. அந்த ஊரில் இவரிடம் மட்டுமே அதிக நிலங்கள் இருந்தன.

    சிவகாமியின் பணத்திமிர் அப்படியே மகனிடம் இருக்கிறது. அம்பலவாணன் தன்னிடம் காரியஸ்தராக இருந்த தாமோதரன் மகனைப் படிக்க வைத்து அவருக்கு தங்கள் ஊர் பள்ளியில் வேலை வாங்கிக் கொடுத்தார்.

    தாமோதரனுக்கு தன் வீட்டின் அருகில் அவருடைய இடத்தில் சின்ன வீடு கட்டி அதைக் கிரயம் செய்து கொடுத்தார். தன் மனைவி மகனைப் பற்றி அவருக்குத் தெரியும். எனவே அந்த வீட்டிற்கான கணக்கு வழக்கைத் தெளிவாக குறித்து வைத்திருக்கிறார்.

    இல்லையென்றால் பின்னாளில் மனைவியும், மகனும் அந்த இடத்தை அவரிடம் இருந்துப் பிடிங்கிக் கொள்வார்கள் என்று புரிந்தவர்.

    தாமோதரன் குடும்பத்தாரும் இரண்டு மூன்று தலைமுறைகளாக இவர்களிடம் பணிபுரிபவர்கள். வழிவழியாக கணக்கபிள்ளையாக இருக்கிறார்கள். தன் மகனுடன் படித்த தாமோதரன் மகன் சிவசு ஆசிரியராக இருந்தாலும் சங்கரனிடம் வேலையாக இருப்பதை அம்பலவாணன் விரும்பவில்லை.

    சிவசுபிள்ளை அம்பலவாணன் அவர்கள் வீட்டில் கடைசி வரை வேலை செய்ய வேண்டும் என்று மகனிடம் தாமோதரன் வாக்கு பெற்று மரணமடைந்ததால் சிவசுபிள்ளை தொடர்ந்து இங்கே காலையும் மாலையும் வந்து கணக்கு வழக்கு பார்க்கிறார். படிக்க வைத்து வேலையும் வாங்கிக் கொடுத்த நன்றி நெஞ்சு நிறைய அம்பலவாணன் குடும்பத்தின் மேல் சிவசுவிற்கு இருக்கிறது.

    அம்பலவாணன் தன் ஒன்று விட்ட தங்கை மகள் பர்வதவர்த்தினியை சங்கரனுக்கு மணமுடித்து வைத்தார். சிவகாமிக்கு விருப்பம் இல்லை என்றாலும் காசு பணம் குறைவில்லாத குடும்பம் என்பதால் மறுக்கவில்லை. அதோடு மகனது மனமும் புரிந்தவர். மகனது விருப்பத்தை எப்பாடு பட்டாவது பூர்த்தி செய்து வைப்பது அவருக்கு வழக்கம் தான்.

    மகனது திருமணம் முடிந்த உடன் சிறிது நாளில் அம்பலவாணன் இயற்கை எய்தினார். சிவகாமி மட்டும் ஆரோக்கியம் நலிவடைந்து ஒரு அறையில் தள்ளாமையால் முடங்கி விட்டார்.

    பேரன் ஸ்ரீதர் இங்கும் அங்கும் ஓடி விளையாடுவதைக் கண்ணாரக் காண்பது சிவகாமியின் அதிர்ஷ்டம் என்று சொல்லிக் கொள்ளுவார். அறையோடு முடங்கினாலும் மற்ற எதுவும் அவரை விட்டுப் போகவில்லை.

    இந்தாங்க காபி.....

    இப்படி உட்காரு பர்வதம்.... அம்மாவிற்கு காபி குடுத்துட்டியா?

    மனைவியின் காபியை நீட்டிய கையைப் பற்றி இழுத்து பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர வைத்தார்.

    அட என்னங்க நீங்க? யாராவது வரப் போறாங்க....

    தெருவுக்கும் வீட்டுக்கும் இடைவெளி எவ்ளோ இருக்கு பாரு..... யாருக்குத் தெரிய போகுது.

    இப்படி வருவியா அதை விட்டுப்புட்டுப் பேசிக்கிட்டு இருக்கே?

    காலைல காபி குடிக்கும் போது தான் கொஞ்ச நேரம் நமக்குன்னு ஒதுக்கிப் பேசிக்க முடியும். அப்புறம்னா நீயும் பலகாரம் செய்ய சமையல் செய்யன்னு வேலையைப் பார்க்கப் போய்டுவே. நானும் வெளிவேலையா நம்ம வயல், தோட்டம் துறவு, அரிசிமில்லுன்னு கிளம்பிடுவேன். பேச எங்கடி நேரம் இருக்கு நமக்கு?

    யாராவது வர்றதும், போறதுமா வீடு நிறைய ஆள் நடமாட்டமா இருக்கு. நாம இருக்கறது மூணு பேரு தான். தனியா உன் கூட பேச எனக்கு நேரம் வாய்க்கறது இல்லை.

    கணவனின் பேச்சில் இருந்த உண்மை அவர் சொல்வதும் சரி தானே என்று பர்வதத்தை எண்ண வைத்தது.

    வருடங்கள் ஆனாலும் சங்கரனுக்கும், பர்வதத்திற்கும் இடையே உள்ள அன்பு மாறவில்லை. பணம் காசு பெரிதென்று பேசும் சங்கரனுக்கு மனைவியின் மீது அதிக அன்பு. பர்வதமும் அப்படியே. கணவனது திமிர்ப்பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் அவரது அன்பில் சந்தேகம் இல்லாதவள்.

    இன்னிக்கி நம்ம தோட்டத்துல போர் போட ஆளுங்க வரப்போறாங்க பர்வதம்.

    அவசியம் போடனுமாங்க?

    ஆமாம் பர்வதம். இப்போ தான் ஆத்துல தண்ணி கொறஞ்சி போனதால இப்போ வாய்க்கால்ல தண்ணி வர்றது ரொம்ப கொறைஞ்சி போச்சு.

    ஆடி மாசக் கடைசியில நெல்லு விதைக்கணுமே. BPT கொஞ்சம், ஆடுதுறை 51 கொஞ்சம் போடணும்.

    சிவசு வந்தா பேங்க் வரைக்கும் போய் பணம் எடுத்துட்டு வரணும். இன்னிக்கி நாள் முழுக்க எனக்குத் தோட்டத்துல போயிடும். தலையாரியை கூட வெச்சிக்கிட்டுத் தான் வேலையைப் பார்க்கணும்.

    எனக்கு மதிய சாப்பாடு தோட்டத்துக்கு அனுப்பிடு. நீயும் அம்மாவும் சாப்பிடுங்க.

    இப்ப எனக்கு உன் கிட்ட பேசி சொல்லிட்ட திருப்தி. இந்த நேரம் தான் எனக்கு பேச முடியுது என்று பர்வதத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு சங்கரன் பேசிக் கொண்டு இருந்தார்.

    மெல்லிய வெட்கம் இழையோட சரி சரி போதும் கையை விடுங்க என்று பர்வதம் கையைப் பின்னால் இழுத்தாள்.

    கொஞ்சம் சும்மா இரு பர்வதம். என்ன அவசரம் உனக்கு? பொறுமையா வேலையைப் பார்க்கலாம். அது தான் சமையலுக்கு உதவ ஆள் இருக்கில்லே?

    இருக்கிறாங்க.... யார் இல்லைன்னு சொன்னாங்க? ஸ்ரீதரை எழுப்பி விடணும். பள்ளிக்கூடத்துல அவனுக்கு வேலை இருக்குதாம். சீக்கிரம் போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.

    உங்களுக்கும் வேலை இருக்குன்னு சொன்னீங்க இல்லை.அப்புறம் கால்ல கஞ்சியைக் கொட்டிக்கிட்டாப் போல டிபன் சாப்பிடாம கிளம்பிடுவீங்க. நான் போய் வேலையைப் பார்க்கிறேன் என்று எழுந்து கொள்ளப் பார்த்தாள்.

    கொஞ்சம் இரு பர்வதம் என்று மீண்டும் அவள் கைகளைப் பற்றினார்.

    ஐயே....உங்க ஸ்நேகிதர் சிவசு பிள்ளை இப்போ வந்திடுவாரு. என் கையை விடுங்க.

    நம்ப கணக்கப்பிள்ளை தானே.....

    ஏன் அவர் உங்க ஸ்நேகிதர் இல்லையா?

    நம்ம அந்தஸ்து என்ன, அவன் அந்தஸ்து என்ன? அவனை என் கூட ஒப்பிட்டு பேசற?

    என் கூட படிச்சான். இப்போ நம்ம ஊர் பள்ளிக்கூடத்திலே வாத்தியாரா இருக்கான். என் அப்பாவின் தயவாலே படிச்சி, அவரால நல்ல வேலையில் இருக்கான்.

    அவன் அப்பா என் அப்பா கிட்டே கணக்கு வழக்குப் பார்த்தாரு.... இப்போ சிவசு என் கிட்டே கணக்கு வழக்கு பாக்கிறான். நாளைக்கு அவன் பையன் கதிரவன் நம்ம பையன் ஸ்ரீதர் கிட்டே வேலை பார்ப்பான்.

    என்னிக்குமே அவங்க நமக்குக் கீழ வேலை பார்க்கறவங்க தான்.

    சரி தான் விடுங்க எனக்கு வேலை கிடக்கு. நான் உள்ளே போறேன் என்று அவர் குடித்த காபி டம்ளரை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள் பர்வதம்.

    காலையிலேயே இவரு குணம் தெரிஞ்சி வாயை விட்டது என் தப்பு. அப்படியே அவங்க அம்மா பேசற பேச்சு. சே... பாவம் சிவசு அண்ணன்.... மனதுக்குள் புலம்பியபடி சமையலறைக்குப் போனாள் பர்வதம்.

    கணவனும், மனைவியும் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி ஓரமாக நின்று கொண்டு இருந்தார் சிவசு. கதிர் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கே நின்றிருந்தான்.

    கேட்டியா கதிர் தம்பி

    ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மகனிடம் கேட்டார் சிவசு.

    கேட்டேன் அப்பா.

    நல்லா படிக்கணும் தம்பி.....நீயும் என்னை மாதிரி இவங்க கிட்டே வேலைக்கு வரக்கூடாது. இவ்வளவு வருஷமா நகமும் சதையுமாக பழகியது ஒன்னும் இல்லைன்னு ஆயிடுச்சி பாரு வருத்தமாக வந்தது சிவசுவின் பேச்சு.

    சரிப்பா.....நான் நல்லாத் தான் படிக்கிறேன். இனியும் நல்லாப் படிக்க முயற்சி பண்றேன். நானும் ஸ்ரீதரும் சேர்ந்து தான் படிக்கறோம் அப்பா.

    படிப்பு ஒண்ணு தான் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் தம்பி. பார்த்து நடந்துக்க கதிரு.

    கதிரவனும் தன் தந்தையின் வாடிய முகத்தைப் பார்த்து வருந்தியவாறே எப்படியும் நான் நல்ல நிலைமைக்கு வந்து என் அப்பாவின் மனவாட்டத்தைப் போக்குவேன் என்று சொல்லிக் கொண்டான்.

    என்ன இருந்தாலும் சங்கரன் அவங்க அப்பா மாதிரி நல்ல மனசுக்காரன் இல்லை என்று நினைத்தபடி வீட்டு வாயிற்படியில் கால் வைத்தார்.

    அத்தியாயம் 2.

    சிவசுவின் காலை வேளை சங்கரலிங்கத்தின் வீட்டில் தான் விடியும். தன் வீட்டிலேயே காபி குடித்து விட்டு வருவார். பர்வதம் எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்.

    சங்கரலிங்கத்திற்கு அது பிடிக்காது என்பதாலேயே மறுத்து விடுவார். கதிர் அப்படியே அப்பாவின் நேர் வாரிசு.

    கதிரின் தங்கை பவானிக்கு மட்டும் இந்த மாதிரியான விஷயங்கள் புரியாது. எனவே இந்த வீட்டில் உரிமையாய் கேட்டு வாங்கி சாப்பிடுவாள்.

    சிறு வயதென்பதால் ஸ்ரீதரோடு உட்கார வைத்து சேர்த்து பரிமாறுவாள் பர்வதம்.

    விடுமுறை தினங்களில் பெரிய வீட்டில் தான் பவானியின் பொழுது போகும். இருவரும் சேர்ந்து கோயிலுக்குப் போவதும் கடைத்தெருவிற்குப் போவதும் என்று பொழுதைக் கழிப்பார்கள். பார்ப்பவர்கள் இருவரையும் அம்மாவும் பெண்ணும் என்று நினைக்கும் அளவிற்கு ஒன்றாக இருப்பார்கள்.

    காந்திமதி என்று சிவசு கூப்பிட்டவுடன் வந்து நின்றாள் காந்திமதி.

    நேரமாச்சு....என்றபடி சாப்பிட அமர்ந்தார் சிவசு. பிள்ளைகள் சாப்பிட்டு தயாராய் இருந்தார்கள். பெரிய வீட்டில் நடந்ததை லேசாக கோடிட்டுக் காட்டினார் சிவசு. வந்து மிச்சத்தை சொல்றேன்.இப்போ நேரமாச்சு என்று பேசிக் கொண்டே சாப்பிட்டு எழுந்து பள்ளிக்குத் தயார் ஆனார்.

    சைக்கிளைத் துடைத்து வெளியில் எடுத்து வைத்திருந்தான் கதிர்.

    அளவில் சிறிய வீடு. சங்கரலிங்கத்தின் அப்பா சிவசுவின் அப்பாவிற்குத் தன் நிலத்தில் குறைந்த விலையில் கட்டிக் கொடுத்த வீடு அது.

    பணம் கட்டி முடித்து விட்டார் சிவசுவின் அப்பா என்பதைப் பதிவு செய்திருப்பதால் சங்கரலிங்கம் இந்த வீட்டைப் பற்றி எதுவும் பேச மாட்டார்.

    இல்லையென்றால் நிச்சயம் அதைத் திருப்பி வாங்கி இருப்பார்.

    சின்னஞ்சிறு தோட்டம். காய்கறிகள், கீரை, தக்காளி, என்று காந்திமதி வீட்டு வேலைகளைச் செய்து முடித்து விட்டு தோட்டத்தில் கொத்தி கிளறி என்று எதையாவது செய்து கொண்டு பொழுதைக் கழிப்பாள்.

    சமயத்தில் பர்வதம் பின்புறம் புழக்கடையில் வந்து நின்று காந்திமதியுடன் பேசிக் கொண்டிருப்பாள்.

    பள்ளிக்கூடம் விட்டு வந்து அலுப்போடு கூடத்தில் இருந்த நாற்காலியில் சாய்ந்தார் சிவசு.

    காப்பியோடு வந்து காலடியில் அமர்ந்தாள் காந்திமதி.

    என்னங்க? என்ன ஆச்சு?

    ஒன்னும் இல்லை மதி. கொஞ்சம் அலுப்பாக இருக்கு. இப்போ காப்பியைக் குடிச்சிட்டு நான் பெரிய வீட்டுக்குப் போகணும்.

    தென்னந்தோப்புல மரங்களுக்கு உரம் வைக்கணும். தலையாரி பாமணி வரைக்கும் உரம் வாங்கப் போறான். விதைக்கிற நேரம் வருதே.... கொஞ்சம் வயலுக்குத் தேவையான விதைங்க, பூச்சி மருந்து வாங்கணும். என்னையும் கூடப் போன்னு சொல்லாம இருக்கணும். அவங்க கடைலேர்ந்து தலையாரி கொண்டு வரப் போற உரத்துக்கு நான் எதுக்கு துணைக்கு?

    ஏங்க அலுப்பா பேசறீங்க? மேலுக்கு முடியலியா? அவர் கிட்ட சொல்லிட்டு வந்து ஓய்வு எடுத்துக்கோங்க.

    தலையை வேற வலிக்குது. மதியம் இடைவேளை நேரத்துல வங்கிக்குப் போய் பணம் எடுத்துக் குடுத்தேன். வெயில் நேரத்துல வெளியே போனது எனக்கு சேரலை. அதோட எனக்கு மனசு வேற சரியில்லை.

    ஏங்க? இன்னும் காலைல அண்ணன் பேசினதையே நினைச்சுகிட்டு இருக்கீங்களா?

    ஆமாம் மதி. சங்கரன் குணம் தெரிஞ்சும் கூட அவன் பேசறது கேட்டா அவன் என்னமோ முதல் முறையா என்னைப் பேசறாப்ல இருக்கு.... மனசுக்கு ரொம்பக் கஷ்டமாகுது மதி என்று காலையில் நடந்ததைப் பற்றி விரிவாகக் கூறினார்.

    விடுங்க நீங்க....இதெல்லாம் ஒரு விஷயமா? அவங்க அப்பாரு செஞ்ச நல்லதுக்காகத் தான் நீங்க அங்க போறீங்க.... அவர் பேசினா என்னங்க.... விடுங்க நீங்க.

    சட்டுன்னு போய் கணக்கு வழக்கைப் பார்த்திட்டு வாங்க என்று கிளப்பி அனுப்பினாள் மதி.

    பர்வதமும், அவ மகனும் இருக்கற இருப்புக்கு இவர் பெரிய திருஷ்டிப் பூசணிக்காய் என்று நொடித்துக் கொண்டாள் மதி. சலித்துக் கொண்டே எழுந்து போனார் சிவசு.

    பர்வதம் வீட்டு தோட்டத்தின் காம்பௌண்ட் சுவற்றை ஒட்டி நடந்தாள்.

    பவானி பவானி....

    என்ன அத்தை? துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் பவானி.

    மெள்ள மெள்ள..... பாத்து வா.... கீழே விழுந்துடப் போற.... பெண் குழந்தை இல்லாத பர்வதத்திற்கு பவானி என்றால் கொள்ளைப் பிரியம் அமைதியான அவளது அழகு, அவளுக்கு உதவியாக சின்னச் சின்ன வேலைகள் செய்து தருவது என்று குழந்தையிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1