Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannillatha Mugam
Kannillatha Mugam
Kannillatha Mugam
Ebook79 pages27 minutes

Kannillatha Mugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ப்ரதோஷ், ஐ.ஐ.டி படித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஜ்வாலா என்ற நடிகையின் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு அவனைத் தேடி வருகிறது. அவன் அதை ஏற்கிறான். பின்பு அதனால் பல துன்பங்களை அனுபவிக்கிறான். அத்துன்பத்தில் இருந்து அவன் மீண்டானா பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580100606635
Kannillatha Mugam

Read more from Devibala

Related to Kannillatha Mugam

Related ebooks

Reviews for Kannillatha Mugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannillatha Mugam - Devibala

    https://www.pustaka.co.in

    கண்ணில்லாத முகம்

    Kannillatha Mugam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    மேக்கப் போட்டுக்கொண்டிருந்தான் ப்ரதோஷ்.

    அவனுக்கு ஒரே டென்ஷனாக இருந்தது. உள்ளங்கையில் வியர்வை ஊறியது.

    மேக்கப்மென் அனுபவப்பட்டவர்.

    என்ன தம்பீ! டென்ஷன்ல இருக்கியா?

    அ... தெல்லம் ஒண்ணுமில்லை!

    நீ இல்லைனு சொன்னாலும் அதுதான் நிஜம். இருக்காதா பின்னே? பெரிய நடிகையோட நடிக்கப்போறே. உனக்கு முதல் படம் வேற சந்தர்ப்பத்தை சரியாப் பயன்படுத்திக்கோ. அந்தம்மா ரொம்ப பிஸி. நிறைய டேக் எடுத்தா அதுக்குக் கோவம் வந்துடும். மூட் அவுட்டாயிடும். ஜாக்ரதை!

    இன்னும் அவர் ஏற்றிவிட்டதில் ப்ரதோஷ் சுத்தமாக மிரண்டு பேனான்.

    ஒப்பனை முடிந்துவிட்டது.

    ப்ரதோஷ் வெளியே வந்தான்.

    செட் தயாராக இருந்தது. பல லட்சங்கள் செலவு செய்து போடப்பட்ட செட். இயக்குநர் காமிராமேனுடன் விவாதித்துக் கொண்டிருந்தார்.

    இவனைப் பார்த்தார்.

    ரெடியா ப்ரதோஷ்? அருகில் வந்தார்.

    ஜ்வாலா வந்துட்டே இருக்காங்க. வந்ததும் ஆரம்பிச்சிர வேண்டியது தான்!

    ஒரு ரிகர்சல் பாத்துரலாமா ஸார்?

    அவங்க வராம நீ மட்டும் ரிகர்சல் பாக்கறது எப்படி? இதென்ன நாடகமா?

    சரி சார்!

    இப்படி வியர்வை கொட்டினா மேக்கப் கலைஞ்சிடும். டென்ஷனைக் குறை!

    ஆகட்டும் ஸார்!

    அது ஜ்வாலாவின் சொந்தப்படம் வேறு. ஹிரோயின் சப்ஜெக்ட்.

    அவளின் ஜோடியாக ப்ரதோஷ், நினைத்த போது அவனாலேயே நம்ப முடியவில்லை.

    ‘எப்படி நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்?’

    ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டான் ப்ரதோஷ்.

    ஒரு மாதம் இருக்குமா? இருக்கலாம்

    அன்று காலை அவன் கல்லூரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம், வீட்டு வாசலில் அந்தக் கார் வந்து நின்றது.

    இங்க ப்ரதோஷ்னு?

    என் பிள்ளைதான்! அம்மா உள்ளே வந்தவரிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    யார் சார் நீங்க? ப்ரதோஷ் கேட்டபடி வெளியே வந்தான்.

    மெலடி ப்ரொடக்ஷன்ஸ் படக் கம்பெனிலேருந்து நான் வர்றேன். உங்களை உடனடியா கூட்டிட்டு வரச்சொன்னாங்க

    சினிமாக் கம்பெனியா?

    ஆமாம்!

    எதுக்கு?

    அங்கே வந்து பேசிக்குங்க. ப்ளீஸ்!

    அவருடன் காரில் ஏறினான் ப்ரதோஷ், ஆழ்வார் பேட்டையில் சற்று உள் தள்ளி இருந்த ஒரு பங்களாமுன் கார் நின்றது.

    வாங்க சார்!

    அந்த மனிதருடன் நடந்தான் ப்ரதோஷ்.

    அவனை ரிசப்ஷனில் உட்கார வைத்துவிட்டு அவர் உள்ளே போனார்.

    ஐந்து நிமிடங்களில் வெளிப்பட்டு, கூப்பிடறாங்க உங்களை!

    ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் நடந்தான். கதவு தள்ளித் திறக்கப்பட நுழைந்தான்.

    வெல்கம் மிஸ்டர் ப்ரதோஷ்!

    அழைத்தது பிரபல இயக்குநர் சந்திரப்ரகாஷ்.

    வணக்கம் சார்!

    என்னைத் தெரியுமா?

    ம்! டைரக்டர் சந்திரப்ரகாஷ்!

    இவங்களைத் தெரியுமா?

    அப்போதுதான் ஒரு பெண் அங்கே அமர்ந்திருப்பதை கவனித்துத் திரும்பினான்.

    வாவ்!

    நடிகை ஜ்வாலா!

    தெரியதா இவங்களை?

    தமிழ் நாட்ல இவங்களைத் தெரியாதவங்க இருக்க முடியுமா? வணக்கம்!

    அவள் கண்களைச் சுருக்கி மென்மையாக அவளது ஸ்பெஷல் ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தாள்

    உட்காருங்க ப்ரதோஷ்!

    என்னை எதுக்கு இங்கே?

    Enjoying the preview?
    Page 1 of 1